LUCIA - இந்திய சினிமாவின் மைல்கல்

அன்பர்களுக்கு வணக்கம், நீண்ட நாட்களுக்கு பின் விமர்சனம் எழுத வந்துள்ளேன், அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தினை பற்றி அனைவரும் அறிய வேண்டும் என்பதே. லூசியா- கன்னடத்தில் 2013 செப்டம்பரில் வெளியானது.

 

கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், கருந்தேள் மற்றும் பல பிரபல பதிவர்கள் போல என்னால் விமர்சனம் எழுத முடியாது, அவர்களில் யாராவது இப்படத்தினை பார்த்து விமர்சனம் எழுதி மக்களிடம் சேர்ப்பித்தால் மிகவும் மகிழ்வேன்.

வழக்கமாக மற்ற மொழிப் படங்களை விரும்பி பார்ப்பவர்கள் கூட கன்னட திரைப்படங்களை விரும்புவதில்லை, ஏனென்றால் அது 20 வருடம் பின் தங்கி உள்ளதாக கூறப்படுவதே. ஆனால் தற்போதைய நிலை வேறு.

இப்படத்தின் இயக்குனரின் முந்தைய படம் சரியாக போகாததால் இந்த படத்தினை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. கதைச்சுருக்கத்தை தனது வலைப்பக்கத்தில் வெளியிடவும் 110 பொதுஜனம் சேர்ந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். சரி படத்திற்குள் செல்வோம்.


படம் ஆரம்பிக்கையில் கதையின் நாயகன் மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் கோமாவில் இருக்கிறார், அவரை கருனைக்கொலை செய்வது பற்றி நாடெங்கும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.


இப்படம் ஒரு Non-linear வகை, இப்படி கோமாவில் கிடப்பவர் தற்கொலை முயற்சியால் இப்படி வந்தாரா? இல்லை கொலை முயற்சியா? என்பதை விசாரிக்க CBI அதிகாரி ஒருவர் ஐன்ஸ்டைன் கெட் அப்பில் வருகிறார், அவரது விசாரணையில் "லூசியா" எனப்படும் தூக்க மாத்திரை பற்றி தெரிய வருகிறது.



அந்த மாத்திரையின் ஸ்பெசல் கனவு, தினமும் வரும் கனவு தொடர்ச்சியாக வரும் ஒரு மெகா சீரியல் போல. 

இன்னொரு புறம் ஒரு டூரிங் டாக்கிசில் லைட் மேனாக(டிக்கெட்டை பார்த்து இருக்கையில் அமர வைப்பவர்) வேலை பார்க்கும் நாயகன் தூக்கம் வராமல் தவிக்க, தூக்க மாத்திரை என நினைத்து "லூசியா"வை எடுத்து கொள்ள ஆரம்பிக்கிறார்.

 http://creofire.com/wp-content/uploads/2013/11/illusion.jpg

அதன் மூலம் வரும் கனவில் உச்சத்தில் இருக்கும் நடிகராக வருகிறார். என்ன சுவாரசியம் என்றால் நிஜ வாழ்வில் வரும் அனைவரும் கனவில் வருகிறார்கள் வெவ்வேறு பாத்திரங்களில்

தியேட்டர் ஓனர் - கால் ஷிட் மேனேஜர்
கனவுக்கன்னி நடிகை- உடன் நடிக்கும் நடிகை
ரூம் மெட்ஸ் - சினி டெக்னிஷியன்ஸ்
 காதலிக்கும் பெண்(Pizza park server) - Modeling Girl (காதலி)
லோக்கல் ரவுடி - கான்ட்ராக்ட் கில்லர்

கனவு வாழ்க்கை கருப்பு-வெள்ளையில் தெரிகிறது, கனவு-நிஜம் இரண்டு வாழ்க்கையிலும் நடக்கும் விஷயங்கள் சமமாக போய் கொண்டே இருக்கிறது, எங்கே போய் முடிகிறது? எதனால் நாயகன் கோமா ஸ்டேஜ்க்கு போனார்? போலிஸ் "லூசியா"வை பற்றி கண்டு பிடித்ததா என படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் நடித்திருக்கும் அனைவரிடமும் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் லோக்கலாகவும், ஹைஃபையாகவும் காட்டிருக்க அவர் பட்ட கஷ்டம் புரிகிறது. படம் ஜெயித்திருப்பதை நினைக்கையில் மகிழ்ச்சி.

படத்தின் ட்ரெய்லர்


அனைவரும் பார்க்க வேண்டிய படம், தமிழ் சினிமாவை விட 10 வருடம் முன்னேறி சென்று விட்டது கன்னட சினிமா.

இப்படத்தினை எனக்கு அறிமுகம் செய்த நண்பன் சரவணனுக்கு நன்றி.

Comments

  1. நல்லாருக்கும் போலயே... பாத்திருவோம்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2