- மழைச்சாரல்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Thursday, 24 September 2015

கிருமி – விமர்சனம்


தமிழ்நாட்டில் மின்வெட்டு புயலாய் வீசிக்கொண்டிருந்த காலகட்டம். இரவு நேர மின்வெட்டுகளில் பல வீடுகளில் திருடு போனது. ஊர்க்காவல்படை திரட்டப்பட்டது. அதாவது ஊரில் உள்ள இளைஞர்களை கொண்டு அமைக்கப்படும் குழு. இரவில் மின்வெட்டு நிகழும் சமயங்களில் இப்படை ரோந்தில் ஈடுபடும். அப்படையில் இறங்கி வேலைப் பார்த்தது முழுக்க முழுக்க  என் நண்பன் தான்.

கொஞ்சம் கொஞ்சமாய் ஊர் காவல் நிலையத்தில் அவனது போக்குவரத்து அதிகரிக்க துவங்கியது. பல வேலைகளை அவர்களுக்காக செய்து கொடுத்து கொண்டிருந்தான். சிறுவயதில் இருந்தே எல்லா மரங்களிலும் விரைவாய் ஏறி இறங்குவான். கட்டான உடலமைப்பும் கொண்டவன் . திடிரென ஒரு நாள் கான்ஸ்டபிள் ஆகிவிட்டான். அதற்கு காவல்நிலையம் பல வழிகளில் உதவியாய் இருந்ததாய் கெள்விப்பட்டேன்.

வேறு வேலை கிடைக்காததால் காவல்நிலையத்தில் உதவியாளாய் சேரும் நாயகனை சுற்றி வித்தியாசமான கதைக்களம் அமைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க...

http://www.thoovaanam.com/?p=987

Friday, 14 August 2015

கலாய்ச்சுட்டாராமாம்...

ஒரு பெரிய மனிதர் அல்லது மற்றவர்கள் அனைவரும் பாராட்டுகிற ஒருவரை சடாரென கவிழ்த்து விடுவது பற்றி பேசி கொண்டிருக்கையில் எனக்கு 3 காட்சிகள் நினைவுக்கு வந்தது...

முதல் காட்சி நம் கவுண்டர் நடித்த தங்கம் படத்தில் இருந்து, அந்த படத்தில் அவர் ஒரு வேட்டைக்காரனாக பேட்டி அளிக்கும் பொழுது சொல்லுவார்... தான் வேட்டைக்கு செல்லும் பொழுது திடிரென சிங்கம் தன்னை தாக்க வந்ததாகவும் அவர் உடனே இடைமறித்து "இவ்ளோ பெரிய காட்டுக்கு ராஜாவா இருக்கையே, ஒரு ஜட்டி கூட போடாம சுத்தறயே, உனக்கு வெட்கமா இல்லை?" என்றதும் சிங்கம் அவமானத்தில் திரும்பி சென்று ஒரு மரத்தில் ஒளிந்து கொண்டதாக சொல்வார். இந்த காட்சியை முதலில் பார்க்கையில் பெரிதாய் ஈர்க்கவில்லை, ஆனால் நண்பன் ஒருவன் அடிக்கடி யாரையாவது கிண்டலடிக்க இதை பயன்படுத்தும் தொனியை ரசிக்க துவங்கினேன்...  இரண்டாவது ராமாயணத்தில் வரும் காட்சி, சீதை மிக அழகி, உலக அழகி, அவளை போல் வேறொரு பெண் எங்கும் கிடைக்க மாட்டால் என்ற பின்னர்தான் மாற்றான் மனைவி என தெரிந்தும் ராவணன் அவளை சிறைப்பிடித்தான் என்ற பேச்சு உலமெல்லாம் பரவ, சீதையை சிறை மீட்டு கிஷ்கிந்தைக்கு அழைத்து வந்த பின் அவளை வேடிக்கை பார்க்க அனைத்து பெண் வானரங்களும் குவிந்தன, அதில் ஒரு பெண் வானரம் சொன்னதாம் "என்னங்கடி, சீதையை உலக அழகின்னு சொன்னிங்க, இந்த பொண்ணுக்கு எங்கடி வாலையே காணோம்?".   


மூன்றாவது காட்சியாக என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது கருந்தேள் ராஜேஸ் எழுதிய கதையில் வரும் காட்சி...

மார்லன் ப்ராண்டோ ஹாலிவுட்டின் நடிப்பு மன்னன். அவர் பையன் ஆடம் சாண்ட்லர். ஆடம் சாண்ட்லரும் ஜிம் கேரியும் small brother படத்தில் நடித்து ஜிகிரி தோஸ்த் ஆகிவிட்டனர். ஒருமுறை சாண்ட்லர் ஜிம் கேரியை வீட்டுக்கு அழைத்தார். ஆனால் ஜிம் கேரியோ, 'அந்த ஓல்டு பார்ட்டி ப்ராண்டோ வீட்ல இருக்கும்பா.. அது ஒரு மொக்க கேசு. நான் வரல' என்று சொல்லிவிட்டார். ஆனாலும் சாண்ட்லரின் வற்புறுத்தலின் பேரில் வேறு வழியே இல்லாமல் வீடு செல்லவேண்டிய கட்டாயம். பின் வாசல் வழியே ப்ராண்டோவின் மொக்கைக்குப் பயந்து செல்கிறார். அன்று பின் வாசலில் ப்ராண்டோவே நின்றுகொண்டிருக்கிறார். இதோ அவர்களுக்குள் நடந்த டயலாக்.

நீருதான் ஜிம் கேரியோ.. கவுண்ட்டர் கொடுப்பியளோ..

அதெல்லாம் இல்லைங்க.. சும்மா ஓட்டுறானுங்க..

ஏம்ப்பு.. நானும் நாடக நடிகந்தேன்.. எனக்கு கவுண்ட்டர் கொடு பார்க்கலாம்..

அட என்னங்க.. நீங்க நடிப்புக் கடவுள். உங்களுக்கெல்லாம் எப்புடிங்..

ஒருவாறு மழுப்பிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார் ஜிம் கேரி.

சிலகாலம் கழித்து கடவுளின் மகன் என்ற காவியம் ரிலீஸ். இதில் ப்ராண்டோ அல் பசீனோவின் அப்பா. பட ப்ரிவ்யூ. அனைவரும் வந்து ப்ராண்டோவின் காலில் விழுந்து, செம்ம நடிப்பு சார் என்று சொல்கின்றனர். அப்போது பலத்த சிரிப்பு சத்தம் தியேட்டரில் கேட்கிறது. ப்ராண்டோ டென்ஷன் ஆகிறார். சிரித்தது நம் ஜிம் கேரிதான்.

அவரைக் கூப்பிடுகிறார் ப்ராண்டோ. ஜிம் கேரி சிரித்தபடியே வருகிறார்.

ஏம்ப்பு.. எங்க நடிப்பெல்லாம் சிரிக்கிற மாதிரி இருக்கோ..

இல்லைங்க. நீங்க நடிப்புக் கடவுள்றானுங்க. நடிப்புக்கு உங்களை மாதிரி யாரும் இல்லைன்றானுங்க. ஆனா, படத்துல ஒரு குட்டிப்பொண்ணு உங்க குஞ்சை மிதிச்சி பொட்டுனு செத்துட்டீங்களே..

சொல்லிவிட்டு விழுந்து புரண்டு சிரிக்கிறார் ஜிம் கேரி. இதுவரை யாருமே ப்ராண்டோவின் முகத்துக்கு நேராகவே அவரை இப்படிக் கலாய்த்ததில்லை. ப்ராண்டோவின் முகம் இறுகுகிறது. 
 

ஏலே. வண்டிய எட்றா..என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார் ப்ராண்டோ. செல்கையில் ஜிம் கேரியின் சிரிப்பு சத்தம் இன்னும் எதிரொலிக்கிறது.

இதுதான் ஜிம் கேரி. கவுண்ட்டர் மன்னர்.

இதை ஜிம் கேரியின் நண்பர் சொல்லி உட்லண்ட்ட்ஸில் செந்தேளும் அவனது நண்பர்களும் கேட்டுக் கண்டபடி சிரித்தனர்.     

Sunday, 24 May 2015

டிமாண்ட்டி காலணி விமர்சனம்

http://www.thoovaanam.com/?p=922
தமிழ் சினிமாவை சந்திரமுகியில் பிடித்தது இந்த பேய்(சீசன்), கொஞ்சம் இடைவெளி விட்டு பீட்ஸா விலிருந்து வருடத்திக்கு 4 பேய் படமாவது வந்து கொண்டே இருக்கிறது, அதை வரிசை படுத்தி நான் போட்ட ட்விட்தான் என்னுடையதில் அதிகமாய் பகிரபட்டது.
பேயை பார்த்து
பயந்தா – பீட்ஸா, காஞ்சனா
சிரிப்பு வந்தா – யாமிருக்க பயமே
மூடு வந்தா – அரண்மனை
அழுகை வந்தா – பிசாசு
பயமுறுத்தற பேய் பட வரிசைல ‘டிமாண்ட்டி காலணி’ படத்தையும் சேர்த்துக்கலாம், நான்கு அறைத்தோழர்கள், ஒரு எலக்டரீசியன், ஒரு இயக்குனராக முயலும் இளைஞன், போட்டோஷாப் டிசைனர், நான்காவதாக நாயகன் அருள்நிதியின் தொழிலை படத்தில் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். முதல் 25 நிமிடங்கள் வரை இது ஒரு பேய் படம் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். சராசரியாக போகும் கதையில் ஒரு நாளிரவு விளையாட்டாக பேய் வீடான டிமாண்டி காலணிக்கு செல்கிறார்கள், நால்வரில் ஒருவரான எலக்ட்ரீசியன் மிகவும் பயந்த சுபாவம் உடையவர், அவரை மற்றவர்கள் மறைந்திருந்து பயமுறுத்துகிறார்கள், அப்போது அங்கங்கே சில அமானுஷ்யங்கள் தென்படுகின்றன. அங்கே ஆரம்பிக்கும் திகில் படத்தின் இறுதி காட்சி வரை தொடர்கிறது.
ஜான் டிமாண்ட்டி என்ற 100 வருடத்திற்கு முன்பு சென்னையில் பெரிய மாளிகையில் வசித்த வெள்ளைக்காரர் பெரும் செல்வந்தர், அவரது மனைவிக்காக ஒரு தங்க சங்கிலி வாங்குகிறார், அது வந்ததில் இருந்து பிரமை பிடித்தது போல் இருக்கும் அவரது மனைவியை தனியே விட்டு விட்டு, கல்கத்தாவில் இருக்கும் சொத்துகளை விற்றுவிட்டு 5 மாதங்கள் கழித்து வரும் டிமாண்டிக்கு அவரது மனைவி கும்பலாக சில பேரால் கற்பழிக்க பட்டது தெரிய வருகிறது, இவ்வளவு பெரிய மாளிகையில் இத்தனை பாதுகாப்பிற்கு நடுவில் தம் மனைவிக்கு இப்படி ஒரு கொடுரம் நிகழ்ந்திருக்கிறது எனில் மாளிகையில் இருக்கும் வேலைக்காரர்கள் சம்பந்தப்படாமல் நிகழ்ந்திருக்காது என் கண்ணில் படும் அனைத்து வேலைக்காரர்களையும்  சுட்டு கொன்று விட்டு, மாளிகையை கொளுத்தி மனைவியோடு தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பின் அந்த மாளிகைக்கு சென்ற யாரும் உயிர் வாழ்வதில்லை, இது தெரியாமல் விளையாட்டாய் அங்கு சென்று விட்டு வரும் 4 பேரையும் தொடரும் அமானுஷ்யங்களில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா என்பதே 80% படம்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உண்மையிலேயே பேய் கதைகள் பேசப்படும் டிமாண்ட்டி காலணியை வைத்து தான் இந்த கதையை எழுதி இருக்கிறார் இயக்குனர். எங்கே இருந்து அந்த டிமாண்டி வெள்ளைக்காரனை பிடித்தவர்கள் என்றே தெரியவில்லை, கிட்டத்தட்ட 7 அடி உயரம். மாளிகையை சுற்றி மக்கள் தீப்பந்தத்துடன் கதவை உடைக்கையில் அந்த உடைக்கும் சப்தத்திற்கு சரியாக கையிலிருக்கும் வேட்டை துப்பாக்கியை தரையில் இடிக்கும் போது, அப்பப்பா கொடுரம் தான்.
படத்தில் கிளர்ச்சியுட்ட எந்த நாயகியும் இல்லை, தேவையே இல்லை,  சில இடங்களில் மட்டும் சிரிக்க வைத்துவிட்டு மற்ற அனைத்து இடங்களிலும் பயமுறுத்துகிறார்கள், அதற்காக கோரமான உருவம் கொண்ட பேய்கள் இல்லை. அடுத்து என்ன நடக்கும்? எப்படி தப்பிப்பார்கள் என்றே முழுதாய் நம்மை யோசிக்க செய்து சீட்டின் நுனிக்கு தள்ளுகிறார்கள்.
சில இடங்கள் வேற்று மொழியில் வந்த காட்சிகளை நினைவு படுத்துகின்றன, காட்சிகள் மட்டும் தான், தமிழில் கட்டாயம் இது புதிய முயற்சி தான், பிண்ணனி இசையும் கேமராவும் படத்திற்கு பெரிய பலம்.
புது மாப்பிள்ளை அருள்நிதி முகத்தில் கல்யாண களை அதிகமாகவே தெரிகிறது, உதயநிதியுடன் என்ன பிரச்சனையோ ஒரு இடத்தில் வாரி இருக்கிறார்.
“காமெடி கதை வேணும், எப்படின்னா செலவே இல்லாம படம் முழுக்க 2 பேரும் பேசிட்டு இருக்கனும், யார் ஹீரோ யார் கமெடியன்னே தெரிய கூடாது, அப்புறம் கவர்ச்சியான ஹீரோயினை வச்சு 5 பாட்டு”
படத்தில் ரொம்ப பயப்படுபவராய் வருபவர் வெறுமனே படுத்து தூங்கி கொண்டே நம்மை பயமுறுத்துகிறார். நாடி ஜோதிடராய் வரும் எம்.எஸ். பாஸ்கர் சொல்லும் விஷயத்தில் இருந்து தான் படம் மின்னல் வேகம் எடுக்கறது. கொஞ்சம் வில்லா, கொஞ்சம் பீட்ஸா, கொஞ்சம் சிக்ஸ்த் சென்ஸ் படங்களில் இருந்து எடுத்து கதைக்கான களத்தை உருவாக்கி இருக்கிறார்கள், திரைக்கதை தமிழிற்கு புதிது.
சூது கவ்வும் ரமேஷ் அவரது பாத்திரத்தை இயல்பாய் செய்திருக்கிறார், ஒரு காட்சியில் வந்தாலும் பன்னி மூஞ்சி வாயனும் , சிங்கம்புலியும், பாஸ்கரும் மனதில் நிற்கிறார்கள்.
பேய் வீட்டில் இருந்து வருபவர்களுக்கு என்ன மாதிரியான தொந்தரவு வருகிறது? தப்பிக்க எடுக்கும் முயற்சிகள், தப்பித்தார்களா என்று சொல்லி படத்தின்  சுவாரசியத்தை கெடுக்க விரும்பவில்லை, கண்டிப்பாய் பயமுறுத்தும் இப்படத்தை நம்பி திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம்.


Wednesday, 8 April 2015

மாதொருபாகன்,ஆலவாயன் & அர்த்தநாரி – பெருமாள் முருகன்

நடந்த கலவரங்களில் தமிழ்நாடு முழுக்க இவரை அறியும். கூகுளில் எழுத்தாளர் என அடித்தால் இவர் பெயர் உடன் வரும் அளவுக்கு கொஞ்ச நாள் தலைப்பு செய்தியாக இருந்தார். நடந்த பிரச்சனைகளை பற்றியோ, எது சரி, தவறு என்பது பற்றியோ பேச போவதில்லை. இப்பதிவின் நோக்கம் “மாதொருபாகன்- ஆலவாயன் – அர்த்தநாரி” புத்தகங்களை பற்றியது. பலர் இப்புத்தகத்தை அறிமுகப்படுத்தி இருந்த போதும் பெருமாள் முருகனை நோக்கி பல சங்கங்கள் கல்லெறிய துவங்கிய போதுதான் மாதொருபாகனை வாங்க நெர்ந்தது. வாங்கும் பொழுது அதன் தொடர்ச்சியாக இரண்டு புத்தகங்களின் வெளியீடும் நடந்தது, எனவே அந்த புத்தகங்களையும் வாங்கினேன்.

நீங்கள் வக்கிரம் என நினைத்தால் வக்கிரமாகவும் எதார்த்தமாக நினைத்தால் எதார்த்தமாகவும் தெரியும் பல விஷயங்களை எழுத்தாளர் தைரியமாய் எழுதி இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் என்றால் காளியின் சித்தப்பா நல்லுப்பிள்ளை தான். ஊரே குடுமி வைத்திருக்கும் பொழுது கிராப் வெட்டிக் கொள்வதில் துவங்கி, சொத்துக்களை பிடுங்கி கொள்ள பார்க்கும் தம்பிகளை பஞ்சாயத்தில் சமாளிப்பதிலும், அதே சொத்துக்காக கடைசி தம்பி தனது மனைவியை கூட்டிக் கொடுக்க முயலுகையில் எடுக்கும் முடிவிலும், குழம்பி போய் இருக்கும் காளியை தெளிவாக்கும் நல்லுப்பிள்ளை சித்தப்பா பாத்திரத்துக்காகவே மூன்று நூல்களையும் இன்னொரு முறை படிக்கலாம்.
தமிழ் வாசிப்பை நேசிக்கும், தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை அறிய முற்படும் ஒவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் இம்மூன்றும்.

மாதொருபாகன்


திருமணமாகி 8 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை இல்லாமல் வாடும் காளி-பொன்னா தம்பதியினரை பற்றியதுதான் இந்நாவல், அவர்களின் வாட்டத்தையும் விவசாய வாழ்க்கையையும், சுற்றத்தின் தூற்றலையும், சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தையும் தெளிவாய் விவரிக்கும் இந்த நாவல் எந்த இடத்திலும் சலிப்பை தராத எழுத்துநடை. போகிறபோக்கில் வந்து போகும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மை ஈர்க்கும். குழந்தை இல்லாததை தம்பதியினரே பெரிதாய் எண்ணாத போதும் சுற்றியுள்ள சுமூகம் எங்ஙனம் அதை சுட்டிக்காட்டும் என விவரித்திருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் எதார்த்தம். காளி-பொன்னா தம்பதியினரின் குடும்பத்தினர் கோவில் திருவிழாவின் 13ம் நாள் இரவு பொன்னாவை அனுப்பலாம் என முடிவு செய்து காளியிடம் வினவ காளி அதற்கு ஒப்பவில்லை. 13ம் திருவிழா நாள் அன்று குழந்தை இல்லாத பெண்களும், குழந்தை இருந்தும் ஆண் குழந்தைக்காக ஏங்கும் பெண்களும் மலையை சுற்றி வரும் ஆண்களில் தங்களுக்கு பிடித்தவர்களுடன் கூடி குழந்தை வரம் வாங்குவார்கள்.

அந்த வரம் தரும் ஆண்கள் மலை மேல் இருக்கும் ஈசனின் வடிவமாகவே கருதப்படுவார்கள். பிறக்கும் குழந்தையினை சாமி பிள்ளை என்றே அழைப்பார்கள். ஊரில் ஏதேனும் முடிவெடுக்க குடவோலை குலுக்கையில் சீட்டெடுக்க முதல் உரிமை இத்தகைய சாமிபிள்ளையினையே போய் சேரும். எங்கள் ஊர் பகுதியிலும் இத்தகைய நம்பிக்கை உண்டு. மேட்டூர் அருகே உள்ள பாலமலை மேலுள்ள மாதேஸ்வரனை வணங்கி, கோவிலருகே உள்ள புல்லில் ஒரு கையால் முடிச்சிட வேண்டும். இப்படி செய்தால் திருமணம் தள்ளி போகாமல் உடனே நடைபெறும். திருமணம் முடிந்த பின் துணையுடன் வந்து அங்கிருக்கும் புல்லிலுள்ள முடிச்சினை அவிழ்த்திட வேண்டும். நான் முடி போட்டு திருமணமும் செய்து விட்டென். போய் அவிழ்க்க வேண்டும்.

சரி கதைக்கு வருவோம். தன்னைத் தவிற யாருடனும் தன் மனைவி இணைய கூடாது. கடவுள் வந்து தருவதாய் இருந்தால் என் உடலில் இறங்கி தரட்டும் என் காளி பிடிவாதம் பிடிக்க, பொன்னாளும் கணவன் சொல்லை தட்டாமல் இருக்க, வேறு வழியில்லாத வீட்டினர் காளி சம்மதித்து விட்டான் என பொய் சொல்லி காளிக்கு தெரியாமல் பொன்னாவினை திருவிழாவிற்கு அழைத்து செல்கின்றனர். ஆனால் மேலும் படிக்க