LUCIA - இந்திய சினிமாவின் மைல்கல்
அன்பர்களுக்கு வணக்கம், நீண்ட நாட்களுக்கு பின் விமர்சனம் எழுத வந்துள்ளேன், அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தினை பற்றி அனைவரும் அறிய வேண்டும் என்பதே. லூசியா- கன்னடத்தில் 2013 செப்டம்பரில் வெளியானது. கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், கருந்தேள் மற்றும் பல பிரபல பதிவர்கள் போல என்னால் விமர்சனம் எழுத முடியாது, அவர்களில் யாராவது இப்படத்தினை பார்த்து விமர்சனம் எழுதி மக்களிடம் சேர்ப்பித்தால் மிகவும் மகிழ்வேன். வழக்கமாக மற்ற மொழிப் படங்களை விரும்பி பார்ப்பவர்கள் கூட கன்னட திரைப்படங்களை விரும்புவதில்லை, ஏனென்றால் அது 20 வருடம் பின் தங்கி உள்ளதாக கூறப்படுவதே. ஆனால் தற்போதைய நிலை வேறு. இப்படத்தின் இயக்குனரின் முந்தைய படம் சரியாக போகாததால் இந்த படத்தினை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. கதைச்சுருக்கத்தை தனது வலைப்பக்கத்தில் வெளியிடவும் 110 பொதுஜனம் சேர்ந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். சரி படத்திற்குள் செல்வோம். படம் ஆரம்பிக்கையில் கதையின் நாயகன் மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் கோமாவில் இருக்கிறார், அவரை கருனைக்கொலை செய்வது பற்றி நாடெங்கும் விவாதம் நடந்து கொண்டி...