நேரம் - திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், சமிப காலமாய் தமிழ் திரைப்பட இயக்குனர்களுக்கு ஒரு சுதந்திரம் கிடைத்திருக்கிறது, அவர்கள் நினைத்ததை படமாய் எடுக்க முடிகிறது, இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் வைத்தாக வேண்டும், இத்தனை பாடல்கள் வைக்க வேண்டும் என்றெல்லாம் முன்போல் இல்லை. ஒரு 2 வருங்களுக்கு முன்பு என்றால் இந்த படம் வருவதாய் இருந்தால் இயக்குனர் நிறைய விட்டு கொடுத்திருக்க வேண்டும். சரி கதைக்கு வருவோம்.

http://www.starmusiq.com/movieimages/Neram_B.jpg

நேரம், அது இரண்டு வகை, ஒன்று நல்ல நேரம், இன்னொன்று கெட்ட நேரம், அதெல்லாம் சும்மா, மூட நம்பிக்கைனு சொல்லுறவங்க கூட ஒரே ஒரு நிகழ்ச்சியால் வாழ்க்கையே மாறும் போதும், தொடர்ந்து வாழ்வில் அடி விழும் போதும் "எல்லாம் என் நேரம்"னு கண்டிப்பா சொல்லிருவாங்க, அதை சொல்ற கதைதான்.

கதையின் நாயகன் 'தட்டத்தின் மறயத்து' பட நாயகன், யதார்த்தாமான முகம், நல்ல நடிப்பு, அவருக்கு வேலை பறி போவதில் படம் துவங்குகிறது, பிறகு தங்கைக்கான வரதட்சனை, அதை கொடுத்த 'வட்டி ராஜா'வின் துரத்தல், காதலியின் தந்தை கொடுக்கும் நெருக்கடியால் வீட்டை விட்டு ஓடி வரும் நாயகி செயினை பறி கொடுத்தல், அதே நேரத்தில் நண்பனிடம் கடன் வாங்கிய பணத்தை நாயகன் பறி கொடுத்தல், இது அனைத்தையும் தாண்டி மாலை 5 மணிக்குள் தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகள்...

http://photogallery.indiatimes.com/movies/regional-movies/neram/photo/18708402/A-still-from-the-Tamil-movie-Neram.jpg

மேலே சொன்னதெல்லாம் கெட்ட நேரம், அப்ப நல்ல நேரம்னா போனது எல்லாம் திரும்ப வரும், மேல இழந்தது எல்லாத்தையும் நாயகன் திரும்ப அடையறார், எப்படினு சொன்னா நீங்க படம் பார்க்கறது வீணாயிடும், கண்டிப்பா பாருங்க...

http://mimg.sulekha.com/tamil/neram/stills/neram-tamil-movie-pictures-052.jpg

கதையின் நாயகி, "என்னா பொன்னுடா?", சமந்தா போய்ட்டானு வருத்தபடற எங்க சங்கத்துக்கு கிடைச்ச வரப்பிரசாதம், தலைவி நஸ்ரியாக்காக இன்னொரு தரம் பார்க்கனும், அவ்வளவு அழகு, "நீ அந்த பொன்னு மூஞ்சியவா பார்த்த?" னு கேட்கறப்ப ஒரு பார்வை பார்க்கும் பாருங்க...

http://moviegalleri.net/wp-content/gallery/neram-tamil-movie-stills/neram_tamil_movie_stills_nivin_nazriya_nazim_2a46f53.jpg

வட்டிராஜா, சாம்சங் டச் ஸ்கிரின் மொபைல்ல வாங்கி "10000 ரூபாய் போனு, பட்டனே இல்லை, கருமம்"னு திட்டறப்பவும் "என்னை பத்தி தெரியுமில்லை?"னு எல்லாரையும் மிரட்டறப்பவும் லோக்கல் தாதாவ பார்க்கற மாதிரியே இருக்கு, 

http://www.cinespot.net/gallery/d/1145234-1/Soodhu+Kavvum+Photos+_10_.jpg

சாதாரணமா  "இது என்ன பெரிய நடிப்பு?"னு கேட்பிங்க, "சூது கவ்வும்"ல நயன் தாராக்கு கோவில் கட்டுனவரானு மட்டும் ஒப்பிட்டு பார்த்தா நல்ல வித்தியாசம் தெரியும்.

http://photogallery.indiatimes.com/movies/regional-movies/neram/photo/18707896/Thambi-Ramaiah-in-a-still-from-the-Tamil-movie-Neram.jpg

அப்புறம் நம்ம தம்பி ராமையா சில இடத்துல சிரிக்க வச்சுடறார், பல இடத்துல வெறுப்பேத்தறார், ஆனா இந்த படத்துக்கு அப்புறம் இவர் பேர் "சரவணர்" தான், அப்புறம் போலிஸ் எஸ்.ஐ "கட்ட குஞ்சு" வா எங்க ஆல்டைம் ஃபேவரட் ஜான் விஜய், ஸ்டேசனுக்கு பெயிண்டிங் வேலை போறதால லாக்கப்ல லுங்கி பனியனோட கர்னாடக சங்கீதம் கேட்கற சீன்லயே ரசிக்க வைக்கறார்.

http://photogallery.indiatimes.com/movies/regional-movies/neram/photo/18708064/A-still-from-the-Tamil-movie-Neram.jpg

அடுத்த நம்ம நாசர், கொஞ்ச நேரம் வந்தாலும் பின்னி எடுக்கறார், "ஆசம் ஆசம்"னு சாஃப்ட்வேர் பாஷை பேச முயற்சிக்கறது, "சிடி ரைட் பண்ண தெரியுமா?"னு கேட்டு இண்டர்வியு பன்றது, "மண்ணில் இந்த காதலன்றி" பாட்டு பாடறது, "சி.எம் அ கேட்டதா சொல்லு?"னு கெத் த காட்டறார்.

முதல்ல ட்ரெய்லர்ல கேட்கறப்ப சும்மா தாளம் போட வச்ச பாட்டை க்ளைமாக்ஸ்ல போடறப்ப விசில் அடிக்காமயோ, கத்தாமையோ தியேட்டர்ல படம் பார்க்க முடிஞ்சா, கொஞ்ச நாள் லீவ் போட்டு மன அழுத்தத்தை குறைச்சுக்காங்க...

அந்த பாடல் உங்களுக்காக...



பட இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

படத்தின் ட்ரெய்லர்


Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2