சாரல் காலம் 14

சாரல் காலம் - முந்தின பாகங்கள்

#0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 /#7 /#8 / #9 / #10 / #11 / #12 / #13 / #14 / !5

-----------------------------------------------------------------------------------------------------------------
பெண்கள் அனைவரும் தயாராகி வெளிப்புறம் வந்தனர், எவ்வளவு மோசமான குணமுடைய பெண்ணையும் நமது பசங்களால் புடவை கட்டி கொண்டு வரும் பொழுது ரசிக்காமல் இருக்க முடியவில்லை, அதுவும் கன்னனால் வாயை  மூடிக் கொண்டு இருக்க முடியவில்லை.

 http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ5tPUKVK8gsbInrgeMwPG-DRLZ2NqmCixCgIJjg_HaLHRRYiQPUg

கன்னன் "அம்மாடி, டேய் இதெல்லாம் நம்ம காலேஜ் பொன்னுங்களாடா?"

மாதேஸ் "உனக்கெதுக்கு அந்த சந்தேகம்?"

கன்னன் "அழகா இருக்காங்களே அதான் என் கண்ணுல எவளுமே ஒரு நாள் கூட பட்டதில்லையே"

மாதேஸ் "டேய் கன்னா, 9 மணி காலேஜ்க்கு 9.30க்கு வர வேண்டியது, எல்லோருக்கும் 5 மணிக்கு காலேஜ் முடியுதுனா கடைசி பீரியட் கட் அடிச்சுட்டு 4 மணிக்கே ஓடுனா எப்படிடா பார்க்க முடியும்?"

கன்னன் "டேய் நீங்களும் தான்டா என் கூட வர்ரீங்க போறிங்க, உங்க கண்ணுல மட்டும் எப்படி சிக்குது?"

மாதேஸ் "நாங்க அதுக்குனு தனியா டைம் டேபுள் போட்டு வச்சுருக்கோம்"

இவர்கள் உரையாடல் இப்படி போய் கொண்டிருக்க பாலா மட்டும் வனிதாவை புடவையில் பார்த்துவிட்டு கிறங்கி போய் நின்று கொண்டிருந்தான், வனிதா தூரத்தில் இருந்து சைகையில் பாலாவை பார்த்து "அழகா இருக்கேனா?" என்று கேட்க, பதிலுக்கு இவன் "சூப்பர்" என்று சைகையிலேயே சொல்லி கூடவே ஒரு பறக்கும் முத்தத்தையும் கொடுத்தான்.

இதை கவனித்து விட்டு வியப்புடன் கன்னன் கேட்டான்.

"டேய் என்னடா நடக்குது இங்க?"

மாதேஸ் "கன்னா, இதுக்கு பேருதான் கள்ளக்காதல்"

கன்னன் "எப்படி கள்ளக்காதல்?"

மாதேஸ் "அவ லவ்வருக்கு தெரியாம லவ் பன்றாங்கல்ல, அதான்"

கன்னன் "டேய் பாலா, அவளை காதலிக்கிறானா, சொல்லவேயில்லையே?"

பாலா "டேய் இதுக்கு பேரு காதல் இல்லைடா"

கன்னன் "வேற?"

பாலா "அதையும் தாண்டி புனிதமானது"

மாதேஸ் "செருப்பு பிஞ்சிரும், நீ பன்ற கருமம் புனிதமானதா? கொன்னுடுவேன், டேய் வேற ஏதாவது பேசுங்கடா"

கன்னன் "சாப்பாடு எப்ப போடுவாங்க?"

எல்லோரும் அவனை ரவுண்ட் கட்டி முறைத்தார்கள்.

கன்னன் "டேய் ஏன்டா முறைக்கறிங்க?"

மாதேஸ் "பசிய மறக்கத்தானே நாங்க பேசிட்டு இருக்கோம், திரும்ப அதையே ஞாபக படுத்துனா வேற என்ன பன்னுவாங்க?"

அன்பு "ஏன் தாலி எப்ப கட்டுவாங்கனு கேட்கறது?"

கன்னன் "எனக்கு அப்படிலாம் கேட்க தோணாது"

பாலா "டேய் அவனை விடுங்கடா, சூர்யாவும் ஹரியும் நேத்துலருந்து ஏதோ இரகசியமா பேசிக்கறாங்களே, கவனிச்சிங்களா?"

மாதேஸ் "என்ன, ஹரி காயத்ரிக்கு ரூட் விட்றான், அதைதான் பேசிகிட்டுருக்காங்க"

கன்னன் "டேய் யார்ரா அந்த காயத்ரி"

பாலா "உனக்கு ஒரு வகைல தங்கச்சிடா, நீ எப்படி மாதேஸ் உறுதியா சொல்ற?"

மாதேஸ் "ஹரியோட பார்வைய பார்த்தாலே கண்டுபிடிச்சுடலாம், அந்த காயத்ரி திரும்ப ஒரு தடவை பார்த்தா அவங்க அப்பன், பாட்டன் சம்பாரிச்ச சொத்தை அப்படியே எழுதி வச்சுருவான் போலருக்கு"

பாலா "அந்த காயத்ரியை இவனேதான்டா ஓட்டுனான், நாம கிண்டல் பன்னும் போதுலாம் சும்மா இருந்தான்?"

மாதேஸ் "அவன் கிண்டல் பன்னும் போதே எனக்கு தெரியும், நாம கேவல படுத்தனும்னு பன்னா, இவன் அவளை திரும்பி பார்க்க வைக்கறதுக்குனும்னே பன்னுவான்"

அன்பு "அப்ப உறுதியா கதல்ங்கறியா, ட்ரிட் வாங்கிட வேண்டியதுதான்"

மாதேஸ் "அவசரபட வேண்டாம், அவனா சொல்ற வரைக்கும் நாம எதுவும் தெரியாத மாதிரியே நடிக்கனும்"

பாலா "எதுக்கு நடிக்கனும்?"

மாதேஸ் "அப்பதான்டா கொஞ்ச நாளைக்கு நம்மகிட்ட யோசனை கேட்காம இருப்பான், காதலிக்கறவனுக்கு யோசனை சொல்றதும் கன்னனுக்கு பாடம் நடத்தறதும் ஒன்னு"

அன்பு "அப்ப நான் தெரிஞ்சுக்காத மாதிரிதான் நடிப்பேன், என்னால முடியாது"

பாலா "கன்னனுக்கு சொல்லி தர்றது அவ்ளோ கஷ்டமா?"

அன்பு "உனக்கு சொன்னா புரியாது, இந்த செமஸ்டர்க்கு வேணும்னா முயற்சி பன்னி பாரு"

அதே நேரம் ஹரி காயத்ரியை பச்சை நிற பட்டு புடவையின் பார்த்ததில் இருந்து பறக்க ஆரம்பித்து விட்டான்.
 "மச்சான், எனக்கு இப்பவே அவ கால்கிட்ட மண்டி போட்டு "I LOVE YOU" னு சொல்லனும் போல இருக்குடா"

சூர்யா "ரொம்ப அலையாதடா, இப்படிலாம் காதலிக்கற பசங்க ஏத்திவிடறதால தான்  சப்ப பிகருங்களாம் சீன் போட்டுகிட்டு திரியதுங்க"

ஹரி "டேய், யாரைடா சப்ப பிகர்னு சொன்ன?"

சூர்யா "உன் ஆளை சொல்லலடா, பொதுவாதான் சொன்னேன், கோவிச்சுக்காத"

ஹரி "நான் கோவிச்சுக்கலாம் இல்லை, நீ ஏதோ ஒரு சப்ப பிகர்கிட்ட கேவலபட்டு வந்த மாதிரி பேசறியே அதான் யாரை சொன்னன்னு கேட்டேன்"

சூர்யா "ஏன்டா கேட்க மாட்ட? உங்ககிட்டலாம் பேச்சுக்கு கூட ஒரு வார்த்தைய சொல்ல முடியலைடா"

அந்த பக்கம் தீபாவின் போக்கோ வேறு மாதிரி இருந்தது, அவளுடைய அம்மா எடுத்து கொடுத்து விட்டுருந்த புடவையை கட்டி இருந்தாள். அவள் குளிஹ்துவிட்டு வந்ததில் இருந்து அவளுடைய தோழிகள் அனைவரும் அவள் இன்று மிகவும் அழகாக தெரிவதாக கூறினர்.

ஆனால் சூர்யா ஒருமுறை கூட தன்னை பார்க்கவில்லை என்ற ஏக்கத்தில் அவளது பார்வை முழுவதும் நமது இளைஞர்கள் நின்றிருந்த இடத்தையே சுற்றி கொண்டிருந்தது.

மாதேஸ் "நான் சீரியஸா கேட்கறேம்"

பாலா "என்னடா?"

மாதேஸ் "இந்த மூட நம்பிக்கைலாம் எப்ப ஒழிய போகுதோ தெரியலை"

பாலா "எதை சொல்ற?"

மாதேஸ் "அதென்ன தாலி கட்டுனதுக்கு அப்புறம்தான் சாப்பாடி போடனும்னு எவன் சொன்னான்?"

பாலா "அதேனே பார்த்தேன், எலி ஏன் ஜாக்கி ஜட்டி போடுதுனு?"

அன்பு "இந்த மூட நம்பிக்கைய பத்திதான் பேசுனியா?"

மாதேஸ் "ஆமா"

பாலா "விடுறா, இந்த சமூக பிரச்சனைகளை நாம ஆட்சிக்கு வந்தப்புறம் சரி பன்னிடுவோம்"

நேரம் ஆக ஆக ஒவ்வொரு சம்பிரதாயமும் நடந்து கொண்டிருந்தது, மணமக்கள் பெரிய இடத்தை சேர்ந்தவர்களாதலால் நிறைய பெரிய மனிதர்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.

நமது இளைஞர்களை போலல்லாமல் மணப்பெண்ணின் தோழிகள் அனைவரும் விடியற்காலையில் முகூர்த்தத்திற்கு தான் வந்தார்கள். இப்படி வெளியிலிருந்து பெண்கள் வர ஆரம்பித்ததும் பார்த்து பார்த்து போரடித்து போன தங்கள் கல்லூரி பெண்களிடமிருந்து அனைவரும் ஃபோகஸை திருப்பினர், ஹரியை தவிர.

அன்பு எங்கிருந்தோ ஒரு ரோஜாவை எடுத்து கையில் வைத்து கொண்டான், அவனாவது பரவாயில்லை பாலா ஒரு மல்லிகை பூ சரத்தை கையில் சுற்றி கொண்டு அடிக்கடி முகர்ந்து பார்த்து  மைனர் பார்வை விட்டு கொண்டிருந்தான்.

பெண்களில் வனிதாவுக்கு அவளுடைய உறவு பெண்களை வரவேற்கும் வேலை இருந்ததால் கௌசல்யாவை மட்டும் துணைக்கு வைத்து கொண்டு சுற்றி கொண்டிருந்தாள்.

மண மேடையில் மணமக்கள் வந்து அமர்ந்தாகி விட்டது. மண மேடைக்கு ஒருபுறம் தீபா, காயத்ரி அவர்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். நம் இளைஞர்கள் ஒரு மூலையில் வந்து நாற்காலியில் அமர்ந்தனர்.

கன்னன் "எனக்கொரு சந்தேகம்டா"

மாதேஸ் "என்ன?"

கன்னன் "7.30 - 8.30 முகூர்த்தம்னு போட்டுருந்தது, சரியா எத்தனை மணிக்கு தாலி கட்டுவாங்கனு பத்திரிக்கல போடவேயில்லையே"

பாலா "தெரிஞ்சு நீ என்ன கிழிக்க போற?"

ஹரி "விடுங்கடா, நான் சொல்றேன் கன்னா, 7.30க்கும் 8.30க்கும் நடுவுல எப்ப வேணும்னாலும் கட்டுவாங்க"

கன்னன் " அதான் அந்த 2க்கும் நடுவுல எப்ப கட்டுவாங்கன்னு சொல்லு?"

மாதேஸ் "பெரிய 'கல்கி' பிரகாஷ் ராஜ், 2க்கும் நடுவுல எப்பனு கேட்டு தாலி எடுத்து கொடுக்க போறியா?"

கன்னன் "இல்லை தாலி கட்டிட்டாங்கன்னா போய் சாப்பிடலாம் அதான் கேட்டேன்"

பாலா "அதான் ரிசப்ஷன்ல கல்கண்டு 2 கைலயும் அள்ளிட்டு வந்து தின்னியே, அப்பவுமா பசிக்குது?"

கன்னன் "அதை சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் பசி அதிகமாயிருச்சு"

பாலா "எப்ப பாரு பசி, சாப்பாடு, தூக்கம் இதை பத்தியே பேச்சு, வேற ஏதாவது பேசலாமே"

கன்னன் "என்ன பேசலாம்?"

அன்பு "பேசாம இருங்கடா, என் ஆள் என்னையே பார்த்துட்டுருக்கு, பாருங்கடா"

கன்னன் "எந்த ஆள்டா?"

பாலா "அந்த மஞ்ச சுடியா?"

அன்பு "அது என்னை பார்க்குதா?"

பாலா "அப்ப அது உன் ஆள் இல்லையா?"

அன்பு "பார்த்துச்சா? இல்லையா?"

பாலா "பார்த்துச்சுடா"

அன்பு "அப்ப இனிமே அதுதான் என் ஆள், எவனும் பார்க்க கூடாது"

சூர்யா "அன்பு சக்கைடா, அவனை வச்சே உனக்கொரு ஆள்- அ பிடிச்சுகிட்ட"

பாலா "என்னைய பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?"

ஹரி "டேய் விடுங்கடா, கொஞ்ச நேரத்துல தாலி கட்ட போறங்க, அமைதியா இருங்க"

மாதேஸ் "என்னமோ கொடி ஏத்த போற மாதிரி சொல்ற? தாலி கட்டும் போது அமைதியா இருக்கனும்னு யார் சொன்னது?"

ஹரி "யாரும் சொல்லலை, ஆனா ஒரு மங்கலகரமான விஷயம்னு சொன்னேன்"

பாலா "லூசு, சாவு வீட்லதான் சைலன்ட் ஆ இருக்கனும், இங்க சந்தோசமா சிரிச்சுகிட்டு இருக்கனும்"

அந்த நிமிடத்தில் நடக்கும் திருமணம் எதிர்காலத்தில் நிகழ போகும் பல திருமணங்களுக்கு வித்தாக இருக்க போகிறது என்பதை பலர் அறியவில்லை.


Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2