- மழைச்சாரல்: August 2012
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Thursday, 30 August 2012

கண்ணா தப்ப தட்டி கேக்க ஆசையா?????????


உங்க ஊரு நியாய விலை கடை , அதான் பா "ரேஷன் கடை" ல இருக்க அங்கிள்/ஆண்ட்டி ஸ்டாக் முடிஞ்சி போச்சின்னு சொல்றாங்களா?..

அவங்க பொய் சொல்றாங்கன்னு நீங்க/ஊர்ல வேற யாரும் நினைக்கிறாங்களா? ..வாங்க பாத்துடுவோம்.

உங்க மொபைல் ல இருந்து
[PDS] [மாவட்டகுறியீடு] [கடைஎண்] //உதாரணத்துக்கு PDS 10 AA001 (இங்க 10 சேலம் மாவட்ட எண்,AA001 கடை எண்) அப்படின்னு டைப் பண்ணி 9789006492, 9789005450 இந்த ரெண்டு நம்பர் ல எதாச்சும் ஒண்ணுக்கு அனுப்புங்க. 
 
உங்களுக்கு தகவல் உடனே கிடைக்கும்.

#மாலை 5 மணிக்குள்ள அனுப்ப முயற்சி பண்ணுங்க..

அப்புறம் என்ன நீங்களும் ரமணா தான்..

உங்க கடை எண்ணும்,மாவட்ட குறியீடும் உங்க ரேஷன் கார்டிலேயே இருக்கும்.#படத்தை பார்க்கவும்.

மேலும் தகவலுக்கு இந்த வலைபக்கத்தை பாருங்க..
http://www.consumer.tn.gov.in/view_detail.asp?alertid=70
 

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு.இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.


Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.

நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

நன்றி: மகேந்திரன் ஆறுமுகம், தமிழால் இணைவோம்

Wednesday, 29 August 2012

INDIANA JONES AND THE LAST CRUSADE- விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், நான் கடந்த நாட்களில் இல்லாத அளவுக்கு நான்கு நாட்களாக எந்த பதிவும் எழுதாமல் போனதற்கு பதிவர் சந்திப்பும், பவர் கட்டும் தான் காரணம், சரி அதை பற்றி தனிப்பதிவு போடுவோம். இப்ப நாம விமர்சனத்துக்கு வருவோம். நாம ஏற்கனவே INDIANA JONES படத்தோட முதல் மற்றும் இரண்டாவது பாகங்களை பார்த்துட்டோம். இன்னைக்கு பார்க்கப்போற படம் மூன்றாவது பாகம் INDIANA JONES AND  THE LAST CRUSADE.


உண்மையிலேயே ஜீராஸிக் பார்க் படத்துல வெறும் பிரம்மாண்டம் மட்டும்தான் தெரிஞ்சது, இந்த படங்கள்ளதான் இயக்குனரோட திரைக்கதை அமைக்கற திறமையும் அதை ஜனரஞ்சகமா சொல்ல அவர் பட்ட கஷ்டமும் புரியுது. ஏன் நம்ம நாட்டுல இது மாதிரி படம் வர மாட்டேங்குது?

இதுக்கு முந்தின பாகங்களை பார்த்தவங்களுக்கு ஹீரோவா நடிச்சுருக்க ஹாரிசன் ஃபோர்ட்க்கு என்ன கதாபாத்திரம்னு சொல்ல தேவை இல்லை, இருந்தாலும் இன்னொரு முறை சொல்லிடறேன், ஒரு வரலாறுல ஆர்வம் அதிகம் இருக்க அகழ்வாராய்ச்சில அப்பப்ப ஈடுபடறோதட இல்லாம நாட்டோட பொக்கிஷங்கள் வெளிய போயிட கூடாதுனு வம்பிழுக்கற ஆள்.

அவங்கப்பாவும் ஒரு அகழ்வாராய்ச்சியாளர். சின்ன வயசுல கெட்டவங்ககிட்ட பறி கொடுத்த ஒரு முக்கியமான சிலுவைய சண்டை போட்டு மியுசியம்க்கு திரும்ப கொண்டு வந்து சேர்க்கற ஹீரோவுக்கு அவங்கப்பாகிட்ட இருந்து ஒரு டைரி பார்சல்ல வந்துருக்கு. என்னமோ ஏதோனு குழம்பும்போது அவங்கப்பாவோட நண்பர்னு ஒருத்தர் வந்து பேசறார்.


இயேசு கிறிஷ்துவோட கடைசி விருந்துல அவரால பயன்படுத்தப்பட்ட கோப்பை ஒரு இடத்துல பத்திரமா இருக்கறதாவும் அதுல புனித நீரை குடிக்கறவங்களுக்கு மாறா இளைமையும் ஆரோக்கியமான வாழ்வும் கிடைக்கும்னு சொல்ல படுது, அந்த கோப்பைய பாதுகாக்கற 3 பேர்ல இறந்த 2 பேரோட கல்லறைல இருக்க சீல்ட்-ல அந்த கோப்பை எங்க இருக்குங்கற தகவல் இருக்குனு அதை தேடிகிட்டு இருந்த ஹீரோவோட அப்பாவ யாரோ கடத்திகிட்டு போய்ட்டாங்கனு சொல்றார்.


இப்ப நம்ம ஹீரோ அதை தேடி கிளம்பறார். எப்படி ஜேம்ஸ்பாண்ட் போற இடத்துல ஒரு பிகர் காத்துகிட்டு இருக்குமோ, அது மாதிரி பெர்லின்ல வரவேற்கற பொன்னு கூட சேர்ந்து முக்கியமான சில விஷயங்களை கண்டு பிடிக்கறார், அப்புறம் என்ன மேட்டர் தான், வழக்கம் போல வில்லன் குருப் துரத்த ஆரம்பிக்கறாங்க.


படத்துல எனக்கு பிடிச்ச விஷயம் ஹிட்லர் கேரக்டர் வர்ரதுதான், அப்பாவோட டைரிய எடுக்க ஜெர்மனி போற ஹீரோ கூட்டத்துல மாட்டிகிட்டு ஹிட்லர்கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கற சீன் கிளாஸ். நான் நினைச்ச மாதிரியே ஜெர்மனியதான் கெட்டவங்களா காட்டி இருக்காங்க. இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி குடுத்த ஹிட்லர் பத்தி தப்பா பேசறது எனக்கு பிடிக்கலை.

இதுக்கு முந்தின பாகங்களை விட இதுல நிறைய ஆர்வத்தை தூண்டற திருப்பங்கள் இருக்கு, அதுலயும் பறந்துகிட்டு சுட்டுகிட்டு இருக்க ஹெலிகாப்டர் அ ஹீரோவோட அப்பா, கறுப்பு குடைய வச்சு புறாவ விரட்டி வெடிக்க வச்சு அந்த குடைய பிடிச்சுகிட்டு நடந்து வர்ர சீன் மாஸ்.


சில விஷயங்கள் ரகசியமாதான் இருக்கனும், சில விஷயங்கள் வெளிய வராத வரைக்கும் தான் பொக்கிஷமா இருக்கும், படத்தோட முடிவுல 700 வருசமா பாதுகாத்துகிட்டு இருக்க knights அ பார்த்து கைகாட்டிட்டு கிளம்பறதாகட்டும், பாதாளத்துல ஆயிரகணக்கான எலிங்களுக்கு மத்தியில மாட்டிகிட்டு பெட்ரோல்க்கு உள்ள ஒளிஞ்சுக்கறதாகட்டும், இன்னும் விளக்க முடியாத காட்சிகள் இயக்குனரோட பேரை சொல்லும் காட்சிகள்.

படத்தோட ட்ரெய்லர்இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களோட பகிர்ந்துக்கங்க, உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள், மறக்காமல் ஓட்டளியுங்கள்.

Saturday, 25 August 2012

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்புத் தொழில்...!!

(ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரே கோர்வையா படித்தால் மட்டும் கடைசியில் உள்ள ஆச்சரியம் புரியும்)குறைந்த முதலீட்டில்
அதிக லாபம் தரும்
பாம்பு வளர்ப்புத்
தொழில்...!!
கரு நாகப்பாம்பு வளர்ப்பது எப்படி
கரு நாகப்பாம்பு வளர்ப்பு தொழில்
வேகமாக
வளர்ந்து வருகிறது.
பண்ணை அமைத்து சிரத்தையுடன்
தொழிலில் ஈடுபட்டால்
லாபத்தை அள்ளலாம்
என்று ஈரோடு மாவட்டம்
பெருந்துறை யில்
‘ஸ்னேக் ஃபார்ம் இந்தியா’
நடத்திவரும் பீனிக்ஸ் பாலா
கூறுகிறார் .
2004ம் ஆண்டு 5
ஜோடி கரு நாகப்பாம்புகளுட
ன் பெருந்துறையில்
பண்ணை துவங்கினேன்.
அவை முட்டையிட
துவங்கியதும்
வேறொரு பண்ணையாளரிடம்
கொடுத்து குஞ்சு பொரிக்க
செய்து, அவற்றையும்
சேர்த்து வளர்த்தேன்.
கரு நாகப்பாம்பு வளர்ப்பையே முழு நேர
தொழிலாக மேற்
கொண்டேன். தமிழகத்தில்
கரு நாகப்பாம்பு எண்ணிக்கை குறைவு.
ஒப்பந்த அடிப்படையில்
கரு நாகப்பாம்புகளை வளர்க்க
விவசாயிகளிடம்
ஆர்வத்தை உருவாக்கினேன்.
சிரமம் இல்லாத
வளர்ப்பு முறை, அதனால்
கிடைக்கும்
வருமானத்தை பார்த்து இன்று தமிழகம்
முழுவதும் ஒப்பந்த
அடிப்படையிலும்,
சொந்தமாகவும்
ஆயிரக்கணக்கானோர் இந்த
தொழிலில்
ஈடுபட்டு வருகிறார்கள்.

சந்தை வாய்ப்பு!
கரு நாகப்பாம்புகளை விற்பனையாளர்கள்
நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச்
செல்கின்றனர்.
அக்கம்பக்கத்தினர்
வீட்டுத்தேவைக்கும்,
பாம்பாட்டிகளும் சர்கஸ்
காரர்களும் வந்து வாங்கிச்
செல்வர்.
விசேஷங்களுக்கும்
வாங்கிச் செல்வார்கள்.
ஓட்டல்கள்,
உணவு விடுதிகளுக்கும்
நேரடியாக ஆர்டர்
பிடித்து சப்ளை செய்யலாம்.

பயன்கள்:
மற்ற பறவை,
விலங்கி னங்களை ஒப்பிடும்போது கரு நாகப்பாம்புவில்
கழிவு குறைவு.
முட்டை, விசம், இறைச்சி,
எண்ணெய் கிடைக்கிறது.
கரு நாகப்பாம்புகளின்
இறைச்சி மற்ற
இறைச்சிகளை விட
சுவையில்
தனித்தன்மை வாய்ந்தவை.
ஆடு, மாடு போன்ற
கால்நடைகள்தான்
சிவப்பு மாமிசம்
கொடுக்கும்.
சிவப்பு மாமிசம்
கொடுக்கும் பறவை இனம்
கரு நாகப்பாம்பு.
கரு நாகப்பாம்புகளை இறைச்சிக்கு வெளிநாடுகளில்
நல்ல வரவேற்பு உள்ளது.
4 முதல் 5
கிலோ எடை கொண்ட
கரு நாகப்பாம்புகளை இறைச்சிக்காக
வெட்டும்போது 1முதல் 2
கிலோ கொழுப்பு தனியாக
கிடைக்கும்.
கொழுப்பை காய்ச்சி எண்ணெய்
எடுக்கப்படுகிறது. 5
ஜோடி கரு நாகப்பாம்புகள்
வளர்த்தால் 1/2 முதல் 3/4
லிட்டர்
கரு நாகப்பாம்பு விசம்
கிடைக்கும்.
சுத்திகரிப்பு செய்து வலி நிவாரணி,
அழகு சாதன கிரீம்கள்
தயாரிக்க
பயன்படுத்தப்படு கிறது.
ஒரு கரு நாகப்பாம்பில் 6
சதுரஅடி தோல்
கிடைக்கும்.
மிருதுவாகவும், அதிக
வலுவாகவும் இருப்பதால்
செருப்பு, கைப்பை,
பர்ஸ்கள் செய்ய
பயன்படுத்தப்படுகிறது.
ஒரு கரு நாகப்பாம்புகளை வீட்டில்
வளர்ப்பதால் செல்வம்
பெருகும்
என்பது அவர்களது நம்பிக்கை.

கட்டமைப்பு
பண்ணை தொடங்க
குறைந்தது 5
ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள்
(ரூ.7500) வேண்டும்.
4அடி நீளம், 35 அடி அகல
இடம் வேண்டும்.
இடத்தை சுற்றி 5
அடி உயரம் கம்பி வேலி,
தீவனம் மழையில்
நனையாமல் இருக்க சிறிய
ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்,
தீவனம் வைக்க 2 பாத்திரம்,
10
மண்பாணை (இதற்கு செலவு ரூ.5
ஆயிரம்),
முட்டைகளை பொரிக்க
வைக்க இன்குபேட்டர்
(ரூ.3 லட்சம்), சீரான மின்
சப்ளைக்கு ஜெனரேட்டர்
(ரூ.1 லட்சம்)
போன்றவை வேண்டும்.

எங்கு வாங்கலாம்?
கரு நாகப்பாம்பு குட்டிகள்
மற்றும்
தீவனங்களை தமிழகம்
முழுவதும்
மாவட்டந்தோறும் உள்ள
பாம்பு பண்ணைகளில்
பெற்றுக் கொள்ளலாம்.
இன்குபேட்டர், ஹேச்சர்
மெஷின் ஐதராபாத்தில்
கிடைக்கும்.

குஞ்சுகள் தேர்வு
கரு நாகப்பாம்பு குட்டிகளை வாங்கும்போது பார்வை,
கேட்கும் திறன் சரியாக
உள்ளதா, நன்றாக
கடிக்கிறதா என்று பார்த்து வாங்க
வேண்டும்.
வருமானம்
3 மாத வயதுள்ள 5
ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள்
வளர்த்தால் 6
மாதத்துக்குள்
3கிலோ எடையுள்ள
கரு நாகப்பாம்புகள்
கிடைக்கும். 5
ஜோடி வளர்க்கும்போது 100
முட்டைகள் கிடைக்கும்.
இதன்மூலம் தரமான
நன்றாக கடிக்கக்கூடிய
வீரியமுள்ள 60 பாம்புகள்
கிடைத்தால்
அவற்றை விற்று ரூ.4.5
லட்சம் சம்பாதிக்கலாம். 6
மாதங்களுக்குப்
பிறகு ஒவ்வொரு மாதமும்
தலா ரூ 1.5 லட்சங்கள்
சம்பாதிக்கலாம்.

அனுக வேண்டிய
முகவரி :
ஃப்ராடு பாலா,
சீட்டிங் ல்காம்ப்ளெக்ஸ்
7th முட்டுச்சந்து
சென்னை 60000018
தொலை பேசி எண் :
இனிமேல்தான் வாங்க
வேண்டும்.

# ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்ப்ப்ப்ப்ப்ப்
ப்ப்ப்ப்பாஅ, இந்த மக்கள
நம்ப
வக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட
வேண்டியிருக்கு.

அடுத்த பதிவில் ஒட்டகம்
மற்றும் அதன்
முட்டைகளை(ஆமாம் ஒட்டக முட்டைதான்) பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம் (கண்டிப்பா எங்க நிறுவனத்தில் தான் முதலீடு செய்யனும் சரியா)

Friday, 24 August 2012

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், நமக்கு எப்பவுமே ஒரு படத்தை பார்த்தா அதோட முதல் பார்ட்லருந்து பார்த்தாதான் புரியும், இல்லைனா சும்மாவே அவங்க பேசற இங்கிலிஸ் புரியாது, இதுல யாருக்கு யார் என்ன உறவுனு தெரியலைனா விளங்கவே விளங்காது. அதான் INDIANA JONES படத்தோட எல்லா பார்ட்டையும் எடுத்து வச்சு ஒவ்வொன்னா பார்த்துட்டு இருக்கேன். இப்படத்தின் முதல் பாகம் விமர்சனம் படிக்க...


இதோட 2 வது பார்ட் Indiana Jones And The Temple Of Doom, கதைக்களம் நம்ம இந்தியா, வழக்கம் போல முதல்ல வில்லன்கிட்ட சண்டை போட்டு ஹீரோயிசம் காட்டி தப்பிக்கும் போது செவனேன்னு பாடிகிட்டு இருந்த ஹீரோயின இழுத்துகிட்டு ஒரு ஃப்ளைட் ல ஏறிடறார். கொடுமை என்னன்னா அந்த ஃப்ளைட் வில்லனுக்கு சொந்தமானது.

பாதி வழில பெட்ரோல் அ பிடிங்கி விட்டுட்டு பைலட் 2 பேரும் இருக்கற பாரசுட்லாம் எடுத்துகிட்டு குதிச்சுடறாங்க, இருக்கற போட் ல குதிச்சு தப்பிக்கறாங்க, அப்புறம் தான் அவங்க வந்து சேர்ந்துருக்க இடம் இந்தியானு தெரிய வருது.


நம்ம ஆர்க்கியாலஜிஸ்ட் ஹீரோ, அழகான ஹீரோயின், அவங்களுக்கு கூட வர்ர குட்டிப்பையன் 3 பேரும் ஒரு கிராமத்துக்கு போய் டெல்லிக்கு போக வழி கேட்க, அவங்க முதல்ல காணாம போன சிவலிங்கத்தை கண்டு பிடிச்சு தர சொல்றாங்க, அதை கண்டுபிடிக்கத்தான் கடவுள்  3 பேரையும் இங்க வரவச்சதா சொல்றாங்க.


சரி குழந்தைங்களையும் கடத்திட்டாங்கனதும் ஹீரோக்கு கோபம் பொத்துகிட்டு வந்து வில்லன்களை தேடி அவங்க இருக்க கோட்டைக்கு போறார். அங்க ஒரு விருந்து வைக்கறானுங்க பாருங்க, பார்த்திங்கனா சாப்பிடவே மனசு வராது, பாம்பு, பல்லி, தேள், குரங்கு மூளை, மனுசன் கண்னுன்னு விதவிதமா சமைச்சுருப்பாங்க.

நைட் ஹீரோயின் கூட ஊடல்ல ஹீரொ தனியா வந்து படுக்கறப்ப வில்லன் கொலை பன்ன வர்ரதும், அடுத்து ஹீரோயின் ரூம்ல யாராவது இருக்காங்களானு தேடும் போது ஹீரோயின் நான் இங்க இருக்கன்னு சொல்றதும், அங்க இருக்க பெண் சிலையோட மார்ப அழுத்தனதும் ஒரு கதவ திறந்து ஹீரோ சுரங்க பாதைல போறத பார்த்து, ஹீரோயின் தயங்கி தயங்கி இன்னொரு சிலையோடத அழுத்தறதும் டைரக்டர் டச்.


கோட்டையோட மகராஜாவ கரெக்ட் பன்னிடலானு நினைச்சுட்டு இருக்க ஹீரோயின் சின்ன பையனை ராஜாவ பார்த்ததும் குடுக்கற ரியாக்சன் சூப்பர், நரபலி குடுக்கறதுக்கு போட்டுருக்க செட் அருமையா இருக்கு, எதிர்பார்க்காத நேரத்துல ஷாக் குடுக்க எப்படித்தான் யோசிக்கறாங்களோ?


ஏதோ ஒரு ரத்தத்தை குடிக்க வச்சு ஹீரோவ வில்லனாக்கறதும் சின்ன பையனை கட்டி வச்சு அடிமையாக்கறதும், ஹீரோயின் அ நரபலி குடுக்க முயற்சி பன்றதும் இது எல்லாத்தலருந்தும் தப்பிச்சு ஏகப்பட்ட அட்வெஞ்சர் செஞ்சு எப்படி எல்லா அடிமைங்களையும் காப்பாத்தி அந்த சிவலிங்கத்தை அந்த ஊருக்கு ஹீரோ கொண்டு போறார்னு படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க.

வெள்ளைக்காரங்க பார்வையில இந்தியா எப்படினும் பொம்மைல பில்லி சூன்யம் வைக்கறதும் நரபலி குடுக்கறதும் இந்த படத்துலருந்து சுட்டுதான் பல தமிழ் படங்கள் எடுத்துருப்பாங்க போல, ADVENTURE பட விரும்பிங்க கண்டிப்பா இந்த படத்தை பார்க்கனும்.

படத்தோட ட்ரெய்லர்இந்த பதிவு பிடிச்சுருந்தா ஓட்டு போட்டு நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க, ஏதாவது குறை இருந்தா பின்னூட்டத்துல தெரிவியுங்க.

Thursday, 23 August 2012

பா.ஜ.க வால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன?

பா.ஜ.க வால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன என்று பார்போம் ..

1.பா.ஜ.க ஆட்சிகாலத்தில் ,தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி வழங்கப்பட்டது.
2.மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.
3.கச்சதீவை மீட்காவிட்டாலும் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது .ஒரு மீனவர் உயிர் இழந்தவுடன் வாஜ்பாயே இலங்கை பிரதமரை தொலை பேசியில் எச்சரித்தார்.
4.சிங்கள ராணுவத்திற்கு ஆயுதங்கள்; காசிற்கு கூட விற்கப்படவில்லை. இதை பற்றி வைகோவே பலமூறை வாஜ்பாயை பாராட்டி உள்ளார்.
5.தேசிய நதி நீர் இணைப்பு திட்டம். இது நிறைவேறி இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்காது. அடுத்து வந்த காங்கிரஸ் அரசோ நதி நீர் இணைத்தால் நாடு கடலில் மூழ்கிவிடும் என்று இத்திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது.
 

ஆட்சியை இழந்த பின்னரும்::

1.தமிழ்நாட்டிற்கு மின்சாரம் 200 MW குஜராதில் இருந்து வருகிறது.
2.தமிழக மீனவர்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசிய ஒரே தேசிய கட்சி பா.ஜ.க தான்.
3.தமிழக மீனவர்களுக்காக தமிழ் நாட்டிற்க்கு வெளியே டில்லியில் ஆர்பாட்டம் நடத்திய கட்சி பா.ஜ.க தான்.
4.இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் மத்திய அரசை எதிர்த்து வாக்களிக்க நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்களுடன் குரல் குடுத்த கட்சி பா.ஜ.க தான்.
5. இலங்கை பிரச்சனையை தேசிய பிரச்சனை ஆகினார் மோடி. பஞ்சாப் மாநிலத்தில் சுற்று பயணத்தின் பொது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் குற்றங்களை பற்றி பிரசாரம் செய்தார்.

நன்றி: தமிழ் நாடு அரசியல்


Wednesday, 22 August 2012

INDIANA JONES - RAIDERS OF THE ARK திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், ஒவ்வொரு படங்கள் நம் மன நிலையில், நாம் பார்க்கும் தொழில்களை பற்றிய பார்வையினையே மாற்றி விடும், தொடர்ச்சியாக உளவாளிகளையும், போலிஸ் ஆபிசர்களையும் மட்டும் ஹீரோவாக காட்டி வந்த சினிமாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை பற்றிய பார்வையினையே மாற்ற வைத்த படம் தான் INDIANA JONES - RAIDERS OF THE ARK .

 

ஸ்டீபன் ஸ்பில்பெர்க் என்ற பெயரை கேள்விபடாதவர்கள் மிகக் குறைவு, நான் முதன்முதலில் காதலன் படத்தில் பிரபு தேவா "ஸ்டீபன் ஸ்பில்பெர்க் படம்பா, அதான் யோசிக்காம போயிட்டன்"னு சொல்லும் போதுதான் அந்த பேரை கேள்விபட்டேன். அதுக்கப்புறம் எல்லாருக்கும் தெரிஞ்ச ஜிராசிக் பார்க் படம் போதும் அவர் பேர் சொல்ல.

 அந்த வகையில அவர் எடுத்த வித்தியாசமான முயற்சினு இந்த படத்தை சொல்லலாம். ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்குனு ஒரே திரைக்கதைதான் இருக்கும், ஒரு அறிமுகம், புது ஆயுதங்கள், கொஞ்சம் கில்மா சீன்னு ஒரே மாதிரிதான் இருக்கும்.

 

அதே மாதிரி இன்டியானா ஜோன்ஸ் படங்களுக்கான அறிமுகம் அவர் ஆரம்பத்துல ஒரு ஆபத்தான இடத்துக்கு போய் அவர் திறமைய காட்டி, தப்பிச்சு வரதுதான். அப்புறம் இந்த படத்துல அவர் தேடிப்போக போற பொருள் பத்தின அறிமுகம்.

 

சும்மா சொல்ல கூடாதுங்க, ஜெர்மனிய அநியாயத்துக்கு இழுத்துருப்பாங்க. அவங்கதான் உலகத்துக்கே எதிரிங்கற மாதிரி, அப்புறம் ஹீரோ ஹீரோயின் சேரனும், அப்புறம் வித்தியாசமான முறையில அற்புதமான பொருள் இருக்கற இடத்தை கண்டு பிடிக்கறது, அதை வில்லன் ஈசியா பிடுங்கிட்டு போயிடறதுனு வழக்கமான மசாலாதான்.


ஆனா படத்தை எடுத்துருக்க விதம், சான்ஸே இல்லை, 30 வருசத்துக்கு முன்னாடியே மனுசன் என்னாமா யோசிச்சுருக்கார், தனி ஆள் ஒரு ராணுவத்தையே சமாளிப்பார், அதுக்கு அவர் மூளைய மட்டும்தான் பயன் படுத்துவார்.

படத்தோட ஆரம்பத்துல குகைக்குள்ள போய் மாட்டிக்கறதும், அப்புறம் அரசாங்கத்துக்காக ARK அ எடுக்க கிளம்பி ஹீரோயின் அ தேடி போறதும், அங்க வில்லன்களை சமாளிக்கறதும் செமயா இருக்கும். 


எல்லாராலயும் ரசிக்கப்பட்ட காட்சி அந்த பிரமீடுக்குள்ள 100 கணக்கான பாம்புகளுக்கு நடுவுல மாட்டிக்கறதுதான், நிஜமா சொல்றேன் உங்களுக்கு இது வரைக்கும் நான் சொன்னதுல படத்தோட கதை ஓரளவுக்கு புரிஞ்சுருக்கும்னு நினைக்கறேன். ஆனா திரைக்கதைய நீங்க யூகிக்க முடியாத மாதிரி எடுத்துருப்பார். பார்த்தே தீர வேண்டிய படங்கள்ள இதுவும் ஒன்னு.

படத்தோட ட்ரெய்லர்இந்த பதிவுல குறை இருந்தா தெரிவியுங்க, பிடிச்சுருந்தா நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.

குவாரி கொள்ளையில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. குடும்பம்?

மதுரை, மேலூர் பகுதியைச் சுற்றி பல கிலோ மீட்டர்கள் தூர பகுதிகள் வளைக்கப்பட்டு, சட்டத்துக்குட்பட்டும்... சட்டத்துக்கு விரோதமாகவும் குவாரிகள் அமைக்கப்பட்டு பல லட்சம் கோடி ரூபாய்கள் சுருட்ட பட்டுள்ளன. நேற்றைய ஆளுங்கட்சி... இன்றைய ஆளுங்கட்சி என்று எல்லா கட்சிகளும் மூட்டை மூட்டையாக பணத்தை வாங்கிக் கொண்டு இந்தக் கொள்ளைக்கு துணை போயிருக்கின்றன. இதன் காரணமாக வயல்வெளிகளும், கண்மாய்களும் காணாமல் அடிக்கப்பட்டுள்ளன.


இதனால் நொந்து போன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் என்று பலரும் மனுயுத்தம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்! ஜூனியர் விகடன் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே கட்டுரைகள் எழுதப்பட்டு வருகின்றன. இந்நிலையில்... திடீர் என்று சமீப காலமாக குவாரி கொள்ளையர்கள் மீது நடவடிக்கை பாய்ந்து கொண்டிருக்கிறது.

‘அதன் பின்னணி என்னவாக இருக்கும்?’ என்கிற ஆராய்ச்சி ஒருபுறமிருக்க... குவாரி கொள்ளைக்கு எதிராக போராட்டங்களை நடத்திவரும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதைப் பார்த்து பெரு மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தா.பாண்டியன், 'இந்த நடவடிக்கைகள் வரவேற்கத் தக்கது. மேலும் கடும் நடவடிக்கை தேவை' என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவருடைய கட்சியைச் சேர்ந்த தளி தொகுதி எம்.எல்.ஏ-வான ராமச்சந்திரன் கொலை வழக்கில் கைதாக, கூடவே குவாரி ஊழல் ஒன்றிலும் அவரை தொடர்புபடுத்தி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதையடுத்து, பொங்கி எழுந்துவிட்ட தா.பாண்டியன், சென்னையில் கடந்த செவ்வாயன்று (ஆகஸ்ட் 21), 'கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது போலீஸ் அடாவடி நடவடிக்கை எடுக்கிறது. எங்கள் பெண்களை மிரட்டுகிறது' என்றெல்லாம் சொல்லி போராட்டம் நடத்தியிருக்கிறார். கூடவே, 'ராமச்சந்திரனின் குடும்பத்தினர் லைசென்ஸ் பெற்று குவாரி நடத்துகின்றனர். அதற்கும், ராமச்சந்திரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்றும் கூறியிருக்கிறார் (என்ன ஒரு கண்டுபிடிப்பு!).

மதுரையில் பல லட்சம் கோடிகளுக்கு கிரானைட் கற்களை சுரண்டியிருக்கும் பி.ஆர்.பி. கூடத்தான் லைசென்ஸ் பெற்று குவாரியை நடத்தி வந்தார். பிறகு எதற்காக அவர் மீது மட்டும் குற்றம்சாட்டி இவருடைய கட்சி போராட்டமெல்லாம் நடத்தியது?
மருமகள் உடைத்தால் பொன்குடம்... மாமியார் உடைத்தால் மண்குடமா?

பின்குறிப்பு: சென்னையில் போராட்டம் நடத்திய கையோடு, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துத் திரும்பிய தா.பாண்டியன், ‘இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்பாக அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து கூட்டு இயக்கம் நடத்த கோரிக்கை வைத்தேன். முதல்வர் ஏற்றுக் கொண்டார்' என்று கூறியுள்ளார்.

நன்றி: விகடன்

Monday, 20 August 2012

புதையலை தேடும் சிறுவர்கள் - THE GOONIES விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், சில படங்கள் தான் எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் எந்த காலகட்டத்திற்கும் பொருந்துவது போல் இருக்கும், சில படங்கள் தான் எல்லா வயதினராலும் ரசிக்கப்படும், அந்த வகையில் தமிழில் ஒரு உதாரணம் கூறுவதென்றால் "தில்லு முல்லு" படத்தை கூறலாம்.

ஆங்கில படங்களை எடுத்துக் கொண்டால் அதிக பட்சம் அவர்கள் படம் எடுப்பதே இதை குறிக்கோளாய் வைத்துதான் என நினைக்கிறேன், கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன் வந்த ஒரு படத்தினை சகப்பதிவரின் அறிமுகத்தால் பார்த்தேன், என்னால் முழுதாய் ரசித்து பார்க்க முடிந்தது, படத்தின் பெயர் "THE GOONIES"


15 வயதிற்கு முன்பு எல்லாருக்கும் ஒரு பழக்கம் இருக்கும், தாங்கள் படித்த அல்லது பார்த்த கதாபாத்திரங்களை மனதில் வைத்துக்கொண்டு ஒரு குருப் ஆக அலைவது, யாரும் இந்த வயதில் தனியாக இருக்க விரும்ப மாட்டார்கள், கண்டிப்பாக அந்த கூட்டத்தில் ஒரு ஹீரோ, காமெடியன், ஒரு விஞ்ஞானி இருப்பான், என் சிறுவயதிலும் அப்படித்தான், அப்படி இருக்கும் சிறுவர்களின் கூட்டத்தின் பெயர்தான் "THE GOONIES".

 

எதெச்சையாக வீடு சுத்தம் செய்யும் பொழுது கிடைக்கும் கடற்கொள்ளையர் கொள்ளையடித்த புதையல் குறித்த தகவ்ல் அடங்கிய மேப் கிடைக்கிறது, குடும்பத்தில் கடன் பிரச்சனை இருக்கிறது, பெற்றோர்கள் கஷ்டபடுகிறார்கள். ஒரு நாள் தைரியமாக இறங்கி செயல்பட்டால் புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறுவர் கூட்டம், அண்ணனை கட்டிப்போட்டுவிட்டு கிளம்புகிறது.


இதற்கிடையில் சிறையில் இருந்து தப்பிக்கும் கைதியில் குடும்பம் புதையலை அடையும் வழியில் இருக்கும் வீட்டில் எதையோ மறைத்து வைக்கிறார்கள், அவர்களை ஏமாற்றி விட்டு உள்ளே நுழைந்தால் ஏகப்பட்ட தடங்கல்கள். புதையலை அடைய வருபவர்களுக்காக வைக்கப்பட்ட பொறிகள் விதவிதமாக தாக்குகின்றன.

இதற்கிடையில் சிறுவர்களை தேடிக்கொண்டு அண்ணனும், அவனை தேடி அவன் காதலி மற்றும் தோழியும் வந்து அவர்களும் புதையலை தேடி உடன் வருகிறார்கள். அதில் ஒரு சிறுவன் மட்டும் கொலைக்காரர்களிடம் மாட்டிக்கொண்டு விட அவனை ஒரு அதிகமாய் வளர்ந்த மன நிலை பாதிக்க பட்டவனுடன் கட்டி வைக்கிறார்கள்.


இப்படி எல்லாப் பிரச்சனையையும் தாண்டி இவர்கள் அந்த கடல் கொள்ளையனின் கப்பலை அடைந்தார்களா? இவர்களை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த கொலைக்காரார்களிடம் சிக்கினார்களா? புதையல் யாருக்கு கிடைத்தது என்பது க்ளைமாக்ஸ்.


படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை நம்பி எடுக்கப்பட்டிருக்கு, அதிலும் ஒரு சிறுவன் கொலைக்காரர்கள் மிரட்டி கேட்க 3 வது படிக்கும் போதிலிருந்து செய்த அனைத்து தவறுகளையும் ஒப்பிக்கும் இடம் அருமை, அதே போல் ஹீரோயின் காதலனுக்கு குடுக்க வேண்டிய முத்தத்தினை கண்களை மூடிக்கொண்டு அவன் தம்பிக்கு குடுப்பது செம. நம்பி பார்க்கலாம்.

படத்தோட ட்ரெய்லர்உங்களுக்கு இப்பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், குறையிருப்பின் கருத்துக்களை தெரிவியுங்கள்.

அட்டக்கத்தி - உலக சினிமா

அன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாள் கழித்து தமிழ் படம் ஒன்றினை புதிதாய் ரசித்து பார்த்த மகிழ்வில் எழுதுகிறேன்.  இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவியாளர் இயக்கிய படம் என் தெரிந்ததுமே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்ற நம்பிக்கையில் தான் படம் பார்க்க துவங்கினேன். நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே படத்தில் இருக்கிறது. கொஞ்சம் விரிவாக அலசுவோம்.

 

தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறது? ஒரு கட்டத்தில் இயக்குனர்களையும் கதையையும் நம்பி இருந்த சினிமா, பின்னர் ஹீரோக்களின் வசம் இருந்து தற்போது சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்களின் கையில் இருக்கிறது, அது காலத்தின் கட்டாயம், நான் யாரையும் குறை சொல்லவில்லை.ஓரு நல்ல உலகப்படம் எப்படி இருக்க வேண்டும்?

கதையினை நம்பி இருக்க வேண்டும், கதைக்களம் இயல்பானதாய் இருக்க வேண்டும், நடிகர்கள் கதையில் வாழ்ந்திருக்க வேண்டும், படம் பார்ப்பவர்களுக்கு முடிந்த வரை அவர்கள் மனதின் பழைய அனுபவங்களை தூண்ட வேண்டும், கொஞ்ச நாட்கள் மனதில் அப்படம் அசை போட்டபடியே இருக்க வேண்டும், அந்த வகையில் "அட்டக்கத்தி" ஒரு உலக சினிமாதான்.எனக்கு தெரிந்த வரை எந்த ஆங்கில படத்தின் தழுவல் போல தெரியவில்லை. +2வில் தேர்ச்சி பெறாத நாயகன் உங்க ஊர்ல இருந்தா என்ன பன்னுவானோ அதைத்தான் இந்த பட ஹீரோவும் பன்றார், தினமும் கிளம்பி பஸ்ல தொங்கிட்டே போய் ஊர் மேய்ஞ்சிட்டு தொங்கிட்டே வர்ரார், அவங்களுக்கு இந்தியா வல்லரசாகிற லட்சியமா இருக்கும். காதலிச்சு கல்யாணம் பன்னனும்னுதான் லட்சியம் இருக்கும்.

படத்துல இயக்குனர் ஒரு 10 வருசத்துக்கு முன்னாடியான கதைக்களம்னு சொல்லிருக்கனும், ஏன்னா எங்கயும் செல்போன் வரவே இல்லை, மத்தபடி சூப்பர், அந்த மாதிரி பசங்களோட ஹேர்ஸ்டைல், ட்ரெஸிங் சென்ஸ் எல்லாமே சரியா இருக்கு, படத்துல எனக்கு பிடிச்ச விசயம் அப்பப்ப வந்து போற கானா பாட்டுதான்.

நான் தினமும் காலேஜ் போகும் போதும் ஒரு கூட்டம் வரும், கானா பாடாது, அந்த மாதிரி CD குடுத்து டிரைவர் அ போட சொல்லி தாளம் போடும், அவங்கவங்க ஆளுக்கொரு பிகரை வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு போவோம், திரும்ப போகும் போது பொன்னுங்க சாய்ஸ், வெறும் மெலோடிஸ் ஆ பாடும். 


ஹீரோ ஒரு ஸ்கூல் பொன்னுக்கு ரூட் விடறார், அதுவும் சிரிக்குது, பார்க்குது, லவ் அ சொல்ல போறான்னு தெரிஞ்சா கூப்பிட கூப்பிட நிக்காமயே போய்டுது, இதை நானும் அனுபவிச்சுருக்கேன், அப்புறம் தப்பிக்க வேற வழி? வழக்கம் போல அண்ணா இப்படி என் பின்னாடி வராதிங்கனு சொல்லிட்டு போய்டுது. அதுக்கு கொஞ்சம் கூட வருத்த படாம போன்டா திங்கும் போதே முடிவு பன்னிட்டேன், அட்டக்கத்தி நம்ம படம்னு.

அடுத்து அத்தைபொன்னு, புலி ஆட்டம் ஆடி, கானா பாடி, கண்ல ராக்கெட் எடுத்துனு ஏகப்பட்ட வித்தை காட்டுனா அது ஹீரோவோட அண்ணண்கிட்ட குடுக்க சொல்லி லெட்டர் குடுக்குது, அப்ப முடிவு பன்றார் நம்ம ஹீரோ, ஒவ்வொரு ஞாயிறும் இனிமேல் தினமும் கிரவுண்டுக்கு போகனும்னு நான் நினைக்கற மாதிரி இனி எந்த பொன்னு பின்னாடியும் சுத்தக் கூடாதுனு.


ஆச்சர்யம் பாருங்க, டெர்ரர் குருப்ல சேர்ந்து பொன்னுங்க பின்னாடி சுத்தாம, அட்டெம்ட் பாஸ் பன்னி காலேஜ் போய் "ரூட் தல" ஆகிடறார், விதி எங்க விடுது? எந்த ஸ்கூல் பொன்னு பின்னாடி சுத்தி பல்ப் வாங்குனாரோ அது அதே காலேஜ்க்கு வந்து இவர் போற பக்கமெல்லாம் வந்து லுக் விடுது.


அவனும் ஆண்மகன் தானே? அவனுக்கும் ஆசை வரத்தானே செய்யும், ஹீரோ கொஞ்சம் கொஞ்சமா கவுந்தடறார், நடுவுல ஒரு கதையை விட்டுட்டமே? கார்மென்ட்ஸ்க்கு வேலைக்கு போற 2 பிகர்ங்களை அவங்க ஏரியாக்கே போய் உஷார் பன்ன ட்ரை பன்னி அடி வாங்கிட்டு வந்து கராத்தே கத்துக்கற இடம் அருமை. இப்படித்தான் நாங்க ஒரு 16 பேர் கராத்தே கிளாஸ் போனோம்.


மனசுக்குள்ள காதல் முளை விட்டு வளர்ந்து பூ பூக்கறப்ப முன்னாடி கழன்டுட்டு போன ஒரு பிகர் (பீஸ்) பஸ்ல வச்சு உரசி உரசி தப்பு பண்ண தூண்டுனதுல ஆள் அசிங்கபட்டு வீட்டுக்கு வந்துடறார். திடிர்னு பார்த்தா ஹீரோயின் வீட்ல லவ் மேட்டர் தெரிஞ்சு அடைச்சு வச்சுடறாங்க.


அப்புறம் என்னா? சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போதான், க்ளைமாக்ஸ் அ சொல்லிட்டா சப்புனு போயிடும், பொன்னுங்க ஒருத்தரை காதலிச்சாலும் இன்னொருத்தன்கிட்ட உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்னு ரிசர்வ் பன்னி வச்சுருக்கும், ஆனா பசங்களுக்கு நாம கன்ஃபார்ம் டிக்கெட்டா? இல்லை வெயிட்டிங் லிஸ்ட்டானு? கடைசி வரைக்கும் தெரியாது.


படத்துக்கு யாருப்பா காஸ்ட்டிங்? எங்க இருந்துப்பா பொன்னுங்களை பிடிச்சிங்க? ஒவ்வொரு பொன்னும் தமிழன் சைட் அடிக்கறதுக்குனு ஆர்டர் பன்னி செஞ்ச மாதிரி இருக்கு. படத்தோட கேமரா மேன், தலைவா நீங்க தமிழ் சினிமாவுக்கு கட்டாயம் தேவை.


படத்துல நடிச்சுருக்க பொன்னுங்களுக்காகவே படத்தை 3 தடவை பார்க்கலாம், ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்ச பசங்க வாழ்க்கைய பதிஞ்சுருக்காங்க, என்னமோ தெரியலை, படம் பார்த்ததுல இருந்து என் கூட படிச்ச பல பசங்களுக்கு போன் பன்னி பேசறேன், பழசுலாம் ஞாபகம் வருது, நல்லாதாங்க இருக்கு, வேற என்னா வேணும்?

படத்தோட ஹைலைட்டே ஹீரோ கடைசியா வாத்தியார் ஆகறதுதான், இந்த மாதிரி காலேஜ்ல பொறுக்கித்தனம் பன்றவங்கதான் வாத்தியார் ஆகிடறாங்க. நானும் வாத்தியார்தான்.

 என்ன இருந்தாலும் ஹீரோவ நம்பாம, தனியா ஒரு காமெடி டிராக் போடாம, பெருசா பாட்டையும் நம்பாம, அதுக்குனு நம்மளை அழ வைக்கற மாதிரி க்ளைமாக்ஸ் வைக்காம புதுசா ஒரு முயற்சிதானே இந்த படம், நாம ரசிக்காம வேற யாருங்க ரசிப்பா? படத்தை பாருங்க.


படத்தோட ட்ரெய்லர்மறக்காம உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க, பிடிச்சுருந்தா கீழ ஒரு ஓட்டை போடுங்க. ஏதாவது சொல்லனும்னு தோணுச்சுனா கருத்து தெரிவிங்க.

Saturday, 18 August 2012

படம்னா இது படம் THE TIME TRAVELERS WIFE - விமர்சனம்

அன்பர்களுக்க வணக்கம், எத்தனையோ நாவல்களை படமாக எடுத்து பார்த்திருக்கிறோம், அனைவரும் அறிந்த படங்களென்றால் ஹாரிபாட்டர், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், தமிழில் நண்பன், விக்ரம், கரையெல்லாம் செண்பகப்பூ என நாம் அறியாத படங்கள் பல இருக்கின்றன.

பொதுவாக பதிவர்கள் அறிமுகப்படுத்தும் படங்களை அவர்கள் விம்மர்சனம் படித்துவிட்டுத்தான் அப்படங்களை தரவிறக்கம் செய்து பார்ப்பேன், பெரும்பாலான ஹாலிவுட் படங்கள் நான் அவ்விதம் பார்த்ததுதான், சில நேரங்களில் எந்த அறிமுகமும் இல்லாமல் விக்கிபீடியாவில் எந்த வகையான படம் என்பதை மட்டும் பார்த்து தரவிறக்கம் செய்யும் பழக்கமும் உண்டு, அங்ஙனம் என்னையறியாமல் நான் பார்த்த ஒரு உலக சினிமா இப்படம் "THE TIME TRAVELERS WIFE"


படத்தின் தலைப்பே நமக்கு படம் எத்தகைய கதைக்களத்தை கொண்டது என அறிவிக்கிறது, 6 வயதில் தாயுடன் காரில் செல்லும் ஒரு சிறுவன் பெரும் விபத்து நடக்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கரைய துவங்குகிறான், 2 வாரங்களுக்கு முன்பாக அவன் வீட்டில் நடப்பதை அவனால் பார்க்க முடிகிறது. மீண்டும் விபத்து நடக்கும் இடத்திற்கு வந்து தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறான்.

அப்போது அவனை ஒரு இளைஞன் சந்தித்து எதிர்காலத்தில் இருந்து வருவதாகவும் அந்த சிறுவன் ஒரு டைம் ட்ராவலர் என்றும் கூறுகிறான், காலம் மாறுகிறது, எப்படி நடக்கிறது என தெரியாமல் காலவரையின்றி காலத்தை விட்டு இன்னொரு காலத்திற்கு அவன் பயணம் செய்து கொண்டே இருக்கிறான்.


அவ்வாறு செய்யும் போது அவன் உடல் மட்டுமே பயணிக்கும், அவன் அணிந்திருந்த உடை போகாது, எனவே புதிதாய் தோன்றும் இடத்தில் நிர்வாணமாகத்தான் இருப்பான், உடையை தேடி அலைய வேண்டிய கட்டாயம் இருக்கும். ஹீரோ ஒரு நூலகத்தில் வேலை பார்ப்பவன்.

ஒரு நாள் அங்கு வரும் ஒரு அழகிய பெண் அவனை சந்தித்து அவனை பற்றிய எல்லா விவரங்களையும் கூறி டின்னருக்கு அழைக்கிறாள், அங்கு ஏற்கனவே இருவரும் சந்தித்ததை கூறுகிறாள், அவளது சிறுவயதில் இருந்தே ஹீரோ எதிர்காலத்தில் இருந்து வந்து தன்னை சந்திப்பது பற்றி கூறுகிறாள்.

ஒரு அழகான நாளில் இருவருக்கும் திருமணம் ஏற்பாடாகிறது, திருமண நேரத்திற்கு சற்று முன்பாக ஹீரோ காலப்பயணம் மேற்கொண்டு விட, என்ன செய்வதென்று தெரியாமல் நண்பன் விழித்து கொண்டிருக்க எதிர்காலத்தில் இருந்து சற்று வயதான ஹீரோ வந்து திருமணம் செய்து கொள்வது கவிதை போல் இருந்தது.


அதே போல் முதல் இரவில் தன்னையறியாமல் காலப்பயணம் செய்து நாயகியின் சிறுவயதில் அவளை சந்தித்து, தான் யாரையோ கல்யாணம் செய்து கொண்டதாக சொல்லி வெறுப்பேற்றும் காட்சி காதல் கவிதை.

எப்படிபட்ட காதலும் கொஞ்ச நாளில் சண்டையை ஏற்படுத்தும்,  அதுவும் இது போல் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போகும் கணவனை உடைய பெண்ணின் நிலையை யோசித்து பாருங்கள். சண்டை வருகிறது, அம்மணி வேலைக்கு போக துவங்குகிறாள்.

எதிர்காலத்திற்கு சென்று வருக் நாயகன் ஒரு லாட்டரி டிக்கெட்டின் பரிசு நம்பரை கொண்டு வருவதன் மூலம் 5 மில்லியன் பரிசுத் தோகை கிடைக்கிறது. இருந்தும் ஒரு பெரும் குறை, எத்தனை முறை கருத்தரித்தாலும் கலைந்து போகிறது, சண்டை வருகிறது.

இப்படி ஒரு நாள் சண்டை போட்டு போகும் போது ஒரு சிறுமி இவர்களை சிரித்துக் கொண்டே பார்க்கிறாள், தன் மனைவிக்கு உடல் நலம் பாதிக்க பட கூடாது என்பதற்காக குடும்ப கட்டுபாடு செய்து கொள்கிறான், அந்த நாள்தான் கடந்த காலத்திற்கு சென்று முதன்முதலில் நாயகியை முத்தமிடுகிறான்.

இவ்வளவு நடந்தும் நாயகி கருத்தரிக்கிறாள், காரணம் இறந்த காலத்தில் இருந்து வரும் நாயகன். குழந்தை பிரச்சனையில்லாமல் பிறக்குமா என பயப்படும் நாயகன் எதிர்காலத்தில் தன் மகளை சந்தித்து அவள் பெயரையும் முடிவு செய்து கொள்கிறான், இன்னொரு ஆச்சர்யம் அவன் மகளும் ஒரு டைம் ட்ராவலர்.


சிவாஜி படத்தில் சொல்வது போல் "சாகிற நாள் தெரிஞ்சுட்டா வாழுற நாள் நரகமாய்டும்" என்பது போல் தன் மரணம் குறித்து தெரிந்து கொள்ளம் நாயகனின் நிலை, அவன் குடும்பத்தின் நிலை, எல்லாவற்றையும் மீறி அவர்களின் மனக் கஷ்டத்திற்கு அவ்வப்போது மருந்திடும் காலப்பயணம் என படம் உண்மையில் காதல் கவிதை.


புத்தகமாக வந்து வெற்றி பெற்ற கதையினை எவ்வளவு அழகாக படமெடுத்திருக்கிறார்கள்? உண்மையில் புத்தகமாக படிக்கும் போது எப்படி இருந்திருக்கும் என தோன்றுகிறது. உண்மையில் படத்தின் பாதிப்பு எனக்கு இரண்டு நாளாக இருக்கிறது. 

உலக சினிமாவினை ரசிப்பவர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம், முடிந்த வரை தனிமையிம் அல்லது காதலியுடன் பாருங்கள், உள்ளம் நெகிழ்வதை உங்களால் உணர முடியும்.

படத்தின் ட்ரெய்லர்மறக்காமல் உங்கல் கருத்துக்களை தெரிவுயுங்கள், இப்பதிவு பிடித்திருப்பின் ஓட்டளியுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Friday, 17 August 2012

ஏழை இந்துக்களுக்கான போராட்டம்

அன்பர்களுக்கு வணக்கம்,சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதுபோல் ஏழை இந்து மாணவ- மாணவிகளுக்கும் கல்வி உதவி தொகை வழங்க கோரி பாரதீய ஜனதா பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

Photo: சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதுபோல் ஏழை இந்து மாணவ- மாணவிகளுக்கும் கல்வி உதவி தொகை வழங்க கோரி பாரதீய ஜனதா பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்கள் தொடர் உண்ணா விரதம் இருக்கப்போவதாக பாரதீய ஜனதா தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் அறிவித்தார். சென்னையில் 3 நாள் உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து மறைமலை நகரில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு மறைமலை நகரில் பொன்.ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதம் தொடங்கினார்.

அகில இந்திய செயலாளர் முரளிதர்ராவ், இல.கணேசன் ஆகியோர் வாழ்த்தினார்கள். மாநில அமைப்பு செயலாளர் மோகன்ராஜுலு, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சரவணபெருமாள், வானதி சீனிவாசன், சுரேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதசுப்பிரமணியன், மாவட்ட தலைவர் கே.டி. ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதம் தொடங்கிய பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-

நாடு விடுதலையடைந்து 66 ஆண்டுகளில் சாதி, மதம், மொழி அடிப்படையில் மக்களை பிரித்து அரசியல் ஆதாயம் தேடி வருகிறது. இதை மக்கள் கவனிக்க தவறிவிட்டனர். இதனால் காங்கிரஸ் செய்யும் தவறு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத அடிப்படையில் கல்வி வழங்க கூடாது என்று அம்பேத்கார் அரசியல் சட்டத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் அரசு ஆட்சியை தக்க வைக்க சிறுபான்மை ஓட்டு வங்கி தேவை என்பதால் சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்துக்கள் ஓட்டுப்பகுதி, மொழி, சாதி அடிப்படையில் பிரிந்துவிடும் என்பதால் கண்டு கொள்வதில்லை. 2005-ல் சச்சார் கமிட்டியை அமைத்து அதன் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்கள் பராமரிப்பு, உணவு சலுகைகளுக்காக உதவி தொகை வழங்கி வருகிறது.

பா.ஜனதா உதவி தெகை வழங்குவதை குறை சொல்வதில்லை. ஓட்டு வங்கிக்காக குறிப்பிட்ட மதத்தவர்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்குவது மாணவர்கள் மத்தியில் பிரிவினைகளையும், மத மோதல்களையும் உருவாக் கும். அனைத்து மாணவர் களும் மதிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்கள் தொடர் உண்ணா விரதம் இருக்கப்போவதாக பாரதீய ஜனதா தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் அறிவித்தார். சென்னையில் 3 நாள் உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து மறைமலை நகரில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு மறைமலை நகரில் பொன்.ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதம் தொடங்கினார்.

அகில இந்திய செயலாளர் முரளிதர்ராவ், இல.கணேசன் ஆகியோர் வாழ்த்தினார்கள். மாநில அமைப்பு செயலாளர் மோகன்ராஜுலு, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சரவணபெருமாள், வானதி சீனிவாசன், சுரேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதசுப்பிரமணியன், மாவட்ட தலைவர் கே.டி. ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதம் தொடங்கிய பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-

நாடு விடுதலையடைந்து 66 ஆண்டுகளில் சாதி, மதம், மொழி அடிப்படையில் மக்களை பிரித்து அரசியல் ஆதாயம் தேடி வருகிறது. இதை மக்கள் கவனிக்க தவறிவிட்டனர். இதனால் காங்கிரஸ் செய்யும் தவறு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத அடிப்படையில் கல்வி வழங்க கூடாது என்று அம்பேத்கார் அரசியல் சட்டத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் அரசு ஆட்சியை தக்க வைக்க சிறுபான்மை ஓட்டு வங்கி தேவை என்பதால் சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்துக்கள் ஓட்டுப்பகுதி, மொழி, சாதி அடிப்படையில் பிரிந்துவிடும் என்பதால் கண்டு கொள்வதில்லை. 2005-ல் சச்சார் கமிட்டியை அமைத்து அதன் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்கள் பராமரிப்பு, உணவு சலுகைகளுக்காக உதவி தொகை வழங்கி வருகிறது.

பா.ஜனதா உதவி தெகை வழங்குவதை குறை சொல்வதில்லை. ஓட்டு வங்கிக்காக குறிப்பிட்ட மதத்தவர்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்குவது மாணவர்கள் மத்தியில் பிரிவினைகளையும், மத மோதல்களையும் உருவாக் கும். அனைத்து மாணவர் களும் மதிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது.

இவ்வாறு அவர் கூறினார்.
 
நன்றி: தமிழ் நாடு அரசியல்

இல்லத்தரசிகள் ஜாக்கிரதை!

அன்பர்களுக்கு வணக்கம், தொழில் நுட்பம் வளர வளர மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததோ இல்லையோ, பண்களின் பாதுகாப்பு குறைந்து கொண்டே வருகிறது, புதிதாய் வரும் கேமராக்களை பயன்படுத்தி பெண்களை துரத்தி துரத்தி வதைக்கிறார்கள், இதோ இதை படியுங்கள்.

Photo: பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!

ஆரோக்கியமான பெண்களால்தான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கமுடியும். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்தசோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். சரிவிகித சத்துள்ள உணவுகளை கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம். குடும்பத்தை பற்றிய சிந்தனையும், பணிச் சூழலும் பெண்களுக்கு தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. எனவே பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுகளை குடும்பத்தினர் வாங்கிக்கொடுக்கலாம். இந்த சுதந்திர நாளில் இருந்து ஊட்டச்சத்துள்ள உணவுகளை வாங்கி அவர்களுக்கு உண்ணக்கொடுங்களேன்.

கரோட்டினாய்டு உணவுகள்

பெண்கள் உண்ணும் உளவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறி பழங்களில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இந்த உணவுகளை உட்கொள்வதன் பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்.

ஒமேகா 3 உணவுகள்

பெண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய சால்மன், நெத்தலி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் மத்தி உள்ள அனைத்து வகை மீன்களையும் உட்கொள்ளலாம். மீன் தவிர, சோயாபீன்ஸ், வால்நட், பூசணி விதை, கனோலா எண்ணெய், ஆளிவிதை மற்றும் அதன் எண்ணெய் போன்றவற்றிலும் உள்ளது. இதன் மூலம், இதயநோய்கள், முடக்குவாதம் போன்றநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். வால் நட் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மார்பகப்புற்றநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.

அத்திப்பழம், பால்

அத்திப்பழம் எண்ணற்ற தாதுச் சத்துக்களையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அணுக்களை அதிகரிக்கிறது. இரும்புச்சத்து, கால்சியம் சத்து போன்ற சத்துக்கள் சரிவிகிதமாக கிடைக்கச் செய்கின்றன. எனவே வாரம் இருமுறையாவது அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதேபோல் பெண்கள் தினசரி இருவேளை பால் உட்கொள்ளவேண்டும். பாலில் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. வைட்டமின் டி சத்தும் தேவையான அளவு கிடைப்பதால் எலும்பு தேய்மான நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு ஏற்படுகிறது.

ஓட்ஸ், தக்காளி

ஓட்ஸ் உணவில் பெண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இதில் வைட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன. பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதோடு பிஎம்எஸ் எனப்படும் மாதவிடாய் கால சிக்கல்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
கீரைகளில் எண்ணற்ற வைட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் பெண்களுக்கு பி.எம்.எஸ் சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது. எனவே தினசரி உணவில் பெண்கள் கீரையை உட்கொள்ளவேண்டும்.
தக்காளியில் உள்ள லைகோபீன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இது மிகச்சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது. இது இதயநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. பெண்கள் அன்றாட உணவில் தக்காளியை அவசியம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

மதுரை, சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த மூன்று இல்லத்தரசிகள் சமீபத்தில் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்கள். அதன் பின்புலத்தை ஆராய்ந்தபோது ஊருக்கே அதிர்ச்சி. அந்த ஏரியாவில் டீக்கடை நடத்தி வரும் ஒருவனும், எலக்ட்ரீஷியனாக இருக்கும் அவனுடைய சகோதரனும் சேர்ந்து, அங்குள்ள வீடுகளில் பிளம்பிங் வேலை, எலக்ட்ரீஷியன் வேலை, கேபிள் போன்றவற்றுக்காக சென்று வருவது வழக்கம்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு பல வீடுகளின் பாத்ரூம்களில் மினியேச்சர் கேமராக்களை பொருத்தி, குளியல் காட்சிகளை வீடியோ பதிவு செய்து, அதேபகுதியைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கும் இந்த இருவரும் விற்றிருக்கிறார்கள். இது, சம்பந்தபட்ட பெண்களின் கவனத்துக்கு வந்துவிட, சிலர் தற்கொலை முயற்சியில் குதித்து, காப்பாற்றப்பட்டுள்ளனர். பலர், வீட்டைவிட்டு வெளியில் வராமல் மனஉளைச்சலோடு முடங்கிக் கிடக்கிறார்கள். கயவர்கள் இருவர் உட்பட மேலும் சில இளைஞர்களை கைது செய்திருக்கிறது போலீஸ்.

கிராமமோ... நகரமோ... கேபிள், தண்ணீர் கேன், கேஸ் சிலிண்டர், எலக்ட்ரீஷியன் என எந்த வேலையாக இருந்தாலும்... சம்பந்தபட்ட நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்கும்போது... வேலை முடியும் வரை அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது. முக்கியமாக வீட்டில் தனியாக இருக்கும்போது இப்படிப்பட்ட நபர்களை அனுமதிக்காமல்... குடும்பத்தினரில் சிலரும் இருக்கும்போது அனுமதிப்பதே சாலச்சிறந்தது. நன்கு தெரிந்தவர்... அறிமுகமானவர் என்றால்கூட, பலமடங்கு எச்சரிக்கை அவசியமே!

நன்றி: அவள் விகடன், உலக தமிழ் மக்கள் இயக்கம்

Thursday, 16 August 2012

சிம்புவின் CHENNAI ANTHEM

அன்பர்களுக்கு வணக்கம், ஏற்கனவே தனுஷின் கொலைவெறி வந்து ஹிட் ஆன காலகட்டத்தில் காதலுக்கென்று LOVE ANTHEM வெளியிட்டு தன் பக்கம் மக்களை திரும்ப செய்தவர் நடிகர் சிம்பு,


ஏற்கனவே இவரை பற்றிய கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை, தற்போது சத்தமில்லாமல் சென்னைக்கென "வந்தாரை வாழ வைக்கும் ஊரு" என ஆரம்பிக்கும் CHENNAI ANTHEM ஐ சத்தமில்லாமல் வெளியிட்டுள்ளார்.

அந்த பாடலை பார்க்க


பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

லஞ்சம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை

அவதி தரப்போகும் அடையாள அட்டை!

'ரயிலில், இரண்டாம் வகுப்பு பெட்டியில் (ரிசர்வ்) பயணம் செய்யும் பயணிகளும் இனி, அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்' என்ற விதியைக் கொண்டு வரப்போகிறது ரயில்வே துறை! புரோக்கர்கள் மூலமாக கள்ள மார்கெட்டில் டிக்கெட் விற்பதைத் தடுக்கவும்... தவறான நபர்கள் பயன் அடைவதைத் தடுக்கவும் இது பயன்படும் என்பது ரயில்வேயின் வாதம்.

Photo: அவதி தரப்போகும் அடையாள அட்டை! 

'ரயிலில், இரண்டாம் வகுப்பு பெட்டியில் (ரிசர்வ்) பயணம் செய்யும் பயணிகளும் இனி, அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்' என்ற விதியைக் கொண்டு வரப்போகிறது ரயில்வே துறை! புரோக்கர்கள் மூலமாக கள்ள மார்கெட்டில் டிக்கெட் விற்பதைத் தடுக்கவும்... தவறான நபர்கள் பயன் அடைவதைத் தடுக்கவும் இது பயன்படும் என்பது ரயில்வேயின் வாதம்.

ஆனால், இந்த விதியை நீட்டும்முன்பாக... நாட்டில் உள்ள எல்லா குடிமக்களுக்கும் அடையாள அட்டை கிடைத்துவிட்டதா என்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். 'வாக்காளர் அடையாள அட்டையை தமிழகத்தில் 100 சதவிகிதம் கொடுத்துவிட்டோம்' என்று சில மாதங்களுக்கு முன் மாநில தேர்தல் ஆணையம் கூறியது. உடனே இதற்கு மறுப்பு தெரிவித்த பழ.நெடுமாறன், 'தாம்பரம் பகுதியில் வசிக்கும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இதுவரை வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கவில்லை' என்று கூறினார். இதையடுத்து, இந்த வரிசையில் பலபேர் இருக்கிறோம் என்று ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக பலரும் பதிவு செய்தனர்.
அடுத்து 'ஆதார் அட்டை' என்ற ஒன்றை கொண்டு வந்தார்கள். ஆனால், இதைக் கொடுப்பதில் மத்தியில் உள்ள அரசியல்வாதிகளிடையே ஏற்பட்ட மோதலில்... இப்படியொரு அட்டை வருமா... வராதா என்பதே குழப்பமாக இருக்கிறது.

இப்படித்தான் ஒவ்வொரு அடையாள அட்டை விஷயத்திலும் ஆயிரத்தெட்ட ஓட்டைகள். அதையெல்லாம் அடைக்காமல் விதியை மட்டும் நீட்டினால்... வேலை தேடி வெளியூர்... வெளிமாநிலம் எனச் செல்லும் கிராமப்புற மக்கள், இதன் காரணமாக... ரயில்வே ஊழியர்களிடம் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதைத் தவிர, வேறு எதையும் இது சாதிக்காது!

ஆனால், இந்த விதியை நீட்டும்முன்பாக... நாட்டில் உள்ள எல்லா குடிமக்களுக்கும் அடையாள அட்டை கிடைத்துவிட்டதா என்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். 'வாக்காளர் அடையாள அட்டையை தமிழகத்தில் 100 சதவிகிதம் கொடுத்துவிட்டோம்' என்று சில மாதங்களுக்கு முன் மாநில தேர்தல் ஆணையம் கூறியது. உடனே இதற்கு மறுப்பு தெரிவித்த பழ.நெடுமாறன், 'தாம்பரம் பகுதியில் வசிக்கும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இதுவரை வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கவில்லை' என்று கூறினார். இதையடுத்து, இந்த வரிசையில் பலபேர் இருக்கிறோம் என்று ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக பலரும் பதிவு செய்தனர்.

அடுத்து 'ஆதார் அட்டை' என்ற ஒன்றை கொண்டு வந்தார்கள். ஆனால், இதைக் கொடுப்பதில் மத்தியில் உள்ள அரசியல்வாதிகளிடையே ஏற்பட்ட மோதலில்... இப்படியொரு அட்டை வருமா... வராதா என்பதே குழப்பமாக இருக்கிறது.

இப்படித்தான் ஒவ்வொரு அடையாள அட்டை விஷயத்திலும் ஆயிரத்தெட்டு ஓட்டைகள். அதையெல்லாம் அடைக்காமல் விதியை மட்டும் நீட்டினால்... வேலை தேடி வெளியூர்... வெளிமாநிலம் எனச் செல்லும் கிராமப்புற மக்கள், இதன் காரணமாக... ரயில்வே ஊழியர்களிடம் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதைத் தவிர, வேறு எதையும் இது சாதிக்காது!

நன்றி: விகடன்

லல்லு யாதவ்வின் கொள்ளு பேரன் - காலேஜ் டைரி 6

அன்பர்களுக்கு வணக்கம், என்னடா தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா இருக்கேன்னு பார்க்கறிங்களா? வெறுமனே தலைப்ப பார்த்துட்டு படிக்க ஆரம்பிச்சிங்கனா உங்களுக்கு சத்தியமா புரியாது. முதல் பதிவுல இருந்து படிச்சுட்டு வாங்க.

இன்னைக்கு நம்ம காலேஜ் டைரில பார்க்க போற ஆள் சாதாரணமானவர் இல்லை, அவருக்கு சென்ட்ரல் வரைக்கும் பவர் இருக்கு, அவர் கை காட்டுனா எக்ஸ்பிரஸ் ரயிலே நிக்கும்ங்க, அவ்வளவு ஏன்? நம்ம முன்னாள் ரயில்வே மந்திரி லல்லு பிரசாத் யாதவ்க்கு 24 விட்ட பேரான்டி.


நான் 2 வது செமஸ்டர் காலேஜ் போனதும் எனக்கு ஒரு கண்டம் வந்தது, சாதாரணமானது இல்லைங்க, கொஞ்சம் பெருசு, எங்க க்ளாஸ் இன்சார்ஜ் மானிக்க வேல் சார் 4 பேர் இருக்க மாதிரி குருப் ஃபார்ம் பன்னிக்க சொன்னார், நானும் எதுக்கும் வசதியா இருக்கட்டும்னு கடைசி பெஞ்ச்ல இருக்க நான், நிவாஸ், கைப்புள்ள, நம்ம லிட்டில் பாண்டுனு ஒரு குருப் ஃபார்ம் பன்னேன்.


கடைசியாதான் தெரிஞ்சது அவர் குருப் ஃபார்ம் பன்ன சொன்னது செமினார் எடுக்கறதுக்குனு, 4 பேர் சேர்ந்து எடுக்கனுமாம், எந்த டாபிக் வேணும்னாலும் எடுத்துக்கலாமாம், நிவாசும் கைப்புள்ளையும் அப்படி செமினார் எடுத்துதான் இந்த காலேஜ்ல படிக்கனும்னா எனக்கு இந்த காலெஜ் வேண்டாம்னு முடிவு எடுத்துட்டானுங்க, போறவனுங்க சும்மா இல்லாம எங்களை வேற மாட்டி விட பார்த்தாங்க.

கடைசி நாள் சம்பத் ஏதோ நெட்ல இருந்து HIGHER STUDIES IN ABROAD னு ஒரு பேப்பர் முழுக்க இங்கிலிஸ்ல இருக்க மாதிரி என்னமோ எடுத்து குடுத்தான், நானும் குல தெய்வத்து மேல பாரத்தை போட்டுட்டு ஸ்டேஜ் ஏறி அப்படியே அச்சு பிசறாம தப்பு தப்பா படிச்சேன், கடைசியா கவனிச்சுட்டு இருந்த மா.வேல் சார் ஒரு கேள்வி கேட்டார் பாருங்க.

"WHAT IS MEAN BY ABROAD? TELL ME SOME COURSES NAME?"னு

எனக்கு ஏதோ 2 உருண்டை அடி வயத்துலருந்து கழுத்துகிட்ட வர்ர மாதிரி இருந்தது, அதை அப்படியே முழுங்கிட்டு 

"ANY DOUT ASK MY PARTNER"னு

சொல்லிட்டு உட்கார்ந்தேன், அப்படி நான் பார்ட்னர்னு சொல்லி அறிமுகப் படுத்துன லிட்டில் பாண்டுவ அதுக்கு அப்புறம் கிளாஷ்ல பல பேர் பார்ட்னர்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க.

அவர் ஆரம்பத்துல கண்ணாடி போட்டு போட்டு எல்லா பொன்னுங்களும் வயசான மாதிரி ஆண்டியா அவர் கண்ணுக்கு தெரியறதா சொன்னவர் கடைசியில கண்ணாடிய கழட்டனதும் ஆண்டிங்களாம் பொன்னுங்க மாதிரி தெரியறதா சொல்ல ஆரம்பிச்சுட்டார். இவருக்கும் NANDI ங்கற வார்த்தைக்கும் ஏதோ ஒரு பெரிய ரகசிய தொடர்பு இருக்கு, அது இன்னமும் யாருக்கும் தெரியாத ஒரு தங்கமலை ரகசியம்.

நாங்க கடைசியா படிச்ச வருசத்துக்கு சிம்போசியம்க்கு காசு குடுக்காம ஏமாத்துன 4 பேர்ல இவர்தான் முதல் ஆள், கஷ்டபட்டு BOXER வண்டி வாங்கி ஓட்டக் கத்துகிட்டு பாக்ஸர் ஆகனும்னு ஆசைப்பட்டார், முடியலை. நான் பக்கத்துல உட்கார்ந்து தூங்கும் போது செவனேன்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்த கைப்புள்ளைய பளார்னு அறைஞ்சான்.

"ஏன்டா?"னு கேட்டதுக்கு "சும்மா டைம் பாஸ்க்கு"னு சொல்லி என் தூக்கத்தை தெளிய வைப்பான். நம்ம சிவில் கந்து வட்டிகாரனுக்கு வெள்ளிக்கிழமையான இவர்தான் பார்ட்னர், பயபுள்ளைங்க ஒரு டப்பிங் படத்தை கூட விடாம முதல் நாளே போய் பார்ப்பானுங்க.

கல்லறைத்தீவு, வெறி பிடித்த ஓநாய், மர்மக் காடுனு ஒரு படம் விடாம பார்ப்பானுங்க, பார்த்துட்டு வந்து கூசாம நல்லாருக்குனு பொய் சொல்லுவாங்க.

ஏதோ ஒரு டிபார்ட்மென்ட் ஃபங்சன் அப்போ, சிம்போசியம்னு நினைக்கறேன், அதுக்கு பணம் வசூழ் பண்ணி கஷ்டபட்டு வேலை செஞ்ச சஞ்சய்ங்கறவன் புதுசா ஒரு மொபைல் வாங்கிட்டு வந்துருந்தான், அதுக்கு அவன் காதுல விழற மாதிரி "எனக்கென்னமோ இவன் ஊழல் பண்ணி சம்பாதிச்சுருப்பான்னு தோணுது"னு சொல்லிட்டு நகர்ந்துட்டான்.

அந்த பக்கம் வந்த சம்பத் தான் அப்படி சொன்னான்னு அவன் கேங்க் சம்பத் கூட சண்டை போட்டுகிட்டு இருக்கு, பக்கத்துலயே உட்கார்ந்துகிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருந்தானே ஒழிய நான் தான் சொன்னேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலை. இந்த உண்மை இப்பதான் வெளிச்சதுக்கு வருது.


இவர் தினமும் 2 லிட்டர் பால் குடிப்பார், இவருக்கு பாண்டு பன்ற ஆ............ன் மிமிக்ரி நல்லா வரும், அதனாலேயே இவரை நாங்க செல்லமா லிட்டில் பாண்டுனு கூப்பிடுவோம்.

இவரை பத்தி எழுத சொல்லி 4 பக்கத்துக்கு மேட்டர் குடுத்தது இவர் உயிருக்கு உயிரா நம்பிகிட்டு இருந்த இவரோட பார்ட்னர் தான்னு சபையில தெரிவிச்சுக்கறங்க, அந்த பார்ட்னர் சொன்னதெல்லாம் எழுதுனா யாரும் பொன்னு குடுக்க மாட்டாங்கனு மறைச்சுட்டேன்.

ஏப்பா லல்லு, போன் பன்னா எடுக்க மாட்டேங்கறியாமே? ஏகப்பட்ட கம்ப்ளைன்ட்ப்பா உன் மேல?

அடுத்த பதிவு யாரை பத்தி போடலாம்னு நீங்களே சொல்லுங்க.

HOW TO TRAIN YOUR DRAGON - திரைவிமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாட்களுக்கு முன்பாகவே என் நண்பன் கண்ணன் இந்த படத்தை பற்றிக் கூறி பார்க்க சொல்லி இருந்தான், ஆனால் எனக்கு தான் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆகஸ்ட் 15 அன்று அரை நாள் கிடைத்ததில் இப்படத்தினை பார்த்தேன். 


அனிமேஷன் படங்கள் என்றாலே எனக்கு தனி பிரியம்தான், சரி வளவள்வென்று இழுக்காமல் படத்திற்கு வருவோம், இந்த படத்தில் வரும் மக்கள் தலையில் கொம்பு உடைய அணியினை அணிந்திருப்பார்கள். இவர்கள் தங்கி இருக்கும் கிராமத்தில் ஒரு பெரும் பிரச்சனை இருக்கிறது.


என்னவென்றால் இவர்களது உணவுகளையும் கால் நடைகளையும் கூட்டமாக வரும் டிராகன்கள் கொள்ளையடித்துக் கொண்டு போகின்றன, அக்கிராம மக்களும் அதன் தலைவரும் தங்களால் இயன்றதை செய்கின்றார்கள். வேகமாய் பறந்து வந்து நெருப்பை கக்கி திருடும் டிராகன்களை இவர்களால் தடுக்க முடிவதில்லை.


தலைவருக்கு ஒரு மகன், நோஞ்சான், அதிக எடையுள்ள பொருளை தூக்கக் கூட முடியாதவன், ஆனால் எதெச்சையாக அன்று இரவு யாரும் பார்க்க கூட முடியாத வேகத்தில் செல்லும் லைட் ஃபியுரி என்றழைக்கப்படும் டிராகனை தான் கண்டு பிடித்த இயந்திர வில்லில் வீழ்த்தி விடுகிறான்.

 அடுத்த நாள் அதனை தேடி பார்க்கும் பொழுதுதான் தான் தாக்கியதில் பின் இறக்கை அடிப் பட்டு முழுதாய் பறக்க முடியாமல் இருப்பது தெரிய வருகிறது, அதற்கு இரையிட்டு நட்புடன் பழகி அதற்கு செயற்கையாய் ஒரு இறகு தயாரிக்கிறான்.

 

இன்னொரு பக்கம் ஊர் தலைவர் படைகளுடன் டிராகன்களின் இருப்பிடத்தினை தேடி செல்கிறார், இடையில் மகனுக்கும் மற்ற சிறுவர்களுக்கும் டிராகன்களை அழிப்பது குறித்து பயிற்சியினை ஏற்பாடு செய்கிறார், 

ரகசியமாய் டிராகனுடன் பழகிய அனுபவத்தினை வைத்து எல்லா பயிற்சிகளிலும் ஹீரோ தேர்ச்சி அடைகிறான், ஆனால் தலைவர் முன்னிலையில் டிராகனை கொல்லும் போட்டியில் எக்கு தப்பாக மாட்டிக் கொள்ள ஹீரோவை காப்பாற்ற வரும் லைட் ஃபியுரி டிராகனை கிராம மக்கள் அடைத்து வைக்கின்றனர்.


அந்த டிராகனை பயன் படுத்தி ஒட்டு மொத்த இனத்தையும் அழிக்க படை புறப்படுகிறது, அவர்களுக்கு உதவ ஹீரோவும் டிராகன் படையுடன் வருகிறான், மலையளவு இருக்கும் டிராகனை எப்படி அழிக்கிறார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

கதை தெரிந்தாலும் டிராகன்களின் வடிவமைப்புக்காகவே பார்க்கலாம், குழந்தைகள் மட்டுமன்றி அனைவருக்கும் இப்படம் பிடிக்கும், சொல்ல மறந்து விட்டென், ஹீரோக்கு லிப் கிஸ் அடிக்கும் ஹீரோயினும் இந்த படத்தில் உண்டு, காணத் தவறாதிர்கள்.

படத்தின் ட்ரெய்லர்மறக்காமல் கீழுள்ள ஓட்டுப்பட்டையில் ஓட்டளிப்பதுடன் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Wednesday, 15 August 2012

கலைஞரையும் ஜெயலலிதாவையும் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்

அன்பர்களுக்கு வணக்கம், நாளுக்கு நாள் இணையத்தின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே போகிறது, அரசியல்வாதிகளை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்களை பற்றிய கேலிகளோ, கேள்விகளோ பத்திரிக்கையில் எழுதிவிட்டால் போதும், அவர்கள் உடனே அந்த பத்திரிக்கை அலுவலுகத்தை அடித்து நொறுக்குவது, எரிப்பது இல்லையேல் மான நஷ்ட வழக்கு போடுவது என அவர்களால் முடிந்த தொல்லையினை குடுப்பார்கள்.

ஆனால் இணையத்தில் அவர்களால் முடியாது, ஏனெனில் ஒவ்வொரு தகவலும் இணைய தளங்களில் வினாடி வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது, இதை தடுக்க யாராலும் முடியாது, இப்போதைய செய்தி என்னவென்றால் முதல்வர் ஜெயாலலிதா அவர்கள், முதல் அமைச்சரை தொடர்பு கொள்வதற்கென்று தனியாய் ஒரு இணைய தளம் துவங்கி, மக்களுடன் நேரடியாக தன்னை இணைத்துக் கொள்ள முயன்றுள்ளார், அதன் விவரங்கள்.

Chief Minister's Special Cell ,
Secretariat,
Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
http://cmcell.tn.gov.in/

Photo: Chief Minister's Special Cell ,
Secretariat,
Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
http://cmcell.tn.gov.in/ 

இன்னொரு பக்கம் கலைஞர் கருனா நிதி டிவிட்டர் மற்றும் ஃபேஸ் புக் வாயிலாக தன்னை இணைத்துக் கொண்டு அவரும் மக்களுடனான நேரடி தொடர்பில் இயங்க முடிவு செய்துள்ளார்.

 கலைஞரின் ட்விட்டர் கணக்கு : http://twitter.com/kalaignar89. கலைஞரை விமர்சிக்க விரும்புபவர்கள் இனி நேரடியாக செய்யலாம், பார்க்கலாம் இவர்களின் இணைய பிரவேசம் எதில் போய் முடிகிறதென்று?

எது எப்படி இருந்தாலும் தமிழ் சம்பிரதாயப்படி வருபவர்களை வரவேற்போம்.

தங்கள் வரவு நல்வரவாகுக.
 
 

வேஷம்

அன்பர்களுக்கு வணக்கம், இன்றைய தேதியில் ஒவ்வொருவரும் தங்களது சொந்த அடையாளங்களை தொலைத்து விட்டு வேலைக்காகவும், சம்பளத்திற்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் நாம் வேடமிட்டு வாழ்கிறோம். அதை விளக்கும் ஒரு சிறிய நகைச்சுவை சிறுகதை.

சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான்.

இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில்
இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்.
அவனும் ஒப்புக் கொண்டான்.
Photo: சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான்.

இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்.
அவனும் ஒப்புக் கொண்டான்.

சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.
பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது.
பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான்.

உடனே அந்தச் சிங்கம், முட்டாளே! வாயை மூடு. இப்படி நீ அலறினால் நாம் எல்லோரும் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னது......!!!


சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.
பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது.
பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான்.

உடனே அந்தச் சிங்கம், முட்டாளே! வாயை மூடு. இப்படி நீ அலறினால் நாம் எல்லோரும் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னது......!!!

பிக் பாக்கெட் ஹோம் மினிஸ்டர் ஆனா?-DARUVU - விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், எனக்கு என்னமோ தெரியலைங்க, தெலுங்கு படம் மேல ஒரு தனி பிரியம் இருக்கு, எதனாலனு தெரியலை, ஒரு வேளை அருந்ததி, மகதீரா, ஹேப்பி டேஸ், நான் ஈ, பிருந்தாவனம்னு ஏகப்பட்ட விதமா படம் வர்ரதாலோயோ என்னவோ போங்க, சரி இன்னைக்கு நாம பார்க்க போற படம் 'தருவு'.தெலுங்கு சிறுத்தை (விக்ரமார்குடு) பார்த்ததுல இருந்தே ரவி தேஜாவ எனக்கு பிடிக்கும். அந்த மனுசன் படம் எதுவும் அதிகம் சீரியஸ் ஆ இல்லாம காமெடிய மையமா வச்சே எடுப்பாங்க, அதை நம்பித்தான் எல்லா படமும் பார்க்கறேன். நம்ம வல்லத்தான் பதிவர் எழுதுன விமர்சனத்தை பார்த்துட்டு இந்த படம் பார்த்தேன்.

திரும்பவும் எமலோகத்தை சீனுக்குள்ள கொண்டு வர்ர கான்செப்ட், படம் ஆரம்பத்திலேயே வயசானதால தன் மகன் பிரபுக்கு எமன் பட்டம் குடுக்கற சீனியர் எமன் நம்ம பழைய '"எமனுக்கு எமன், அதிசிய பிறவி, எமதொங்கா" படக்கதையைலாம் சொல்லி எச்சரிக்கை பன்னிட்டுதான் போறார். ஆனா சித்ரகுப்தன் வேணும்னே லீவ் கிடைக்காத காண்டுல எமனை மாட்டி விடனும்னு திட்டம் போட்டு ரவி தேஜாவ சீக்கிரம் சாகடிக்க முடிவு பன்றார்.நம்ம ரவிதேஜா யார்னா ராஜீனு சென்னைல பெரிய 420. அப்படி என்ன ஏமாத்து வேலை பன்றார்னுலாம் காட்ட மாட்டாங்க, அது ஒரு அடையாளம் முடிஞ்சது பாட்டு, அடுத்து ஒளியறதுக்குனு ஒரு மண்டபத்துக்குள்ள நுழைஞ்சு நிச்சயதார்த்த பொன்னுகிட்ட ஐ லவ் யூ சொல்லிட்டு வந்துடறார்.ஹீரோயின் யார்னா நம்ம ஆடுகளம் டாப்சி தான். எப்படி எப்படியோ டான்ஸ் மாஸ்டரா வர்ர பிரேமானந்த் கூட காமெடி பன்னி லவ் ஒர்க் அவட் ஆகும்போதுதான் சித்ரகுப்தனோட திட்டபடி தப்பா ஹீரோவ எமலோகம் கூட்டிப் போயிடறாங்க. எமன் யார்னு சொல்லவே இல்லையே, நம்ம இளைய திலகம் பிரபு தான்.நம்ம அதிசிய பிறவி படத்துல வர்ர மாதிரியே இன்னொரு ஹீரோ செத்ததும் அவர் உடம்புக்குள்ள அனுப்பிடலாம்னு முடிவு பன்றாங்க, அது யார் உடம்புனா ஹைதராபாத் ஹோம் மினிஸ்டர் உடம்பு. அவர் கூடவே இருந்து கொள்ளையடிச்சவங்க ஆள் திருந்தனதும் போட்டு தள்ளிடறாங்க,ஒரு ரவுடி ஹோம் மினிஸ்டரான எவ்வளவு கலாட்டாவா இருக்கும். நேரா போய் லவ்வரை ஹெலிகாப்டர்ல கமாண்டோஸ் வச்சு தூக்கிட்டு வர்ரார். எங்க தப்பு நடந்தாலும் MMS அனுப்ப சொல்லி பிரச்சனைய தீர்த்து வைக்கறார். வில்லங்க சும்மா இருப்பாய்ங்களா? அவங்களுக்கு தெரிஞ்சதலாம் பன்னி ஹீரோவ போட்டு தள்ள பார்க்கறாங்க.

இதுலருந்துலாம் எப்படி ஹீரோ தப்பிக்கிறார்னு பாருங்க. படத்தை தெலுங்குலதான் பார்த்தேன். எனக்கு பிடிச்ச வசனம்.
"எனக்கு அந்த பொன்னு வேணும்"
"கிடைக்காது"
"ஏன் அவ சி எம் பொன்னா? இல்லை பி எம் பொன்னா?"
"இல்லை கல்யாண பொன்னு"

படம் வழக்கமான மசாலா படம், இயக்குனர் ஹீரோவையும் காமெடியையும் நம்பி படம் எடுத்துருக்கார். ரவி தேஜாவும் தன்னால முடிஞ்ச வரைக்கும் படத்தை தாங்கறார். பாட்டு எல்லாமே விஜய் ஆன்டனி தமிழ்ல போட்டதுதான், தெலுங்குல நல்லாதான் இருக்கு, பாருங்க.

படத்தோட ட்ரெய்லர்மறக்காம் உங்க கருத்துக்களை தெரிவிங்க, பிடிச்சுருந்தா கீழ இருக்கு ஓட்டுப்பட்டைல ஓட்டு போடுங்க. நண்பர்கள் கிட்ட பகிர்ந்துக்குங்க.