- மழைச்சாரல்: சாரல் காலம் - முன்னுரை
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Saturday, 30 March 2013

சாரல் காலம் - முன்னுரை

அன்பர்களுக்கு வணக்கம், ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களுக்காக வலைச்சரத்தை துவங்கியிருப்பார்கள், எனக்கும் ஒரு காரணம் உண்டு, நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் அனைவரும் நோட்ஸ் எடுக்கும் பொழுது தனியாக நோட் போட்டு கதை எழுதி கொண்டிருப்பேன், அல்லது கதை படித்து கொண்டிருப்பேன், என்னுடன் படித்தவர்களை கேட்டால் அதிகம் தூங்கியதைத்தான் சொல்வார்கள். அப்படி எழுதிய கதைகளை தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்களை தேடிப் பிடித்து கட்டாயப் படுத்தி படிக்க வைத்து கருத்து கேட்பேன்.

அதன் மூலமாக எனக்கு பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். முதன் முதலில் நான் எழுதிய கதை "சாரல் காலம்". முழுக்க முழுக்க காதலும் கிண்டலும் மட்டும் போட்டி போட்டு மோதும் கல்லூரிக்காலம், தனியாக எதையும் கற்பனை செய்யாமல் என் உயிர் நண்பர்கள், நாங்கள் வழக்கமாக செய்யும் விசயங்களை தொகுத்து எழுதப்பட்ட கதை.

எனக்கு டைரி எழுதும் பழக்கம் உடையதால், இக்கதையை படித்த பல கல்லூரி நண்பர்கள் "உண்மையை சொல்றா, இதுல வர்ர எல்லா கேரக்டரும் நம்ம காலேஜ்ல இருக்காங்க, இது நடந்தது தானே?"னு கேட்டதுண்டு. அதற்கு எனது பதில் உண்மையில் நடந்திருந்தால் இப்படித்தான் நடந்திருக்கும். அவ்வளவுதான் என வேண்டுமென்றே அரைகுறையாக முடிப்பேன்.

http://api.ning.com/files/RkmlBfWrKPwe66Hszt2pveQs8wx2Urjg4s6M4H37Tz0JOzRQVdkrbc4-VGCSOHs27WGQ0OUx5wBXwam5VN0RYv9oM-PR5dcF/3dffd0c898eefad5a2e692cd312665ac.jpg

எது எப்படியோ, வலைச்சரம் மூலம் என் முதல் கதையை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். கொஞ்சம் நெடுங்கதை, ஆனால் போரடிக்காது என உறுதியளிக்கிறேன். கூடிய விரைவில் சாரலில் நனைய காத்திருங்கள்.

கதை துவங்கி விட்டது நண்பர்களே... படிப்பதற்கு கீழே உள்ள இனைப்பை உபயோகியுங்கள்.

சாரல் காலம்

#1 / #2 / #3 / #4

6 comments:

 1. "சாரல் காலம்" சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

  காத்திருக்கிறோம்...

  ReplyDelete
 2. காத்திருக்கிறோம் :) சாரலில் நனைய!

  ReplyDelete
  Replies
  1. இன்றே உங்கள் சாளரத்தை தேடி வரும்

   Delete
 3. கடும் கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்குமா சாரல் காலம்?

  ReplyDelete
  Replies
  1. நல்லா கேட்டுக்குங்க....
   இது மழை இல்லை, சாரல் தான்,
   ரொம்ப எதிர்பார்த்தா எனக்குதான் சங்கடம்...
   பயமுறுத்த கூடாது

   Delete