பெருந்திணை - படலம் - 8

பெண்களிடம் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனையாக அவர்களது கியுரியாசிட்டியை சொல்லலாம். அதிலும் தன்னைக் குறித்த ஒன்றினை தெரிந்து கொள்ள அவர்கள் காட்டும் அதீத ஆர்வம் எப்போதும் எதிலாவது ஒன்றில் சிக்க வைப்பதுதான் வழக்கம். சைந்தவிக்கு அசோக் தான் குறித்து எந்த நிலையில் இருக்கிறான் என்று தெரிந்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்தது. அதே சமயம் இதனை நேரடியாக கேட்கவும் முடியாது. கேட்டாலும் கிடைக்கும் பதில் நேர்மையானதாக இருக்கப் போவதில்லை. இதற்கு என்ன செய்வது என்று மனம் குழம்பியது. எப்போதும் அல்ல. அவ்வபோது. நாளாக நாளாக அது அடங்கி விடும் என சமாதானப் படுத்திக் கொண்டாள். அடுத்து இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒரு தினத்தில் அவள் வெளியே சென்று திரும்பும் போது ஏகமாக மழையில் மாட்டிக் கொண்டாள். எதிர்பாராத மழை. அவள் ஸ்கூட்டியில் சென்றிருக்க, அணிந்திருந்த ஹெல்மெட் உச்சந்தலையை மட்டும்தான் காப்பாற்றியிருந்தது. ஓரளவு நனைந்த பிறகு வீட்டிற்கே சென்று விடலாம் என்று மழையிலேயே வந்து விட்டாள். அப்போது மழை விட்டு, தூறல் மட்டும்தான். வண்டியை நிறுத்தி விட்டு லிஃப்ட்டில் ஏறினால் உள்ளே அசோக். அவன் மட்டும். ஒரு கணம் தயங்கினாலும...