சாரல் காலம் 7

சாரல் காலம் - முந்தின பாகங்கள்

#0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 /#7 /#8 /#9 / #10
=========================================================
வேகமாய் வந்து கொண்டிருந்த பாலா முகத்தில் அப்படி ஒரு சந்தோஷ களை. அவன் பல் தெரியும்படி சிரிக்கும் பொழுதே ஏதோ பொன்னு சம்பந்தபட்ட விஷயமாதான் இருக்கும்னு 2 பேருக்கும் தெரியும்.

பாலா "டேய் மச்சான்"

ஹரி "என்னடா, ஒரே சந்தோசமா இருக்க?"

பாலா "மாப்பிள்ளை, அந்த செகன்ட் இயர் பொன்னு இருக்காள்ள சரன்யா?"

ஹரி "ஆமா, அவளுக்கென்ன இப்போ?"

சூர்யா "என்னாடா, அவ உன்னை பார்த்து வெட்கப்பட்டு சிரிச்சாளா?"

பாலா "ஆமாடா, சிரிச்சா, உனக்கெப்படி தெரியும்?"

சூர்யா "நாயே, சர்ட்ட இன் பன்னியே, ஜிப் போட மாட்டியா? மூடிகிட்டு சீக்கிரம் போடு, இல்லைன்னா அவங்கம்மா கூட வெட்கப்பட்டுதான் சிரிப்பா"

பாலா "அய்யோ, சாரி மாப்ளே, அவசரத்துல கவனிக்கலை"

ஹரி "இதுல பார்த்தியா? பட்டனுக்கு நேரா பெல்ட், பக்கள்ஸ் அ கரெக்ட் ஆ நிறுத்திருக்கார்"

பாலா "அது இருக்கட்டும், இருந்தாலும் அவ என்னை பார்த்து சிரிச்சது இதுக்காக இருக்காது. எனக்கென்னவோ அவ மனசுல நான் தான் இருக்கன்னு நினைக்கறேன்"

சூர்யா "சரிடா அதுக்கு என்ன பன்னலாங்கற?"

பாலா "வாங்கடா, வந்து என் சவுத் இன்டியன் டயானாவ வந்து பாருங்கடா, அவ என்னை பார்க்கற பார்வையில எத்தனை லவ் ட்யுன் ஓடிட்டு இருக்குனு உங்களுக்கே தெரியும்"

ஹரி "அவந்தான் கூப்படறான் இல்லை வாடா போய் பார்க்கலாம்"

சூர்யா "சும்மா இருடா, இவன் காலேஜ் சேர்ந்ததுல இருந்து ஒரு 37 பொன்னுங்ககிட்ட டியுன் கேட்குதுனு என்னை கூட்டிகிட்டு போய் காட்டிருக்கான், இதோட 38 வது"

பாலா "டேய் அவனை விடுறா, நீ வருவியா? மாட்டியா?"

ஹரி "டேய் சூர்யா, இங்க என்ன வெட்டி முறிக்கற வேலை? வாடா போய் யார்னு பார்க்கலாம்"

மூவரும் விசேசம் நடக்கும் இடத்திற்கு சென்றனர். கன்னன் அவனுக்கு தகுந்தாற் போல் ஒரு பையனுடன் சேர்ந்து கொண்டு அவன்ஐதுவரை சென்று வந்த திருமணங்களை பற்றி சொல்லி கொண்டிருந்தான்.

அன்பும் மாதேசும் இடைவிடாமல் யாரோ ஒரு குறிப்பிட்ட பெண்கள் கூட்டத்தின் பின்னாலயே சென்று கொண்டிருந்தனர், ஹரி போய் அவர்களையும் அழைத்து கொண்டு பாலா சொல்லும் பெண்ணை பார்க்க சென்றனர்.

பாலா கைகாட்டிய இடத்தில் 3 பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். 3 பேருமே நல்லாதான் இருந்தார்கள்.

பாலா "மச்சான், அந்த குருப்ல நடுவுல ப்ளு சுடிதார் போட்டுருக்குல்ல, அதான்டா, நான் சொன்னது, எனக்கு பொருத்தமா இருக்கால்ல?"

அன்பு "இதை நான் ஒத்துக்கவே மாட்டேன். அவ எனக்கு தான், நாந்தான் முதல்ல பார்த்தேன், மாதேஸ் அ வேணும்னா கேட்டு பார்"

பாலா "கொஞ்சம் கூட ஞாயமே இல்லை. நல்லா பார், அவ என்னதான் பார்க்குறா, அவ எனக்குதான்"

அன்பு "டேய் நான் அவளை சின்சியரா காதலிக்கிறேன்"

பாலா "நானும்தான் உயிருக்குயிரா காதலிக்கிறேன்"

சூர்யா "ஆனா அவ அவளோட கிளாஸ்மெட் கிருஸ்னனை லவ் பன்றா, ஏன்டா எப்பவும் அடுத்தவன் ஆளுக்கு அடிச்சுக்கறிங்க"

பாலா "அணில் கடிச்ச பழம் தான்டா மாப்பிள்ளை இனிக்கும்"

மாதேஸ் "அப்ப முதல்ல நான் ஒரு கடி கடிச்சுக்கவா?"

ஹரி "மச்சி, எனக்கு ஒரு கடி?"

அன்பு "டேய், நீ எங்க வர்ர? அவ எனக்கும் பாலாவுக்கும் மட்டும்தான் சொந்தம்"

சூர்யா "அவளை உண்மையா காதலிக்கறவங்க இனிமேல் தண்ணியடிக்க மாட்டேன்னு சத்தியம் பன்னுங்கடா?"

அன்பு "முதல்ல நான் சொல்றேன், கன்னன் மேல சத்தியமா இனி நான் தண்ணி அடிக்க மாட்டேன்"

பாலா "நானும் கன்னன் மேல சத்தியமா எந்த பொன்னையும் சைட் அடிக்க மாட்டேன். ஓகேவா?"

மாதேஸ் "அந்த குழந்தை உங்களை என்னடா பன்னுச்சு? ஏன்டா அவனை சாவடிக்கறிங்க?"

எல்லோருக்கும் அடக்க முடியாத சிரிப்பு, தூரத்தில் நிற்கும் கன்னனை பார்த்தவுடன் வந்தது. என்னவென்று தெரியாமல் பார்த்து கன்னனும் சிரித்தான்.இந்த நொடியில் இவர்களை விட உலகில் வேறு எவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

பாலா "சரி விடுங்கடா, நான் வந்ததுல இருந்து இன்னும் வனிதாவ பார்க்கவே இல்லை நான் பார்க்க போறேன், யார் வர்ரிங்க?"

மாதேஸ் "யாரும் வரலை, நீ போய்ட்டு வா"

பாலா "மாதேஸ், நீ இன்னும் பார்க்கலதானே, வா வந்து எனக்கு கம்பெனி குடு"

மாதேஸ் "சரி வர்ரேன், ஆனா அன்பு?"

அன்பு "கவலைப்படாதே, நான் உன்னை விட்டுட்டு எந்த பொன்னையும் பார்க்க மாட்டேன்"

ஹரி "டேய் என்னமோ பார்த்ததும் பேசி கரெக்ட் பன்ற மாதிரி பேசற? பொன்னு அழகாயிருந்தா போதும், அவ பேர் தெரியலன்னாலும் அவளுக்கும் உனக்கும் பிறக்கற குழந்தைக்கெல்லாம் பேர் வச்சுட வேண்டியது. இதெல்லாம் ஒரு பொழப்பு?"

மாதேஸ் "நீங்க எத்தனை பொன்னுங்களை சார் பன்னிருக்கிங்க? எல்லாரும் வெறும் வாய்தான்டா? பேசாம இரு, நான் போய்ட்டு வந்துடறேன்"

பாலா, மாதேஸ் - இந்த இருவருடைய குணங்களும் நேர் எதிரானது, ஒரு விசயத்தை பார்க்கும் கோணமும் வேறு மாதிரி இருக்கும். நேரடியாக சொன்னால இவனுக்கு பிடித்தது, அவனுக்கு பிடிக்காது, அவனுக்கு பிடித்தால் இவனுக்கு சுத்தமாய் பிடிக்காது, ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள். காரணம் சகிப்பு தன்மைதான்.

பாலா "மச்சான், வனிதா அங்கேதான் இருக்கா, ஒரு சின்ன விண்ணப்பம். அவ முன்னாடி என்னை கேவல படுத்திடாதடா"

மாதேஸ் "ஏண்டா, அவ உன் ஃப்ரெண்டோட லவ்வர். என்னமோ நீ லவ் பன்ற மாதிரி பேசற?"

பாலா "அவ என் ஃப்ரெண்ட் ஆளா இருந்தாலும், எனக்கும் லவ்வர் மாதிரிதான்டா"

மாதேஸ் "த்தூ, இதெல்லாம் ஒரு பொழப்பு"

இருவரும் பேசிக்கொண்டே வனிதாவை நெருங்கையில் அவளும் இவர்களை பார்த்து புன்னகைக்கிறாள்.

வனிதா "வாங்க, வாங்க, எப்ப வந்தீங்க? எப்படி இருக்கிங்க?"

மாதேஸ் "அதெல்லாம் நல்லாதான் இருக்கோம், ஆமா நீ இன்னைக்கு குளிச்சியா? இல்லையா?"

வனிதா "டேய் ஏன்டா அப்படி கேட்கற? நான் தினமும் குளிப்பேன்டா"

மாதேஸ் "அப்புறம் எதுக்கு பொணத்துக்கு அடிக்கற அளவுக்கு சென்ட் போட்டுருக்க?"

வனிதா "அது நான் போடலை, இவதான் போட்டுருக்கா"

வனிதா காட்டியது ஒரு ஜீனியர் பெண்ணை, அவள் மாதேசின் முறைத்த பார்வையை கண்டு பம்மினாள்.

பாலா "வனிதா, இந்த டிரெஸ்ல நீ சூப்பரா இருக்க, அய்யோ என்னால கன்ட்ரோல் பன்னவே முடியலை. I LOVE YOU சொல்லிடலாம் போல இருக்கு"

மாதேஸ் "டேய் நான் இருக்கவா, கிளம்பவா?"

பாலா "ஏன்டா?"

மாதேஸ் "அப்ப மூடிகிட்டு அடக்கி வாசி"

வனிதா "அவனை எதுவும் திட்டாத, தேங்ஸ் பால, நிஜமா நான் நல்லருக்கனா?"

http://3.bp.blogspot.com/-vL9vul1yAlo/USXrrD30-eI/AAAAAAAAajo/ZbI6LtILOys/s1600/pattusari+serial+actress+mazhail+manorama+photos6.jpg

பாலா "நிஜமா, நீ மட்டும் ரெடின்னு சொல்லு, உங்கக்காவுக்கு முன்னாடி நான் உனக்கு தாலி கட்டிடறேன்"

மாதேஸ் "இதையெல்லாம் கேட்டா ஒருத்தன் நெஞ்சு வலில செத்துருவான்"

பாலா "யார் மச்சான்?"

மாதேஸ் "இவ 4 வருசமா லவ் பன்றாளே நம்ம பையன் குமார், இவளுக்கு செக்யுரிட்டி வேலை பார்த்தே செத்துடுவான் போலருக்கு"

வனிதா "அவன்லாம் சாக மாட்டான், என் மேல அவனுக்கு நம்பிக்கை இருக்கு"

மாதேஸ் "அதென்னமோ தெரியலை, நல்ல பசங்களாம் உன்னை மாதிரி பொன்னுங்க பின்னாடி சுத்தறாங்க, நல்ல பொன்னுங்க இவனை மாதிரி பொறுக்கிங்க பின்னாடி சுத்தறாங்க"

பாலா "என் பின்னாடி யார்ரா சுத்தறாங்க?"

மாதேஸ் "அதான்டா உங்க அத்தை பொன்னு, உங்கப்பா கூட வேலை பார்க்கறவர் பொன்னுன்னு சொன்னியே, அவங்களாம் பாவம் தானே?"

வனிதா "டேய் யார்ரா பாலா, சொல்லவேயில்லை?"

மாதேஸ் "கேட்கறா, சொல்லுடா?"

பாலா "நான் அப்புறமா சொல்லிக்கறேன், கிளம்புவோம், வா"

மாதேஸ் "ஓகே வனிதா பை"

பாலா மனதிற்குள் "இதுக்கு பேர்தான் சனியனை தூக்கி பனியனுக்குள்ள போட்டுக்கறது போல"

---------------------------------------------------------------------------------------தொடரும்---------



Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2