சாரல் காலம் 8

சாரல் காலம் - முந்தின பாகங்கள்

#0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 /#7 /#8 /#9 / #10

-----------------------------------------------------------------------------------------------------------------
பாலாவும் மாதேசும் மற்றவர்கள் இருக்குமிடம் போய் சேரும் போது கன்னனும் வந்து சேர்ந்தான்.

ஹரி "என்னா பாலா, உன் சவுத் இன்டியன் டயானாவா மகேஸ்க்கு காட்டுனியா?"

மாதேஸ் "ஆமாடா, கூட்டி போய் காட்டறன்னு சொன்ன, யார்னு காட்டவே இல்லை?"

பாலா "அவதான்டா"

மாதேஸ் "எவடா?"

பாலா "அதான் நீ ஒரு ஜீனியர் பொன்னை முறைச்சியே, அவதான்"

கேட்டதும் மகேஸ் ஹா ஹா வென்று சிரித்து கொண்டே இருந்தான். ஹரிக்கு என்னவென்று புரியவில்லை.

ஹரி "முறைச்சானா? எதுக்குடா முறைச்ச?"

மாதேஸ் "மச்சான், அங்கே போனதும் கெட்ட நாத்தம் அடிச்சதுடா, யார்னு பார்த்தா நம்ம பயலோட கனவுகன்னி, யாராயிருந்தாலும் சட்டத்துக்கு முன்னாடி எல்லாரும் சமம் தான்டா, அதான் முறைச்சேன்"

ஹரி சிரித்து கொண்டே "சரி விடு மச்சான், சிரிச்சு அவனை வெறுப்பேத்தாத"

திடிரென இவர்கள் பேச்சின் நடுவே கன்னன் புகுந்தான்.

கன்னன் "ஹரி, உன் ஆள் யார்னு காட்டுறா"

ஹரி "ஆளா? யார்...........யார் சொன்னது?"

கன்னன் "அப்ப உனக்கு ஆள் இருக்குனு ஒத்துக்கறியா?"

பாலா "டேய் நமக்கு தெரியாம அவனுக்கு ஏதுடா அள்? உனக்கு யார் சொன்னா?"

ஹரி மனதுக்குள் "ஆஹா, இவ்வளவு நம்பறாங்களே பேசாம உண்மைய சொல்லிடலாமா? ஆனா எனக்கு ஆள்னு நானா சொல்லி என்ன பிரயோஜனம்?"

அவனுக்குள்ளாகவே குழம்பி கொண்டான். அதை மாதேஸ் கவனித்து விட்டான் என்பதை ஹரி கவனிக்கவில்லை.

மாதேஸ் "இல்லை மச்சி, நான் வந்ததுலருந்து கவனிக்கறேன், ஹரிகிட்ட ஏதோ சேஞ்ச் இருக்கு"

ஹரி "ஆமாடா, பாக்கெட்ல 5 ரூபாய் சேஞ்ச் வச்சுருக்கேன், வேணுமா?"

கன்னன் "குடுடா, நான் வாங்கிக்கறேன்"

ஹரி "ஏன்டா அடுத்தவன் பணத்துக்கு ஆசைப்படறே? உழைச்சு சாப்பிடு"

மாதேஸ்"டேய் பேச்சை மாத்தாதே, யார்டா?"

சூர்யா "நண்பன் கேட்கறான், சொல்லுடா?"

ஹரி "டேய் நீ வேற, அப்படிலாம் யாரும் இல்லடா, இருந்தா கண்டிப்பா சொல்றேன்"

அன்பு "டேய் நலுங்கு சுத்தறாதுலாம் முடிஞ்சு பெருசுங்க, நிச்சயதார்த்தம் பன்ன போறாங்களாம், வாங்கடா அங்க போலாம்"

ஹரியின் கண்கள் காயத்ரியை தேடி கண்டுமுடிக்க முடியாமல் சூர்யாவை பார்த்தது, அவன் காதோரமாக

"ம் மச்சி, காயத்ரிய பார்த்தியா?"

சூர்யா எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாமல் 

"பார்த்தேன், அவங்க கிளாஸ் பொன்னுங்களோட பேசிகிட்டுருந்தா"

கன்னன் பக்கத்தில் நின்றவாறு இவர்கள் ரகசியமாக ஏதோ பேசுவதை கேட்டுவிட்டு, இவனும் ரகசியமாக

"என்னடா விசயம்?" என்றான்.

சூர்யா "இல்லை கன்னா, எதிர்பக்கம் ஒரு பொன்னு நிக்கறா, உன்னையே பார்த்துகிட்டு இருக்கா, அதைத்தான் சொன்னான்"

கன்னன் "என்னை? நக்கலா? சரி எந்த பொன்னு காட்டு?"

http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-snc6/p480x480/6017_483138905085654_262874432_n.jpg

சூர்யா "அதொ பட்டு பாவாடை, சட்டை போட்டுகிட்டு விளையாடிகிட்டு இருக்காங்க பாரு"

கன்னன் "டேய், அது குழந்தைங்கடா"

சூர்யா "ஆமா, பெண் குழந்தைங்கதான்டா, அதான் பொன்னுங்கன்னு சொன்னேன்"

கன்னன் "ஏதோ ரகசியம், எனக்கு தெரிய கூடாது, அதுக்கு என்னை ஓட்டி பேச்சை மாத்தற?"

சூர்யா "ஐ கன்னனுக்கு புரிஞ்சுருச்சு"

கன்னன் நொந்து கொண்டதை பார்த்து இருவரும் சிரிக்க துவங்கினர். அதிலும் ஹரி சத்தமாக சிரித்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தான். காயத்ரி ஓரக்கண்ணால் இவனை பார்க்க இவனிடம் சப்த நாடியும் போட்ட சத்தமும் தானாக அடங்கியது. இதை கவனித்த கன்னன்

"அதான் உன் ஆளா ஹரி? சொல்லவேயில்லை. அதே மாதிரி இன்னொன்னு இருந்தா எனக்கு செட் பன்னி விடேன்"

ஹரி அப்படியே யாருக்கும் தெரியாமல் நறுக்கென்று அவனுடைய தொடையை கிள்ளகன்னன் வாயை திறக்காமல் "ஸ்ஸ்ஸ்ஸ் ஆ" என்று கத்தினான்.

ஹரி "என்னை பார்த்தா உன் தாய்மாமன் மாதிரி தெரியுதா?"

கன்னன் "இல்லியே"

ஹரி "அப்புறம் ஏன் என்னை உனக்கு பொன்னு பார்க்க சொல்ற? முடிஞ்ச வரைக்கும் பேசாம் சைட் அடி"

கன்னன் "அப்ப நான் காதலிக்க ஒரு பொன்னு கூட கிடைக்காத?"

சூர்யா "கன்னா, ஆயுள் தண்டனைய பத்தி கவலைப்படாம இந்து குத்து விளக்க எடுத்து சொருகிடுவேன், பேசாம் கிளம்பிடு"

ஹரியின் மனதுக்குள் நடந்து கொண்டிருக்கும் நிச்சயதார்த்தம் அவனுக்கும் காயத்ரிக்கும் நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டிருந்தான்.


அதென்னவோ அவன் கற்பனையில் நடந்த நிச்சயதார்த்தத்தில் அவனது குடும்பத்தினர் யாரும் வரவில்லை, அவனது கற்பனையில் மண்ப்பெண்ணாக வெட்கப்பட்டு அமர்ந்திருக்கும் காயத்ரி மட்டுமே பிரகாசமாக தெரிந்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாக கற்பனையில் இருந்து வெளியே வந்து வெட்கப்பட்டு திரும்பி பார்த்தால், பாலாவும் இவனைப் போலவே ஏதோ கற்பனையில் வெட்கப்பட்டு சிரித்து கொண்டிருந்தான்.

அவனை பார்த்ததும் ஹரிக்கு சிரிப்பு வந்து விட்டது. அதை பார்த்ததும் கன்னனும் சிரித்து கொண்டே "ஏன்டா சிரிக்கற?"னு கேட்டான்.

ஹரி "இல்லைடா கன்னா, இவ்வளவு அழகா இருக்கற உனக்கே பொன்னு கிடைக்கலியே, எங்களுக்கெல்லாம் எப்படி கிடைக்கும்னு யோசிச்சு பார்த்தேன், அதான் சிரிச்சேன்"

கன்னன் "கஷ்டமா இருந்தா அழனும், நீ சிரிக்கற?"

நிச்சயதார்த்தம் முடிந்து தட்டு மாற்றிவிட்டார்கள், கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்தது.

ஹரி "ஏன்டா மச்சி சினிமால வர்ர மாதிரி யாரும் பாட்டுலாம் பாட மாட்டாங்களா?"

சூர்யா "பொன்னு பார்க்கும் போதுதான் பாட தெரியுமானு கேட்பாங்க, நிச்ச்யத்துல கேட்க மாட்டாங்க?"

ஹரி "பொன்னு பாடறது சொல்லலடா, நம்ம சந்திரமுகி படத்துல கூட மாளவிகா நிச்சயதார்த்தத்துலு "அண்ணனோட பாட்டு" வருமே, அது மாதிரி?"

சூர்யா "ஏன், நீங்க அந்த பாட்டுலயே உங்க காதலை சொல்ல போறிங்களா?"

ஹரி "ஏன்டா எங்க சுத்தனாலும் அங்கயே வர்ர?'

சூர்யா "சும்மாதான்"

திடிரென்று மாதேஸ் வேகமாக அவர்களை நோக்கி வந்தான்.

மாதேஸ் "சீக்கிரம்டா, வாங்கடா போலாம்"

சூர்யா "எங்கடா?"

மாதேஸ் "எங்கயா? பந்தி போட்டாச்சுடா, பசங்களை இடம் போட சொல்லிருக்கேன் வாங்கடா"

ஹரிக்கு பிரச்சனையே இனிமேல்தான் ஆரம்பிக்க போகிறது, பெரிதாக ஒன்றுமில்லை. முடிந்தவரை காயத்ரி இருக்கின்ற இடத்துக்கு போக வேண்டுமென்று மனம் துடிக்கிறது, போனால் ரொம்ப நல்லவன் போல் நடிக்க வேண்டும். அது அவனது நண்பர்களுக்கு தெரிந்து விடும். கிண்டல் செய்தே காதலிக்கும் முன்பே காயத்ரி இவனை வெறுக்க செய்து விடுவார்கள்.

என்னதான் பெரிய இடமாக இருந்தாலும் வந்திருந்த கூட்டத்திற்கு இடம் போதவில்லை, ஆனால் நமது இளைஞர்களுக்கு கை வந்த கலையே இடம் பிடிப்பதுதான்.பிடித்து விட்டார்கள்.

பாலாவும் கன்னனும் பந்தியில் உட்கார்ந்து கொண்டு வருபவர்களிடம் எல்லாம் பஸ்ஸில் சொல்வது போலவே "ஆள் வர்ராங்க"னு இலையை ரிசர்வ் செய்து கொண்டிருந்தார்கள்.

மாதேஸ் ஹரியையும் சூர்யாவையும் அழைத்து கொண்டு அந்த அறைக்கு போகும் போது காயத்ரியும் அவள் தோழிகளும் உள்ளே கூட்டமாக இருப்பதை பார்த்து திரும்ப வந்து கொண்டிருந்தார்கள். ஹரிக்கு இப்பொழுது என்ன செய்வதென்றே தெரியவில்லை.

---------------------------------------------------------------------------------------தொடரும்--------




Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2