- மழைச்சாரல்: June 2012
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Saturday, 30 June 2012

சோனா கல்லூரிக்கு வந்த கெட்ட காலம்- காலேஜ் டைரி பாகம் 1

அன்பர்களுக்கு வணக்கம், ஏதேதோ தோன்றுவதை எழுதிக் கொண்டிருந்தேன், பின்பு மற்றவர்களை பார்த்து விமர்சனம் எழுத துவங்கினேன். விமர்சனம் எழுதினால் அந்தந்த காலங்களில் மட்டுமே வாசகர்கள் கிடைப்பார்கள். எல்லா சமயங்களிலும் அனைவராலும் படிக்க விரும்பகூடிய பதிவுகள் எழுத முயற்சி செய்கிறேன். இதோ முதல் முயற்சி என் கல்லூரி அனுபவங்கள் என் நடையில் உங்களுக்காக.

இந்த பதிவில் என் சுயபுராணம் அதிகம் வராமல் நிகழ்வுகளையே ரசிக்கும் விதத்தில் சொல்ல விரும்புகிறேன். எங்கயாவது என் பெருமைய பெருசா பேசுனா உடனே கமெண்ட் போட்டு என்னை ஆஃப் பன்னிருங்க.

கதை எங்க இருந்து ஆரம்பிக்குதுனா எனக்கு SSLC ரிசல்ட் வந்த நாள்ள இருந்து, ஏன்னா தெரியாத்தனமா எனக்கு யாரோ 400 க்கு மேல மார்க் போடவும் என்னை கொண்டு போய் அந்தியுர் ஐடியல் ஸ்கூல்ல சேர்த்துனாங்க, நான் படிக்கறப்ப என் கூட படிச்ச எல்லாருக்கும் ஒரே ஒரு லட்சியம் தான். டாக்டராகனும்னு, அஃப்கோர்ஸ், எனக்கும்தான். ஆனா +2 பரிட்சை நெருங்கறப்ப எனக்கு தெரிஞ்சு போச்சு, நமக்கு எந்த மெடிக்கல் காலேஜ்லயும் சீட் தர மாட்டாங்கனு. 

நம்ம ஊர்ல படிப்புனா 2 தான், ஒன்னு டாக்டர், இன்னோன்னு இஞ்சினியர். சரி ஏதோ ஒரு இஞ்சினியரிங் காலேஜ் சேரப் போறமே, நம்ம ஊர் பக்கத்துலயே சேருவோம்னு ஐடியல்ல என் கூட படிச்சுட்டு இருந்த சேலம்லருந்து வர முரளிங்கற பையன்கிட்ட "சேலம்ல என்னென்ன இஞ்சினியரிங் காலேஜ் இருக்குனு சொல்றா"னு கேட்டேன்.


அவன் ஒரு அப்பாவி. "டேய் எனக்கு ஒரு காலேஜ் பேர்தான்டா தெரியும். எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்து ஒரு அக்கா சோனா காலேஜ்னு ஒரு காலேஜ்ல படிச்சாங்கடா, நல்லா பேசுவாங்கடா, 3வது வருசம் படிக்கும் போது ஓடிப்போய் கல்யாணம் பன்னிகிட்டாங்கடா"னு சொன்னான். உடனே என் முகத்துல பல்ப் எரிஞ்சது. ஏன்னு கேட்கறிங்களா?

ஐடியல் ஸ்கூல்ல படிச்ச பசங்களை கேட்டு பாருங்க தெரியும். பொன்னுங்களை பார்த்தா பசங்க ஓடிப் போயிடனுங்கறதுதான் முதல் ரூல். நான் படிச்ச க்ளாஸ்ல பொன்னுங்க இருந்தாலும் பேசக் கூடாது. சரி நிறைய பொன்னுங்க இருக்க காலேஜ்ல சேரலாம்னு சோனா காலேஜ் அ நோட் பன்னி வச்சுகிட்டேன். 

அப்புறம் சென்னைக்கு அண்ணா யுனிவர்சிட்டிக்கு கவுன்சிலிங்க்கு எங்க அக்கா, மாமா, 2 அண்ணங்களோட போனேன். ஒருத்தர்தான் கூட உள்ள போகனும்னு சொன்னாங்க. அக்காவ கூட்டிப் போனேன். 
 
நல்லா அழகா ஒரு மேடம் சுடிதார் போட்டு உட்கார்ந்துருந்தாங்க. என் கண்ணுக்கு சுடிதார் புதுசுல்ல. சுடிதார் கரெக்ட்டா ஃபிட் ஆகுற பொன்னுங்க புதுசு.அவங்க கவுன்சிலிங்க ஆரம்பிச்சாங்க.

"எந்த டிஸ்ட்ரிக்ட் லருந்து வரிங்க?

"சேலம்" அக்காதான் சொன்னாங்க. நல்லவேளை நான் மேட்டூர்னு சொல்ல வந்தேன். அது தாலுக்காவாம்.

"எந்த டிஸ்டிரிக்ட்ல காலேஜ் பார்க்கறிங்க"

உடனே "சேலம்"னு முந்திகிட்டேன்.

அவங்க கம்பியுட்டர்ல என்னென்னமோ பன்னி சேலம்ல இருக்க காலேஜ் லிஸ்ட் அ காட்டுனாங்க, நான் சோனாவ தேடுனேன். என் விரல் தானா சோனாவ நோக்கி நீண்டு "இந்த காலேஜ்தான்"னு சொன்னேன்.

மறுபடியும் ஏதோ கீபோர்ட்ல தட்டுனாங்க. என்னென்ன சீட் இருக்குனு வந்தது.

EEE          IT        CIVIL
 4           2          1

சத்தியமா எனக்கு அப்ப IT,EEEனா என்னன்னே தெரியாது, அக்கா சிவில் படிக்கறதால நானும் சிவில் படிக்க ஆசைப்பட்டு சிவில் எடுத்துக்கறன்னு சொன்னேன். என் சாதிக்கோட்டால எனக்கு முன்னாடி 8 பேர் இருந்தாங்க. காக்க ஆரம்பிச்சேன். கவுன்ட் டவுன் குறைஞ்சுகிட்டே வந்தது.

8,7,6......................5..........4..........3.........2................1

"உங்களுக்கு சீட் கன்ஃபார்ம்"னு அந்த மேடம் கைக் குடுத்தாங்க. நான் சிரிச்சுகிட்டே கை குடுத்தேன். "சீட் கிடைச்சதுமே ஆரம்பிச்சுருச்சே"னு சந்தோச பட்டேன்.

எங்கக்கா என் மைண்ட் வாய்ஸ் அ கேட்ச் பன்னிட்டாங்க போல.
"பல்லை காட்டாத எழுந்து வா"னு கூட்டி போனாங்க.
அன்னைக்கு சோனாக்கு 4 வருசம் பிடிக்க போற 7.5 சனி SETC பஸ்ல சந்தோசமா கன்னை மூடி தூங்காம கற்பனை பன்னிகிட்டு வந்துகிட்டு இருக்குங்கறதை யாரும் தெரிஞ்சுக்காம விட்டுட்டாங்க.

இன்னோரு விசயம். எப்படி பொன்னுங்களோட பேசி கடலை போடலாம்னு ஜாலியா கற்பனை பன்னிகிட்டு இருந்த எனக்கு, அதை கெடுக்கறதுக்குனே இன்னொரு சனி சோனால சீட் வாங்கிட்டு வந்துகிட்டு இருக்குங்கறது தெரியாம போச்சு. அந்த ஜீவன் யாருங்கறத அடுத்த பதிவுல சொல்றன்.

மறக்காம கமென்ட் அ போடுங்க.

Thursday, 28 June 2012

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- இறுதி பதிவு

அன்பர்களுக்கு வணக்கம், இத்துடன் இந்த பதிவுத் தொடர் முடிவடைகிறது. ஏதோ ஒரு நாள் கோபத்தில் யாரையாவது திட்ட வேண்டும் போல் இருந்த பொழுது எழுத ஆரம்பித்தேன். முதல் பதிவு தலைப்புக்கென்றே நிறைய ரசிகர்களை பெற்றது. அதன் தாக்கமே அடுத்த பதிவிற்கும் நிறைய ஓட்டு கிடைத்தது.


ஒரு கட்டத்தில் கோபமே இல்லாத நேரத்தில் ஏதோ எழுதுகிறோம் என்ற தலைக்கணத்தில் எழுதிய மூன்றாம் பதிவு யாராலும் ரசிக்கக் கூடியதாய் முடிந்து விட்டது. இந்த நிலையில் இத்தொடரினை முடித்துக் கொள்வதே கெளரவம். இந்த பதிவில் நான் யாரையும் திட்ட்ப் போவதில்லை. தலைப்பிற்கான காரணத்தை மட்டுமே எழுத போகிறேன்.
என்னை சுற்றிலும் ஏராளமான அல்டாப் ஆண்ட்டிகள், அவர்களை பற்றி முதல் மூன்று பதிவில் நிறைய எழுதி விட்டேன். படிக்காதவர்கள் படித்து விட்டு தொடருங்கள்.

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- முதல் பாகம்

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- இரண்டாம் பதிவு

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- மூன்றாம் பதிவு

ஒவ்வொருவரின் செய்கையும் என்னை மிகவும் எரிச்சலடைய செய்யும். ஏதாவது வேலையாக இருக்கும் பொழுது இவர்களது மினுக்கல்களை பார்த்து வெறுப்பாகி வேலையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, கொஞ்ச நேர ஆசுவாசத்திற்கு பின் தொடர்ந்த அனுபவம் எனக்கு நிறைய உண்டு.
இரண்டு வருடங்கள் ஆனாலும் எனக்கு இந்த அல்டாப்புகள் மேலான கோபம் கொஞ்சமும் குறையவில்லை. ஒருவேளை நாளுக்கு நாள் அவர்களது ஆட்டம் அதிகமாகிக் கொண்டே போவது காரணமாய் இருக்கலாம். ஆனால் எனக்கு முன்பிலிருந்தே இந்த கொடுமைகளை பார்த்துக் கொண்டு அமைதியாய் இருப்பவர்கள் இங்கு அதிகம்.
அவர்களை இவர்களின் மினுக்கல்கள் பெரிதாய் பாதிக்காதது எனக்கு பல நேரங்களில் ஆச்சரியங்களை தந்தது உண்டு. அவர்கள் என்னை விட வயதில் மூத்தவர்கள் என்றாலும் அனைவரும் திருமணமானவர்கள் என்பது குறிப்படத்தக்கது.
அவர்களுடனான தேநீர் வேளையில் எனக்கு அல்டாப்புகளால் வரும் கோபதாபங்களை பற்றி குறிப்பிடும் பொழுது அனைவரும் என்னிடம் தெரிவித்த ஒருமித்த கருத்து இதுதான்.
"உனக்கு இவங்களைலாம் பார்க்க நேரமிருக்கு, பார்த்தாலும் இதெல்லாம் நோட் பன்னி கோபப்படற அளவுக்கு உனக்கு மனசுல வேற எந்த பிரச்சனையும் இல்லாம ரிலாக்ஸ் ஆ இருக்க. அதுவும் இல்லாம எப்பப் பார்த்தாலும் அதிகம் காரம் இருக்க சாப்பாடா ரசிச்சு சாப்புடற, காரம் அதிகம் சாப்பிட்டா எரிச்சல் அதிகமா வரும், சின்ன விசயத்துக்கலாம் கோபம் அதிகமா வரும். இதை தவிர்க்கனும்னா ஒரே வழி பேசாம கல்யாணம் பன்னிக்க"

"கல்யாணத்துக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம்?"
"முதல்ல கல்யாணம் ஆச்சுன்னா கொஞ்ச நாள் உனக்கு யார் மேலயும் கோபம் வராது, அப்புறம் போகப் போக நீ கோபப்பட்டா உனக்குதான் நஷ்டம்ங்கறதை உன் மனைவி புரிய வைப்பா, சாப்பாட்டுல உப்பு, காரம் போட்டாதானே உனக்கு கோபம் வரும்னு அதெல்லாம் தானா குறையும். போகப் போக உன்னை முகத்துக்கு நேரா திட்டுனா கூட கோபம் வராத அளவுக்கு பழகிடுவ, அப்புறம் எங்கே மத்த பொன்னுங்களை பார்த்து கோபம் வரப் போகுது"
இந்த அரைக் கிழவிங்க பன்ற அல்டாப்புலாம் பார்த்து கோபப் பட்டு என் உடம்பை கெடுத்துக்கறதை விட, இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்.

வந்தது வந்தீங்க, அப்படியே கமெண்ட் அ போட்டுட்டு மறக்காம உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.

Wednesday, 27 June 2012

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- கடுப்பு பாகம் 3

அன்பர்களுக்கு வணக்கம், உங்களுக்குனு வாழ்க்கைல ஆயிரம் பிரச்சனை இருக்கும் போதும் என் புலம்பலை முழுசா கேட்டதோட இல்லாம அதுக்கு கமெண்ட் போட்டு உற்சாகப்படுத்தற உங்களுக்கு ஒரு நன்றிய சொல்லிக்கறேன்.
இந்த பதிவோட முதல் 2 பாகங்களை படிக்காதவங்க முதல்ல அதை படிச்சுட்டு வந்துருங்க.என்ன படிச்சுட்டிங்களா? நான் எதை பத்தி புலம்பிட்டு இருக்கேன்னு புரிஞ்சுருக்குமே, சரி விசயத்துக்கு வருவோம். நான் இது மாதிரி என் கூட வேலை பார்க்கற அல்டாப்ஸ் பத்தி எழுதறத படிச்ச என் சக ஊழியர்கள் தனித்தனியா ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம வந்து என்னை பார்த்து அவங்க அனுபவங்களை சொல்லி அதையும் எழுத சொன்னாங்க. அவங்க பேர் வெளிய வரக் கூடாதுனும் சொன்னாங்க, ஏதோ இந்த அளவுக்காவது சொல்றாங்களேனு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான். ஆச்சர்யம் என்னன்னா சில பெண்களும் வந்து சொன்னதுதான்.

சரி கேள்விய ஆரம்பிப்போம். பொன்னுங்க புடவை எதுக்கு கட்டறாங்க? அதுல என்ன ஸ்டைல்? கட்டும் போது அவங்களுக்கு பிடிச்ச ஸ்டைல்ல கட்டட்டும், கட்டுனதுக்கு அப்புறம் முந்தானைய கைல போட்டு சுத்திகிட்டு எதுக்கு நடக்கனும்? பார்க்க ஒரு பாண்டியராஜன் படத்துல ஜனகராஜ் கை நடுக்கத்தை கன்ட்ரோல் பன்ன கைய துண்டால கட்டிகிட்டு சரக்கடிக்கற மாதிரி இருக்கும். கேட்டா மேனரிசம்னு அள்ளி விடறது?
சரி தொலையட்டும், போடறது கடலை, அதை யார் கூட போட்டா என்ன? என்ன ஜாதினு விசாரிச்சுகிட்டுதான் போடனுமா? வேற ஜாதிக்கார பசங்ககிட்ட பேசுனா உன் புருசன் கோவிச்சுக்குவானா? கேட்கவே வேடிக்கையா இல்லை. இந்த ஆன்ட்டிங்களை மட்டும் தப்பு சொல்ல கூடாது. அடுத்தவன் பொன்டாட்டினு தெரிஞ்சும் பஸ்ல புட்போர்ட்ல தொங்கற மாதிரி ஜன்னல் கம்பிய பிடிச்சுகிட்டு தொங்கி தொங்கி கடலை போடற நம்ம பசங்களை சொல்லனும்? கேட்டா கூசாம அக்கானு சொல்றாங்க, அக்காகிட்டையாடா அப்படி பேசுவிங்க?

சராசரியா 30 வயசுக்குள்ள இருக்க பொன்னுனு ஈசியா கண்டுபிடிக்கலாம், எப்படி போடற ட்ரெஸ், உடல்வாகு. ஆனா சிலருக்கு பாவம் சின்ன வயசுலயே 30 வயசுக்கு மேல இருக்க உடல்வாகு வந்துரும், அவங்கள புடவைல தவிர வேற துணில பார்க்க முடியாது, நான் சில தடவை அவங்களை பார்த்து இரக்க பட்டதுண்டு "எப்படித்தான் கல்யாணம் ஆகப்போகுதோ? வர மாப்பிள்ளை வெய்ட் கூட கூட பவுனோட எண்ணிக்கையையும் ஏத்துவானே"னுலாம் கவலைப் பட்டுருக்கேன்.

ஆனா இப்ப எனக்கு அந்த மாதிரி இருக்கவங்களை பார்த்தாலே கோபம் வர அளவுக்கு ஒருத்தி பன்னிட்டா, லேடிஸ்  நீங்களே சொல்லுங்க, அடுத்தவளை லவ் பன்ற பையன்கிட்ட உங்களுக்கு என்ன கடலை வேண்டி கிடக்கு? கேட்டா நட்புனு சொல்றது, நைட் 11 க்கு போன் பேசி, யாருக்கும் தெரியாம படத்துக்கு போய் கார்னர் சீட்லதான் உங்க நட்ப வளர்த்துனுமா? இதெல்லாம் தப்புனு நான் சொல்ல மாட்டேன், ஏன்னா நான் இதெல்லாம் செஞ்சுருக்கேன், என் லவ்வரோட, அப்படி உன்னால உண்மைய சொல்ல முடியாது, ஏன்னா விசயம் அவன் லவ்வருக்கு போயிரும்னு பயம். படிக்கறவங்களுக்கு குழப்பமா இருக்கா? இருக்கும், என்னால தெளிவா சொல்ல முடியலைங்க. சில நல்ல பொன்னுங்க பேரும் வெளிய வந்துரும்னு பார்க்கறேன்.


 இந்த அளவுக்கு இருக்க பொன்னு அடுத்தவங்களை கிண்டல் பன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்?


இப்ப நீங்க நடந்து போறிங்க. 2 பொன்னுங்க நார்மலா பேசிட்டு இருக்காங்க. நீங்க க்ராஸ் பன்னும் போது மட்டும் எப்ப பார்த்தாலும் சத்தமா சிரிச்சா உங்களுக்கு எப்படி இருக்கும்? என்னை பார்த்து சிரிக்கலை, எனக்கு நெருக்கமான நண்பர் ஒருத்தரை இப்படியே 2 பொன்னுங்க வெறுப்பேத்திருக்காங்க, அவருக்கா ஒரு ஆணா இருந்துட்டு பொன்னுங்களை பத்தி புகார் குடுக்க சங்கடம், என்கிட்ட சொன்னார், அப்போலருந்து நாங்க கொஞ்சம் பேர் அந்த 2 பேரையும் கைகாட்டி சிரிக்க ஆரம்பிச்சோம். ப்ராப்ளம் சால்வ்ட்.


 இன்னமும் நல்ல பொன்னுன்னு நம்பி சில பேர் ஏமாந்துகிட்டு இருக்காங்க

இன்னொருத்தி இருக்கா. ஒரு பையன்கிட்ட நல்லா பழகி எல்லாத்தையும் கறந்து கழட்டி விட்டவேட்டி அவனை மறக்க முடியலைங்கற சோகத்தை பகிர்ந்துக்கறன்னே அடுத்த பையன்கிட்ட பிட் அ போடுவா, அவளால இது வரைக்கும் எங்க கேம்பஸ்ல பாதிக்க பட்டு எங்கிட்ட ரகசியமா சொன்னவங்க 4 பேர், சொல்லாம லிஸ்ட்ல இன்னும் எத்தனை பேர் இருக்காங்களோ? அவ அடையாளம் தினம் மல்லிகைப்பூ.

இவ்வளவு தூரம் நான் எழுதனதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு போன பதிவுல பின்னூட்டத்துல கேட்டவங்களுக்கு சொல்றேன். சம்பந்தம் என்னனு சொன்னா இந்த பதிவு முடிக்க வேண்டியது வரும். முடிக்க சொல்லி சொல்றதுனா சொல்லுங்க சம்பந்தம் என்னனு சொல்றேன். அவசரமில்லை கடைசியா சொல்லுங்க பதிவ கன்டினுயு பன்னுங்கனா நான் திட்ட வேண்டிய அல்டாப் ஆன்ட்டிங்க இன்னும் பாக்கி இருக்காங்க. அவங்களை முடிச்சுட்டு சொல்றேன்.

இப்பதிவில் வரும் அனைத்து படங்களும் கூகுள் இமேஜில் இருந்து எடுக்கப் பட்டவை, ஆனால் நான் குறிப்பிடுவர்களுடன் 75% அப்படியே பொருந்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வந்ததும் வந்தீங்க,அப்படியே மறக்காம கமெண்ட் அ போட்டு போங்க.

Monday, 25 June 2012

காதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு- தொ(ல்)லை/குறும்படம்

அன்பர்களுக்கு வணக்கம், எப்பொழுதும் என் விருப்பம் குறும்படம் தான். கதையே இல்லாமல் இரண்டரை மணி நேரம் சினிமா எடுக்கிறார்கள், ஆனால் தான் சொல்ல வேண்டிய விசயத்தை 15 நிமிடங்களுக்குள் சொல்ல எவ்வளவோ உழைக்கும் இந்த குறும்பட இயக்குனர்களுக்கு ஒரு பாராட்டை தெரிவித்துக் கொண்டு நாம் பதிவிற்கு செல்வோம்.
தொ(ல்)லை- இந்த வார்த்தைக்கான அர்த்தம் எத்தனை பேருக்கு புரியுதோ இல்லையோ டார்ச்சர்னு தூய தமிழ்ல சொன்னா எல்லாருக்கும் புரியும்னு நினைக்கறேன். அதே மாதிரி இந்த டார்ச்சர லவ் பன்னாதவங்களால முழுசா புரிஞ்சுக்க முடியாது. காதல் இன்பமானது, எல்லா பிரச்சனையையும் மறக்கவைக்க கூடியதுங்கறது உண்மைதான். ஆனா அந்த நல்ல காதல் எல்லோருக்கும் கிடைக்கறது இல்லை, அதிகமா சண்டை மட்டுமே போடற காதல் தான் இப்ப பரவி கிடக்கு.
அந்த மாதிரி சந்தேக படற, சண்டை மட்டுமே போடற சாவடிக்கற காதலால் பாதிக்க பட்டவந்தான் கதையோட ஹீரோ. அவன் எப்படி எப்படிலாம் அவன் ஆள்கிட்ட போன்ல பாட்டு வாங்கறாங்கறதை சீன் பை சீனா காட்டராங்க. அந்த சாங் கொஞ்சம் அதிகம் தான், இட்ஸ் ஓகே.

எல்லாத்தையும் வெறுத்து தற்கொலை பன்னிக்க போற நம்ம ஹீரோவ அப்ப கூட போன போட்டு சந்தேகப்பட்டு சாவடிக்கற காதலிகிட்டருந்து தப்பிக்க ஹீரோ ஒரு முடிவெடுக்கறார், அது என்னங்கறதை படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க, ஒரு 15 நிமிசம் தானே, படத்தை பார்த்துருங்க.

மறக்காம கமெண்ட் அ போட்டுருங்க.


Saturday, 23 June 2012

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2

அன்பர்களுக்கு வணக்கம், என்னோட முதல் புலம்பலை படிக்காதவங்க தயவு செஞ்சு படிச்சுருங்க. இல்லைனா ஒரு கன்டினுயுட்டி மிஸ் ஆகும்.


 படிச்சுட்டிங்கனா நான் எதை பத்தி பேசறேங்கறது உங்களுக்கு நல்லா புரியும். என்னோட புலம்பல் ஒட்டு மொத்த பெண்கள் சமுதாயத்தை குறிப்பிடறதா தப்பா நினைக்க வேண்டாம். என் வாழ்க்கைல தினசரி எதிர்படற, பார்க்கும் போதுலாம் ஒரு 2 செகன்ட் கண்ணை மூடி "முடியலைடா சாமி"னு சொல்ல வைக்கற சில அல்டாப் ஆண்ட்டி & ஃபிகர்களை மட்டும்தான் நான் திட்டி தீர்க்கனும்னு நினைக்கறேன்.

உங்ககிட்ட ஒரு விசயம் சொல்றங்க, நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க, எப்பவாவது ஏன்னே தெரியாமா ரொம்ப சலிப்பா, அலுப்பா எந்த வேலையும் செய்யறதுக்கு மனசே வராம இருக்கும் போது ரொம்ப நாளா உங்களை வெறுப்பேத்தறவங்களை, யார்கிட்டயாவது திட்டி புலம்பி பாருங்க அப்படி ஒரு எனர்ஜி வரும், உற்சாகம் பிறக்கும், நான் சொல்லும் போது பைத்தியகாரத்தனமா இருக்கும், ட்ரை பன்னிங்கனா கண்டிப்பா என்னை குருவா ஏத்துகிட்டு ஆசிரமம் ஆரம்பிக்கலாமானு கேட்பிங்க.
 
சரி, நாம புலம்பலுக்கு வருவோம். அடுத்து இன்னைக்கு நான் திட்ட போறது 3 பேர் அ. முதல்ல ஒரு ஆண்ட்டிய பார்ப்போம், அது உண்மைலயே ஆண்ட்டிதான் வயசு 40க்கு மேல இருக்கும், ஆனா போட்டு வரது ஸ்லீவ்லஸ் ஜாக்கெட் தான், மறக்காம டை போட்டுக்கும். கல்யாணம் ஆகாத பொன்னுங்க கூட பொன்னுங்களோட மட்டும்தான் கேண்டீன் போகறாங்க. ஆனா அந்த ஆண்டி எப்பவும் ஆண்களோட மட்டும்தான் பேசும் வெளிய போகும், எல்லாமே. உடனே சமுக ஆர்வலர்கள் "இது மாதிரி பேசறது தப்பா?"னு கேட்காதிங்க. 

வெறும் பேச்சோட நிறுத்திருந்தா எனக்கு எதுவும் தோணிருக்காது. அவங்க பையன் வயசுல ஒருத்தன் பஜ்ஜி தின்ன பேப்பர சுருட்டி அவங்க ப்ளவுஸ்க்கு பின் பக்கமா சொருகறான். இதை ஆரோக்கியமான நட்புனு சொல்ல முடியுமா? நெருக்கமான நட்பா இருந்தாலும் இப்படியா? நானும் இஞ்சினியரிங் காலேஜ் போய் படிச்சவன் தான், அங்கலாம் லவ்வர்ஸ் தான் இந்த மாதிரி சில்மிஷம் பன்னிப்பாங்க, அதுவும் யாரும் பார்க்காதப்ப. ஆனா இவங்க? 

அட நான் ஒன்னும் மத்தவங்களை குறை சொல்ற அளவுக்கு யோக்கியன்னு சொல்லிக்கலைப்பா, செய்ங்க வேனாம்னு சொல்லலை, மத்தவங்க பார்த்தாமுகத்தை திருப்பிக்கற அளவுக்கு செய்ங்க, காறி துப்பற அளவுக்கு செய்யாதிங்க, வயசுக்குனு ஒரு................ இருக்கு.

அடுத்து நான் பொதுவா பெண்களை பார்த்து கேட்கறேன். ஒரு 35 வயசுக்கு அப்புறம் தொப்பையும் தொந்தியுமா ஒரு ஆண் ஜீன்ஸும் ஸ்லிவ்லஸ் பனியனமா டைட்டா போட்டுகிட்டு வந்தா நீங்க சைட் அடிப்பிங்களா? கடுப்பு ஆவிங்கல்ல? அப்புறம் ஏன் நீங்க மட்டும் படிக்கறப்ப எடுத்த சுடிதார் அ பிள்ளை பெத்ததுக்கு அப்புறம் போட்டு வந்து எங்களை வெறுப்பேத்துறீங்க? ஒன்னு சொல்றேன் நல்லா தெரிஞ்சுக்கங்க. கல்யாணம் ஆன பொன்னுங்களை கரெக்ட் பன்ன நினைக்கலனாலும் பசங்க சைட் மட்டும் அடிப்பாங்க, எப்ப? புடவைல அம்சமா இருக்கும் போது, அப்பதான் பங்களுக்கு கல்யான ஆசையே வரும். நீங்க சுடிதார் போட்டிங்க நாங்க எங்க தலைவர் நித்தியானந்தாகிட்ட சொல்லிடுவோம்.

இதை நான் ஏன் சொல்றனா நான் மரியாதை வச்சுருக்க சில லேடிஸ் அ கூட சுடிதார் ல பார்க்கும் போது செம காண்டாகுது. எல்லாரையும் சொல்லலை. உடம்பு பெருசான ஆண்ட்டிங்கள நான் கெஞ்சி கேட்கறேன், சுடிதார் போடாதிங்க, தொப்பை தெரியுது.

அடுத்து குறிப்பா நான் ஒருத்திய திட்டியே ஆகனும். அவ என்னை விட வயசுல பெரியவளா இருந்தாலும் மரியாதை குடுக்க மாட்டேன். உண்மையிலேயே ரொம்ப சுமாராதாங்க இருப்பா. அதுவும் மாடர்ன் ட்ரெஸ் போட்டு வந்தா நீங்க திரும்பி கூட பார்க்க மாட்டிங்க. ஏதோ வாரம் 3 பட்டு புடவை கட்டறதால கொஞ்சம் பேர் திரும்பி பார்க்கறாங்க அவளை. ஒரு மஞ்சள் கலர் TVS ஸ்கூட்டிய வச்சுகிட்டு அவ பன்ற அட்டகாசம் இருக்கே யப்பா. எனக்கு தெரிஞ்சு சூப்பர் ஃபிகருங்க கூட இந்த சீன் போட்டது இல்லைடா சாமி. 

எல்லாரும் வேலை முடிஞ்சு போறப்ப வெயிட் பன்னி வண்டிய ஸ்டார்ட் பன்னுவா, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரை செலக்ட் பன்னிகிட்டு அவங்க வண்டிய வேணும்னே விட்டு விட்டு ஒவர் டேக் பன்னி ரேஸ்க்கு கூப்டுவா,  எனக்கு முதல் தடவை கோபம் வந்து லாரி,பஸ் லாம் தாண்டி சந்துக்குள்ளலாம் வண்டிய விட்டு அவளை ஓவர்டேக் பன்னேன். சரி எனக்கு மட்டும் தான் இப்படினு நினைச்சா என்னை மாதிரி என் கூட வேலை பார்க்கற பல பேரை இப்படி சீண்டிருக்கா, ஒரு படிக்கற பொன்னு இப்படி பன்னா பரவாயில்லை, பாடம் நடத்தற லெக்சுரர் இப்படி பன்னலாமா? 

பன்னக் கூடாதுனு நினைக்கறவங்க கீழே GOOGLE ID ய வச்சோ இல்லை டாப் ல இருக்க ஃபேஸ்புக் கமெண்ட் லயோ உங்க கருத்தை பகிர்ந்துக்கங்க.

(மேலே இருக்கும் அனைத்து படங்களும் கூகுலில் இருந்து எடுக்கப்பட்டவை)

இதெல்லாம் பார்க்கும் போது பேசாம கல்யாணம் பன்னிக்கலாம்னு தோனுது, இதுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தங்கறதை அடுத்த பதிவுல சொல்றேன்.எனக்கு திரும்ப கடுப்பாகும் போது என் வெறுப்பை உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன்.

இந்த கொடுமைக்கு பேசாமா கல்யாணமே பன்னிக்கலாம்

அன்பர்களுக்கு இனிய வணக்கம், இன்று நான் எழுத போவது ஒரு பேச்சிலர் வாழ்வில் ஏற்படும் துயரங்கள், பெருசா ஒன்னுமில்லைங்க, காலைல எழுந்ததுலருந்து நைட் தூங்க போற வரைக்கும் கல்யாணம் ஆகாத பசங்களை யார்யார்லாம் கடுப்பேத்தி காயப்படுததறாங்கனு பார்ப்போம்.
காலைல 4 மணிக்கு மேலதான் நல்லா தூக்கம் வரும், அப்பதான் வீட்ல பெத்தவங்க எழுப்பி பால் வாங்கிட்டு வர சொல்றது, தண்ணீர் பிடிச்சு வைக்க சொல்றதுனு வேலை வைப்பாங்க, அதை செய்யலைனா என்னமோ முதியோர் இல்லத்துல கொண்டு போய் சேர்த்துட்ட மாதிரி அக்கம்பக்கத்துல புலம்ப ஆரம்பிப்பாங்க.
சரீன்னு அதுக்கு பயந்து வேலையா செய்யலாம்னு வெளிய வந்தா கோலம் போடறேங்கற பேர்ல தெருவுல வரிசையா கல்யாணம் ஆனது ஆகாததுனு 2 கேட்டகிரிலயும் பொன்னுங்க நிப்பாங்க, நான் அதை தப்பு சொல்லலை, அவங்க வேலைய அவங்க பார்க்கட்டு, என் வேலைய நான் பார்க்கறேன், எதுக்கு எங்களை(பேச்சுலர்ஸ்) பார்த்ததும் நல்லா கவர் பன்னிருக்க ஏரியாவையும் திரும்ப ஒரு தரம் கவர் பன்னனும்னு கேட்கறேன்? நாங்க என்ன ஏதாவது தப்பா பார்த்தமா?கைய பிடிச்சு இழுத்தமா? 

வீட்ல இருக்க சின்ன சின்ன வேலைய முடிச்சுட்டு வேலைக்கு போலாம்னு கிளம்புனா பக்கத்து வீட்டு ஆண்டி (BELOW 35 ONLY) அவங்க குழந்தைங்க 2 பேரையும் நான் போற வழில இருக்க ஸ்கூல்ல விட சொல்லுவாங்க, சரி மனுசனுக்கு மனுசன் இந்த உதவி கூட செய்யலன்னா எப்படின்னு நாமலும் கூட்டி போவோம், உடனே அந்த ஆண்ட்டிய ட்ரை பன்ற கம்முனாட்டி எவனோ ஒருத்தன் உடனே எங்க 2 பேரையும் வச்சு தெரு முழுக்க காவியம் பாடிடுவான், அதுல சஸ்பென்ஸ் வேற? 
"BIKE ல இந்த வாரம் பொன்னு, அடுதத வாரம் அவங்க அ........?"
நீயெல்லாம் விஜய் டீவிக்கு வேலைக்கு போடா, அவங்க TRB  ரேட் எங்கயோ போய்டும்.

அதுல வழில பார்த்து வேணும்னே நக்கலா ஒரு கேள்வி கேட்பான் பாருங்க, "என்ன மச்சி, உன் குழந்தையா?"னு, செம காண்டாகும்.
சரி போகட்டும்னு வேலைக்கு வருவோம், எப்படியும் இருக்கற வயசான சீனியர் டிக்கட்டுங்க முழுசும் வேலைல எவன் பன்ன தப்புக்கோ நம்மளை கூப்பிட்டு திட்டும், ஏன்னா நாம் பேச்சிலர்ஸ், சின்ன பசங்க, கேட்டா "உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை அதான் கோபம் வருது, பொறுப்பு இல்லைனு" சம்பந்தம் இல்லாம காரணம் சொல்லுவானுங்க.
இருக்கறதுலயே பெரிய பிரச்சனை இதுதாங்க, நம்ம கூட எப்படியும் கல்யாணம் ஆகி 3 வருசம் தாண்டி அவங்க ஆத்துக்காரர் கூட சண்டை போட ஆரம்பிச்ச லேட்டஸ்ட் ஆண்ட்டிங்க க்ரூப் இருக்கும். அவங்க பன்ற அட்டாகாசம் இருக்கே, அய்யய்யய்யோ.
 
 நான் வேலை பார்க்கற இடத்துல ஒரு ஆண்ட்டி இருக்குங்க, பேர் சொல்ல வேண்டாம், ஆனா எங்க ஏரியால இருக்கவங்களுக்கு நான் யாரை சொல்றன்னு நல்லாவே தெரியும். அந்த ஆண்ட்டி வரத நீங்க 100 மீட்டர்க்கு முன்னாடியே தெரிஞ்சுக்கலாம். அப்படி ஒரு ஸ்மெல் வரும், நான் அதை பொணத்துகிட்ட அனுபவிச்ச ஃபீலிங், அவங்களை கேட்டா துபாய் பெர்ஃப்யூம்னு சொல்லுவாங்க. துபாய்ல எந்த விவேகனாந்தர் தெருல வாங்கனாங்களோ?
 

இன்னொரு கடுப்பு, இந்த இடுப்புதாங்க, வேற எதையும் கற்பனை பன்னாதிங்க. நீங்க கேட் வாக் பார்த்துருக்கிங்களா? நடக்கும் போது கழுத்து, கை ஆடாம இடுப்ப மட்டும் ஆட்டுவாங்க, அதே மாதிரி இங்க ஒன்னு இருக்குங்க, நான் முதல்ல பார்க்கும் போது அமைதியான பொன்னுனு நினைச்சேன், நார்மலாவே நடக்காது, ALWAYS CAT WALK ONLY, இதே நான் காலேஜ்ல படிக்கும் போது மட்டும் என் கன்னுல சிக்கிருந்தா ஓட்டியே சாகடிச்சுருப்பேன், இப்ப ஒன்னும் பன்ன முடியாது, இப்படி சொல்லிக்க வேண்டியதுதான் "பன்னிக்குட்டி எல்லாம் பஞ்ச் டையலாக் பேசுது எஜமான் "

இருங்க கொஞ்சம் ஆணி புடுங்கற வேலை இருக்கு, புடுங்கிட்டு வந்து என் கஷ்டத்தை பகிர்ந்துக்கறேன்.

Thursday, 21 June 2012

சகுனி - திரை விமர்சனம்

செங்கோவி: சகுனி - திரை விமர்சனம்:
 காரைக்குடி கார்த்தியின் ஒரே சொத்தான செட்டிநாட்டு பெரிய பங்களாவை ரயில்வே புராஜக்ட்டுக்காக அரசு எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவிப்பு வருகிறது. தன் பங்களாவைக் காப்பாற்றிக்கொள்ள, ரயிவே அமைச்சர்-முதல்வர் என அரசியல்வாதிகளைப் பார்த்து முறையிட சென்னை வருகிறார் முதல்வர். அப்பாவி பொதுஜனமாக முறையிட்டால், எந்த மரியாதையும் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு, கார்த்தி எடுக்கும் அவதாரமே ‘சகுனி’.முழு விமர்சனமும் படிக்க கீழே சொடுக்கவும்.
செங்கோவி: சகுனி - திரை விமர்சனம்

Wednesday, 20 June 2012

"என்ன சொல்ல வரன்னா" - கதையில்லாத வித்தியாசமான குறும்படம்

அன்பர்களுக்கு வணக்கம். எனக்கு தெரிந்து நான் எழுதிய பதிவில் குறுகிய காலத்தில் அதிகம் பேர் பார்த்தது "ஊருக்கு 4 பேர்" "ராமசாமி" குறும்படங்களை பற்றிய பதிவுகள் தான். என்னதான் கோடிகோடியா செலவு பன்னி படம் எடுத்தாலும் சில நேரத்துல கதை ஊத்திகிச்சுனா மொக்கையா போய்டும், அந்த வகைல குறும்படம் பல வகைல பரவாயில்லை, ஏற்கனவே "சொத்தை பொன்னு" குறும்படத்துலயும் பெருசா கதை இல்லனாலும் ஜனங்ககிட்ட நல்லா போய் சேர்ந்தது. அதே மாதிரி கதையில்லாத ஆனா நல்லாயிருக்க ஒரு குறும்படத்தை பத்தி பார்ப்போம்.

படத்தோட பேர் "என்ன சொல்ல வரேன்னா". தலைப்பு வித்தியாசமா இருக்கேனு பார்த்தேன். கண்டிப்பா கதை இருக்காது, ஏதாவது காமெடியா முடிக்க போறாங்கங்கறது படம் ஆரம்பிச்சவுடனேயே தெரிஞ்சது. அதேதானுங்க.
எடுத்ததும் ஒரு ரெஸ்டாரண்ட், ஒருத்தர் வர்ரார், கெத்தா உட்கார்ரார், கையில வச்சுருக்க ஏதோ பேப்பர் அ பார்க்கறார், சர்வர்கிட்ட சலிச்சுகிட்டே ஆர்டர் பன்றார். அப்பப்ப பக்கத்துல உட்கார்ந்துருக்க ஃபிகர் அ சைட் அடிக்கறார்(இவர் நம்ம ஆளுங்கோ)திடிர்னு ஒருத்தன் அவருக்கு குறுக்க வர்ரான், நாகரீகமா பேசி பக்கத்துல உட்கார்ந்து பேசும் போதுதான் இவ்வளவு நேரம் வளைச்சு வளைச்சு சைட் அடிச்ச நம்ம ஆளு ஒரு திரைப்பட இயக்குனர்னு தெரியுது.

எடுத்ததும் "உங்க படம்லாம் ஏன் இவ்வளவு மொக்கையா இருக்கு?" கேட்டு கடுப்ப கெளப்ப ஆரம்பிச்சு வரிசையா கேள்வி கேட்டு அசிங்க படுத்தறார், அதோட நிறுத்தாம கடைசியா ஒரு அவமானத்தை குடுக்கறார் பாருங்க, அந்த டைரக்டர் நொந்து போய் எழுந்து போயிடறான், இப்பதாங்க அந்த ஃபிகர் முகத்தை முழுசா காட்டறாங்க, இதுக்காக தான் நான் காத்துட்டு இருந்து முழு படத்தையும் பார்த்தேன்.

 கேமராவா மட்டும் அடிக்கடி ஆட்டிட்டே இருக்காங்க, மத்தபடி படம் எனக்கு பிடிச்சுருக்கு, ஒரு ஃபிகர் முகத்தை சைட்லருந்து மட்டும் காட்டி கடைசி வரைக்கும் ஆடியன்ஸ் அ வெய்ட் பன்ன வச்சு முழு படத்தையும் பார்க்க வச்ச டைரக்டருக்கு ஒரு சபாஸ், கடைசியா அரசாங்கத்தோட சட்டம் (RIGHTS OF INFORMATION) பத்தி ஸ்லைட் போட்டு விளம்பர படுத்தறாங்க. பாருங்க, நல்ல படம்தான்.

படத்தை பார்க்கனுமா?


வந்துட்டிங்க, படிச்சுட்டிங்க, அப்படியே கமெண்ட் அ போட்ட்டுட்டு , மேல டாப் ல பாருங்க FACEBOOK LIKE பட்டன் இருக்கு, அதை க்ளிக் பன்னி உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.

Monday, 18 June 2012

பழகிய முகங்களை மறக்கும் பெண்-FACES IN THE CROWD- திரைவிமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், தற்போதைய சூழலில் சினிமா பார்க்காதவர்கள் யாருமில்லை, அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை. சிலருக்கு காதல் படங்கள், சிலருக்கு ஆக்சன், சிலருக்கு காமெடி என்று விதவிதமாக இருப்பார்கள், எனக்கு எப்பொழுதும் ரொமென்டிக் காமெடி வகை படங்கள் தான் மிகப் பிடிக்கும். நமது சகப்பதிவர் ஜாக்கி சேகர் அனைத்து விதமான உலக சினிமாக்களையும் பார்த்து, நம்முடன் பகிர்ந்து கொள்வார், அவரது அறிமுகத்தில் வித்தியாசமான கதைக்களமாக பட்டதால் இந்தப் படத்தை பார்த்தேன். படத்தின் பெயர் "FACES IN THE CROWD".
 
சராசரியாக தோழிகளுடன் அரட்டையும் சிறுபிள்ளைகளுக்கான பள்ளியில் ஆசிரியர் பணியும் மனதுக்கு பிடித்தவருடன் வாழ்க்கையும் என அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் கதா நாயகிக்கு எதெச்சையாக ஒரு அதிர்ச்சி தரக் கூடிய சம்பவம் நடக்கிறது. யாருமில்லா பாலத்தில் நடந்து செல்லும் போது ஒரு கொலையை தற்செயலாக பார்க்கும் ஹீரோயினை கொலைகாரன் துரத்தி பிடித்து பாலத்திலிருந்து தள்ள மண்டையில் பலத்த காயத்துடன் ஆற்றில் விழுகிறார்.

ஆஸ்பத்திரியில் கண் விழிக்கும் கதா நாயகிக்கு பெரும் அதிர்ச்சி, வாழ்வின் அனைத்தும் நினைவில் இருந்தும் யாருடைய முகமும் நினைவில்லை. அந்த வியாதிக்கு ஏதோ பேர் சொல்கிறார்கள். கஜினி சூர்யாவிற்காவது போட்டோ எடுத்து வைத்து நினைவில் வைத்திருக்க ஒரு வழி இருந்தது. கதையில் ஹீரோயினுக்கு நொடிக்கு நொடி முகம் மாறி மாறி புதிதாய் தெரியும்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த வியாதியுடன் பழகி இருக்க முயற்சி செய்யும் ஹீரோயினுக்கு எல்லாமெ எதிர்மறையாக நடக்கிறது. முதலில் வேலை போகிறது. தினமும் தன்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடும் காதலனின் முகமும் நினைவில் இருப்பதில்லை.
 
எல்லாவற்றிற்கும் மேலாக அந்த சைகோ கொலைகாரன் தன்னை பின்தொடர்வது தெரிந்தும் அவன் முகம் நினைவில் இல்லாததால் பயந்து ஓடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இவரது வியாதியை ஜீரணிக்க முடியாத காதலன் பிரிந்து விட, கொலைகாரனை தேடிக்கொண்டிருக்கும் போலிஸே புதுக் காதலனாக மாறுகிறார்.
 
படத்தில் ஜீவனே அந்த முகம் மறக்கும் வியாதியும் ஹீரோயினும் தான், ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஹீரொயின் தன்னால் முடிந்த வரை கேரக்டரராகவே வாழ்ந்திருக்கிறார். அவர் பயந்தால் நமக்கும் பயமாயிருக்கும், அந்த அளவுக்கு என்றால் பாருங்கள்.
உண்மையில் நிறைய க்ரைம் நாவல் படித்ததாலோ என்னவோ என்னால் யார் கொலைக்காரன் என்பதை உடனே கண்டறிய முடிந்தது. உங்களால் முடியுமா என்று பாருங்கள்.உலக சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற படம்.

வந்ததும் வந்தீங்க, மறக்காம கமெண்ட் அ போட்டுட்டு மத்தவங்களோட பகிர்ந்துக்கங்க.

Sunday, 17 June 2012

வயது 14- சொல்வது 'அவர் இல்லைனா நான் செத்துடுவேன்'- யாரோட தப்பு இது? சொல்வதெல்லாம் உண்மை

அன்பர்களுக்கு வணக்கம், எனது முந்தைய பதிவில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலமாக கொலை செய்தவர் போலிஸில் மாட்டியதை பற்றி எழுதி இருந்தேன். அந்த எபிசோடுக்கு பின் என்னை மீண்டும் பார்க்க வைத்த எபிசோட் உண்மையில் நெஞ்சை கனக்க வைத்தது. அதை பற்றி இங்கு காண்போம்.
வழமை போல் சக பதிவரின் அறிமுகம் மூலமாகத்தான் இந்த எபிசோட் பற்றியும் தெரிந்து கொண்டேன். ஆரம்பிக்கும் பொழுதே அதிர்ச்சியை தந்த விசயம் காதலர்கள் என்று சொல்லிக் கொண்டு ஒரு 21 வயது பையனுடன் 14 வயது சின்ன பென்னை காட்டியதுதான். அதிலும் பேச ஆரம்பித்த உடனேயே அந்த சிறு பெண் எடுத்ததும் 'இவர் இல்லைனா நான் செத்துடுவேன்'னு சொல்லி அழும் பொழுது 'என்ன கொடுமைடா இது?' என்று பார்ப்பவர்களே தலையில் அடித்துக் கொள்வார்கள்.

இந்த வாரம் நிர்மலா மேடம் கொஞ்சம் சரியான கேள்விகளை கேட்டார் என்பதை மனமாற ஒத்துக் கொள்வேன். அவை

"எதுக்காக இந்த வயசுல காதலிச்ச?"

"உங்க அப்பா அம்மா காட்டாத எந்த பாசத்தை இந்த பையன் உனக்கு காட்டிட்டான்?"

"செத்துடுவேன்னு உங்க சுய நலத்துக்காக நீங்க  மிரட்டறதுல எத்தனை பசங்க பாதிக்க படறாங்க தெரியுமா?"

"உண்மையான் காதலுக்கு கஷ்டத்தை தாங்கற சக்தி இருக்கும், இப்படி சொல்லாம ஊரை விட்டு ஓடி வர வைக்காது"
 அதுக்கப்புறம் பெண்ணை பெத்தவங்க வந்ததும், அழுததும், அம்மா பொன்னோட கால்ல விழுந்து வீட்டுக்கு கூப்பிட்டதும், அப்பா தாலியை கழட்ட சொல்லி அடிச்சதும் நெஞ்சை கனக்க வைத்த விசயங்கள்.

காதல்ங்கற பேர்ல பெண்களும் ஆண்களும் நாசமாய் போகட்டும். இது போல குழந்தைகள் ஏன் தாலி கட்டிக் கொள்ள வேண்டும்? இத்தனைக்கும் முதல் மதிப்பெண் பெறும் பெண்கள்தான் இவ்வாறு எளிதில் காதல் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

இது 4 சுவற்றுக்குள் தீர்க்கப் பட வேண்டிய விசயம் தான். ஆனால் இது போன்ற விசயங்கள் வெளிச்சத்திற்கு வந்தால் தான் தங்களது பெண்கள் நன்கு படிக்கிறார்கள், எளிதில் யாரையும் காதலித்து விட மாட்டார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் இனி எச்சரிக்கையாக இருப்பார்கள் என்பது என் கருத்து.

உங்களது கருத்துக்களை மறக்காமல் இட்டு செல்லவும், இப்பதிவு பிடித்திருப்பின் உங்கள் நாண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மகளை புணர்வுக்கு அழைத்த கொலைகார தந்தை- 'சொல்வதெல்லாம் உண்மை'யால் போலிசில் சிக்கினார்

அன்பர்களுக்கு வணக்கம். எனது முந்தைய பதிவில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியினை எவ்வாறு பார்க்க ஆரம்பித்தேன் என்பதினை பற்றி கூறியிருந்தேன். அதில் நான் பார்த்த முதல் எபிசோட் பற்றி கூறியதில் அந்த நிகழ்ச்சி என்னுள் பத்தோடு பதினொன்றாகதான் பதிந்ததை சொல்லவில்லை. ஆனால் அடுத்து நான் பார்த்த எபிசோட் என்னை இந்த நிகழ்ச்சி பற்றி மற்றவர்களுடன் பேச வைத்தது. அதை பற்றி இப்பதிவில் காண்போம்.

இரண்டாவது முறையும் சக பதிவர்கள் மூலமாகத்தான் இந்த எபிசோட் பற்றி தெரிய வந்தது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுது வழமையாக ஒவ்வொருவர் பற்றிய அறிமுகத்துடன் தொடங்கியது. வழக்கம் போல் மேஜர் ஆகாத பெண்ணின் காதல் பிரச்சனையை பற்றித்தான் பேச ஆரம்பித்தார்கள். எனக்கும் உண்மையில் கொஞ்சமாக போரடிக்க துவங்கியது.
ஆனால் சம்பந்த பட்ட பெண் (பார்கவி) பேச துவங்கும் வரைதான். தனது தந்தையும் தாயும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தனது காதலை எதிர்ப்பது பற்றி குறிப்பிட்டார். நிர்மலா பெரியசாமியும் வயது வரும் வரை காத்திருக்க சொல்லி அறிவுரை கூறவும் தான் விசயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வரத் துவங்கியது.
தனது தந்தை ஒரு வகையான காமக் கொடுரன் என்பதையும் தன்னை மகளென்று பாராமல் செக்ஸ் டார்ச்சர் செய்வது பற்றி கூற ஆரம்பிக்கவும் கேட்டு கொண்டிருந்த நிர்மலா அவர்களுக்கு வந்த அதிர்ச்சி என்னையும் தாக்கியது.
அதன் பின் தான் தனது தாய் இதனை பெரிதாக கண்டு கொள்ளாதது பற்றியும் தன் உறவுகளும் இதனை எதிர்க்காதது பற்றியும் கூறினார். கடைசியாக காதலித்து ஊரை விட்டு ஓடி வந்த காதலர்களையும் அவரை தேடி வந்த பெண்ணின் தந்தையையும் தன் தந்தை கொலை செய்து வீட்டிற்கு அருகே புதைத்தது பற்றிய விவரங்களை கூற ஆரம்பித்தார். நீங்களே அதனை காணோளியில் பாருங்கள்.

இவ்வளவு மனக் கஸ்டங்களையும் தாங்கிக் கொண்டு 12ம் வகுப்பில் 1100 மதிப்பெண்களுக்கு மேல் வரும் என்ற எதிர்பார்ப்புடனும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையுடனும் காத்திருந்த பார்கவியினை பார்க்க எனக்கு உண்மையில் ஆச்சர்யமாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியின் காரணமாக காணாமல் போனதாக நினைத்து கொண்டிருந்த 3 பேர் கொலையான விசயம் காவல் துறைக்கு தெரிய வந்து கொஞ்ச நாள் தலை மறைவுக்கு பின் பார்கவியின் தந்தையை கைது செய்திருக்கிறார்கள். பார்கவியும் 1000 க்கு மேல் மதிப்பெண் வாங்கி இருக்கிறார்.
இப்பெண்ணுக்கு வாழ்க்கையில் இனிமேல் வாழ்க்கையில் எந்த கஸ்டமும் வரக்கூடாது என்று இறைவனை பிரார்த்தித்துக் கொண்டேன்.
உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள். மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

சொல்வதெல்லாம் உண்மை- அவசியம் சொல்லனுமா?

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், கொஞ்சம் இடைவெளி, காரணம் பெரிதாய் ஒன்றுமில்லை, பதிவு போட ஆரம்பித்தால் தொடர்ந்து போடுவது, இல்லையென்றால் பேஸ்புக்கை மட்டும் நோண்டி கொண்டிருப்பது, என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. சரி இன்றைய எனது பதிவு ZEE  தொலைக்காட்சியில் நிர்மலா பெரியசாமி நடத்தும் "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி பற்றியது.


நம் அனைவருக்கும் தெரியும் இது போல ரியாலிட்டி ஷோக்களை தமிழில் பெரிதும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்த பெருமை விஜய் டீவியை சாரும். வாரவாரம் யாரையாவது கூட்டிக் கொண்டு வந்து அழ வைப்பார்கள். வழக்கமாக சன் டீவியில் சீரியில் பார்த்து அழும் பெண்களுக்கு இந்த புது வித அழுகை மிகவும் பிடித்திருந்தது. TRB ரேட் எகிறிட்டு போச்சு, உடனே ஒவ்வொரு சேனலும் அவங்கவங்க பங்குக்கு ஒவ்வொருத்தரையா கூட்டிட்டு வந்து அழ வைக்க ஆரம்பிச்சாங்க. அடுத்து சமுக அக்கறைல கவனம் செலுத்தற மாதிரியான நிகழ்ச்சிகள் பன்ன ஆரம்பிச்சாங்க, உதாரணத்துக்கு "நீயா நானா, குற்றம்- நடந்தது என்ன" இது மாதிரி ஒவ்வொரு சேனலும் ஆளுக்கு ஒன்னா ஆரம்பிக்கவும் தங்களோட பங்குக்கு ZEE தமிழ் ஆரம்பிச்சததுதான் இந்த 'சொல்வதெல்லாம் உண்மை'.
உண்மையிலேயெ சொல்றேங்க, எனக்கு இப்படி ஒரு சேனல் இருக்கறதே ரொம்ப நாளா தெரியாது. நம்ம சக பதிவர் ஒருத்தர் குடிக்கு அடிமையான ஒருத்தர் திருந்தி அவர் குடும்பத்தோட 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி மூலமா ஒன்னு சேர்ரது பத்தி போட்டுருந்தார். அதுதான் நான் முதல்ல பார்த்த எபிசோட்.
அந்த வாரம் பெருசா சோகம் ஏதுமில்லை, ஆனா குடிக்கு அடிமையாகறதனால என்னென்ன பிரச்சனை வருங்கறது பத்தியும் அதுல இருந்து மீட்கறதுக்கான அமைப்புகள் பத்தியும் நிறைய விசயங்கள் தெரிஞ்சுகிட்டேன்.

அதுக்கப்புறம் இந்த நிகழ்ச்சிய பத்தி குறை சொல்லி வந்த பதிவுகளை படிச்சேன். நான் பார்த்த இந்த எபிசோட் அ மட்டும் வச்சுகிட்டு என்னால எந்த குறையும் கண்டுபிடிக்க முடியலை. முடிஞ்சா நீங்க ஏதாவது குறை இருந்தா சொல்லுங்க. 
இதுக்கு அடுத்து இந்த நிகழ்ச்சில நான் பார்த்த எபிசோட் என்னை அப்படியே புரட்டி போட்டுடுச்சு. அதை இதே பதிவுல தொடர்ச்சியா போட்டா நல்லாயிருக்காது. அந்த எபிசோட்னால 3 பேர் கொலையான விசயம்லாம் வெளிய வந்தது. கேள்வி பட்டுருப்பிங்க. அடுத்த பதிவுல அதை பத்தி பேசுவோம்.
இந்த எபிசோட் பத்தின உங்க கருத்தை மறக்காம பின்னுட்டமிடுங்க.

Sunday, 10 June 2012

மனம் கொத்தி பறவை- விமர்சங்களுக்கு விமர்சனம் என் பார்வையில்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். மற்ற பதிவர்களை போல் வாரவாரம் வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் படங்களை உடனுக்குடன் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைப்பதில்லை. சமிபத்தில் திரைக்கு வந்த 'மனம் கொத்திப் பறவை' திரைப்படத்தினை நேற்றுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தினை பற்றிய என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலில் இப்படத்தினை பார்க்க விரும்பியவர்களில் பாதிப் பேர் சிவாவின் விசிறிகளாகத்தான் இருப்பார்கள். நானும் அவர்களில் அடக்கம். படத்தில் கதை ஒன்றும் பெரிதாக இல்லை. வெவ்வேறு சமுகத்தை சேர்ந்த இரு குடும்ப்ங்கள் எதிரெதிரில் இருந்தாலும் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள். அதில் கன்னனாக வரும் சிவகார்த்திக்கேயன் எதிர்வீட்டு ரேவதியை ரொம்ப நாளாக காதலித்து வருகிறார்.காதலிக்கும் அனைவரும் செய்யும் தவறைத்தான் அவரும் செய்கிறார். காதலை காதலியிடம் சொல்லாமல் தன் நண்பர்களுடன் பகிர்தல். 
அப்புறமென்ன வழக்கம் போல் வீட்டில் ஒரு முரட்டு மாப்பிள்ளைக்கு ஹீரோயினை நிச்சயம் செய்ய, சராசரி தமிழனாக குடித்து விட்டு புலம்புகிறார். பின்னே 20 பேரை அடிக்க அவர் என்ன தனுஸ் போல ஆக்ஸன் ஹீரோவா? எப்படியாவது நணபனின் காதலை சேர்த்து வைப்பதற்கென்றே பிறப்பெடுத்த ஹீரோவின் நண்பர்கள் ஹீரோயினை கல்யாணத்திற்கு முதல் நாள் மயக்கப்படுத்தி போதையில் மயக்கத்தில் இருக்கும் ஹீரோவுடன் ஊரை விட்டு ரொம்ப தூரம் கடத்தி வந்து விடுகிறார்கள். அப்புறம் தான் தெரியுது இது ஒன் சைட் லவ்னு.
அப்புறம் என்ன? வழக்கம் போல 4 கார் 40 அடியாள்னு ஒரு க்ரூப் தேடி வந்து இவங்களை பிடிச்சுட்டு போய் பிரிச்சுருது. எப்படி இவங்க ஒன்னு சேர்ராங்கனு படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க.எனக்கு ஒரே ஒரு வருத்தம் 2 வருசம் கழிச்சு சிவா ஊருக்கு வரதை பத்தி அவங்க கொஞ்சம் தெளிவா சொல்லிருக்கலாம். மத்தபடி எனக்கு எந்த இடத்துலயும் மொக்கையா தெரில. பாட்டு வைச்ச இடம் சரியில்லைனு சொல்லலாம். அதுவும் ஹிட் ஆகி இருந்தா அதை யாரும் கண்டுக்க மாட்டாங்க.
சரி கதை முடிஞ்சது. நான் பொதுவா மக்களை பார்த்து கேட்கறேன். தமிழ் நாட்டுல உண்மையான காதல் அ பார்க்க முடியறது இல்லை, அதுக்கு சினிமாதான் காரணம்னு சொல்றிங்களே, இந்த மாதிரி ஜனரஞ்சகமான படம் வந்து இப்ப இருக்க தலைமுறையை சேர்ந்தவங்க பார்த்தாதானே அவங்களுக்கு காதல்ங்கறது உடம்பை தாண்டி வேற விசயம் போலங்கறதுலாம் புரியும். அதை விட்டுட்டு ஆயிரம் நொட்டை சொல்றாங்க.

 
ஹீரோ ஹீரோயின் கால்ல விழுந்தது தப்பாம், ஒரு பிரபலமான பதிவர் சொல்றார். அவரை பார்த்து கேட்கறேன் "நீங்க எந்த பொன்னு பின்னாடியும் வருசக்கணக்குல சுத்துனது இல்லை போல, அவங்க குடும்பத்துல இருக்கு 4 வயசு பொன்னு கால்லயும் விழ நம்ம பசங்க தயாரா இருக்காங்க பாஸ், லவ்வுக்குனு நாக்கை அறுக்கறது , கொலை பன்றதுலாம் தப்பில்லையாம், கால்ல விழறது தப்பாம்"
ஆக மொத்தம் நான் தமிழ் ரசிகர்களுக்கு சொல்லிக்க விரும்பறது இதுதான், சைக்கோ படம் எடுக்கறேன்னு கொல்றவங்க, வேற மொழில வந்த படத்தை வெட்கமே இல்லாம திருடறவங்க, பஞ்ச் டையலாக் பேசி சாகடிக்கறவங்க மத்தியில அமைதியா போய்கிட்டு நடுவுல கிச்சுகிச்சு மூட்டிகிட்டு இந்த படமும் நல்லாதான் இருக்கு.
அப்புறம் இன்னோன்னு படம் 1990 ல வந்துருக்க வேண்டிய படம் நு கொஞ்சம் பேர் சொல்றாங்க. அவங்களாம் எல்லா ஊர் காதலும் சிட்டில நடக்கற மாதிரி ரூம் போடற காதல்னு நினைச்சுட்டு இருக்காங்க, சாரி பாஸ், இன்னும் மனசை மட்டும் பார்த்து காதலிக்கற இளிச்ச வாய கூட்டமும் இருக்கு. நான் தினமும் பார்த்துட்டுதான் இருக்கேன்.
இந்த மாதிரி க்ளாமர் இல்லாம வர காதல் திரைப்படடங்கள் ஓடுனாதான் கல்யானத்துக்கு முன்னாடி அபார்ஷன் நடக்கறது குறையும்.

வந்தது வந்தீங்க , அப்படியே கமென்ட் அ போட்டு பகிர்ந்துக்கங்க.

Friday, 8 June 2012

விஸ்வரூபம் திரைப்படத்தின் உண்மையான ட்ரெய்லர்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உலக நாயகன் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தின் அசத்தும் ட்ரெய்லர் YOUTUBE ல் வெளியிட பட்டுள்ளது.

கமலஹாசனை நாட்டியம் பயிற்றுவிப்பவராகவும் தீவிரவாதியாகவும் ஏதேதோ வேடத்தில் காட்டுகிறார்கள். இந்த படத்தில் எத்தனை கெட் அப்போ?

அதை காண கீழே சொடுக்கவும்

Thursday, 7 June 2012

"ராமசாமி- 50% நக்கல்+50%லொல்லு"- குறும்படம்

அன்பு நண்பர்களுக்கு என் மகிழ்ச்சியான வணக்கங்கள், என் மகிழ்ச்சிக்கு காரணம் என்னன்னு கேட்டிங்கனா அது நீங்க தாங்க, ஆமாங்க எப்பவுமே என் ப்ளாக் ல 100-120 தான் அதிக பட்ச விசிட்டர் வந்துருக்கறது, ஏப்ரல் முதல் நாள் அனுஷ்காக்கு ஆக்சிடென்ட்னு ஒரு பிட் அ போட்டேன் பார்த்தீங்களா அன்னைக்குதான் கூட்டம் 150 அ தாண்டுனுச்சு. இன்னைக்கு என்னடான்னா நான் எந்த பதிவும் போடாமயே சாயந்தரத்துக்குள்ள 160 க்கு மேல லிஸ்ட் எகுறுது. ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.

சரி வந்தது வந்துட்டோம், ஒரு விமர்சனத்தையும் போட்டுருவோம். இப்ப நாம பார்க்க போறது நாம் ஏற்கனவே பார்த்த "ஊருக்கு 4 பேர்" குறும்படத்தோட டீம் தயாரிச்ச "ராமசாமி"ங்கற குறும்படத்தை பத்திதான்.

படம் ஆரம்பிக்கும் போது எழுத்து போடறப்ப புகை பேக்ரவுண்ட்ல "சரஸ்வதி சபதம்" பட டைட்டில் மியுஸிக் போடுவாங்க பாருங்க, அங்கயே அவங்க நக்கல் ஆரம்பிக்குது. ஹீரோ அறிமுக படுத்திட்டு பார்க்கறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை குடுப்பாங்க, அது என்னன்னா "இவனுக்கு எப்படி வாழ்க்கைல ஒரு லட்சியம் கிடையாதோ அதே மாதிரி இந்த படத்துல கதையும் கிடையாதுங்க, இஷ்டமில்லைனா பார்க்காதிங்க"னு. அப்புறம் எப்படிடா படம் எடுத்திங்கங்கற கேள்விலயே படத்தை பார்த்தேன்.


 ஒன்னுமில்லிங்க, படிச்சுட்டு வேலைக்கு போகாம வீட்டுல இருக்க ஹீரோ, சிவாஜிகனேசன் காலத்துல இருந்து இதுதான் ஹீரோவோட வேலைங்கறது நமக்கு தெரியும். அவன் வீட்ல பன்ற அலும்பல்களை வரிசையா ரசிக்கற மாதிரி காட்டுவாங்க. அவனை பத்தி நல்லா தெரிஞ்ச அவங்கப்பா ஹீரோக்கு தெரியாமயே ஒரு கம்பெனிக்கு அப்ளை பன்னி அடுத்த நாள் போய் அட்டென்ட் பன்ன சொல்லுவார்.

அடுத்த நாள் கட்டாயம் ஃப்ரென்ட்ஸ் கூட படத்துக்கு வரென்னு ஹீரோ வாக்கு குடுத்துருப்பார். சரி இன்டர்வியு சும்மா பேருக்கு அட்டென்ட் பன்னிட்டு வரலாம்னு போன உள்ளே போற ஒவ்வொருத்தனும் முகத்தை தொங்க போட்டுகிட்டே வந்துருவாங்க. "இவங்களுக்கே கிடைக்காத வேலை நமக்கெங்க கெடைக்க போகுது?" நு உள்ளே ஹீரோ போகும் போது எழுத்து போடுவாங்க, படம் அவ்ளோதான்னு நினைச்சுராதீங்க, இதுக்கப்புறம்தான் படம் ஆரம்பிக்குது.இன்டர்வியுல ஹீரோ அடிக்கற ஒவ்வொரு டைமிங் கவுண்டருக்கும் நான் அடிமைங்க, அவ்வளவு நக்கலா இருக்கும், உங்களால சிரிக்காம இருக்க முடியாது. க்ளைமாக்ஸ் ல ஒரு பிரபலம் வருவார், அவர் யாருங்கறது சஸ்பென்ஸ். எவ்வளவு டென்ஷன்ல இருந்தாலும் அதெல்லாம் மறந்து கட்டாயம் சிரிப்பிங்க.
படத்தை பார்க்கனுமா?


வழக்கமான டயலாக் தான், வந்ததும் வந்தீங்க, அப்படியே கமெண்ட் போட்டுட்டு மத்தவங்க கூட பகிர்ந்துக்குங்க.

Wednesday, 6 June 2012

ஊருக்கு 4 பேர்- AWARD WINNING SHORT FILM/குறும்படம்

 அன்பு நண்பர்களுக்கு வணக்கம். பொதுவா பார்த்தீங்கனா சினிமால எடுத்துக்கற கருத்தையே திரும்ப எடுத்து குறும்படத்துல பன்னும் போது அது பெருசா ஜெயிக்கறதில்லை. அந்த நேரத்துல சமுகத்துல எந்த பிரச்சனை பெருசா பேசப் படுதோ அதை ஜனங்க ரசிக்கற விதத்துல பன்னா தானா ஜெயிச்சுருது, ரசிக்கற மாதிரி எடுக்கறது வேற ஒன்னுமில்லைங்க காமெடியா எடுக்கறதுதான் சொல்றேன், ஏன்னா பல பேர் குறும்படம்னா தெறிச்சு ஓடுறதுக்கு காரணம் அதுல காட்டற தேவையில்லாத அதிக பட்சமான சோகம் தான்.சரி நம்ம படத்தை பார்ப்போம்.
"ஊருக்கு 4 பேர்"- படம் ஆரம்பிக்கும் போது சத்தியமா நான் எதிர்பார்க்கலீங்க, இந்த டீம் எடுத்துருக்க கான்செப்ட் 'எம்பளம்' பத்தி இருக்கும்னு, ஏன்னா அத வச்சு எப்படி எடுக்க முடியும்னு யாருமே யோசிக்கலை போல, 

இந்த எம்பளம்னா என்னன்னு சொல்லவே இல்லை பாருங்க, அதாவது ஒரு குறிப்பிட்ட தொகைய பணமா கட்டி ஒருத்தருக்கு கீழே நாம் சேரும் போது நாம கட்டுன பணத்துக்கு 50%க்கான ஏதாவது ஒரு பொருளை குடுத்துருவாங்க, அப்ப மீதி பணத்தை எப்படி திருப்பி எடுக்கறதுனா நாம அலைஞ்சு திரிஞ்சி நமக்கு கீழே ஆள் சேர்த்தனும், அவங்க கட்டுற பணத்துல நமக்கு கமிஸன் கிடைக்கும், அவங்களுக்கு கீழே ஆள் சேர சேர நமக்கு கமிஸன் கிடைச்சுகிட்டே இருக்கும். இந்த மாதிரி உழைக்காம சம்பாதிக்க ஆசைப்பட்டுதான் எல்லாரும் இதுல போய் மாட்டுறது.
படம் ஆரம்பத்துல பெங்களூர்ல சாப்ட்வேர் கம்பெனில மாசம் 30000க்கு மேல சம்பாதிச்சுட்டு குடியும் கும்மாளமுமா இருக்க 4 பேரை காட்டறாங்க, ஒவ்வொருத்தரை பத்தியும் தனித்தனியா சொல்றாங்க,அதுல ஒருத்தனை அவன் கூட வேலை பார்க்கற ஒருத்தர் ரெகமண்ட் பன்னி இந்த எம்பளம் சம்பந்தபட்ட நிகழ்ச்சிக்கு அனுப்பறார். 

அங்கே போய் அங்கே ஒருத்தன் கோட் போட்டுகிட்டு பேசுற பேச்சுல மயங்கி 30000 பணத்தை கட்டி டீம்ல சேர்ந்துடறான், அதுக்கு அப்புறம் அவனுக்கு கீழே ஆள் சேர்த்த விசாரிக்கும் போதுதான் அவன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அதுல சேர்ந்துருக்கறது தெரியுது.

யார இதுல சேர்த்து விடறதுனு தெரியாம அவங்க எப்பவுமே 'மாக்கான்'னு கூப்புட்ற அவங்க ஊர்லருந்து வேலை தேடி வந்து தங்கி இருந்த ஒருத்தனை சிக்க வைக்கலாம்னு ப்ரோக்ராம்ல போய் உட்கார வைக்கறாங்க,அவன் ஏமாந்தானானு படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க. ஆனா செம நக்கல் நையான்டிங்க, மிஸ் பன்னிடாதிங்க.

அப்புறம் யாருங்க அந்த மாக்கானை நடிச்சவரு? கலக்கிருக்கார் போங்க, இந்த டீம் எடுத்த இன்னோரு குறும்படம் "ராமசாமி". இதை பத்தி அடுத்த பதிவு கண்டிப்ப போடுவேன்.
படத்தை பார்க்கனுமா?

வந்துட்டீங்க, படிச்சுட்டீங்க, அப்படியே கமெண்ட் அ போட்டு SHARE பண்ணிட்டு போங்க.

Tuesday, 5 June 2012

குடும்பஸ்தனாக இருப்பதற்கு ஒரு வாரம் விடுமுறை/ HALL PASS-REVIEW/திரை விமர்சனம்

 அன்பு நண்பர்களுக்கு இனிய வணக்கம். எல்லாரும் சிறு வயதில் ஹாலிவுட் என்றால் அனகோண்டா, காட்சில்லா மாதிரியான படங்களையும் அல்லது சூப்பர் மேன்,ஸ்பைடர் மேன், நார்னியா மாதிரியான படங்களையும் மட்டுமே விரும்பி பார்ப்போம். அதன் பின் காதல்மற்றும் ஆக்ஸன் படங்கள், உதாரணம் டைட்டானிக்,டெர்மினெட்டர்,க்ளாடியேட்டர். ஒரு 25 வயதிற்கு பின் வேலைப்பளுவை மனம் தாங்க முடியாமல் தினறும் சமயத்தில் பார்க்க தோன்றும் படம் தான் இந்த வகையான FEEL GOOD வகையான படங்கள். கதையென்று பெரிதாக ஒன்றும் இருக்காது. ஆனால் போரடிக்காமல் போகும். க்ளைமேக்ஸ் அதிக ப்ட்சம் பாஸிட்டிவ் ஆகத்தான் இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் படம் HALL PASS. 
 
நம்மில் சிலருக்கு இந்த பழக்கம் கட்டாயம் இருக்கும் என்று நம்புகிறேன். அதுதான் பெண்களை சைட் அடிப்பது, அங்கம் அங்கமாக ரசிப்பது, அவர்களை பற்றி நண்பர்களுடன் வேறு மாதிரி விவாதிப்பது போன்றவை, இந்த படத்தில் வரும் 2 ஹீரோக்களுக்கும் இதுதான் பொழப்பே. இவர்களையும் குறை சொல்ல முடியாது, ஏனென்றால் இவர்களுடைய மனைவி சரியாக கவனிப்பது இல்லை. அதற்கு காரணம் எங்கே இவர்கள் ரசிக்கும் பெண்களை நினைத்துக் கொண்டு தங்களுடன் உறவு வைத்துக் கொள்வார்களோ என்று.

ஆனால் நாளுக்கு நாள் 2 ஹீரோக்களும் எப்போது பார்த்தாலும் செக்ஸை பற்றி மட்டுமே அதிகமாக பேசுவது தெரிகிறது. அந்த நேரத்தில் தான் 2 ஹீரோயின்களுக்கும் HALL PASS பற்றி தெரிகிறது. ஒரு வாரம் கழுத்து சங்கிலியை அவிழ்த்து விடுவது. அதாங்க ONE DAY CM மாதிரி ஒரு வாரத்துக்கு பிரம்மச்சாரியாக ஆசைப்பட்டதை எல்லாம் செய்து கொள்ள கணவன்களுக்கு மனைவி அனுமதி குடுத்தல்.  
ஒரு முறை ஒரு நணபரின் வீட்டு பார்ட்டிக்கு  அங்கே அவருடைய மனைவி,குடும்பத்தை பற்றி அசிங்கமாக பேசுவதை எல்லாரும் ரகசிய கேமராக்களில் பார்த்துவிட மொத்தமாக செருப்பால் அடிக்காத குறையாக வெளியே தள்ளுகிறார்கள். வெறுத்து போய் முதல் ஹீரோயின் தன் கணவனுக்கு ஹால் பாஸ் குடுத்து 1 வாரம் குழந்தைகளுடன் அப்பா வீட்டுக்கு போய்விடுகிறார்.
இன்னோரு ஹீரோ தன் மனைவி இடங்குடுக்காத காரணத்தால் சென்டிமென்ட்டாக தன் காரிலேயே சூட்டை தணிக்க பார்க்க போலிஸ் பிடித்து அவமானமாகிறது. அவருக்கும் கிடைக்கிறது ஹால் பாஸ்.இப்படி கிடைத்த சுதந்திரத்தை வைத்து விருப்பப்பட்ட பெண்களுடன் சுத்த, தங்க திட்டமிடுகிறார்கள்.
ஆனால் இவர்களுக்கோ வயது 40 ஐ தாண்டிவிட்டது. யார் கிடைப்பார்கள்? வரும் பெண்களும் இவர்கள் ரசனைக்கு இல்லை. அதற்குள் இவர்களுக்கு ஹால் பாஸ் கிடைத்த விசயம் ஊர் முழுக்க பரவுகிறது.
இந்த கேப்பில் அப்பா வீட்டுக்கு போன ஹீரோயின்களுக்கு என்ன நடக்கிறது என்பது கிளைக்கதை. ஏனென்றால் எப்போதும் வயதான ஆண்களுக்குதான் துனை கிடைப்பது கஸ்டம், பெண்களுக்கு எல்லா வயதிலும் அவர்கள் பின்னால் சுத்த குறைந்தது 2 ஆண்களாவது இருப்பார்கள். முழுக்கதையையும் சொல்லி விட்டால் சுவாரசியம் போய்விடும். நீங்களே பாருங்கள்.
நான் ரசித்த வசனம்.
"ஆண்கள் பூனை மாதிரி, கதவை பிராண்டிட்டே இருக்காங்களா? கதவை திறந்து வெளிய விடு, ஒரு தடவை பார்த்துட்டு பயந்துட்டு திரும்ப உள்ள வந்தாங்கணா, ஆயுசுக்கும் வெளியே போக மாட்டாங்க"
கல்யாணமாகி இருவருக்குள்ளும் இடைவெளி விழுந்துருக்கும் ஒவ்வொரு கணவன் மனைவியும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். அதே நேரம் இவர்கள் படத்தில் அடிக்கும் கூத்தை பார்த்து சிரிப்பை அடக்காமல் இருக்க முடியாது. முடிந்தால் பாருங்கள்.
படத்தின் ட்ரெய்லரை பார்க்கனுமா?

வந்ததும் வந்தீங்க, அப்படியே கமெண்ட் அ போட்டு மத்தவங்ககிட்டயும் பகிர்ந்துக்குங்க.

Monday, 4 June 2012

மாலை நேரம்-குறும்படம்

 அன்பு நண்பர்களுக்கு வணக்கம், சாதாரணமா ஒரு படம் பார்த்து முடிக்க 2 மணி நேரத்துக்கு மேல ஆகும், ஹாலிவுட்னா பராவாயில்லை ஒரு 1.30 மணிக்குள்ள பார்த்துடலாம், அந்த அளவுக்கு கூட டைம் இல்லாதப்ப பார்க்கறதுக்குனுதான் குறும்படங்களை நெட் ல இறக்கி வச்சு பார்க்க ஆரம்பிச்சேன். அந்த வகைல எனக்கு ரொம்ப பிடிச்ச காதல் அ அருமையா சொன்ன குறும்படம் இந்த "மாலை நேரம்".


ஒரு நாள் எதெச்சையா ஒவ்வோரு சேனல் ஆ மாத்திட்டு இருக்கும் போது நம்ம கேப்டன் டீவில "கூத்துப்பட்டறை" னு ஒரு ப்ரோக்ராம், சரியா பேர் நினைவுல இல்லை தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க. அதுல பாதிலருந்துதான் இந்த குறும்படத்தை பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது.அதுக்கு அப்புறம் நெட் ல தேடி எடுத்தேன்.

கதைனு பார்த்தீங்கனா பெருசா கருத்து சொல்ற மாதிரிலாம் இல்லைங்க, ஒரு சராசரி வாலிபனுக்கு போன் மூலமா ஒரு பொன்னோட அறிமுகம் கிடைக்குது. அவனும் ரொம்ப எதிர்பார்ப்போட போய் நேர்ல பார்க்கும் போது அது ஸ்கூல் படிக்கற சின்ன பொன்னுனு தெரியுது, அவனுக்கு என்ன பன்றதுனு தெரியாம குழம்பி, எரிஞ்சு விழுந்து எல்லாத்தையும் அந்த பொன்னு பொறுத்துகிட்டு எப்படி அவனை லவ் பன்ன வைக்குதுங்கறதுதான் கதை.

கண்டிப்பா பார்க்கறவங்களை  நெகிழ வைக்கற மாதிரி நிறைய விசயம் இந்த படத்துல இருக்கு. YOUTUBE  ல தேடும்போது அவார்ட் வின்னிங் சார்ட் ஃபில்ம் லிஸ்ட் ல இந்த படம் வரும். கண்டிப்பா பாருங்க.

படத்தை பார்க்கனுமா?


மறக்காம உங்க நண்பர்கள்கிட்ட பகிந்துக்குங்க.

முகப்புத்தகம்/FACEBOOK-குறும்படம்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நான் ரசிச்ச குறும்படம் பத்தி எழுதி ரொம்ப நாள் ஆச்சு. நான் வாரத்துக்கு 4 குறும்படமாவது பார்த்துடறேன். என்னை இது மாதிரி பார்க்க தூண்டுன கலைஙர் டீவி ல வர "நாளைய இயக்குனர்கள்" நிகழ்ச்சிக்கு நன்றிய சொல்லிகிட்டு உள்ள போவோம்.

முகப்பத்தகம்/FACEBOOK-இதுதான் படத்தோட பேர். இது என்னை பெருசா ஈர்க்கலை, ஏனா இந்த மாதிரி பார்க்காம லவ் பன்றது பத்தி நிறைய குறும்படம் வந்துருச்சு. 
என்னை கவனிக்க வச்ச 2 விசயம். ஒன்னு இதுல நடிச்சுருக்க ஹீரோ வேற யாருமில்லை. நம்ம ஆல் ரவுண்டர் சிவகார்த்திகேயன் தான், ரெண்டாவது இதுல நடிச்சுருக்க இன்னோரு பிரபலம் என்னோட ஃபேவரட் எழுத்தாளர் பாலகுமாரனோட பையன் சூர்யா பாலகுமாரன், இவர் எப்ப பெரிய திரைல படம் பன்ன போறார்னு நான் காத்துட்டுருக்கேன், இந்த குறும்படத்துலயும் நடிப்பு இல்லாம டைரக்ஸனலயும் கொஞ்சம் இறங்குனதா கேள்வி பட்டேன்.
படத்தோட கதைக்களம் ஃபேஸ்புக் தான், அதாவது பார்க்காம காதலிக்கறது, அதை எப்படி சில மோசமானவங்க அவங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கறாங்கனும் உண்மையான காதலும் வந்து போய்கிட்டுருக்குங்கறதயும் அழகா ரொம்ப நகைச்சுவையா கலாட்டாவா சொல்லிருப்பாங்க.
அதுலயும் அந்த 4 நண்பர்களோட அறிமுகமும் அவங்களை பத்தி சொல்றதுக்காக வச்சுருக்க பாட்டுல அவங்க அடிக்கற கூத்தும். கண்டிப்பா எல்லாரையும் ரசிக்க வைக்கும்.

படத்தை பார்க்கனுமா?

வந்ததும் வந்தீங்க, கமெண்ட் போட்டு மத்தவங்ககிட்டயும் பகிர்ந்துக்கங்க.

Sunday, 3 June 2012

ஹாலிவுட் மங்காத்தா- THE ITALIAN JOB/ திரை விமர்சனம்-review

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், நிறைய பேர் இந்த படத்தை பார்க்காமையோ கேள்வி படாமயோ இருக்க மாட்டிங்க, எனக்கு ஒரு நண்பன் இருக்கான் கன்னன்னு, அவந்தான் எங்க க்ருப்லயே முதல்ல நெட் கனேக்ஷன் வாங்கி ஹாலிவுட் படமா இறக்கி குடுத்து எங்களை பார்க்க வைப்பான், நான் அவன்கிட்டருந்து 200GP க்கு படம் வாங்கி வந்து வச்சுருக்கேன், அதுல இன்னும் பாதி கூட பார்த்து முடிக்கலைங்கறது வேற விசயம்,இன்னைக்கு ஏதாவது ஒரு படம் அதுலருந்து பார்க்கலாம் நு தேடும் போது இந்த "ITALIAN JOB" படம் மாட்டுனுச்சு. 
இந்த பேரை எங்கயோ கேள்வி பட்டுருக்கமேனு யோசிச்சதுல டக்னு வந்தது. சூர்யாவோட அயன் படத்துல ஒரு சீன் ல பேங்க் அ கொள்ளையடிக்கற மாதிரி வந்துருக்க ஹாலிவுட் படப் பேரை லைனா சொல்லும் போது சூர்யா இந்த படத்தோட பேரையும் சொல்லுவார். சரி நாம் படத்தை அலசுவோம்.

படம் ஆரம்பிக்கும் போதே ஒரு கேங் பாரிஸ்ல தங்க கட்டிங்களை கொள்ளையடிக்க திட்டம் போடராங்க, அந்த கேங்க்ல ஒரு வயசானவர்,ஹீரோ (திட்டம் போடறவர்),வெடி வைக்கறதுல கில்லாடியான ஒரு சைட் காது கேட்காத ஒருத்தன், எல்லா வண்டியையும் வேகமா ஓட்டற நம்ம ட்ராம்ஸ்போர்ட்டர் பட ஹீரோ, இன்னோருத்தன்(வில்லன்). 
எல்லாருமா சேர்ந்து செமயா ப்ளான் பன்னி கொள்ளையடிச்சுட்டு தப்பிக்கறப்ப வில்லன் அவன் தனியா ப்ளான் பன்னி கன்பாய்ன்ட் ல எல்லா தங்கத்தையும் எடுத்துட்டு போயிடறான்,போறப்ப அந்த பெருசயும்  போட்டு தள்ளிட்டு போயிடறான்.
ஒரு வருசம் கழிச்சு அந்த பெருசோட பொன்னு (ஹீரோயின்) போலிஸ்க்காக லாக்கர் அ திறக்கற வேலைய பன்னுது. வில்லனை கண்டுபிடிச்ச ஹீரோ கேங்க் லாக்கர் அ திறக்கற பெருசு செத்துட்டதால அவரோட பொன்னுகிட்ட சென்டிமென்ட் ஆ பேசி பழி வாங்கலாம் நு கூட்டி போறாங்க. 

ஹீரோயினும் வழக்கம் போல வில்லன் வீட்டுக்கு போய் அவனை கரெக்ட் பன்னி டின்னருக்கு கூட்டி போகுது, ஆனா வில்லன் உஷாரா ஹீரோயின் விடற ரிப்பிட்டிங் டயலாக் அ வச்சு அவ பெருசோட பொன்னுன்னு கண்டுபிடிச்சுடறான். 
இப்ப வில்லனுக்கு ஒரு கேங் தங்கத்தை திருட வரது தெரிஞ்சுருச்சு. அதை பாதுகாப்பா கொண்டு போகனும்னு பெரிசா ப்ளான் பன்னி ஹெலிகாப்டர்,3 ட்ரக்,3 பைக் நு என்னனென்னமோ செய்யறான்.இதெல்லாம் தாண்டி எப்படி கொள்ளையடிக்கறாங்கங்கறத படத்தை பாருங்க, 
இதுலருந்து நிறைய சீன் நம்ம ஊர் படத்துக்கு சுட்டுருக்காங்கனு யாரும் சொல்லாமயே தெரியுது.விறுவிறுப்பான படம் , ஆக்சன் படங்களை விரும்பி பார்க்கறவங்களுக்கு ஏத்த படம்.
விமர்சனம் பிடிச்சுருந்தா மத்தவங்ககிட்டயும் பகிர்ந்துக்குங்க. திரும்ப திரும்ப சொல்றேன். வந்ததும் வந்தீங்க கமென்ட் அ போட்டு போங்க.

Friday, 1 June 2012

காதலனை தினமும் மறக்கும் காதலியின் கதை/ 50 FIRST DATES REVIEW- திரை விமர்சனம்

அன்பு நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம், நான் இந்த பதிவ எழுதும்போது காலைலங்க, நீங்க எத்தனை மணிக்கு படிக்கறிங்களோ அதனால பொதுவா ஒரு வணக்கத்தை போட்டு வைப்போம், அடுத்த தேர்தல்ல உபயோகம் ஆனாலும் ஆகும். விமர்சனம் எழுதி ரொம்ப நாள் ஆச்சு, ஏன் பதிவு எழுதியே ரொம்ப நாள் ஆச்சு. நேத்து கொஞ்சம் நேரம் கிடைச்சதும் ஏற்கனவே இறக்கி வச்சுருந்த படம் ஒன்னு பார்த்தேன், அதை பத்தி இன்னைக்கு பேசுவோம்.
படத்தோட பேர் "50 FIRST DATE". பேரை பார்க்கும் போதே ஏதோ PLAYBOY வகையா இருக்கும்னுதான் நினைச்சேன். ஆனா இது விக்கிப்பீடியால "ROMANTIC-COMEDY" ங்கற வகைல வருது, இதுக்கு முன்னே நான் போட்ட விமர்சனத்தை படிச்சவங்களுக்கு தெரியும், எனக்கு இந்த வகை படம் ரொம்ப பிடிக்கும்னு, புதுசா படிக்கறவங்க நேரம் இருந்தா அதையும் படிச்சுட்டு போங்க.
படம் ஆரம்பிக்கும் போது வரிசையா ஒவ்வொரு பொன்னா "நான் ஹாவாய் போனப்ப  என்னை ஒருத்தன் ரொம்ப கவர்ந்துட்டான், அவன் கூட ரொம்ப ஜாலியா டைம் ஸ்பெண்ட் பன்னேன், ஆனா போன் நம்பர் கேட்கும் போது எஸ்கேப் ஆகிட்டான்"னு ஒரே பில்டப், யாருடா அது? நம்ம ஊர்ல எல்லா பொன்னுங்களும் சூர்யாவ பத்தி பேசற மாதிரி பேசுதேனு பார்த்தா நம்ம ஹீரோ ஒரு பொன்னுகிட்ட வழக்கம் போல போன் நம்பர் கேட்கும்போது நான் ஒரு ஜேம்ஸ்பாண்ட் 007, என் கூட இருந்தா உனக்கும் ஆபத்து அப்படி இபாடினு சொல்லி கழட்டி விட்டுடறார். அவர் யாருன்ன அங்க இருக்க ஒரு அக்யுரியம் ல கடல்வாழ் உயிரினக்களுக்கு வைத்தியம் பார்க்கற டாக்டர். சும்மா இருக்கும் போது அங்க வர டூரிஸ்ட் பொன்னுங்களை கரெக்ட் பண்ணி கழட்டி விடறதை பார்ட் டைம் ஜாப் ஆ செஞ்சுட்டு இருக்கார்.

ஒரு நாள் ஒரு ரெஸ்டாரண்ட் ல அழகான ஒரு பொன்னை பார்க்கறார், வழக்கம் போல கிட்ட போய் மொக்கை போட்டு கரெக்ட்டும் பன்னிடறார். சரி அடுத்த நாள் பார்க்கலாம் ணு முடிவு பன்னிட்டு திரும்ப அங்க போனா அந்த பொன்னு உன்னை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையேனு சீன் போடுது.

அந்த ரெஸ்டாரண்ட் அ நடத்தற லேடி ஹீரோயின் அ பத்தி ஒரு ஃபிளாஸ்பேக் அ சொல்லுது.போன வருசம் நடந்த ஒரு கார் ஆக்சிடென்ட்ல மண்டைல அடிபட்டு ஹீரொயினுக்கு கஜினி சூர்யா மாதிரி ஒரு SHORT TERM MEMORY LOSS வந்துருது,  அந்த வியாதி படி ஆக்சிடென்ட் நடந்த நாள் வரைக்குமான எல்லா விசயமும் நல்லா நினைவு இருக்கும்.அதுக்கு அடுத்த நாள்லருந்து அவ வாழ்க்கை ஆரம்ப்பிக்கும், அன்னைக்கு தூங்கி எழுந்தா அன்னைக்கு நடந்ததும் மறந்து மறுபடியும் முதல்லருந்து ஆரம்பிக்கும்.
வித்தியாசமா இருக்குல்ல, ஏன்னு சொல்லலை, ஹீரோனாலே ஹீரோயின் முகத்துல ஆசிட் ஊத்திருந்தா கூட ஏத்துப்பாங்க, இது என்ன சின்ன மறதி கேஸ் தானேனு ஹீரோ விடாம கரெக்ட் பன்றார், என்னதான் பிட் அ போட்டு செட் பன்னி வச்சாலும் அன்னைக்கு ராத்திரி வரைக்கும் தான், விடிஞ்சா மறுபடியும் முதல்லருந்து ஆரம்பிக்கனும். 

ஹீரோ புத்திசாலித்தனமா ஒரு வீடியோ டேப் ரெடி பன்னுவார், அதை தினமும் காலைல ஹீரோயின் பார்க்கற மாதிரி, அதுல ஆக்சிடென்ட் அ பத்தியும் அதுக்கு அப்புறம் அவங்க வாழ்க்கைல நடந்தது பத்தியும். ஒரு கட்டத்துல தனக்காக தன்னை லவ் பண்றத மட்டும் தினமும் வேலையா வச்சுகிட்டு வாழ்க்கைய வீணடிக்க வேணாம்னு சொல்லி ஹீரோவ ஹீரோயின் மறக்க சொல்லிடறா, பிரிஞ்ச 2 பேரும் எப்படி ஒன்னு சேர்ந்தாங்கனு படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க.
படம் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. ஹீரோயின் வேற யாரும் இல்லை. நம்ம CHARLES ANGELS ல நடிச்ச பொன்னுதான். இந்த படத்துலருந்து நம்ம ஊரு சினிமாக்கும் ஹாலிவுட்டுக்கும் என்ன வித்தியாசம்னு தெளிவா புரிஞ்சது. அவங்கலாம் சுத்தமா லாஜிக் பார்க்கறது இல்லைங்க.

வந்ததும் வந்திங்க, ஏதாவது கமெண்ட் அ போட்டு போங்க, புண்ணியமா போகும்.

படத்தோட ட்ரெய்லர் பார்க்கனுமா?