- மழைச்சாரல்: May 2014
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Friday, 9 May 2014

யாமிருக்க பயமே - Tamil Horror Comedy Film

அன்பர்களுக்கு வணக்கம், தமிழில் முதல் முறையாக வந்திருக்கும் Horror-Comedy படம், தமிழ் சினிமாவில் புதிய வகை படங்களை ரசிப்பவர்களுக்கு கண்டிப்பாக இப்படம் பிடிக்கும். படத்திற்குள் செல்வோம். 

 

கிருஷ்னா, ரூபா மஞ்சரி காதலர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள், ஊர் முழுக்க ஏமாற்றிவிட்டு தன் தந்தையிடம் இருந்து வந்திருக்கும் பாரம்பரிய சொத்தை பார்க்க கிளம்பி சென்றவர்களுக்கு பாழடைந்த பங்களா பலத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஆனால் ஊர் முழுக்க கடன்காரர்கள் தொல்லை, தப்பிக்க வேறு வழியில்லாமல் பெரிதாக ஏமாற்றி கிடைக்கும் பணத்தை வைத்து அந்த பங்களாவை சீராக்குகிறார்கள்.

இதற்கு உதவியாய் கருனாகரன் (அருமை நாயகம்-சூது கவ்வும்), அவனது தங்கை ஓவியா, எல்லாரும் சேர்ந்து குளுகுளு ரெஸ்டாரண்ட்டினை ஆரம்பிக்கிறார்கள், அதன்பின் தான் திகில் ஆரம்பிக்கிறது, அங்கே தங்க வருகின்ற ஒவ்வொருவராய் இறக்கிறார்கள்.


எதற்காக இறக்கிறார்கள் என்று எல்லோருக்கும் குழப்பம், எல்லோரும் சரத்(கருனாகரன்) தினை சந்தேகிக்கின்றனர், அதற்கேற்றார் போல் எல்லோரும் சரத்தை பார்த்தவுடன் சொல்வது "உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?", சரத் கண்ணாடியை பார்க்க பயப்படுவது, சரத் சொல்வது எல்லாம் நடப்பது போன்ற பல விஷயங்கள்
 

எதற்கும் சோதித்து பார்ப்போம் என்று ஓவியாவே தங்க வந்தவர்களை போல் வந்து சோதித்து பார்க்கையில் அவர் இறப்பதில்லை, ஆனால் அந்த நேரத்தில் தான் உண்மையான பேய் வருகிறது.

முதல் பாதி கொஞ்சம் இழுத்தாலும் நிறைய இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள், இரண்டாம் பாதி பேய் வந்தவுடன் நமக்கு சிரிப்புடன் திகிலும் வர ஆரம்பிக்கிறது.

யாரிடமும் படத்தை பற்றி எதுவும் கேட்காமல் முதல் நாள் போய் படம் பார்த்தது நான் செய்த நல்ல விஷயம், பல குறும்படங்கள்/ஹாலிவுட் படங்கள் பார்த்தவர்களுக்கு எளிதாய் திரைக்கதையில் அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடியும்.


படத்திற்கு செலவு ரொம்ப கம்மி, ஒரே பங்களாக்குள் முடித்து விட்டார்கள், கதாபாத்திரங்களும் குறைவு, ஓவியாவும் ரூபாவும் முடிந்த வரை காட்டு காட்டு என காட்டிருக்கிறார்கள், இரண்டாம் பாதியில் மயில்சாமி வந்த பின் ஆட்டம் இன்னும் களை கட்டுகிறது.

ஆவியாக வரும் பெண்  மஞ்சள் புடவையில் செமயாதான் இருக்காங்க.

PIZZA, CONJURING க்கு அப்புறம் கையை வச்சு கண்ணை மறைச்சுகிட்டு பார்த்த படம்....
இதற்குதான் ஆசைப்பட்டாய் பாலகுமாராவுக்கு பின் நிரம்ப சிரித்த படம்...

படத்தின் ட்ரெய்லர்




நல்ல முயற்சியை முடிந்த வரை ஊக்குவிப்போம்....