"அப்பா, அடிக்காதிங்கப்பா, இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்ப்பா" - தந்தையர் தினம்
அன்பர்களுக்கு வணக்கம், இன்று தந்தையர் தினம், அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், பெண்களை பற்றி சொல்லவே வேண்டாம், நாம சாதாரணமா பேசறப்பவே அவங்கப்பா எப்படிலாம் அவங்க மேல பாசமா இருக்காங்கனு சொல்லி வெறுப்பேத்துவாங்க, பசங்கள்ல பாதி பேருக்கு என்னதான் அவங்கப்பா மேல பாசம் இருந்தாலும் 2 பேருக்கும் நடுவுல பெரிய இடைவெளி இருக்கும், படிப்பு முடிஞ்சு வேலைக்கு போக ஆரம்பிச்சதும் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகும்...
இன்னைக்கு ஒரு நாள் முழுக்க அவங்கவங்க அப்பா கூட நடந்த நல்லது, கெட்டதை அசை போட்டுகிட்டு இருப்போமே, முதல்ல நான் என் அனுபவங்களை சொல்றேன்....
நான் எங்க வீட்ல 4 வது பையன், கடைக்குட்டி, அப்பா செல்லம், அதனால எங்கப்பா என்னை அடிச்சா இரத்தம் வராத அளவுக்கு தான் அடிப்பார், எங்க பரம்பரைலயே எங்க குடும்பத்துலதான் முதல்முறையா எல்லாரையும் காலேஜ் வரைக்கும் படிக்க வச்சது, எங்கப்பா 5 வது தான், ஆனாலும் 10வது வரைக்கும் நான் படிக்கறப்ப அது கணக்கு பாடமா இருந்தாலும் சத்தமா படிக்க சொல்லி பக்கத்துல உட்கார்ந்து கேட்டுகிட்டு இருப்பார்...
எங்கப்பாகிட்ட எனக்கு பிடிக்காத விஷயம் எப்ப எனக்கு பரிட்சை முடிஞ்சு ரிசல்ட் வந்தாலும், அது காலாண்டு, அரையாண்டு பரிட்சையா இருந்தாலும் என் மார்க்கை மத்த படிக்கற பசங்களோடயும் அவருக்கு தெரிஞ்சவங்க வீட்ல படிக்கற பொன்னுங்களோடயும் ஓப்பிடுவார், செம காண்டாகும், பதிலுக்கு நானும் சத்தம் போடுவேன், உடனே வீட்டை விட்டு போறேன்னு துணியைலாம் மூட்டை கட்டுவேன், அப்புறம் அம்மா தோசை சுடற சத்தம் கேட்டதும் சமாதானமாகிருவேன்.
அப்பாக்கு நான் வாத்தியாருங்களை எதிர்த்து பேசுனா பிடிக்காது, கடைசியா 10வது டியுசன் வாத்தியார் கூட சண்டை போட்டுட்டு இனி டியுசன் வரமாட்டேன்னு சொல்லி வீட்டுக்கு வந்தவனை நெஞ்சுலையே மிதிச்சு(உண்மைதாங்க) கொண்டு போய் விட்டார், 10 வது வரைக்கும் படிச்ச அரசு பள்ளிக்கூடத்துல நான் சேட்டை பன்றப்பலாம் "நீ ரத்தினத்துகிட்ட சொன்னாதான் அடங்குவ"னு சொல்லி காத்தை பிடுங்கி விட்ருவாங்க...
ஆனா அதே ஸ்கூல்ல, நாங்க பசங்க கபடி விளையாண்டுகிட்டு இருந்ததை கம்பிவேலி வழியா பார்த்துட்டு இருந்தார், தூரத்துலஇருந்து PD சார் விசில் அடிச்சு கூப்பிட, நாங்க எங்கப்பா பார்க்கற உற்சாகத்துல அதை கவனிக்காம நேரம் கழிச்சு போக எல்லாரையும் கைய நீட்ட சொல்லி பச்சை மூங்கில்ல அடிபின்ன, பார்த்துட்டு இருந்த எங்கப்பா மத்த லாரி டிரைவருங்க(அப்பாக்கு தொழில் டிரான்ஸ்போர்ட்) எல்லாரும் உள்ளே சண்டைக்கு வந்த விசயம் எனக்கு அடுத்த நாள்தான் தெரியும்.
காலேஜ் படிக்கறப்ப அவர்கிட்ட நிறைய பொய் சொல்லி இருக்கேன், இப்ப வரைக்கும் அவருக்கு நான் அர்ரியர் வச்ச விஷயங்கள்லாம் தெரியாது, காலேஜ்ல ஒரு பிரச்சனைக்கு அப்பா வந்ததான் உள்ளே விடுவேன்னு சொல்லி என்னை வெளிய நிக்க வச்சப்ப உடனே கிளம்பி வந்து எனக்காக ஒவ்வொருத்தர்கிட்டையும் பேசி அனுமதி வாங்கி, கடைசியா கிளம்பறப்ப செலவுக்கு பணம் கொடுத்து "உனக்கு நேரம் சரியில்லைடா, அதான் இப்படிலாம் பன்ற, தினமும் கோவிலுக்கு போ, எல்லாம் சரி ஆகிரும்"னு சொன்னது ரொம்ப நாள் என்னை ஏதோ செஞ்சுகிட்டே இருந்தது.
அவருக்கே நான் அர்ரியர் வச்ச விஷயம் அரைகுறையா தெரிய வரப்ப இது வரைக்கும் காலேஜ்க்கு கட்டுன பணத்தை எடுத்து வச்சுட்டு வீட்டை விட்டு வெளிய போக சொன்னது என்னை 3 மணி நேரம் அழ வச்சது, அதே அப்பா பொன்னு விஷயத்துல என்னை சீனியர் அடிக்க வந்த விஷயம் கேள்வி பட்டதும் 10 பேரோட வந்து அவன்கிட்ட "என் பையன் எவ கூட வேணா சுத்துவான், உனக்கு என்னடா பிரச்சனை?"ன்னு அவன் குருப்பையே மிரட்டனது காலேஜ்ல என்னை நிமிர்ந்து நடக்க வச்ச விஷயம்.
அப்பா கூட அவர் தொழிலுக்கு உதவியா இருந்தப்ப 2 பேருக்கும் தினமும் ஏதாவது சண்டை வரும், கிட்டத்தட்ட "எம்டன் மகன்" கதைதான், பல பெரிய தப்புக்கள் பண்ணி அவர்கிட்ட நேரடியா மாட்டி இருந்தாலும் நேரடியா என்னை திட்டுனதே கிடையாது, என்னை தவிர, அம்மா, அக்கா, அண்ணண்ங்கனு எல்லாரும் திட்டு வாங்குவாங்க.
பல விஷயங்கள், அவரோட கருத்துக்கள், அதிகப்படியான பக்தி என்னை முழுசா அவரை வெறுக்க வச்சது, நீங்களே யோசிச்சு பாருங்க, திடிர்னு ஒரு பையன் வேலைய விட்டுட்டு வந்து 4 மாசம் வீட்ல சும்மா உட்கார்ந்துருந்தா ஒரு அப்பா என்னலாம் சொல்லி திட்டிருப்பார்னு, ஆனா எதையும் என் காதுபட சொன்னது இல்லை.
எங்கப்பா கிட்ட நான் அதிகமா பேசுன வார்த்தைகள் "அப்பா, அடிக்காதிங்கப்பா, இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்ப்பா" தான், அப்பா வீட்ல இருந்தா நான் என் ரூம்க்கு வந்துருவேன், நான் சாப்பிட்டுகிடு இருந்தா அவர் எழுந்து வெளிய கிளம்பிருவார், 2 பேருக்கும் சுத்தமா ஒத்து போகாது, 3 வருசத்துக்கு முன்னாடிதான் பிறந்த நாள் கொண்டாடுற பழக்கம் எங்க குடும்பத்துக்கு வந்தது, நானும் அண்ணனும் ஒன்னா கேக் கொடுக்கறப்ப "நீங்க 2 பேரும் ஒரே நாள்ல தான் பிறந்திங்களா?"னு கேட்டார், அந்த அளவுக்கு என்னை பத்தின விஷயங்களை தெரிஞ்சு வச்சுருப்பார், எனக்கு அப்ப எவ்ளோ கடுப்பாயிருக்கும்?
இது மாதிரி நிறைய நேரம் என்னை வெறுப்பேத்திருக்கார், இருக்கட்டுமே!!! அதனால என்ன? போன வாரம் நான் ஊருக்கு போகனும்னு சொல்லிட்டு படுத்தவனை சரியா 3 மணிக்கு எழுப்பி, கிளப்பி, செலவுக்கு பணம் அம்மாகிட்ட கொடுக்க சொல்லி, பஸ் ஸ்டாண்டு இறக்கி விட்டு, பஸ் வரவரைக்கும் கூட நின்னுட்டு இருந்துட்டு, வந்த பஸ் டிரைவர் டீ குடிக்க இறங்கனதும் கூட சேர்ந்து டீ குடுச்சுட்டு, பஸ் கிளம்பற வரைக்கும் நின்னு பார்த்துட்டு போனது எங்கப்பா, அவர் என்னை என்ன வேணா செய்யலாம், என்னால வெறுக்க முடியாது...
"I LOVE YOU DAD"
"இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் நண்பர்களே"
பல அப்பாக்கள் முரட்டுத் தனமானவர்கள்தான் ஆனாலும் அன்பை உள்ளே புதைத்து வைத்திருப்பவர்கள்.அதை வெளிப்படுத்துவதை கௌரவக் குறைவு என்று நினைப்பவர்களும் உண்டு,
ReplyDelete//அவர் என்னை என்ன வேணா செய்யலாம், என்னால வெறுக்க முடியாது.//..
இதுதான் நமது குடும்ப அமைப்பின் பலம்.
நல்லா எழுதி இருக்கீங்க கதிர்.
//அதை வெளிப்படுத்துவதை கௌரவக் குறைவு என்று நினைப்பவர்களும் உண்டு,//
Deleteஎங்கே வெளிப்படுத்தினால் மகன் தன் பேச்சை மறுத்து பேச துவங்கி விடுவானோ என்றும் நினைப்பதுண்டு...
கருத்துக்கு நன்றி சகோ...
புரிந்து கொண்டால் என்றும் சந்தோசம்...
ReplyDeleteதந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...
கருத்துக்கு நன்றி தலைவரே...
Delete"இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி
Deleteஇனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்!!! நல்ல பதிவு கதிர் .... நிதர்சனமான உண்மைகள் ...இருப்பினும் அந்த கண்டிப்பு தேவை .. உங்களை அவரோ இல்லை அவரை நீங்களோ எப்போதும் விட்டுகொடுக்க முடியாது ... அதுதான் தந்தை மகன் உறவு ... யர்ரும் தடுக்க முடியாது உறவு ... யாரலும் பிரிக்க முடியாத பந்தம் ....
ReplyDeleteV Ravichandran
brvravichandran@rediffmail.com
கருத்துக்கு நன்றி சகோ
Delete