- மழைச்சாரல்: 2013
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Friday, 11 October 2013

நய்யாண்டி - Remake of "வள்ளி வரப்போறா"

அன்பர்களுக்கு வணக்கம்..மரியான் படத்தை பார்த்த அதே தியேட்டர்ல அதே ஈவ்னிங் ஷோக்கு கவுன்டர்ல நிக்கும்போதே கருக்குனு இருந்துச்சு... 

மின்சாரக் கண்ணால விஜய் புறாவுக்கு பெல் அடிக்கற இன்ட்ரோ மாதிரி இதுல தனுஸ் கிணத்தை தாண்டி புறாவ பிடிக்கற மாதிரி அறிமுகம்...
 


ரொம்ப நாள் கழிச்சு அரை லூசூ ஹிரோயின், டாக்டர் பொன்னுங்க இஞ்சினியரிங் பசங்களையே மதிக்கறதுல்லை, இதுல டெண்டல் டாக்டர் படிக்காத பையனை லவ் பண்ணுதாம்

7ம் அறிவுல லவ் பண்றாங்களானு நாம யோசிக்கும் போதே "எம்மா யம்மா" பாட்டு வரும், அதே மாதிரி சைட் அடிச்சதுக்கு லவ்ஃபெயிலியர் சாங் வேற

ரஜினியோட படிக்காதவன் ஐ ரீமேக் பண்ணியே படம் ஓடலைங்கறப்ப தனுஸ் புரிஞ்சுகிட்டு இருந்துருக்கனும், பாண்டியராஜனோட "வள்ளி வரப்போறா" படத்தை ரீமேக் பண்ணிருக்காரு...
 


நடுநடுவுல ஆனந்தம், தேசிங்கு ராஜாலருந்து சிலபல டயலாக் உருவியிருக்காங்க...

தனுசோட அண்ணனா வர 2 பேர் மட்டும் இல்லைனா நல்லா தூங்கி இருப்பேன்...

நஸ்ரியா - "ஏம்மா இதுக்கா இந்த குதி குதிச்ச? எனக்கு கவுண்டமணியோட கிணத்துல பாடி விழுந்த கதைதான் ஞாபகம் வருது??"

படம் பார்க்க போன என்னை விட பாவப்பட்ட ஜீவன் யார்னா படத்தோட வில்லனா வர்ரவன் தான்... "யார் பெத்த பிள்ளையோ???"

சூரி, சத்யன், sriman இவங்க தான் படத்தை தாங்கறாங்க, முடியலை...

ஆமா சற்குணம் சார், என்னாச்சு? அய்யோ பாவம் தான்...

மிஸ்டர் தனுஸ், உங்க மூலமா சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயனை பாருங்க,எப்படி கதைய தேர்ந்தெடுக்கறார்னு,கத்துக்கங்க!


Thursday, 15 August 2013

ஆதலால் காதல் செய்வீர் - கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

அன்பர்களுக்கு வணக்கம், நீண்ட நாள் கழித்து தமிழில் உலக சினிமா, உலக சினிமா என்பதன் வரையரை பெரிதாய் ஒன்றுமில்லை, அப்படமெடுக்கும் பகுதியின் மக்களின் வாழ்வியலை பதிவு செய்தலே, அந்த வகையில் கட்டாயம் "ஆதலால் காதல் செய்வீர்" உலகப்படமே...

http://www.ellameytamil.com/wp-content/uploads/aathalalkathalseivere.jpg

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு வந்த பில்லா படத்தை ரீமேக் செய்து அதில் வரும் பில்லாவின் கடந்த காலத்தை இரண்டாம் பாகமாக எடுத்தார்கள், அதே போல் "புதிய பாதை" என்றொரு படம் வந்தது, அனைவருக்கும் நினைவிருக்கும், அப்படத்தில் வரும் பார்த்திபன் கதாபாத்திரம் இவ்வழியில்தான் பிறந்திருப்பார் என கூறலாம்...

 http://l.yimg.com/bt/api/res/1.2/hLrLu_Zu_OKzQis.b4qY_Q--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/15324797774.jpg

முக்கியமாக படத்தில் எதற்கு காதலிக்கிறோம் என்று யோசிக்காமலே "வெறுமனே கூட பழகியவன் பைக் மட்டும் வைத்திருந்தால் காதலிக்கலாம் கட்டிப்பிடித்து ஊர் சுற்றலாம்" என எண்ணும் தற்கால பெண்களின் மனநிலையை இயக்குனர் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.

http://cdn.vikatan.com/images/gallery/thumb_aadhalal_kadhal_seiveer_movie_stills_santhosh_manisha_yadav_631c8ee.jpg

அதே போல் ஆண்களும் அழகாய் இருந்தால் போதும் என்றும், பெண்களை காதலிக்க வைக்க எந்த வித முட்டாள்தனமும் செய்ய தயாராய் இருப்பதையும் காட்டியுள்ளார், முதல்பாதி மிக அருமை, இக்கணத்தில் தமிழகத்தில் காதலென்றால் இப்படித்தான், இதனை யாராலும் மறுக்க முடியாது...

http://l3.yimg.com/bt/api/res/1.2/uoLUeoycnT.HOkhJlim8jw--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/15324719620.jpg

 இயக்குனர் சுசீந்திரன் தனது முந்தைய படமான ராஜபாட்டையில் விட்ட இடத்தை பிடித்துவிட்டார், அடுத்து என்ன நடக்கும் என்ன நம்மாள் யூகிக்க முடிந்தாலும், தினம் தினம் நாளிதழில் அக்கம்பக்கத்தில் நாம் பார்க்கும் விஷயம்தான் கதைக்கரு என்றாலும் வெள்ளித்திரையில் உத்தியான திரைக்கதையில் பார்ப்பது இதுதான் முதல் முறை...

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTdic53cwrYELABEoi2pRYpm_tiUDWGDoYBYVfgWEoPhsdx_bQFHA

படத்தில் நாயகன் முதற்கொண்டு பஞ்சாயத்து பேச வரும் பெருசுங்க உட்பட அனைவரும் யதார்த்தமாய் நாம் படம் பார்த்து கொண்டிருக்கிறோம் என்பதனையே மறக்க செய்கிறார்கள்... பாடல்களும் அருமை, முதல் பாதியில் இளமையான வசனங்களும் அருமை...

சந்தானத்தின் எகாத்தாளமான காமெடியை மட்டும் நம்பி கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் கதைக்கருவினையும் திரைக்கதையும் நம்பி எடுத்திருக்கும் படக்குழுவினை பாராட்டலாம்... என்ன கதை என கேட்டுக்கொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்...

நீங்கள் பெற்றோரா? காதலிப்பவரா? காதலிக்கும் எண்ணம் உள்ளவரா? கட்டாயம் நீங்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும், முடிந்தால் உங்கள் துணையுடன் போய் உங்கள் காதலின் ஆழத்தை தெரிந்து கொள்ளுங்கள்...

படத்தின் ட்ரெய்லர்வெறும் காமெடியினை எதிர்பார்த்து போனால் ஏமாறுவீர்கள், இது நாம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்...


Friday, 26 July 2013

பட்டத்து யானை - யானை பேர் சந்தானம்

அன்பர்களுக்கு வணக்கம், கோவை வந்ததுல இருந்த நினைச்ச மாதிரி படம் ரிலிஸ் ஆனா முதல் நாளே பார்க்க முடியுது, இன்னைக்கு "சொன்னா புரியாது" போகனும்னு நினைச்சாலும் பக்கத்துல அது ரிலிஸ் ஆகததால பட்டத்து யானைய பார்க்க போனோம், காலையில சகப்பதிவர்கள் போட்ட விமர்சனத்துல சுமார்னு சொல்லிருந்தாலும் மரியான் அளவுக்கா இருந்துட போகுதுனு போனோம், ஏன்னா நாங்க அலெக்ஸ் பாண்டியனையே முதல் நாள் பார்த்தவங்க...

 

படத்துல கதை இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை, ஏன்னா டைரக்டர் பூபதி பாண்டியன், ஆனா நச்சுனு காமெடி இருக்கும்னு எதிர்பார்த்தேன், ஏன்னா அவரோட முதல் படத்துல இருந்து படம் எவ்ளோ மொக்கையா இருந்தாலும் சில காமெடிகள் பயங்கரமா ரசிக்க வைக்கும், உதாரணத்துக்கு "மலைக்கோட்டை"ல "இடிமுட்டி" கேரக்டர், "காதல் சொல்ல வந்தேன்"ல பேக்ரவுன்ட் கஜினி மியுசிக் குடுத்து பில்டப் ஏத்தற லேடி வாய்ஸ் கேரக்டர்னு சொல்லலாம்.

எதிர்பார்த்த மாதிரி வயிறு வலிக்கற அளவுக்கு காமெடி இல்லைனாலும் படத்தோட மொக்கைகள் தெரியாத அளவுக்கு காமெடி இருக்கு, அதுக்கு காரணம் சந்தானம் தான், அவர் யாரோட பாடி லாங்க்வேஜ் அ காபி அடிக்கறார்னு யோசிக்க வைக்காமயே சிரிக்க வச்சுடறார், திரும்பவும் சொல்றேன் படத்துல கதை திரைக்கதைலாம் எதிர்பார்க்காம போனிங்கனா படம் உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும்...

http://cdn.vikatan.com/images/article/2013/07/22/22patathuyanai1.jpg

செல்லமேலயும் சண்டக்கோழிலயும் நான் ரசிச்ச விஷாலா இப்படி வீணாப்போனது, வஞ்சத்தில் வீழ்ந்தாயடா, கரண்டி வச்சுகிட்டு ஃபைட் ஆரம்பிக்கறப்ப எனக்கு சிரிப்புதான் வந்தது, "நான் சமையல் கத்துகிட்டது மதுரை ஜெயில்லடா"னு சொல்லி ட்விஸ்ட் வைக்கறாங்களாம், யோவ் நாங்க இன்டர்வெலுக்கு அப்புறம் ஆட்டோ டிரைவர் டானா சுத்தறதையே பார்த்துட்டோம்யா????

செகன்ட் ஆஃப்ல நிறைய லாஜிக் ஓட்டை இருந்தாலும் அதை உடனே மறக்கடிக்க நம்ம சந்தானம் ரீஎன்ட்ரி ஆகறதும், அந்த வில்லன்குருப் (ஜான் விஜய் & கோ) பன்ற அலப்பறைகளும் சரி கட்டிருது, படத்துல பாட்டும் ஃபைட்டும் இல்லைனா படம் சூப்பர்....

http://www.newsonweb.com/newsimages/May2013/484ab341-8bd8-4981-baca-e51aa4f018f41.jpg

அர்ஜுன் பொன்னு அசிங்கமா இருக்கு, பார்க்கறதுக்கு ஒன்னுமே இல்லைங்க, அவ்ளோதான் சொல்லுவேன், வில்லன் ரேப் பன்ற டீச்சர் கேரக்டர் கூட நல்லா இருக்கு, அவ்ளோ ஏன்? வில்லனோட கிளாஸ்மெட்னு சொல்ற ஐட்டம் கூட பரவாயில்லை, சரி விடுங்க.

இப்பலாம் வர எல்லா படத்துலயும் இளையராஜாவ எல்லோரும் உபயோகப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க, கொஞ்ச நேரம் வந்தாலும் மயில்சாமி ரவுசு ரவுசுதான், 

படத்தோட ஹீரோ சந்தானம் தான், அவருக்கும் சின்ன சின்ன ஃபைட்லாம் இருக்கு, அந்த இலைய வச்சு சிங்கமுத்து பொன்டாட்டி மறைக்கற சீன் செம, போரடிச்சா போய் தியேட்டர்ல பாருங்க, குருப்பா போனா காமெடிக்கும் சிரிக்கலாம், ஃபைட்டு சாங் எல்லாத்துக்கும் சிரிக்கலாம்...

நான் கடவுள் ராஜேந்திரன்லாம் சந்தானம் கூட சேர்ந்து செமயா காமெடி பன்றாப்ல, அப்புறம் நண்டு ஜெகன், அந்த குண்டு பையன் எல்லாரும் நல்லா பன்னிருக்காங்க...

Friday, 19 July 2013

மரியான் - அவசர பட்டுட்டேன்

தனுஷ்க்குனு ஒரு அடையாளம் வந்துருச்சு, அவருக்கு போட்டினுலாம் இனி யாரும் நிக்க முடியாத இடத்துக்கு போய்ட்டார், "மரியான்"படத்தை உண்மையிலேயே தனுஷ் அ நம்பித்தான் முதல் நாள் பார்க்கப்போனேன், படம் கமர்ஷியல் இல்லைனு தெரியும், அதுக்காக இவ்ளோ மெதுவா போனா எப்படி? ஆடியன்ஸ் ஒவ்வொருத்தரும் வாட்ச் அ பார்த்துகிட்டே படம் பார்க்கறாங்க...

 

கதைக்களம் புதுசுனு சொல்ல முடியாது, நீர்ப்பறவைல பார்த்தது, அப்புறம் கொஞ்சம் மயக்கம் என்ன, செகன்ட் ஆஃப் "ரோஜா", இன்னும் கொஞ்சம் யோசிச்சுருக்கலாம், ஆனா ஒருவேளை உண்மைக்கதைங்கறதால எதுவும் செய்ய முடியலையோ என்னவோ?

அதுக்குனு படம் மொக்கைனு சொல்ல மாட்டேன், ஏன்னா படத்தை 2 பேர் தூக்கி நிறுத்துறாங்க, படத்தோட ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், அவங்க இல்லைன்னா பல பேர் எழுந்து ஓடிருப்பாங்க, ஒவ்வொரு ஃப்ரேமும் தமிழுக்கு புதுசு, ஆப்பிரிக்கா புதுசு, முக்கியமா பார்வதி மேனன் ஃப்ரெஷ் ஆ இருக்க புதுசு.

படத்துல தனுஷ் அ உபயோகப்படுத்துன அளவுக்கு மத்த எல்லோரையும் கண்டுக்காம விட்டது வருத்தப்படத்தக்க விஷயம், அதுலயும் அந்த மலையாள நடிகர் சலிம் எனக்கு பிடிச்ச நடிகர், அநியாயத்துக்கு சும்மா வந்துட்டு போறார், ஒருவேளை "நான் ஈ" படத்துல தமிழ் மார்க்கெட்டிங்காக சந்தானத்த உள்ளே சொருகுன மாதிரி மலையாளத்துக்கு அவரை பயன்படுத்துறாங்களோ?

பரபரனு நம்மளை நுனி சீட்டுக்கு கொண்டு வர சீன் எதுவும் இல்லைனாலும் படம் போகுது, நாம எதிர்பார்க்கற பாட்டை தவிர மத்த பாட்டு வரப்ப கடுப்பாகுது, சமிபத்துல நான் பார்த்த படத்துல சந்தானம் வராத படம் இதுதான்னு நினைக்கறேன்...


ஆனா ஒன்னு, பார்வதி மேனன் அழகு, பல இடத்துல நாம எதிர்பார்க்காததலாம் காட்டி நம்மளை உற்சாகப்படுத்துறாங்க, சுத்தமா வறண்டு போன பாலைவனத்துல கூட இவங்க பாவடை தாவணில வர்ரது உள்ளே என்னமோ செய்யுது, நாம் திரும்ப மரியான் பார்க்கப்போறேன்னா அதுக்கு பார்வதி டார்லிங்தான் காரணம்.

ஆக மொத்ததுல நான் என்ன சொல்றனா படம் நல்லாருக்கு, உலக தரத்துக்கு எடுக்க முயற்சி பண்ணிருக்காங்க, அதனால என்னை மாதிரி அவசரப்படாதிங்க, பொறுமையா போய் பாருங்க.


Wednesday, 17 July 2013

மகாதேவன் - கரை சேர்ப்பாளன்

அன்பர்களுக்கு வணக்கம், நேற்று எங்கள் கல்லூரியில் புதிதாய் வந்திருக்கும் பேராசிரியர்களுக்கென ஒரு சுய உந்து நிகழ்ச்சி நடத்தினர், அதில் கோவை பார்க் கல்லூரி முதல்வர் திரு.லக்ஷ்மன் அவர்கள் ஒரு மனிதனை பற்றி மேலோட்டமாக குறிப்பிட்டார், பெயர் கூட கூறவில்லை, செய்யும் வேலையை மற்றவர்கள் மேற்பார்வை செய்கிறார்கள் என்பதற்காக செய்யாமல் தானாக சுயதிருப்திக்காக செவ்வனே செய்பவர்களுக்கு உதாரணமாய் அவரை குறிப்பிட்டார், அந்த மனிதனை பற்றிய விஷயங்கள் என்னை வெகுவாய் பாதித்தது.

நமக்குதான் இருக்கவே இருக்கிறதே இணையம், தேடிப் பிடித்தேன், முழுதாய் அறிந்து கொண்டேன். அந்த மனிதனின் பெயர் மகாதேவன். அவரை பற்றிய தகவல்கள் உங்களுக்காக...

 

பிறந்தது 1961 ஆம் வருடம், கர்நாடகா மைசூரில் அஞ்சுப்புரா என்ற கிராமத்தில் பிறந்த மகாதேவ் தனது 8வது வயதில் பெங்களூர் அரசு மருத்துவமனைக்கு தனது உடல்நலமில்லாத தாயுடன் வந்தார், அவரது தந்தையை பற்றிய தகவல் இல்லை, அரசு மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் மருத்துவமனை வரான்டாவில் தன் தாயை படுக்க வைத்து விட்டு, அக்கம் பக்கமிருந்தவர்களிடமும் சுற்றி இருந்த கடைகளிலும் பசிக்கு தஞ்சமடைந்துருக்கிறார். 3 வது நாள் அவரது தாய் மரணித்தது அவரை பெரிதாய் பாதிக்கவில்லை...

ஒரு வயதான பெரியவர் (மகாதேவ் தாத்தா) யாரும் உதவாத நிலையில் மகாதேவ்வின் தாய் உடலை எடுத்து சென்று புதைத்துள்ளார், அவருக்கு தெலுங்கு மட்டுமே தெரியும், மகாதேவ்விற்கு கன்னடம் மட்டுமே தெரியும், இருப்பினும் இருவரும் இணைந்து வாழ்ந்துள்ளனர்...

ஒரு நாள் அந்த தாத்தாவும் போய் சேர்ந்தார், அப்போது வருடம் 1971, மகாதேவ்விற்கு வயது 10, இத்தனை நாள் தாத்தா எவ்வாறு குழி தோண்டி புதைத்தாரோ அதே போல் தாத்தாவையும் அடக்கம் செய்தார், அப்படி செய்ததற்கு அவருக்கு கிடைத்த முதல் வருமானம் 2.50 ரூபாய். அன்று ஆரம்பித்து இதுவரை 77,882க்கு மேலான உற்றாரில்லாத (அனாதை) பிணங்களை புதைத்துள்ளார்...

மகாதேவ்விற்கு இந்த வேலை பிடித்துருந்தது என்பதை விட இந்த வேலை மட்டும்தான் தெரியும், இது சம்பந்தபட்ட ஆட்கள்,இடத்தை மட்டும் தான் தெரியும், வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அதை முழுமையாக செய்ய துவங்கினார், அவர் மிக கஷ்டபட்டது தனக்கான துனையை தேடும்பொழுதுதான்...

யாரும் அவருக்கு பெண் தர முன் வரவில்லை, வெறும் வெட்டியானாக இருப்பவனுக்கு யார் தெருவார்கள், 1979ல் அவருக்கு திருமணம் நடந்தது, தனது திருமணத்திற்காக தன் மாமனாருக்கு 2000 ரூபாய் வரதட்சனை கொடுத்துள்ளார். அது வரை தள்ளுவண்டி மூலமாக உடல்களை கொண்டு வந்தவர். அதன் பின் "அம்மு" என்ற குதிரை மூலமாக வண்டி இழுத்து கொணர்ந்திருக்கிறார்...

42000 உடல்களுக்கு மேல் அம்முவால் இழுக்க முடியவில்லை, 2000 வருடத்தில் அம்முவும் மகாதேவ்விடமிருந்து விடை பெற்றது, பல மரணங்களை கடந்த மகாதேவ்வினால் அம்முவின் பிரிவை ஏற்க இயலவில்லை, அடக்கம் செய்யவிடாமல் அழுது தடுத்திருக்கிறார், அதை பற்றி பேசுகையிலும் அவர் முகத்தில் துக்கம் தெரிகிறது, அம்முவை சரோஜ் நகரில் புதைக்க முடியாமல் போய் விட்டது என வருந்துகிறார்...

தற்போது 3 சக்கர வேன் மூலமாக உடல்களை கொணர்கிறார், அவருடைய வாகனத்தில் "VEHICLE FOR UNCLAIMED BODIES" என எழுதப்பட்டுள்ளது, நகரத்திலுள்ள அனைத்து லோக்கல் போலிஸ் ஸ்டேசனிலும் அவரது நம்பர் உள்ளது, அரசு மருத்துவமனையிலும் ஆள் இல்லாத உடல் வந்து விட்டால் இவருக்குதான் அழைப்பு வரும்...

பிரேத பரிசோதனை முடித்த பின்னர் சட்டப்படி எடுத்து சென்று புதைப்பது வழக்கம், அதற்கு மாறாக எரித்த உடல் ஒன்றே ஒன்றுதான். அது ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலிசாரால் சுட்டுக்கொல்லப் பட்ட "சிவராசன்"னின் உடல்.

நகரத்தில் இருந்து வரும் உடலுக்கு 800 ரூபாயும் அரசு மருத்துவமனையிலிருந்து வரும் உடலுக்கு 200 முதல் 250 வரையிலும் வாங்குவதாக கூறும் மகாதேவ் ஒவ்வொரு உடல் அடக்கத்திலும் 100 முதல் 150 ரூபாய் தான் மீதம் என்கிறார்.

இவரைப் பற்றி கேள்விப்பட்ட பல அறக்கட்டளைகள் இவருக்கு உதவி செய்துள்ளது, அனைத்து உதவிகளையும் தன் மகன் பிரவீனுடைய படிப்பிற்காக மட்டுமேபயன்படுத்துகிறார்.

மகாதேவ் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம், மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, இவரை 3 நாள் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஏசி அறையில் தங்க வைத்து, கடைசி நாளில் அவரே நேரடியாக வந்து மகாதேவ் மகனுடைய படிப்பிற்கு 1 லட்சம் ரூபாய் வழங்கியது தானாம்.

இவருடைய வாழ்க்கையில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

1) கிடைத்த வேலையை குறை சொல்லாமல் ஏற்று கொண்டது

2) அந்த வேலையை முழு மனதுடன் நிறைவாக செய்தது.

3) எப்படியும் கரை சேர்வோம் என்ற நம்பிக்கையுடன் எந்த தவறான வழிக்கும் செல்லாமல் நேர்மையாக வாழ்வது

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்???

நன்றி :தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

Saturday, 15 June 2013

"அப்பா, அடிக்காதிங்கப்பா, இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்ப்பா" - தந்தையர் தினம்

அன்பர்களுக்கு வணக்கம், இன்று தந்தையர் தினம், அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், பெண்களை பற்றி சொல்லவே வேண்டாம், நாம சாதாரணமா பேசறப்பவே அவங்கப்பா எப்படிலாம் அவங்க மேல பாசமா இருக்காங்கனு சொல்லி வெறுப்பேத்துவாங்க, பசங்கள்ல பாதி பேருக்கு என்னதான் அவங்கப்பா மேல பாசம் இருந்தாலும் 2 பேருக்கும் நடுவுல பெரிய இடைவெளி இருக்கும், படிப்பு முடிஞ்சு வேலைக்கு போக ஆரம்பிச்சதும் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகும்...

http://www.fathersday.org/images/slideshow/slide-4.jpg

இன்னைக்கு ஒரு நாள் முழுக்க அவங்கவங்க அப்பா கூட நடந்த நல்லது, கெட்டதை அசை போட்டுகிட்டு இருப்போமே, முதல்ல நான் என் அனுபவங்களை சொல்றேன்....

நான் எங்க வீட்ல 4 வது பையன், கடைக்குட்டி, அப்பா செல்லம், அதனால எங்கப்பா என்னை அடிச்சா இரத்தம் வராத அளவுக்கு தான் அடிப்பார், எங்க பரம்பரைலயே எங்க குடும்பத்துலதான் முதல்முறையா எல்லாரையும் காலேஜ் வரைக்கும் படிக்க வச்சது, எங்கப்பா 5 வது தான், ஆனாலும் 10வது வரைக்கும் நான் படிக்கறப்ப அது கணக்கு பாடமா இருந்தாலும் சத்தமா படிக்க சொல்லி பக்கத்துல உட்கார்ந்து கேட்டுகிட்டு இருப்பார்...

எங்கப்பாகிட்ட எனக்கு பிடிக்காத விஷயம் எப்ப எனக்கு பரிட்சை முடிஞ்சு ரிசல்ட் வந்தாலும், அது காலாண்டு, அரையாண்டு பரிட்சையா இருந்தாலும் என் மார்க்கை மத்த படிக்கற பசங்களோடயும் அவருக்கு தெரிஞ்சவங்க வீட்ல படிக்கற பொன்னுங்களோடயும் ஓப்பிடுவார், செம காண்டாகும், பதிலுக்கு நானும் சத்தம் போடுவேன், உடனே வீட்டை விட்டு போறேன்னு துணியைலாம் மூட்டை கட்டுவேன், அப்புறம் அம்மா தோசை சுடற சத்தம் கேட்டதும் சமாதானமாகிருவேன்.

அப்பாக்கு நான் வாத்தியாருங்களை எதிர்த்து பேசுனா பிடிக்காது, கடைசியா 10வது டியுசன் வாத்தியார் கூட சண்டை போட்டுட்டு இனி டியுசன் வரமாட்டேன்னு சொல்லி வீட்டுக்கு வந்தவனை நெஞ்சுலையே மிதிச்சு(உண்மைதாங்க) கொண்டு போய் விட்டார், 10 வது வரைக்கும் படிச்ச அரசு பள்ளிக்கூடத்துல நான் சேட்டை பன்றப்பலாம் "நீ ரத்தினத்துகிட்ட சொன்னாதான் அடங்குவ"னு சொல்லி காத்தை பிடுங்கி விட்ருவாங்க...

ஆனா அதே ஸ்கூல்ல, நாங்க பசங்க கபடி விளையாண்டுகிட்டு இருந்ததை கம்பிவேலி வழியா பார்த்துட்டு இருந்தார், தூரத்துலஇருந்து PD சார் விசில் அடிச்சு கூப்பிட, நாங்க எங்கப்பா பார்க்கற உற்சாகத்துல அதை கவனிக்காம நேரம் கழிச்சு போக எல்லாரையும் கைய நீட்ட சொல்லி பச்சை மூங்கில்ல அடிபின்ன, பார்த்துட்டு இருந்த எங்கப்பா மத்த லாரி டிரைவருங்க(அப்பாக்கு தொழில் டிரான்ஸ்போர்ட்) எல்லாரும் உள்ளே சண்டைக்கு வந்த விசயம் எனக்கு அடுத்த நாள்தான் தெரியும்.

காலேஜ் படிக்கறப்ப அவர்கிட்ட நிறைய பொய் சொல்லி இருக்கேன், இப்ப வரைக்கும் அவருக்கு நான் அர்ரியர் வச்ச விஷயங்கள்லாம் தெரியாது, காலேஜ்ல ஒரு பிரச்சனைக்கு அப்பா வந்ததான் உள்ளே விடுவேன்னு சொல்லி என்னை வெளிய நிக்க வச்சப்ப உடனே கிளம்பி வந்து எனக்காக ஒவ்வொருத்தர்கிட்டையும் பேசி அனுமதி வாங்கி, கடைசியா கிளம்பறப்ப செலவுக்கு பணம் கொடுத்து "உனக்கு நேரம் சரியில்லைடா, அதான் இப்படிலாம் பன்ற, தினமும் கோவிலுக்கு போ, எல்லாம் சரி ஆகிரும்"னு சொன்னது ரொம்ப நாள் என்னை ஏதோ செஞ்சுகிட்டே இருந்தது.

அவருக்கே நான் அர்ரியர் வச்ச விஷயம் அரைகுறையா தெரிய வரப்ப இது வரைக்கும் காலேஜ்க்கு கட்டுன பணத்தை எடுத்து வச்சுட்டு வீட்டை விட்டு வெளிய போக சொன்னது என்னை 3 மணி நேரம் அழ வச்சது, அதே அப்பா பொன்னு விஷயத்துல என்னை சீனியர் அடிக்க வந்த விஷயம் கேள்வி பட்டதும் 10 பேரோட வந்து அவன்கிட்ட "என் பையன் எவ கூட வேணா சுத்துவான், உனக்கு என்னடா பிரச்சனை?"ன்னு அவன் குருப்பையே மிரட்டனது காலேஜ்ல என்னை நிமிர்ந்து நடக்க வச்ச விஷயம்.

அப்பா கூட அவர் தொழிலுக்கு உதவியா இருந்தப்ப 2 பேருக்கும் தினமும் ஏதாவது சண்டை வரும், கிட்டத்தட்ட "எம்டன் மகன்" கதைதான், பல பெரிய தப்புக்கள் பண்ணி அவர்கிட்ட நேரடியா மாட்டி இருந்தாலும் நேரடியா என்னை திட்டுனதே கிடையாது, என்னை தவிர, அம்மா, அக்கா, அண்ணண்ங்கனு எல்லாரும் திட்டு வாங்குவாங்க.

பல விஷயங்கள், அவரோட கருத்துக்கள், அதிகப்படியான பக்தி என்னை முழுசா அவரை வெறுக்க வச்சது, நீங்களே யோசிச்சு பாருங்க, திடிர்னு ஒரு பையன் வேலைய விட்டுட்டு வந்து 4 மாசம் வீட்ல சும்மா உட்கார்ந்துருந்தா ஒரு அப்பா என்னலாம் சொல்லி திட்டிருப்பார்னு, ஆனா எதையும் என் காதுபட சொன்னது இல்லை.

எங்கப்பா கிட்ட நான் அதிகமா பேசுன வார்த்தைகள் "அப்பா, அடிக்காதிங்கப்பா, இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்ப்பா" தான், அப்பா வீட்ல இருந்தா நான் என் ரூம்க்கு வந்துருவேன், நான் சாப்பிட்டுகிடு இருந்தா அவர் எழுந்து வெளிய கிளம்பிருவார், 2 பேருக்கும் சுத்தமா ஒத்து போகாது, 3 வருசத்துக்கு முன்னாடிதான் பிறந்த நாள் கொண்டாடுற பழக்கம் எங்க குடும்பத்துக்கு வந்தது, நானும் அண்ணனும் ஒன்னா கேக் கொடுக்கறப்ப "நீங்க 2 பேரும் ஒரே நாள்ல தான் பிறந்திங்களா?"னு கேட்டார், அந்த அளவுக்கு என்னை பத்தின விஷயங்களை தெரிஞ்சு வச்சுருப்பார், எனக்கு அப்ப எவ்ளோ கடுப்பாயிருக்கும்?

இது மாதிரி நிறைய நேரம் என்னை வெறுப்பேத்திருக்கார், இருக்கட்டுமே!!! அதனால என்ன? போன வாரம் நான் ஊருக்கு போகனும்னு சொல்லிட்டு படுத்தவனை சரியா 3 மணிக்கு எழுப்பி, கிளப்பி, செலவுக்கு பணம் அம்மாகிட்ட கொடுக்க சொல்லி, பஸ் ஸ்டாண்டு இறக்கி விட்டு, பஸ் வரவரைக்கும் கூட நின்னுட்டு இருந்துட்டு, வந்த பஸ் டிரைவர் டீ குடிக்க இறங்கனதும் கூட சேர்ந்து டீ குடுச்சுட்டு, பஸ் கிளம்பற வரைக்கும் நின்னு பார்த்துட்டு போனது எங்கப்பா, அவர் என்னை என்ன வேணா செய்யலாம், என்னால வெறுக்க முடியாது...

"I LOVE YOU DAD"

"இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் நண்பர்களே"

Wednesday, 29 May 2013

தனித்திரு - 9

முந்தைய பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9

--------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி ஒன்றாக வருகையில் என்னால் திருவை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை. அவன் என்னுள் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து ‘என் ஒரு மாதிரி இருக்க?' எனக் கேட்டான். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எனக்கு ஒரு விஷயம் தெளிவாய் புரிந்தது. இதற்கு மேல் என்னால் முன்பு போல் திருவிடம் இயல்பாய் பேச முடியாது. காதலை சொல்லியே ஆக வேண்டும்.

“திரு”

“சொல்லு”

“சொன்னா கோவிச்சுக்க கூடாது?”

“சொல்லு”

“நான் உன்னை காதலிக்கறேன்”

அவன் நிமிர்ந்து என் முகத்தை பார்த்தான். அந்த பார்வையில் அவன் என்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை என தெரிந்தது.

“என்ன திடிர்னு?”

“நேத்துதான் எனக்கே தெரிஞ்சது”

“நான் என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கற வரலட்சுமி?”

“உனக்கு என்ன தோணுது?”

“நான் எதாவது சொன்னா உன் மனசு கஷ்டபடுமோனு பயப்படறேன்”

“பரவாயில்லை சொல்லு”

“எனக்கு உன்னை பிடிக்கும் லட்சுமி, ஆனா அது கண்டிப்பா காதல் இல்லை”

“அது எனக்கு தெரியும் திரு, நான் பதிலுக்கு நீ என்னை காதலிக்கனும்னு எதிர்பார்க்கலை. என்னால மனசுக்குள்ள அதை வச்சுகிட்டு உன்கிட்ட பொய்யா பழக விருப்பமில்லை, அதான் சொல்லிட்டேன், நான் சொன்னது தப்பாயிருந்தா மன்னிச்சுடு திரு”

“சேச்சே தப்புலாம் இல்லை, இதெல்லாம் மறந்துட்டு உன்னால என்கூட வழக்கம் போல பழக முடியுமா?”

“தெரியலை திரு, எனக்கு அந்த முயற்சி எடுக்கவே விருப்பமில்லை. நான் இப்படியே இருக்கனே, நீ வழக்கம் போல இரு, அதுல என்ன பிரச்சனை?”

“நீ மறந்துட்டதா சொன்னா கூட என்னால இயல்பா பேச முடியும். இல்லைனா ஒவ்வொரு தடவையும் நான் சொல்ற வார்த்தைகள் உன்னை வேற ஏதாவது நினைக்க வச்சுடுமோனு நான் பயப்படுவேன்”

“அப்ப என் கூட உன்னால நட்ப தொடர முடியாதுனு சொல்றியா?”

“எனக்கு சொல்ல தெரியலை வரலட்சுமி, நான் யோசிச்சு சொல்லட்டுமா? தப்பா எடுத்துக்காத”

“சேச்சே, ஆனா அடுத்த தடவை என்னை பார்க்கறதுக்குள்ள யோசிச்சுடனும்”

வீட்டிற்கு வந்த எனக்கு படப்படப்பாய் வந்தது. தேர்வு முடிவுக்காக கூட நான் இவ்வளவு ஆர்வமாக காத்திருந்தது இல்லை. அக்கா வந்ததும் அவளும் ஆர்வமாக என்ன நடந்தது என விசாரித்தாள். நடந்ததை கூறினேன்.

அன்று இரவு சாப்பிட்ட பின் கொஞ்ச நேரம் நடக்கலாம் என வீட்டை விட்டு வெளியே வந்த போது எனக்கொரு ரகசியம் தெரிந்தது. என் அக்கா தன் மொபைலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பலாம் என அருகில் சென்ற போது அவள் பேசிக் கொண்டிருப்பது திருவுடன் எனத் தெரிந்தது. மெதுவாக அமைதியாக என்ன பேசுகிறாள் எனக் கேட்டேன். ஒரே ஒரு விஷயம் தெளிவாக கேட்டது.

‘என்ன வேணா முடிவு பண்ணிக்கோ திரு, ஆனா கண்டிப்பா நட்ப உடைக்கற மாதிரி வேண்டாம். அப்படியே பண்ணாலும் உடனே பண்ணிடாதே, அவ தாங்க மாட்டா, எனக்காக சரியா?”

நான் திரும்ப எனது அறைக்கு வந்து விட்டேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஒன்று மட்டும் எனக்கு தெளிவாக புரிந்தது. சுபாக்கா எனக்காக சிபாரிசு செய்கிறாள் என்று அவளை அழைத்து ‘திருவிடம் என்ன சொன்னாய்?' என்று மட்டும் கேட்டேன். ஒன்றும் தெரியாதவள் போல் ‘என்ன?' என்று கேட்டவள் மெதுவாய் உண்மையை கூறினாள். இன்று நடந்த விஷயத்தை தெரிந்து கொண்டபின் அக்கா என் மொபைலில் இருந்து திரு நம்பரை எடுத்து பேசி இருக்கிறாள். என்னை காயப்படுத்தாமல் பேச சொல்லி கோரிக்கை விடுத்திருக்கிறாள்.

எனக்கு அவள் பேசியது நல்லதற்கா? கெட்டதற்கா? என்றே புரியவில்லை. ஆனால் ஒன்று புரிந்தது. என்னை சுற்றி அனைவரும் நல்லவர்களாக, பாசமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று.

அடுத்த முறை திருவை சந்தித்த பொழுது முதலில் நான் கேட்ட கேள்வி ‘எங்கக்கா என்ன சொன்னாங்க திரு?' என்றேன். அவனும் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை என சமாளிக்க பார்த்துவிட்டு பின் சொன்னான்.

“முடிவு எதுவாக இருந்தாலும் வரலட்சுமிய காயப்படுத்தாத மாதிரி வெளிப்படுத்து-னு சொன்னாங்க”

“அவளுக்காக எதையும் மாத்தி சொல்ல வேண்டாம், உண்மையான முடிவை சொல்லு” என்றேன். அவன் புன்னகைத்தான்.

“என்னாலயும் உன்னை பிரிஞ்சு இருக்க முடியாது வரலட்சுமி, நான் உங்கூட நண்பனா இருக்கேன். எப்ப எனக்குள்ள காதல் வந்தாலும் கூச்சப்படாம சொல்லிடறேன். சரியா?”

“ரொம்ப நன்றி” என்றேன்.

எனக்கு அதன்பின் எனக்குள் நடந்த மாற்றங்களை, என்னுள் நடந்த நிகழ்வுகளை எப்போதும் மறக்க முடியாது. அதன்பின் திருவை நான் பெயர் சொல்லி அழைப்பதை நிறுத்திக் கொண்டேன்.

அவனுக்கு பிடித்த உணவுகளை அவன் தங்கையிடம் கேட்டு தெரிந்து கொண்டு சமைக்க கற்றுக் கொண்டேன். அவன் வீட்டில் அதிக நேரம் இருக்க துவங்கினேன். அவன் அதிகம் படிக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.

அவனை போலவே திரைப்படங்களை உன்னிப்பாக கவனிக்க துவங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் முழுவதுமாய் திருவை நிரப்பினேன். அவனுக்கு பிடித்திருக்கும் விதமாக மாறினேன். அது எனக்கு பிடித்திருந்தது. உண்மையில் சொல்கிறேன். நமக்கு பிடித்தவர்களுக்காக அவர்களுக்கு பிடிக்கும் வண்ணம் நம்மை மாற்றிக் கொள்வது தனி சுகம், அதை அனுபவித்தவர்களுக்கு சொல்ல தேவையில்லை. இப்போது காதலில் தனக்கு பிடித்தது போல் மாற சொல்கிறார்களே தவிர மாறுபவர்கள் குறைந்து விட்டனர்.

திருவுடன் ஒருமுறை கான்ஃபிரன்ஸ் காலில் தீபிகாவுடன் பேசுகையில் என் காதலை அவளிடமும் தெரிவித்தேன். அவள் அது விஷயமாக திருவுடன் என்ன பேசினாள் என்று தெரியாது. ஒருநாள் திரு எனக்கு ஊக்கமளிக்கும் விதமாக ஒரு மாதிரியான புன்னகையுடன் கூறினான்.

“எனக்கென்னவோ, உன்னை காதலிக்க போறனோன்னு பயமா இருக்கு”

“நீ காதலிக்கலனாலும் என் காதல் தொடரும். உன்னை விட உன்னை காதலிக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு”

“வரலட்சுமி, எனக்கு கடைசி வரைக்கும் உன் மேல காதல் வரலைனா என்ன பன்னுவ?”

“நான் உன் காதலை எதிர்பார்க்கவே இல்லையே”

“நான் தீபிகாவ காதலிக்க ஆரம்பிச்சுட்டா?”

“உனக்கு பிடிச்சதெல்லாம் நேசிக்கற மாதிரி அவளையும் நேசிப்பேன்”

“உங்கப்பா உனக்கு வேற மாப்பிள்ளை பார்த்தா?”

“உன்னை பத்தி சொல்லி புரிய வைப்பேன்”

“ஆனா நீ மட்டும்தான என்னை காதலிக்கற? நான் உன்னை காதலிக்கலையே”

“எனக்கு அது போதும்”

“கண்டிப்பா உங்க வீட்ல இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க”

“எங்க வீட்டுக்கு தெரிஞ்சா, எனக்காக உங்களை ஒத்துக்க சொல்லி அவங்க சிபாரிசு பண்ற அளவுக்கு என்னால என் காதலை புரிய வைக்க முடியும்”

“எப்படி, சினிமால வர்ர மாதிரி தற்கொலை முயற்சியா?”

“சேச்சே, அது முட்டாள்தனம். எங்க வீட்ல என்னை பேச வச்சு கேட்கற அளவுக்கு பொறுமை அப்பா அம்மா 2 பேருக்கும் இருக்கு, என்னால என் காதலை அவங்களுக்கு விளக்கி சொல்லி புரிய வைக்க முடியும். எங்கக்கா எனக்கு ஆதரவா பேசுவாங்க”

“எப்படி இவ்வளவு நம்பிக்கையா பேசற? உன்னால இன்னும் என்னையே ஒத்துக்க வைக்க முடியலையே?”

நான் சிரித்துக் கொண்டே அவனிடம் கேட்டேன்.

“இப்ப நான் கேட்கறதுக்கு யோசிச்சு பதில் சொல்லனும். என்னை விட்டுட்டு இன்னொரு பொண்ணை உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியுமா?”

ஒரு நிமிடம் என்னையே பார்த்தான். சிரித்தான். யோசித்தான். என் கைகளை பிடித்துக் கொண்டே கூறினான்.

“நான் எப்பவும் உனக்கு மட்டும்தான்”

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS2DG9DoJnjDErz6jyls4e7dMdQ_Y0Socke16m_e-xIXZEY8aNoBg

தீபிகா சொன்ன காதலை ஏற்றுக் கொள்ளாதவன் என் காதலை எப்படி ஏற்றுக் கொண்டான் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஆனால் அதை நான் அவனிடம் கேட்கவில்லை. ஏனென்றால் அதற்கான பதில்தான் எனக்கே தெரியுமே!

தீபிகா காதலிப்பதாய் பலமுறை சொல்லிக் கொண்டிருந்தாள். நான் ஒருமுறை சொல்லி விட்டு, என் காதலை தினமும் அவன் உணரும் வண்ணம் வெளிப் படுத்தினேன். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் அவள் சொன்னாள். நான் செய்தேன்.

----------------------------------------------------------------------முற்றும்-------------

தனித்திரு - 8

முந்தைய பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9

--------------------------------------------------------------------------------------------------------------
அதன் பின்னர் திருவுடன் எப்போது பேசினாலும் எதாவது ஒரு விஷயத்தை பற்றி புதிதாய் பேசி, அவன் அதை எப்படி பார்க்கிறான் என்பதை பார்க்க துவங்கினேன். நாட்கள் நகர்ந்தது. ஒரு மாதம் கழித்து என் அத்தை மகளின் திருமணத்திற்கு செல்ல பேருந்து நிலையத்தில் என் குடும்பத்துடன் காத்திருந்தேன். ஏதெச்சையாக திருவுடன் ஒரு பெண் பேசிக்கொண்டு வருவதைப் பார்த்தேன். ஒரு நிமிடம் உள்ளே ஏதோ எழுந்து அணைந்தது.

நான் பார்த்ததை கவனித்து சுபாவும் அவர்களை பார்த்தாள். இருவரும் எங்களை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தனர். திரு எங்களை பார்த்ததும் புன்னகைத்தான். அதில் எந்த களங்கமும் இல்லை. என் அப்பாவிற்கு அவனை பார்த்ததும் மிகவும் சந்தோஷம், உற்சாகமாக அவனுடன் கைகுலுக்கி நலம் விசாரித்து கொண்டிருந்தார்.

திரு எங்களுக்கு அவனுடன் வந்திருந்த பெண்ணை அறிமுகபடுத்தினான். பெயர் தீபிகாவாம். அவனுடன் பள்ளியில் படித்தவளாம். எனக்கு அவளை பார்க்க எரிச்சலாய் இருந்தது. காரணம் அவள் என்னை விட அழகாய் இருந்தாள். நல்ல நிறம் வேறு. அந்த நேரத்தில் ஒரே ஆறுதல் திரு என்னை அறிமுகபடுத்திய விதம்தான்.

“நான் அடிக்கடி சொல்லுவனே வரலட்சுமி இவங்கதான்”

திரு என்னை பற்றி அடிக்கடி பேசுவதை நினைத்து சந்தோஷ படுவதா, இல்லை இவளிடம் அடிக்கடி பேசுகிறானே என்று பொறாமைபடுவதா என்று தெரியாமல் தவித்தேன். “தீபிகாவிற்கு ஊருக்கு செல்வதற்கு நாங்கள் துணையாய் இருப்பது நல்லதாய் போயிற்று” என்று திரு சொன்னதும் அவளும் சேலம் வரப்போகிறாள் என தெரிந்ததும் என் மனம் ஏதேதோ சிந்திக்க துவங்கியது.

“இந்த சந்தர்ப்பத்தை நமக்கேற்றார்போல் உபயோகபடுத்தி கொள்ள வேண்டும். நமக்கு தெரியாத திருவை பற்றிய பல விஷயங்கள் இவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. வாய்ப்பென்ன வாய்ப்பு? அதுதான் அடிக்கடி பேசுவார்கள் என தெரிந்து விட்டதே, கட்டாயம் தெரிந்துருக்கும். நாம் எதாவது பேச்சு குடுத்து விஷயத்தை கறக்க முடியுமா என பார்க்கலாம்”

திரு கிளம்பிய பின்னர் நானாக தீபிகாவிடம் போய் வலிய பேசினேன். முதலில் ஏதோ தயங்கியவள் பின்பு அவளும் என்னைப் போல் என்னை பற்றிய கேள்விகளை கேட்டு தெரிந்து கொண்டாள். பேருந்தில் அவளும் நானும் மட்டும் தனியாய் அமர வாய்ப்பு கிடைத்தது. அருகில் அமர்ந்து முதலில் மெதுவாக அவர்கள் படித்த பள்ளியை பற்றி பேச்சை துவக்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக சரியான கேள்விகளை உபயோகித்ததில் நான் சந்தேகப்பட்ட மாதிரியே, நான் எதிர்பாராத விதமாக பல உண்மைகள் வெளிவந்தன.
திருவும் தீபிகாவும் படித்தது ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில். ஆனால் நண்பர்கள் என்று சொல்ல முடியாது. அவ்வபோது பேசிக் கொள்வார்கள் அவ்வளவுதான். அந்த பள்ளியில் இருவருமே பிரபலமானவர்கள். எப்படி எனில் அவர்கள் படித்த பள்ளியில் கூடைப்பந்து அணியில் super senier பிரிவின் நம்பிக்கை நட்சத்திரம் திருமுருகன்தான். அதிகம் வகுப்பிற்கு போகமாட்டான். எப்படியும் வாரத்திற்கு 4 நாட்கள் மைதானத்தில்தான் இருப்பான். நண்பர்கள் அதிகம். சுமாரான படிப்பு, அனைத்து ஆசிரியர்களிடமும் நல்ல பெயர், மற்ற மாணவர்களிடையே பயம் என பள்ளியின் நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருந்தான்.

திருவின் அடையாளம் விளையாட்டு என்றால் தீபிகாவின் அடையாளம் படிப்பு அதுவுமில்லாமல் அழகு. எப்போதும் எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண், யாருக்கு எந்த பாடத்தில் சந்தேகம் என்றாலும் தீபிகாவை கேள் என்பார்கள். ஆனால் குணமும் தங்கம். ஒவ்வொருவரும் அவரவர்கள் பாதையில் தெளிவாக போய் கொண்டிருந்தார்கள்.

காதல் என்றால் என்ன? எப்போது வர வேண்டும் என்பதை எல்லாம் சொல்லி தராமல் வெறுமனே காதலிக்க வேண்டும் என்பதை மட்டும் சொல்லித்தரும் திரைப்படங்கள் திருவின் மனதை குழப்ப துவங்கியது. அதுவுமில்லாமல் தன்னை விட வயதில் பெரியவர்களுடனான சகவாசம் அவனுக்கு வேறு சில பழக்கங்களை கற்றுக் குடுத்தன. கொஞ்சம் கொஞ்சமாக திரு அவனே அவனை வியந்து பார்க்க துவங்கினான்.

மற்ற எல்லோரையும் விட நானே சிறந்தவன் என்ற குணம் அவனுள் தோன்றியது. நான் என்ற அகந்தை வேர் விட துவங்கியது. சுற்றிலும் பார்க்கிற விஷயங்களில் இருந்து தவறானதை மற்றும் கற்றுக் கொண்டான். ஒரு கட்டத்தில் யாரையாவது காதலித்தால் தான் தன் பெருமை இன்னும் உயரும் என அவனே முடிவு செய்து, யாரை தேர்ந்தெடுக்கலாம் என யோசித்த போது தீபிகா சரியானவளாக இருப்பாள் என முடிவு செய்து கொண்டான்.

http://tamil.oneindia.in/img/2012/09/24-saattai-300.jpg

காதலிப்பதாக நினைக்கும் அனைவரும் செய்யும் தவறைதான் திருவும் செய்தான். அதுதான் காதலை உணர்த்தாமல், காதலை வெளிப்படுத்தாமல் காதலை தெரிவிப்பது, காதலிக்க சொல்லி கட்டாயபடுத்துவது. திருவும் ஒருநாள் தீபிகாவிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்தான். ஏதோ சந்தேகம் கேட்பான் என நினைத்து போன தீபிகாவிற்கு கையில் ரோஜாவை நீட்டி காதலிக்கிறேன் என்று சொன்னவனிடம் என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை.

எப்படி தெளிவாக மறுக்க வேண்டும் என்பது கூட அவளுக்கு சொல்லித்தர பட்டிருக்கவில்லை. ‘ஒரு நாள் முழுக்க யோசித்து நாளைக்கு முடிவை சொன்னால் போதும்' என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.

தீபிகாவிற்கு அழுகையாய் வந்தது. அவன் தோழிகள் எதற்கு அழுகிறாய் என்று கேட்டதும் அழுகை அதிகமானது. அவளை சமாதானபடுத்தி காரணத்தை கேட்டறிந்த பின்னர் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு யோசனை தெரிவித்தனர்.

‘இல்லை, எனக்கு உன்னை பிடிக்கலைனு சொல்லிடு'

‘காலேஜ் போனப்புறம்தான் யோசிக்கனும்னு சொல்லு'

‘இன்னோரு தடவை இதை பத்தி பேசுனா செருப்பு பிஞ்சுடும்னு சொல்லு'

‘எங்கப்பாகிட்ட சொல்லிடுவேன்னு சொல்லு'

'ஹெட் மாஸ்டர் கிட்ட சொல்லிடுவேன்னு சொல்லு'

யாருமே அவனுக்கு இப்போது காதலிப்பது தவறு என சொல்லு என சொல்லித் தரவில்லை. குழப்பத்தில் தீபிகாவிற்கு முடிவெடுக்க தெரியவில்லை. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திருவை பார்க்க பயமாய் இருந்தது. உடல் நடுங்க துவங்கியது. கண்கள் சிவந்தே இருந்தன. வகுப்பிற்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தீபிகாவை பார்த்துதான் பாடம் நடத்துவார்கள். அப்படி வந்தவர்கள் ஒவ்வொருவரும் தீபிகாவை கவனித்து அவள் உடல் நலத்தை விசாரிக்க துவங்கினர். ஒருவேளை அன்று திரு வகுப்பிற்குள் வந்திருந்தால் கூட, தீபிகாவிற்கு இதில் விருப்பமில்லை என புரிந்து கொண்டு இருந்திருப்பான்.

பள்ளி மைதானத்தில் விளையாண்டு கொண்டிருந்தவனுக்கு, தீபிகாவின் நிலைமை புரிந்திருக்க வாய்ப்பில்லை. மாலை நெருங்க நெருங்க தீபிகாவிற்கு பயம் அதிகரித்தது. மதியம் சாப்பிட்டிருந்தாலும் தலை சுற்ற ஆரம்பித்து வகுப்பிலேயே மயங்கி விட்டாள்.

உடனே ஆசிரியைகளுக்கான அறைக்கு தூக்கி சென்று முகத்தில் தண்ணிர் தெளித்து எழுப்பினர். தீபிகாவின் தூரத்து உறவுக்கார பெண்மணி அங்குதான் ஆசிரியையாக இருந்தார்கள். என்ன நடந்தது என விசாரிக்கும் பொழுது தீபிகா ஏதும் சொல்லாததால் அவள் தோழிகளை தனியாக விசாரிக்கும் பொழுது உண்மை வெளிப்பட்டு விட்டது.

நடந்த தவறுக்கு திருவின் அறியாமையும் தீபிகாவின் பயந்த சுபாவமும் காரணம். ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை. தீபிகாவை ஈவ் டீசிங்க் செய்தது போல் திரு மேல் குற்றம் சுமத்தபட்டது. பிரச்சனை தலைமை ஆசிரியர் அலுவலகத்திற்கு சென்றது. திரு வரவழைக்கப் பட்டான். தோழிகள் உளறியது ஏதும் தெரியாமல் தீபிகாவும் வரவழைக்கப் பட்டாள்.

ஏற்கனவே திருவை பிடிக்காத தீபிகாவின் உறவுக்கார ஆசிரியை அவன் மேல் சரமாரியாக குற்றம் சுமத்த துவங்கினாள். திருவை பிடிக்காமல் போனதுக்கு காரணம் அந்த ஆசிரியையிடம் திரு மரியாதை இல்லாமல் சரிக்கு சரியாக ஒருமுறை பேசியது தான் காரணம். தக்க சமயத்துக்காக காத்திருந்தவர்களிடம் திரு வசமாக சிக்கினான். மற்ற மாணவர்களைஅடிப்பது, பெண்களிடம் வம்பிழுப்பது, ஆசிரியைகளை எதிர்த்து பேசுவது என எப்போதோ நடந்த விஷயங்களும் பட்டியலில் சேர்க்கப் பட்டன.

யாருடைய கைகளினால் பல முறை கோப்பைகளும் விருதுகளும் வாங்கியிருந்தானோ அந்த தலைமை ஆசிரியர் முன்பு திரு தலை குனிந்து நின்றான். அவனுடைய வகுப்பாசிரியர் நடந்ததை நம்ப முடியாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். என்ன நடந்திருக்கும் என ஒருவாறு யூகித்த தீபிகாவிற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

மற்றவர்கள் பேசாமல் இருப்பதை பற்றி கவலைப்படாமல் அந்த ஆசிரியை நேரடியாக திருவை திட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தலைமை ஆசிரியர் தலையிட்டு, தீபிகாவிடம் என்ன நடந்தது என்ன விசாரித்தார். அவள் ஒன்றும் நடக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்தாள். ஆனால் அந்த ஆசிரியை அவள் தோழிகளை வரவழைத்து மிரட்டி உண்மையை சொல்ல வைத்தார்.

மற்ற அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு தலைமை ஆசிரியர் திருவுக்கும் தீபிகாவிற்கும் தனித்தனியாகவும் ஒன்றாகவும் பிரச்சனையை பற்றி பேசி, படிப்பதன் முக்கியத்துவம் பற்றி கூறி, சில உதாரணங்களை சொல்லி திருவை எச்சரித்து இந்த பிரச்சனையை இதோடு விட்டுவிட வேண்டும் என கைப்பட எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பினார்.

திருவின் வாழ்வில் இதுதான் முதல் அவமானம். உயரத்தில் இருப்பவர்கள் விழுந்தாள் அடி பலமாய் விழும். மிகவும் கர்வமாய் இருப்பவர்கள் அவமானத்தை தாங்க மாட்டார்கள். திருவிடம் இருந்த அகந்தை அந்த நேரத்தில் ஓடி ஒளிந்து கொண்டது. யாரும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அவனால் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அழுகையும் வரவில்லை.

அன்று பள்ளியை விட்டு போன திரு நேராக வீட்டுக்கு போகவில்லை என அவன் பெற்றோர்கள் அவனை தேடி வந்த போதுதான் தெரிந்தது. அடுத்து வழக்கம் போல நடக்கும் எல்லா சம்பிரதாயங்களும் நடந்தது. காவல் துறைக்கு புகார் தரப்பட்டது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ‘திரு அங்கே வந்தானா?' ஊன்று விசாரிக்கப் பட்டது.

திருவின் தாய் கண்கள் கண்ணிரால் நிரம்பின, திருவின் தங்கை பக்கத்து வீட்டில் ஒப்படைக்க பட்டாள். பெற்றோர் இருவரும் ஒவ்வொரு இடமாக அலைய துவங்கினர். அந்த வீட்டில் அமைதி தொலைந்து போனது. அடுத்த நாள் பள்ளியில் விஷயம் தெரிய வந்தபோது ஐவ்வொருவரும் ஐவ்வொரு விதமாக பேச துவங்கினர். எல்லோருமே திருவை திட்டிய ஆசிரியை மீதுதான் பழி போட்டார்கள். அன்று மாலை திரு இருக்குமிடம் தெரிய வந்தது.

பக்கத்து மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் படுத்து இருந்தவனை அங்கு டீக்கடை போட்டிருந்தவர்கள் விசாரித்து காவல் துறையினர் உதவியுடன் அவன் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். திரும்ப அவனை அழைத்து வந்த பின் யாரும் அவனை ஏன் அங்கு போனான் என்று விசாரிக்கவில்லை. வீட்டில் அவன் தாயார் மட்டும் அழுகையை அடக்க முடியாமல் கதறினார். திரு பல தடவை சத்தியம் செய்தான், இனி அவர்களை விட்டு பிரியமாட்டான் என்று.
அவன் தங்கை தனியாக சத்தியம் வாங்கினாள் ‘அடுத்த முறை செல்வதாக இருந்தால் தன்னையும் அழைத்து செல்ல வேண்டும்' என்று. அவன் தந்தை ஏற்கனவே பள்ளியில் நடந்த அனைத்து விஷயங்களையும் விசாரித்து தெரிந்து வைத்திருந்தார். அவனை தனியாக அழைத்து ‘இதெல்லாம் வழக்கமாக எல்லோருடைய வாழ்விலும் நடக்கக் கூடிய விஷயம் தான், இதற்காக எதற்கு எங்களை விட்டு ஒட வேண்டும்?' என கேட்டார்.

மற்றவர்கள் முகத்தில் விழிப்பதற்கு அவமானமாய் இருப்பதாய் சொன்னான். அவன் தந்தை ‘மிகவும் அவமானமாய் இருந்தால் வேறு பள்ளியில் சேர்க்கவா?' ஊன கேட்டார். அவனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

அவர் சொன்னார். “நான் சொல்றதை கேளு, இந்த பள்ளிக் கூடத்துல இன்னும் ஒரு வருசத்துக்குதான் இருக்க போற, யார் கூடவும் பேசாம விளையாட்டிலயோ இல்லைனா படிப்பிலயோ, உனக்கு பிடிச்ச விஷயத்துல கவனம் செலுத்திட்டு இரு. இத்தனை நாள் கூட்டமாவே இருந்துட்ட, தனியா இருக்க பழகிக்கோ, உன்னை யார் கூடவும் சுத்தமா பேசக் கூடாதுனு சொல்லலை. உங்கிட்ட இருக்க குறையே உன்னோட எல்லா எண்ணங்களையும் எல்லார்கிட்டயும் சொல்லியே ஆகனும்னு நினைக்கறதுதான். அதை குறைச்சுக்க, குறைவா பேச ஆரம்பிச்சாலே போதும், பல நல்ல பழக்கங்கள் தானா வந்து சேரும்.”

அவனுக்கு இப்போது அப்பாதான் நண்பனாக தொ¢ந்தார். அவர் சொன்னதை மனதார ஒத்துக்கொண்டான். அடுத்த நாள் பள்ளிக்கு சென்றவனிடம் அவன் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வி கேட்டனர். எல்லோரிடமும் ‘அப்புறம் சொல்றேன்' என்று சொல்லி சமாளித்தான்.

அந்த ஆசிரியை அவனை அழைத்து மன்னிப்பு கேட்டார். அவன் பணிவாக பேசி விட்டு வந்தான். வகுப்பு வேளையில் வகுப்பிலேயே இருந்தான். கூடைப்பந்து பயிற்சிக்கு யாருமில்லாத விடியற்காலையை பயன்படுத்திக் கொண்டான்.
மாலை வேளையில் நண்பர்களுடன் ஊர் சுற்றுபவன் அதை தவிர்ப்பதற்காக அவர்கள் வராத இடமான நூலகத்தை தேர்ந்தெடுத்தான். தினம் தினம் செல்ல ஆரம்பித்தான். ஏதேனும் படித்துக் கொண்டே இருக்க துவங்கினான். அவனுக்குள் சுய சிந்தனை அதிகமானது. ஒவ்வொரு விஷயத்தையும் ஏன் எதற்கு என யோசிக்க துவங்கினான்.

தீபிகாவிற்கு அவனுடன் பேச வேண்டும் போல இருந்தது. அவனுடைய இந்த மாற்றம், பணிவு பலருக்கு இரக்கத்தை தந்தது. அதிலும் தீபிகாவிற்கு ‘தன்னால்தான் இப்படி ஆகிவிட்டான்' என்ற குற்ற உணர்ச்சி வேறு. திரு பெற்று கொண்டிருந்த புது விதமான சிந்தனைகள் ஒரு இடத்தில் உபயோகப்பட்டது. அவன் வகுப்பு தோழனின் தங்கை ஒரு பெண் பத்தாவது படிப்பவள் கல்லூரி மாணவன் ஒருவனுடன் ஊர் சுற்றுவதாக தெரிய வந்தபோது வீட்டில் பிரச்ச்னை வெடித்தது.

அந்த பெண்ணின் பெற்றோர்கள் அவளை அடியடியென அடிக்க, அந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கில் தொங்க முயற்சித்து விட்டாள். திரு ‘நான் பேசி பார்க்கிறேன்' என்று சொல்லிவிட்டு அந்த பெண்ணிடம் தனி அறையில் அவளின் அண்ணனை பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசினான். முதலில் அவளை அடித்ததற்காக அவள் பெற்றோர் சார்பில் அவள் அண்ணனை மன்னிப்பு கேட்க வைத்தான். முதலில் காதலை பற்றியும், அந்த பையனின் குடும்பம் பற்றியும், அவன் கல்லூரியில் சரியாக படிக்காமல் ஊர் சுற்றுவதை பற்றியும், அந்த தெருவில் எல்லோர் முன்பும் இனி அவளின் பெற்றோர்கள் தலை குனிந்துதான் நடக்க வேண்டும் என்பதையும், திருமண வாழ்க்கை குறித்த தனது கற்பனைகளையும் தெரிவித்தான்.ஓரளவுக்கு சமாதானமான அந்த பெண் இனி எக்காரணம் கொண்டும் தற்கொலை முயற்சி எடுக்க மாட்டேன் என்றும் சத்தியம் வாங்கிக் கொண்டான்.

நான்கு நாட்கள் சுற்றியிருப்பவர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்து போனதை பார்த்து தன் முட்டாள்தனத்தை உணர்ந்து தன் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டாள். நடப்பது எல்லாமே ஒன்று நன்மையை தரும் இல்லை ஏதாவது ஒன்றை கற்று தரும். கற்றுக் கொள்வதும் நன்மைதானே. அந்த பெண் தன் குடும்பத்தை புரிந்து கொண்டாள். அந்த குடும்பமும் அந்த பெண்ணுடன் நட்பாக பழக ஆரம்பித்தது.

எப்போதாவது அந்த பெண்ணை பார்த்தால் திரு படிப்பை பற்றியும் நலத்தை பற்றியும் மட்டும் விசாரிப்பதோடு நிறுத்திக் கொள்வான். நாட்கள் செல்ல செல்ல மீண்டும் திருவை எல்லோருக்கும் பிடிக்க துவங்கியது. ஒவ்வொருவரும் அவனுடன் பேச விழைந்தனர். ஆனால் திரு எல்லோரிடமும் அளந்துதான் பேசினான். ஆனால் மிகவும் பணிவாக பேசினான்.

ஒருநாள் தீபிகா திருவிடம் தனியாக பேச வேண்டும் என்றாள், அவனும் நின்றான். முதலில் மன்னிப்பு கேட்டாள். அவன் நன்றி கூறினான். எதற்கு என்று கேட்டதற்கு சந்தோசத்தை மட்டுமே பார்த்திருந்த எனக்கு நிம்மதியை தந்ததற்காக என்றான். என்ன தனியாக பேச வேண்டும் என கேட்டதற்கு அவனுடன் நட்பாக இருக்க வேண்டும் போல் இருப்பதாக கூறினான். குற்ற உணர்ச்சியின் காரணமாகவா எனக் கேட்டான். இல்லை நிஜமாகவே திருவின் தற்போதைய குணங்கள் பிடித்திருப்பதாக கூறினாள்.

அதன் பின் அவ்வப்போது பேசிக் கொள்வார்கள். திருவின் படிப்பில் ஏற்பட்ட புதிய ஆர்வம் அனைவரையும் தொற்றிக் கொண்டது. திருவின் ஊக்கத்துடன் படித்த தீபிகாவிற்கு அவள் ஆசைப்பட்ட மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. விடுதியில் தங்கி படிக்கிறாள். விடுதியிலிருந்து எப்போது வீட்டிற்கு சென்றாலும் வந்து முதலில் திருவை பார்த்து பின்தான் வீட்டிற்கு செல்வாள். அப்படி வந்து பார்த்து விட்டுதான் இப்போது திருவுடன் வீட்டிற்கு வரலட்சுமியுடன் சென்று கொண்டிருக்காள்.

என்னுடைய நெடுநாள் சந்தேகத்திற்கு தீபிகாவின் மூலம் விடை கிடைத்து விட்டது. ஏன் திரு இப்படி இருக்கிறான் என்ற கேள்விக்கு காரணம் தொ¢ந்து விட்டது. எனக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. திருவிடம் நான் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று.

அன்று இரவு என் அக்காவிடம் இதை பற்றி பேசினேன். அவள் தான் இப்படித்தான் இருந்திருக்கும் என முன்பே யூகித்திருந்ததாக கூறினாள். அந்த வாரக் கடைசியில் திருவின் தங்கையுடன் நூலகத்திற்கு சென்று வரும் பொழுது அவளிடம் தீபிகாவை பற்றி பேசினேன். அப்போது பேச்சுவாக்கில் தெய்வானையிடம் இருந்து ஒரு உண்மை வெளிவந்தது.

சுமாராக ஒரு வருடத்திற்கு முன்பு தீபிகா, திருமுருகனிடம் காதலை தெரிவித்ததாகவும், திரு அதுபோல் எண்ணமில்லை, மன்னித்து விடுமாறு கூறியதையும் இருந்தாலும் தொடர்ந்து இருவரும் பழகி வருவதையும் தெரிந்து கொண்டேன். இந்த விஷயம் என்னுள் இருந்து பல உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வந்தது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பயம் வந்து விட்டது.

வீட்டிற்கு வந்ததும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. முதலில் கோபமாக வந்தது. நகத்தை கடித்து துப்பினேன். யார் மேல் கோபம் என யோசித்தால் பதில் இல்லை. யதார்த்தமாக யோசித்தபோது என்மேல்தான் கோபம் என புரிந்தது.

எனக்கு வந்திருக்கும் கோபத்திற்கான காரணம் பயம், பொறாமை. எங்கு திரு தீபிகாவை காதலிக்கிறானோ அல்லது காதலிக்க துவங்கி விடுவானோ என்ற பயம் வரத் துவங்கியது. அதனால் எனக்கென்ன என்று என்னை நான் கேட்கும் பொழுது திருவை நான் எனக்கு சொந்தமானவனாக நினைப்பதுதான் காரணம் எனப் புரிந்தது.

அக்கா வந்ததும் என்னுள் இருக்கும் அனைத்தையும் கொட்டித் தீர்த்தேன். அவள் சிறிது நேரம் யோசித்தாள். பின் என்னிடம் வந்து அடுத்த முறை அவனை பார்க்கும் பொழுது காதலை சொல்லி விடு என்றாள். எப்படி சொல்வது எனக் கேட்டதற்கு எப்படியாவது சொல் என்றாள். எனக்கும் அதுதான் சரி எனப்பட்டது. என்னால் இனி ஒரு கணமும் அவனுடன் பொய்யாக பழக முடியாது. மனதுக்குள் காதலை வைத்துக் கொண்டு சாதாரணமாக பழகும் திறமை எனக்கில்லை. சொல்லத்தான் போகிறேன்.

சொல்ல வேண்டும் என முடிவெடுத்த பின்னர் எனக்கு உடனே திருவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஒரு நிமிடம் மெதுவாக அவனைப் போல் யோசித்து பார்த்தேன். எதற்காக நான் திருவை காதலிக்கிறேன்? எனக்கு திருவை பிடித்திருக்கிறது. பிடித்திருந்தால் தோழியாக வாழ்க்கை முழுவதும் இருக்கலாமே, எனக்கு அது போதாது, எந்நேரமும் எப்போதும் நான் திருவுடனே இருக்க வேண்டும்.

அதற்கு காரணம் கேட்பான் அதுவும் சிரித்துக் கொண்டே, அவனிடம் திறமையாக பதிலளித்தாலும் நாம் கூறும் வார்த்தைகளை வைத்தே நம்மை மடக்குவான். எப்படி வேண்டுமென்றாலும் மடக்கட்டும். அவ்வளவு ஏன்? என்னை பிடிக்கவில்லை என்று கூட சொல்லட்டும். நான் அவனை காதலிப்பதிலிருந்து மாறப் போவதேயில்லை. உறுதியாக முடிவு எடுத்த பின்னரே மனம் அமைதியானது. இரவு அக்காவின் கைகளை பிடித்துக் கொண்டே தூங்கினேன். அக்காவிற்கு தெரியாது நான் திருவின் கைகளை நினைத்துதான் பிடித்துக் கொண்டிருந்தேன் என.

----------------------------------------------------------------------------தொடரும்-------------


அடுத்த பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9

தனித்திரு - 7

முந்தைய பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9

--------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் நானே எதிர்பாராத விதமாய் வீடு வந்து சேர்ந்ததும் திருவிடமிருந்து அழைப்பு வந்தது. நம்ப முடியாமல் பேசினேன். நான் எதிர்பார்த்தது போல் எதுவும் இல்லை. அவன் தங்கைக்கு ஏதோ சில துணிகள், அலங்கார பொருட்கள் வாங்க துணைக்கு போய் வர முடியுமா என்று கேட்டான். எனக்கும் அந்த முட்டை கண்ணியை மீண்டும் பார்க்க வேண்டும் போல இருந்ததால் சரி என்று ஒத்துக்கொண்டேன். நான் உடை மாற்றி தயாராவதற்குள் வீட்டிற்கு அழைத்து வந்து, என் வீட்டில் உள்ளோரிடம் பேசிவிட்டு சென்றான். அவன் தங்கையின் பள்ளியில் ஏதோ விழா நடக்க போகிறதாம். அதற்கு நடனமாட போகிறார்களாம். 4 பெண்களுக்கு ஒரே மாதிரி துணி எடுக்க வேண்டும் என்றும் மற்ற சில அலங்கார பொருட்கள் வாங்க வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன்.

எனக்கும் இது போன்ற பொருட்களை எங்கு வாங்க வேண்டும் என்று அவ்வளவுக்காய் தெரியாது, என் தோழிகளிடம் விசாரித்து அழைத்து சென்றேன். கடைகளுக்கு சென்ற பின்புதான் தெரிந்தது நான் அழைத்து வந்திருப்பது சரியான வாயாடி என்று. ஒவ்வொரு இடத்திலும் அடித்து விலை பேசினாள். நான் இனி எந்த பொருள் வாங்க செல்வதாக இருந்தாலும் தெய்வானையை அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.
எல்லாம் வாங்கி முடித்த பின் பணம் தரும் பொழுது என்னை ஒரு பார்வை பார்ப்பாள். பேசி இன்னும் கொஞ்சம் விலையை குறைக்க முடியுமா? என்பதுதான் அந்த பார்வைக்கான அர்த்தம். எனக்கு அது போல் விலை குறைத்து தர சொல்லி பேசி பழக்கம் இல்லை. ஆனால் அவள் கண்களை உருட்டி உருட்டி பேசியது எனக்கு பிடித்திருந்தது.

வாங்க வேண்டியது எல்லாம் வாங்கிய பின் திரும்பி வரும் போது இருவருக்குள்ளும் பேசிக்கொள்ள தயக்கம் இல்லை.எப்போதும் வயதில் சிறியவர்களிடம் எல்லாம் கேட்பது போல் நானும் முதலில் படிப்பை பற்றித்தான் பேச ஆரம்பித்தேன். அதிகம் சுற்றி வளைக்காமல் அவள் அண்ணனை பற்றி பேச துவங்கினேன்.

“உங்க அண்ணன் கொஞ்சம் வித்தியாசமா இருக்காங்க இல்லை?”

“எப்படி சொல்றிங்கக்கா?”

“எனக்கு அப்படி தோணுது, சரி வீட்ல எல்லோர்கிட்டயும் நல்லா பேசுவாரா?”

“வீட்ல அந்த வேலையைதான் செய்வார். தினமும் என்ன நடந்ததுன்னு அம்மாகிட்ட சொல்லிடுவாரு, அப்புறம் அதை அப்படியே டைரில எழுதிடுவார்"

“ஒகோ அந்த பழக்கமெல்லாம் வேற இருக்கா?”

“உங்ககிட்ட சொன்னதில்லையா?”

“நானா கேட்காம உங்கண்ணன் எங்கிட்ட எதையுமே சொல்ல மாட்டார். ரொம்ப reseved”

“யாரு எங்கண்ணனா? பொய் சொல்றிங்க, என் கூட தினமும் பேசுவார். விளையாடுவாரு, எதை வச்சு அப்படி சொல்றிங்க?”

“எங்கிட்ட பேசறதை வச்சுதான்”

“என்னமோ எனக்கு நீங்க சொல்லிதான் எங்கண்ண்ன் reserved-னு தெரியுது. ஆனா நான் நம்ப மாட்டேன்”

“உங்கண்ணன் jolly type னு சொல்றியா?”

“ஆமா, எங்கண்ணன் எப்பவும் கோபப்பட மாட்டார். எனக்கு படிப்பு சுமாராதான் வரும். அந்த சுமாரும் அவர் சொல்லி தர்ரதாலதான். ஆனா எனக்கு நடனத்துலதான் விருப்பம்னு எங்கம்மாகிட்ட பேசி அவர்தான் வாரவாரம் dance class போக உதவி பண்ணார். தினமும் பாட்டு பாடி என்னை ஆட சொல்லி பார்த்து கை தட்டி என்னை உற்சாக படுத்துவார் தெரியுமா?”

“உங்கண்ணன் நல்லா பாடுவாரா?”

“ரொம்ப நல்லா பாடுவார்னு சொல்ல முடியாது, ஆனா கூச்சபடாம பாடுவார்”

“எப்படி வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கறார்?”

“அப்படிலாம் இல்லையே, அப்பப்ப library தான் இருப்பார். எதாவது படிச்சுகிட்டே இருப்பார். அதுக்காக reserved னுலாம் சொல்ல முடியாது”

“சரி சரி ஒத்துக்கறேன். உங்கண்ணன் reserved இல்லை”

அதன் அவளை பற்றி பொதுவான விஷயங்களை பற்றி கொஞ்ச நேரமும் பேசினோம். எனக்கு தெய்வானை பேசும் விதம் பிடித்திருந்தது. திருவிற்கு அது நேரேதிராக கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கும்.

அடுத்த முறை திருவிடம் பேசியபோது நேரடியாக என்னையும் நூலகத்தில் உறுப்பினராக சேர்த்து விடச்சொல்லி கேட்டு, அடுத்து வந்த ஞாயிறன்றே நானும் அக்காவும் உறுப்பினரானோம். முதல் நாள் அக்கா ‘இரமணி சந்திரன்' நாவல்களை எடுத்துக் கொண்டாள். நானும் அதே போல் கைக்கு கிடைத்த நாவல்களை எடுத்து கொண்டு வந்தேன்.

எனக்கு புத்தகங்கள் படிப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆனால் ஆர்வத்தை வரவழைத்துக் கொண்டு படித்தேன். அப்போதும் முடியவில்லை. அடுத்த முறை திருவை பார்த்த போது நேரடியாக அதை பற்றி கூறினேன்.

“ந்னக்கு படிச்சு தெரிஞ்சுக்கறதுல அவ்வளவா ஆர்வம் இல்லை, வரவும் மாட்டேங்குது, பேசலாம்னா எவ்வளவு நேரம் வேணா பேசலாம்.”

“அதுல தப்பில்லையே, பேசியும் தெரிஞ்சுக்கலாமே”

“அப்ப நான் கேட்கறேன், நீ சொல்றியா?”

“எனக்கு தெரிஞ்சத சொல்றேன்”

“நான் பெருசா ஒன்னும் கேட்க போறதுல்லை, உன்னை பத்தி சொல்லு?”

“என்னை பத்தியா? என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு?”

“உன் பள்ளிக்கூட வாழ்க்கைய பத்தி சொல்லு?”

“நான் 5வது வரைக்கும் இந்த ஊர்லதான் படிச்சேன். அடுத்த 7 வருசம் அப்பாக்கு மாற்றல் ஆகி சேலம் போய்ட்டோம். நான் ஓரளவுக்கு படிப்பேன்னு பேர் இருந்தது. அங்கே எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. என்னால மறக்க முடியாத என் வாழ்க்கையோட பகுதி அதுதான், யாராலயும் அவங்க பள்ளிகூட நினைவுகள மறக்க முடியாது”

“எனக்கு ஒரே school லயே lkg-லருந்து +2 வரைக்கும் முடிஞ்சுடுச்சு. அதுவும் ரொம்ப கண்டிப்புனு சொல்லிக்கற பொண்ணுங்க மட்டும் படிக்கற இடம். அக்கா இருந்ததால ஒன்னும் கஷ்டமா இல்லை”

“உனக்கும் உங்கக்காக்கும் சண்டை வருமா?”

“வரும், பேசிக்காம இருப்போம், உடனே அப்பா சமாதானபடுத்தி வச்சுடுவார். திரு உனக்கு புத்தகம்-னா ரொம்ப பிடிக்குமா?”

“ம், கேள்வி கேட்க கத்து தரும்”

“சரி என் எங்கிட்ட பேசற மாதிரி மத்தவங்ககிட்ட நல்லா பேசமாட்டேங்குற?”

“எஎன்னா நீ என்னை ஓரளவுக்கு புரிஞ்சுக்க முயற்சி பண்ற, மத்தவங்களுக்கு நான் பேசறது கேட்க போர் அடிக்கும் அதான்”

“பசங்களுக்கு வேணா அப்படி சொல்லலாம், பொண்ணுங்களுக்கும் நீ பேசறது பிடிக்காதுனு எப்படி சொல்ல முடியும்?”

“எனக்கு அப்படித்தான் தோணுது”

“என்னை பார்த்தா பொண்ணு மாதிரி தெரியலையா உனக்கு? நான் உங்கிட்ட பழகிட்டு இருக்கனே, அப்புறம் என்ன?”

“எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லப்பா, ஆனா என்ன பேச சொல்ற?”

“என்னவா இருந்தா என்ன? எதாவது பேசு, ஒதுங்கி ஒதுங்கி போகாதப்பா”

“சரி, பேசறேன்”

எனக்கு அவன் என் பேச்சை ஒப்புக் கொண்டதும் சந்தோஷமாக இருந்தது. ஒரு குழந்தையை 4 பேர் அழைக்கும் பொழுது, அந்த குழந்தை ஒருவரிடம் மட்டும் சென்றால் அவருக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும். எனக்கும் அப்படித்தான் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது.

அடுத்து வந்த நாட்களில் ஒருமுறை திருவை என் தோழிகளுடன் பேச வைப்பதற்காக மதிய உணவு இடைவேளையின் போது canteen-ல் வட்ட மேஜை மாநாடு ஏற்பாடு செய்தேன். திரு எந்த தயக்கமும் இல்லாமல் வந்து அம்ர்ந்தான். பெண்களில் சிலர் குசுகுசுவென்று பேசிக் கொண்டனர். சிறிது சிறிதாக அரட்டை துவங்கியது. நான் நினைத்ததற்கும் மேலாக திரு சிரித்து பேசினான்.

பெண்கள் அவனை கேலி செய்த பொழுது உரக்க சிரித்து கொண்டான். பதிலுக்கு அவனும் கேலி செய்தான். செய்து விட்டு உடனே “தப்பா எடுத்துக்காதிங்க சும்மா விளையாட்டுக்குதான் சொன்னேன்” என்றான்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தில் உற்சாகம் பொங்கியது. அரை லிட்டர் குளிர்பானத்தை வாயிலிருந்து எடுக்காமல் குடிப்பதாய் பந்தயம் கட்டி ஜெயித்தான். கை விரலை முழுவதுமாய் வளைத்துக் காட்டினான். சினிமாவை விமர்சனம் செய்து சிரித்து பேசினான்.

நாக்கால் மூக்கை தொட முயற்சி செய்து தோற்றும் போனான். அடுத்த வகுப்பிற்கு மணியடிக்கும் பொழுது யாருக்கும் எழுந்து போகவே விருப்பமில்லை. நான் அமைதியாக அவன் பக்கத்தில் பெருமையுடன் அமர்ந்திருந்தேன்.

http://1-ps.googleusercontent.com/x/www.nst.com.my/w1.nst.com.my/polopoly_fs/1.265084.1366975278!/image/image.jpg_gen/derivatives/landscape_454/ximage.jpg.pagespeed.ic.QN_cj3dOis.jpg

அன்று மாலை வீட்டுக்கு செல்லும் போது உற்சாகமாய் ‘எப்படி இருந்தது?' என்று கேட்டேன்.

“நல்லாதான் இருந்தது. நான் ஒண்ணு கேட்கவா?”

“கேளு திரு”

“நான் அப்படி சிரிச்சு, சத்தம் போட்டுகிட்டு கேலியும் கிண்டலுமாய் இருந்தா உனக்கு பிடிச்சுருக்கா?”

"ஏன் அப்படி கேட்கற?”

“இல்லை, உன் முகத்துல பெருமை தெரியுதே தவிர சந்தோஷம் தெரியலையே”

“எப்படி திரு சொல்ற?”

“நான் தினமும் உன் முகத்தை பார்த்துகிட்டு இருக்கேன். பல தடவை உன் சந்தோஷமான முகத்தை பார்த்துருக்கேன். இன்னைக்கு நீ சந்தோஷபட்ட மாதிரி தெரியலை. அதான் கேட்டேன்”

“எனக்கு அப்படி எதுவும் தெரியலைப்பா”

“சரி விடு, உனக்கு சந்தோஷம்னா எனக்கும் சந்தோஷம்”

எனோ அவன் அப்படி சொன்னதுதான் எனக்கு சந்தோஷத்தை தந்தது. எனக்கு இன்னும் கொஞ்சம் திருவிடம் நெருங்க வேண்டும் போல இருந்தது. இதை நான் அக்காவிடம் சொல்லவில்லை. அடுத்து அவனுடன் பேசுகையில் காதலை பற்றி பேச வேண்டும் என நினைத்து கொண்டேன். அதற்கான சந்தர்ப்பமும் தானாய் அமைந்தது.

ஒரு ஞாயிறன்று திருவுடன் நூலகத்திற்கு சென்று வருகையில் வழக்கம் போல் விவாதித்து கொண்டு வந்தோம். எனக்கு மனதில் சின்னதாக ஒரு ஆசை இருந்தது. ஏதேனும் விடுதியில் ஒன்றாக தேநீர் அருந்தவோ, அல்லது வேறேதேனும் சாப்பிடவோ வேண்டும் என்று.

ஆனால் எனக்கு இது போன்ற அனுபவமில்லை. எப்படி அழைப்பது என்றும் தெரியவில்லை. வெட்கம் என்று சொல்ல முடியாது, தயக்கமாக இருந்தது. இதை பற்றிய சிந்தனைகள் வந்ததும் என்னால் அதிகம் பேச முடியவில்லை. அதை கவனித்த திரு ‘என் ஒரு மாதிரி இருக்க?' என்று கேட்டான். நான் ‘ஒன்னுமில்லை, தலை வலிக்கற மாதிரி இருக்கு' என்றேன். அப்படி சொன்னால் ‘டீ சாப்பிடலாமா?' என்று கேட்பான் என எதிர்பார்த்தேன்.

ஆனால் அவன் வேறு விதமாக கேட்டான். ‘மாத்திரை வாங்கி தரட்டுமா?' என்று. ஏதோ அந்த அளவுக்கு அக்கறை வைத்திருக்கிறானே என்று நினைத்துக் கொண்டு ‘இல்லை வேண்டாம் பரவாயில்லை' என்றேன். ஆனால் அப்படியே பேசிக் கொண்டு வரும் வழியில் ஒரு மெடிக்கல் ஷாப் வந்ததும் மாத்திரை வாங்க சென்றான். நான் அருகில் ஒட்டி இருந்த காபி ஷாப்பினை எக்கமாக பார்த்து கொண்டிருந்தேன். இது ஒன்றும் பெரிய ஆசை இல்லைதான். ஆனால் மற்றவர்களை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறதே. என்ன செய்ய?

திரும்பி வரும் பொழுது திரு சிரித்து கொண்டே வந்தான். அந்த சிரிப்பில் குறும்பு தொனித்திருந்தது. மெதுவாக ‘அந்த பக்கம் பாரு, யாருன்னு' என்றான். நான் எட்டி பார்த்தேன். உள்ளே என்னுடன் படிக்கும் பெண்ணோருத்தி யாரோ ஒருவனுடன் அமர்ந்து ஐஸ்கிரிம் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

திரு ‘இங்கே நிற்க வேண்டாம்' என அழைத்து சென்றான். ‘அந்த பையன் யார்னு தெரியுதா?' என்றான். ‘யாரு? உனக்கு தெரியுமா?' என்றேன்.

“நம்ம சீனியர்தான், பேர் ஞாபகம் இல்லை”

“வனிதா கூட உட்கார்ந்துருக்கார், ரிலேட்டிவ்வா?”

“ஆகப் போறாங்கனு நினைக்கறேன்”

“லவ்-ஆ?”

“அப்படித்தான் நினைக்கறேன்”

“உனக்கெப்படி தெரியும்?”

“பல இடத்துல 2 பேரையும் பார்த்துருக்கேன். அதிகமா சாயங்கால நேரத்துல பார்க்-லதான் இருப்பாங்க”

“நீ அடிக்கடி பார்க் போவியா?”

“எப்பவாவது போவேன்”

“ஏன் இது வரைக்கும் எங்கிட்ட அவங்களை பத்தி சொல்லவேயில்லை?”

“சொல்லனும்னு தோணலை, ஏன் தப்பா?”

“சொல்லாம இருக்கறது தப்பில்லை, பார்க்குக்கு போகும் போது ஏன் என்னை கூப்பிடனும்னு தோணலை?”

“உனக்குலாம் இது மாதிரி என் கூட வரத்தோணும்னு எனக்கு எப்படி தொ¢யும்? நீ கேட்டதேயில்லையே?”

“இதெல்லாம் நானா கேட்க முடியும்?”

“சரி விடு”

எனக்கு நான் ஏன் அப்படி பேசினேன் என்று தெரியவில்லை. நான் ஏதோ ஒரு ஞாபகத்தில் பேசிவிட்டேன். ஆனால் மனதுக்குள் கொஞ்சம் சந்தோசமாகவும் இருந்தது. அதை பற்றி பேச்சு முடிந்ததும் இதுதான் சரியான தருணம் என்று காதலை பற்றி பேச துவங்கினேன்.

“ஏன் திரு, காதலிக்கறது பத்தி என்ன நினைக்கற?”

“உண்மையிலேயே அது ரொம்ப அற்புதமான விஷயம், ஆனா இங்கே அது மாதிரி உண்மையான காதல் எல்லோர்கிட்டயும் இருக்கறது இல்லை”

“தெளிவா உன் அபிப்பிராயத்த சொல்லேன்”

“காதல், கல்யாணம், குழந்தைங்க இது எல்லாமே வாழ்க்கைல மனிதனுக்கு பிடிப்ப தரக்கூடிய விஷயங்கள், ஆண்கள் கடுமையா உழைக்கறப்ப யாருக்காக இந்த கஷ்டம்னு யோசிக்கும் போது பதில் தரக்கூடியது குடும்பம்தான். அந்த குடும்பம் மேல பற்று வர காதல் தேவை. நல்ல காதல் இருக்க குடும்பத்துல நல்ல குழந்தைங்க பிறப்பாங்க, எளிமையா சொல்லனும்னா காதல் இல்லாம குடும்ப வாழ்க்கை நிம்மதியா இருக்காது”

“ஒத்துக்கறேன் திரு, காதல்னா என்னன்னு சொல்ல வர்ர?”

“நிறைய சொல்லலாம் காதல்னா முதல்ல நம்பிக்கை, நிறைய அன்பு, தன்னையே அர்ப்பணிக்கற பாசம்னு சொல்லிகிட்டே போகலாம். ஆனா இதெல்லாம் வெறும் ஏட்டறிவுதான். என்னால அனுபவ பூர்வமா சொல்ல முடியாது”

“உன் மனசுல நீ நினைக்கற அளவுக்கான காதலை யார்கிட்டயாவது பார்த்திருக்கியா?”

“இல்லை, புராணத்துலதான் படிச்சுருக்கேன், நீ பார்த்திருக்கியா?”

“நான் எனக்கு தெரிஞ்சு யாராவது லவ் பண்றாங்கனு தெரிஞ்சாலே அவங்ககிட்ட இருந்து விலக ஆரம்பிச்சுடுவேன். எனக்கு இங்கே காதலிக்கறவங்கள பார்த்து பார்த்து காதல் மேலயே கோபம் வந்துடுச்சு”

“ஏன் அப்படி சொல்ற?”

“8வது 9வது படிக்கற பசங்க பொண்ணுங்களாம் காதலிக்கறாங்கப்பா, அவங்களுக்கு காதல்னா என்னன்னே புரியாத வயசுல எதுக்கு காதல்னு சொல்லிகிட்டு மனச அழுக்காக்கிறாங்க, அதே நேரத்துல என்னால இது தப்புன்னு சொல்ல முடியுதே தவிர ஏன் தப்புன்னும் காதல் எப்படி இருக்கனும்னும் விளக்க தெரியாததால காதல்-அ விட்டு ஒதுங்கி இருக்கேன்”

“இதை எளிமையா சொல்லலாம். உன் வீட்ல இருக்கவங்ககிட்ட உன் காதலை உன்னால தைரியமா சொல்ல முடியும்னா நீ தைரியமா காதலிக்கலாம். அவங்க கேட்கற கேள்விக்கு உங்கிட்ட பதில் இருக்கும் போது நீ தைரியமா காதல் செய்”

“யார் வீட்ல பொண்ணு காதலிக்கறதா சொன்னா ஒத்துப்பாங்க?”

“பொண்ண புரிஞ்சுகிட்ட வீட்ல ஒத்துப்பாங்க”

“எப்படி சொல்ற?”

“தான் பொண்ணு தப்பு பண்ண மாட்டானு வீடு நம்பனும், நம்ம வீட்ல இருக்கவங்க நமக்கு நல்லதுதான் பன்னுவாங்கனு பொண்ணு நம்பனும், இந்த நம்பிக்கை இல்லாத வீட்ல இருக்க பொண்ணு, தன் மேல முதல்ல வீட்ல இருக்கவங்களுக்கு நம்பிக்கை வரவழைச்சுட்டுதான் காதலிக்கனும்”

“கொஞ்சம் குழப்புது”

“காதலிக்கறவங்களோட விருப்பம் என்ன? கல்யாணம் பண்ணிக்கனும்னு தானே? கல்யாணம் பண்ணிகிட்டு ஒரு குடும்பத்தை உருவாக்க போறங்க. கல்யாணம்னா என்ன? ஒரு குடும்பத்துல இருக்க பொண்ணு இன்னோரு குடும்பத்துல போய் வாழப்போறா அல்லது உருவாக்கபோறானு சொல்லலாம், இது கிட்டதட்ட ஒரு இடத்துல இருந்து ஒரு செடிய பிடிங்கி இன்னொரு இடத்துல நடற மாதிரிதான். ஒரு இடத்துல உயிரோட தழைச்சுட்டுருக்க செடியதானே இன்னொரு இடத்துல நடமுடியும்? அது மாதிரி பிறந்த குடும்பத்துல நம்பிக்கைய சம்பாதிக்க முடியாத பொண்ணு, எப்படி புதுசா ஒரு குடும்பத்துல நம்பிக்கையையும் அன்பையும் சம்பாதிக்க போறா?”

“நீ சொல்றது சரிதான், ஒருவேளை பொண்ணோட குடும்பம் சரியில்லாம இருந்து, பொண்ணு மட்டும் நல்லவளா இருக்கறப்ப நீ சொல்றது ஒத்து வராதே?”

“ஒரு இடத்துல பொண்ணு பார்க்க போறப்ப, விசாரிக்கும் போது, குடும்பத்துல இருக்கறவங்க அப்படி இப்படினு இருந்தாலும் பொண்ணு தங்கமான பொண்ணுனு சொல்ற அளவுக்காவது அந்த பொண்ணு அக்கம் பக்கத்துல பேர் வாங்கியிருக்கனும்”

“நீ சொல்றதுலாம் வீட்ல பார்த்து பண்ணி வைக்கற கல்யாணத்துக்குதான் பொருந்தும், காதல் கல்யாணத்துல இதெல்லாம் சாத்தியமில்லையே?”

“எனக்கு பிடிக்காததுல இதுவும் ஒன்னு, காதல் கல்யாணாம்னாலே கூட்டிட்டு ஒடிப்போய் யாருக்கும் தெரியாம ரிஜிஷ்டர் ஆபிஸ்-ல பண்றதாவேதான் நினைக்கறிங்க. எல்லோருமா சேர்ந்து காதல்னாலே குடும்பத்துல இருந்து பிரிஞ்சு வர்ரதுனு நினைக்க வச்சுட்டாங்க, தவிர்க்க முடியாத சூழ்நிலையில மட்டும்தான் அது சரியான வழி, மத்தபடி வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்றதுங்கறது நம்மை பெத்தவங்களை செருப்பால அடிக்கறதுக்கு சமம், நீயே சொல்லு, ஒரு குடும்பத்த அவமானபடுத்திட்டு இன்னோரு குடும்ப வாழ்க்கைய ஆரம்பிச்சா நல்லாயிருக்குமா? காதலிக்கறியா? வீட்ல சொல்லு, அவங்க ஒத்துக்கலையா? ஒத்துக்க வை, முடியவே முடியாதுனுட்டா பத்திரிக்கை அடிச்சு, அவங்களுக்கும் ஒண்ணு குடுத்துட்டு ஊரறிய கல்யாணம் பண்ணு”

“நீ சாதாரணமா சொல்ற, படம்லாம் பார்க்கறது இல்லையா? வெட்டி போட்ற மாட்டாங்களா?”

“அப்படி வெட்டி போட்ற குடும்பத்துல இருக்க பொண்ணுக்கு காதலே வரக்கூடாது, அப்படியே வந்துட்டாலும் அவங்களை ஏமாத்தியாவது சம்மதிக்க வச்சு, முடிஞ்ச வரைக்கும் அவங்க சம்மதிக்கலைனா கூட இந்த மாதிரி வெட்றேன், குத்தறேன்னு இறங்காத மாதிரியாவது செஞ்சுட்டுதான் கல்யாணம் பன்னனும். என்னை பொறுத்த வரைக்கும் திருட்டு கல்யாணம் டௌன் டௌன் தான்”

அதற்கு பின்னர் காதலிலும் திருவின் பார்வை வித்தியாசமாக இருப்பது தெரிந்தது. எனக்கு ஒவ்வோரு விஷயத்திலும் அவன் அணுகு முறையை தெரிந்து கொள்ளவும் அதை பார்த்து இரசிக்கவும் ஆவல் பிறந்தது. எனக்குள் ஏதோ மாறுவதை மெலிதாய் உணர்ந்தேன்.

----------------------------------------------------------------------------தொடரும்-------------


அடுத்த பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9

தனித்திரு - 6

முந்தைய பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9

--------------------------------------------------------------------------------------------------------------
திருமுருகனுக்கு திருப்பி தர வேண்டும் என்பதற்காகவே வேகவேகமாக எழுதி முடித்தேன். எழுதி முடித்த பின்பு அவன் வீட்டை பற்றி சிந்தித்து பார்த்தேன். எனக்கு ஒரு பக்கம் அந்த வீட்டை பிடித்திருந்தது.

எங்கள் வீட்டிற்கு யாரேனும் வந்தால் நாங்கள் அவர்கள் செல்லும் வரை அறையை விட்டு வெளியே வரவே மாட்டோம். எங்களை பார்த்தபின் அவன் தங்கை அவனருகே அமர்ந்த விதம் எனக்கு பிடித்திருந்தது. அந்த வீட்டில் இருப்பவர்களுடன் இன்னும் நெருக்கமாக பழக வேண்டுமென்ற ஆவல் பிறந்தது.

எழுதி முடித்தாகி விட்டது. வாங்கிய நோட்டினை திருப்பி தர வேண்டும். ஆனால் அக்கா வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தாள். அவள் வந்தால் உடனே கிளம்பலாம் என்று காத்திருந்தேன். கொஞ்சம் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தாள்.

உடனே திரு வீட்டிற்கு செல்ல வேண்டும் என தயாராக சொல்லி அவளை கிளப்பினேன். ஆனால் அதற்குள் வாசலில் நிழலாடியது. நான் கண்ணாடி முன் நின்றிருந்து, அந்த கண்ணாடி வழியாக பார்த்தேன். திருதான் வந்திருந்தான். நான் திரும்பி கதவருகே சென்று உள்ளே வருமாறு அழைத்தேன். நான் மரியாதையாக யாரை அழைக்கிறேன் என்று தெரிந்து கொள்வதற்காக அம்மாவும் அப்பாவும் எட்டிப் பார்த்து விட்டு அவர்களும் திருவை வரவேற்றனர். அவன் உள்ளெ வந்து அமர்ந்த பின் அப்பா அவன் யார் என்று கேட்பது போல் என்னை பார்த்தார்.

“அப்பா, இது திரு, என் கிளாஸ்மேட்பா, திரு இது என் அம்மா, என் அப்பா”
அதற்குள் அக்காவும் வெளியே வந்திருந்தாள். திருவை பார்த்ததும் அவளும் உற்சாகமானாள்.

“வாங்க, வாங்க, அப்பா நேத்து சப்பாத்தி செஞ்சது யார்னு கேட்டிங்களே, இவர்தான், திரு எங்க வீட்ல எல்லோருக்கும் உங்க சப்பாத்தி பிடிச்சுருந்தது.”

அதற்குள் நான் சென்று கண்ணாடி கோப்பையில் குளிர்பானத்தை நிரப்பி கொண்டு வந்து குடுத்தேன். மறுக்காமல் வாங்கி கொண்டான். அப்பா அவன் குடும்பத்தை பற்றி விசாரித்தார். அம்மா அவன் செய்த சப்பாத்தியையும், சமையல் கற்றது பற்றியும் விசாரித்தாள். நான் உள்ளே சென்று நோட்டினை எடுத்து வந்தேன். அக்கா அவனிடம் எப்படி வீட்டை கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டாள்.

“உங்க பின்னாடி தாங்க வந்தேன், நீங்க வீட்டுக்குள்ள நுழையறப்ப நான் தெருக்குள்ள நுழையறேன்”

"என்னை கூப்பிட்டுருக்கலாமே?”

“ரொம்ப தூரத்துல இருந்திங்க. உங்க பேரை சத்தம் போட்டு கூப்பிட பிடிக்கலை. அதான்”

என் அப்பாவிற்கு அவனை பிடித்திருக்க வேண்டும். ரொம்ப உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார். வகுப்பில் என் நடவடிக்கை பற்றியும், அவனது எதிர்கால திட்டம் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார். அம்மாவும் வழக்கம் போல் சமையலறைக்குள் நுழையாமல், நின்று அவன் பேசுவதை கவனித்து கொண்டிருந்தாள். என்னை பார்த்து

“எழுதி முடிச்சாச்சா?” என்று கேட்டான்.

நான் முடித்து விட்டேன் என்று தலையசைத்து விட்டு அவனிடம் நோட்டினை திருப்பி ஒப்படைத்தேன். எல்லோரிடமும் தனித்தனியாக விடைபெற்று கொண்டு கிளம்பினான். நான் அப்பாவை பார்த்த போது

“நல்ல பையனா இருக்கான் இல்லை” என்றார்.

அன்றிரவு சாப்பிட்டு முடித்த பின் அக்கா ஏதோ எழுத துவங்கினாள். நான் அருகில் சென்று அமர்ந்ததும் என்னை பார்த்து புன்னகைத்தாள். அதற்கு ‘என்ன விஷயம்' என்று அர்த்தம். நானும் பதிலுக்கு புன்னகைத்தேன். அக்காவே நேரடியாக விசயத்திற்கு வந்தாள்.

“என்னடி, திருவ பத்தி பேசனுமா?”

“திருவ பத்தியும் பேசனும்”

“சரி அப்ப மத்த விஷயங்கள முதல்ல பேசிடுவோம். சொல்லு?”

“முதல்லயே திருவ பத்தி பேசலாமே?”

என் கன்னத்தை கிள்ளி இழுத்தாள்.

“சரி சொல்லு”

“ஏன் சுபா, இப்பவும் உனக்கு திரு மேல சந்தேகம் இருக்கா?”

“இல்லை, நேத்து அவங்கம்மா உன்னை பத்தி திரு சொல்லியிருக்கான்னு சொன்னப்பவே சந்தேகம் எல்லாம் மொத்தமா போயிடுச்சு. இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்துருந்தப்ப கவனிச்சதுல சுத்தமா எல்லாமே போயிடுச்சு”

“எப்படி சொல்ற?”

“தப்பான எண்ணம் இருக்கவன் அவங்கம்மாகிட்ட என்னை பத்தி சொல்லியிருக்க மாட்டான்”

“சரி, இப்ப நான் என்ன செய்யட்டும்?”

“எந்த தயக்கமும் இல்லாம அவங்கிட்ட பழகு, நீயாவே கூட பேசு, முதல்ல அவனுக்கு என்னென்ன தெரியும்னு தெரிஞ்சுகிட்டு உனக்கு தேவைப்படறத அவங்கிட்டருந்து கத்துக்கோ”

“என்னக்கா, எதோ கோச்சிங் கிளாஸ்-ல சேர்ரது மாதிரி சொல்ற”

“நான் சொல்றது புரியலை உனக்கு, இந்த computer class, typewriting-லாம் வேலை தேடும் போதுதான் பயன்படும். நான் கத்துக்க சொல்றது எப்படி வாழனும்னு”

“அவனை பெரிய ரிஷி மாதிரி நினைச்சு பேசற நீ?”

“அவனுக்கு தெரியுமோ, தெரியாதோ? அதை விடு, நான் உன்னை அவன்கிட்டருந்து எதையும் கத்துக்க சொல்லலை, அவன் மூலமா கத்துக்க சொல்றேன்”

“அதான் எதை கத்துக்க சொல்ற?”

“எப்படி கத்துக்கனும்கறத கத்துக்கோ”

“புரியலை சுபா”

“உனக்கு சொன்னா புரியாதுடி, அவன் கூட பழகு, கொஞ்சம் கொஞ்சமா புரியும்”

“சரி, இனிமேல் அவனை பார்க்கும் போதுலாம் எதாவது கேட்டுகிட்டே இருக்கேன், சரியா?”

“சரி, ஆனா கேள்வி கேட்கறத வச்சு உன்னை அவன் முட்டாள்னு நினைக்காத அளவுக்கு கேளு”

“நான் அவங்கிட்ட அதிகமா பேசுனா யாரும் தப்பா நினைக்க மாட்டாங்களா?”

“இந்த கேள்வியலாம் இனிமேல் நீ அவன்கிட்டதான் கேட்கனும்”

“கேட்கறேன், கேட்கறேன்”

“அதெல்லாம் கேட்கறதுக்கு முன்னாடி, அவன் சப்பாத்தி போட்டு குடுத்துவிட்ட பாக்ஸ்-அ திருப்பி குடுத்துடு, இல்லைனா அதை அவன் கேட்டு கேவல படுத்திட போறான்”

“ஆமா நாளைக்கு மறக்காம அதை திருப்பி குடுத்திடனும்”

அடுத்த வந்த நாட்களில் திருவிடம் அதிகம் நெருங்கியிருந்தேன். ஆனால் அவன் என் பக்கம் நெருங்கியதாக தெரியவில்லை. அதே நிலையில் நின்றிருந்தான். நான் அவனிடம் முதலில் கேட்ட கேள்வி அவன் இலட்சியம் என்ன என்பதுதான்.

ஏதோ பெரிய விஞ்ஞானி அல்லது ஏதாவது சமுதாயத்தை திருத்த போவதாக கூறுவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவன் இதுவரை அதை பற்றி சிந்தித்ததே இல்லை என்றான். நான் ஏன் என்று கேட்டதற்கு அதைப் பற்றி சிந்திப்பதற்கு தனித்தகுதி வேண்டும் என்றான்.

‘எந்த மாதிரி தகுதி' என்றேன். ‘படிப்பை முடிக்க வேண்டும். சுயமாக சம்பாதிக்க வேண்டும். என் வரையில் நான் ஒழுங்காக இருப்பதாக எனக்கு திருப்தி வர வேண்டும்' என்றான்.

“திரு, எனக்கு புரியலை. எனக்கு தெரிஞ்ச எல்லாரும் டாக்டர், கலேக்டர்னு தான் சொல்வாங்க. நீ வேற மாதிரி சொல்ற?”

“இல்லைங்க, அதெல்லாம் தொழில், பணம் சம்பாதிப்பதற்கான துறைகள், சமுக அந்தஸ்து அப்புறம் தங்களோட ஆளுமைய காட்டறதுக்காக புகழுக்காக தேர்ந்தெடுக்கறது தானே அதெல்லாம்”

அப்புறம் உன் பார்வையில இலட்சியம்-னா என்ன?”

“இலட்சியம் னா சாதனைன்னு சொல்லலாம். சாதனைன்னா இதுவரைக்கும் யாரும் செய்யாததா இருக்கனும். ஆனா பல பேர் பாஸ் பண்றதயும் சினிமால ஹீரோ ஆகறதயும், காதலிச்ச பெண்ணை கல்யாணம் பண்றதயும் தான் இலட்சியம்னு சொல்றாங்க”

“நல்ல வேலைக்கு போறதயும் இலட்சியமா சொல்ல கூடாதா?”

“நல்ல வேலைக்கு போகனும்கறது என்னோட ஆசைகள்-ல ஒன்னுனு வேணா சொல்லலாம்”

“நல்ல படிப்பு?”

“இங்கே எல்லோரும் நல்ல வேலைக்கு போகனுங்கறதுக்காக மட்டும்தானே படிக்கறாங்க”

“அப்படி எப்படி பொதுவா சொல்ல முடியும்?”

“எப்படின்னா பல பேருக்கு எந்த படிப்பு படிச்சா எந்த வேலைக்கு போகனும்னே தெரியாம இருக்காங்களே, மத்தவங்க தேர்ந்தெடுத்து குடுத்தோ, இல்லை தெரிஞ்சவன் பண்றத பார்த்தோ தானே மேல் படிப்ப தேர்ந்தெடுக்கறாங்க”

“விவரம் தெரியாதவங்க வேற என்ன பன்ன முடியும்?”

“அது தப்பு, +2 முடிக்கற பையனுக்கு அடுத்து என்னென்ன படிப்பு இருக்குன்னும், என்ன படிச்சா என்ன ஆகலாம்கறதயும் தெரிஞ்சு வச்சுருக்கனும், அது பெரிய விஷயமில்லை. தினமும் பேப்பர் படிச்சா கூட போதும் அதை பத்தி தெரிஞ்சுக்கலாம்”

“சரி நீ அப்படித்தான் தேர்ந்தெடுத்தியா?”

“அப்படியும் சொல்லலாம். +2-ல நான் வாங்குனதுலயே குறைஞ்ச மார்க் வாங்குனது இயற்பியல்-லதான். அப்படி அதுல என்னதான் இருக்குனு தெரிஞ்சுக்கனும்னு ஆசைப்பட்டேன். அதுக்காகதான் இந்த படிப்பை தேர்ந்தெடுத்தேன்”

“நல்லது, நான் அப்படி பண்ணலை. என் அக்கா சொன்னதாலதான் எடுத்தேன். சரி உன் ரசனை பத்தி சொல்லேன்”

“எந்த விஷயத்துலனு தெளிவா கேளு”

“பொதுவா உனக்கு பிடிச்சது?”

“எனக்கு தனியா பயணிக்க பிடிக்கும்”

“பஸ்லயா? ட்ரெய்ன்-லயா?”

“மொத்தமா எல்லாமே பிடிக்கும். பல நேரம் நடந்தே போவேன். கையில எதையும் எடுத்துக்காம யார் கூடயும் பேசாம, பசிக்கும் போது எங்கயாவது சாப்பிட்டு, திரும்ப வரனும்னு தோணுற வரைக்கும் எங்கேயாவது போய்கிட்டு இருப்பேன்”

“எத்தனை தடவ இப்படி போயிருக்கிங்க?”

“சரியா தெரியலை, +1-லருந்து தோணும் போதுலாம் அப்பப்ப இது மாதிரி போய்ட்டு வருவேன்”

“உங்க வீட்ல எதுவும் கேட்க மாட்டாங்களா?”

“நான் திரும்பி வந்துடுவேன்னு தெரியும். இன்னோன்னு நான் நடந்து போறதுலாம் அவங்களுக்கு அதிகமா தெரியாது”

“அதுல என்ன கிடைக்கும் உங்களுக்கு?”

“தனிமை, அதுல கிடைக்கற நிம்மதி”

“நல்லாயிருக்குமா?”

“நீங்க வேணா முயற்சி பண்ணி பாருங்களேன்”

“நானா? எப்படி?”

“இனி எதாவது ஊருக்கு போறப்ப ஒரு தடவை தனியா போகப் பாருங்க. தூங்காம, படம் பார்க்காம உங்களுக்குள்ள கேள்வி கேட்டுகிட்டு, இரசிச்சுகிட்டு போனா உங்களுக்கு தெரியும்”

"தப்பா நினைக்காதிங்க, நீங்க சொல்றதலாம் பார்த்தா, குடும்ப வாழ்க்கையில இருந்து விலகிடுவோமோனு தோணுது”

“சேச்சே, வெயிலோட கொடுமை தெரிஞ்சவனுக்குதான் நிழலோட அருமை புரியும். உங்களுக்கு எப்படி புரிய வைக்கறதுனு தெரியலை. தெரிஞ்சக்கனும்னு ஆர்வம் இருந்தா நீங்களா முயற்சி பண்ணி கத்துக்கோங்க, விருப்பம் இல்லைனா விட்டுடுங்க”

“சரி, உங்களை மாதிரியே இருக்கறவங்களை பார்த்திருக்கிங்களா?”

“நிறைய பேரை பார்த்துருக்கேன்”

“உங்க நண்பர்களா?”

“உங்களுக்கு எப்படி சொல்றதுனு தெரியலை. ஒரு கட்டத்தை தாண்டிட்டா நண்பர்கள்னு யாரையும் தனியா சொல்ல வேண்டியது இல்லை. எல்லோரையும் நேசிச்சு, ஒரே அளவுல வச்சுக்கற பக்குவம் வந்துடும்”

“எனக்கு நீங்க சொல்றதுல முழுசா நம்பிக்கை வரமாட்டேங்குது?”

“அதாவது, கரையில நின்னுகிட்டு இருக்கவங்கிட்ட ஆத்துக்குள்ள நீச்சல் அடிச்சுட்டு இருக்கவன் எவ்வளவு விளக்கமா நீச்சலடிக்க கத்து குடுத்தாலும் புரியாது. ஆத்துக்குள்ள இறங்குனாதான் நீச்சல் கத்துக்க முடியும்”

“நீங்க சொல்ற மாதிரி நடந்துகிட்டா எல்லோர்கிட்டயும் குடும்பம் மேலயும் காட்டற அன்பு குறைஞ்சுடுமா?”

“இது சரியான கேள்வி, பாசம் குறையாது அதிகமாகும். கோபம்தான் காணாமல் போகும். எளிமையா சொல்லனும்னா நீங்க உங்களை புரிஞ்சுகிட்டா, மத்தவங்க இடத்துல உங்களை வச்சு யோசிச்சு பார்ப்பிங்க, உங்களுக்கு மத்தவங்கள புரிஞ்சுக்கறது சுலபமாயிடும். மத்தவங்க கஷ்டத்த புரிஞ்சுகிட்டா கோபமே வராது. அன்பு அதிகமாகும்”

“சரி தனியா இருக்கறதுனா யார்கிட்டயும் பேசாம இருக்கறதா?”

“இல்லை, தனியா இருக்கறதுனா எனக்குள்ல நான் பேசிக்கறது. இதுக்கு யார் கூடவும் பேசாம இருக்கனும்னு அவசியம் இல்லை. எல்லோரையும் போல இயல்பா இருந்துகிட்டே இதை பன்னலாம்”

“எங்கக்கா கூட தன்னை அறிதல் பத்தி உங்ககிட்ட கத்துக்கலாம்னு சொன்னாங்க”

“நானே அதை இன்னும் முழுசா கத்துக்கலை. எங்கிட்டருந்து எதையும் கத்துக்க முடியாது. என் கூட சேர்ந்து கத்துக்கலாம்”

“இதெல்லாம் கத்துகிட்டு நாம என்ன செய்ய போறோம்? இது எங்கே போய் முடியும்?”

“எனக்கு ஏன் கத்துக்கனும்னு விளக்க தெரியாது. கத்துகிட்டதுக்கு அப்புறம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி பயன்படும். வீணா போகாது. எங்கே போய் முடியும் தெரியுமா? கடவுளை உங்ககிட்ட கொண்டு வரும். உங்களையே கடவுளோட அம்சமா மாத்தும்”

“தன்னை அறிதலுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?”

“நான் உங்களுக்கு கேள்விய சொல்லி குடுத்துருக்கேன். பதிலை நீங்க கண்டு பிடிச்சு சொல்லுங்க,அந்த பதில் சரியா தப்பானு நான் சொல்றேன்”

“எதாவது புத்தகத்த தேடுனா பதில் கிடைக்குமா?”

“பதில் தேடுற வழிய உங்க இஷ்டபடி நீங்க தேர்ந்தெடுக்கலாம். Internet ல கூட தேடுங்க, உங்க விருப்பம்”

“பதில் கிடைக்க எவ்வளவு நாளாகும்?”

“அது உங்க முயற்சிய பொறுத்தது”

என்னிடம் டீவி, சினிமா, காதல், குடும்பம் இதெல்லாம் பற்றி அரட்டை அடிக்காமல் கொஞ்சம் புதிதாய் பேசுவது திருமுருகன்தான். கொஞ்ச நாள் போக போக எனக்கு அவனிடம் பேசும்பொழுது பணிவு வர துவங்கியது என்னையறியாமல்.

நாள் போக போக எனக்குள் அவனை போன்ற நண்பனை பெற்ற பெருமிதம் இருந்தாலும் மற்ற பெண்களைப் போல் அதிகம் சிரித்து பேசுவதில்லை என்ற குறை இருந்தது. அதற்கு என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் மற்ற பெண்களிடம் இது விஷயமாக எனக்கு கொஞ்சம் பொறாமை இருந்தது. அக்காவிடம் இதை பற்றி இலை மறைவு காயாக கேட்டேன். அவளும் திருவை போலவே சூட்சமாமகவே பதிலளித்தாள்.

‘உன் வாழ்க்கை உன் கையில்' என்று. நானேதான் முயல வேண்டும் என்று புரிந்தது. முன் போல் இல்லை. இப்போது என்னிடம் அவன் செல் நம்பர் இருக்கிறது. ஆனால் கூப்பிட்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

http://www.facenfacts.com/daily_img/1489_L_girl%20m.jpg

ஒருமுறை ஏதாவது பேசலாம் என்று 8 மணி சுமாருக்கு கால் செய்தேன்.

“ஹலோ, திரு?”

“சொல்லுங்க வரலட்சுமி”

“வீட்லயா இருக்கிங்க?”

“ஆமா ஏன்?”

“இல்லை சும்மாதான் கேட்டேன்”

“என்ன விஷயம்னு சொல்லுங்க”

“ஒன்னுமில்லை, சும்மாதான் கால் பன்னேன்”

“உங்களுக்கொன்னு தெரியுமா? ஒரு மகான்கிட்ட போய் வாழ்க்கைல நிம்மதியா இருக்கிறதுக்கு எதாவது தத்துவம் சொல்லுங்கனு கேட்டதுக்கு ‘சும்மா இரு' ன்னு சொன்னாராம்”

“சும்மா இருன்னா? ஏன் அப்படி சொன்னார்?”

“சும்மா இருன்னா கடந்த கால கவலைகள் இல்லாம எதிர்கால பயம் இல்லாம, நிகழ் காலத்துல இருக்கனும்னு அர்த்தமாம். எப்படி பார்த்திங்களா?”

“திரு ஏன் ரொம்ப பெரிய ஆன்மீகவாதிங்களாம் குழப்பற மாதிரியே பேசறாங்க, நேரடியாவே பதில் சொல்ல மாட்டாங்களா?”

“நேரடியா பதில் சொல்லிட்டா, நம்ம அறிவுக்கு என்ன வேலை? புரிஞ்சுக்கனும்னு நினைச்சா எவ்வளவு சூட்சமமா சொன்னாலும் யோசிச்சு யோசிச்சு கண்டுபிடிச்சுடலாம். ஆர்வம் இல்லாதவனுக்கு நேரடியா சொன்னாலும் புரியாது”

“நான் நேரடியா கேட்கறேன் திரு, எங்கிட்ட உனக்கு வேற எதுவும் பேச தோணலையா?”

“இதுவரைக்கும் உங்க கூட இதுஇதுலாம் பேசனும்னு நினைச்சதில்லை. உங்களுக்கு எதை பத்தியாவது பேசனும்னா சொல்லுங்க பேசலாம்.”

“இல்லை, அப்படி எதுவும் இல்லை. வச்சுடறேன்"

மனதிற்குள் அவனை நன்றாக திட்டினேன். கருங்கல், ஜடம், உணர்ச்சியே இல்லாதவன், கல்லூளி மங்கன்-னு பலவாறு திட்டினேன். எவ்வளவு திட்டினாலும் கோபப்பட்டாலும் எனக்கு திருவை தவிர வேறு எவரிடமும் பழக பிடிக்கவில்லை என்பதை மட்டும் நான் மறுக்க போவதில்லை.

அடுத்த நாள் நானே எதிர்பாராத விதமாய் வீடு வந்து சேர்ந்ததும் திருவிடமிருந்து அழைப்பு வந்தது.

----------------------------------------------------------------------------தொடரும்-------------


அடுத்த பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9