Posts

தனித்திரு- 4

Image
 முந்தைய பாகங்கள் #1 / #2 / #3 / #4 / #5 -------------------------------------------------------------------------------------------------------------- ஒரு வாரம் கழித்து, வீட்டில் அக்காவின் வருகைக்காக காத்திருந்தேன். அவளிடம் இன்று நடந்த சம்பவங்களை விவாதிக்க வேண்டும். காத்திருக்கும் பொழுது நேரம் மெதுவாகத்தான் நகரும் என்பதை என்னால் உணர முடிந்தது. அக்கா என்னை பார்த்ததும் என் முகக்குறிப்பிலிருந்தே நான் ஏதோ சொல்ல காத்திருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டாள். “என்னம்மா, இன்னைக்கு எதோ விசேசமா நடந்துருக்கும் போல, சொல்லு என்னன்னு” நான் விவாதிக்க துவங்கினேன். இன்று சனிக்கிழமை. மதியம் திடிரென்று அரை நாள் விடுமுறை அறிவித்ததும் வகுப்பிலுள்ள அனைவரும் சேர்ந்து ஒன்றாக திரைப்படம் செல்ல முடிவு செய்தோம். 4 பேர் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு அனைவரிடமும் பணம் சரியாக வாங்கி முன்பே சென்று அனைவருக்கும் முன்பதிவு செய்தனர். வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவை வகுப்பறையிலேயே அமர்ந்து காலி செய்து விட்டு, அருகில் தான் என்பதால் அனைவரும் நடந்து கொண்டே, பேசி கொண்டே திரையரங்...

நேரம் - திரை விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், சமிப காலமாய் தமிழ் திரைப்பட இயக்குனர்களுக்கு ஒரு சுதந்திரம் கிடைத்திருக்கிறது, அவர்கள் நினைத்ததை படமாய் எடுக்க முடிகிறது, இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் வைத்தாக வேண்டும், இத்தனை பாடல்கள் வைக்க வேண்டும் என்றெல்லாம் முன்போல் இல்லை. ஒரு 2 வருங்களுக்கு முன்பு என்றால் இந்த படம் வருவதாய் இருந்தால் இயக்குனர் நிறைய விட்டு கொடுத்திருக்க வேண்டும். சரி கதைக்கு வருவோம். நேரம், அது இரண்டு வகை, ஒன்று நல்ல நேரம், இன்னொன்று கெட்ட நேரம், அதெல்லாம் சும்மா, மூட நம்பிக்கைனு சொல்லுறவங்க கூட ஒரே ஒரு நிகழ்ச்சியால் வாழ்க்கையே மாறும் போதும், தொடர்ந்து வாழ்வில் அடி விழும் போதும் "எல்லாம் என் நேரம்"னு கண்டிப்பா சொல்லிருவாங்க, அதை சொல்ற கதைதான். கதையின் நாயகன் 'தட்டத்தின் மறயத்து' பட நாயகன், யதார்த்தாமான முகம், நல்ல நடிப்பு, அவருக்கு வேலை பறி போவதில் படம் துவங்குகிறது, பிறகு தங்கைக்கான வரதட்சனை, அதை கொடுத்த 'வட்டி ராஜா'வின் துரத்தல், காதலியின் தந்தை கொடுக்கும் நெருக்கடியால் வீட்டை விட்டு ஓடி வரும் நாயகி செயினை பறி கொடுத்தல், அதே நேரத்தில் நண்பனிடம் கடன...

தனித்திரு- 3

Image
 முந்தைய பாகங்கள் #1 / #2 / #3 / #4 / #5 -------------------------------------------------------------------------------------------------------------- திரும்பி வீட்டுக்கு நடந்து போகும் பொழுது போன வாரத்து குழப்பம் என்னை தொற்றிக் கொண்டது. அவன் சட்டையை பிடித்து திட்ட வேண்டும் போல இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு உரிமை இல்லை. அப்படி அவன் என்ன செய்து கொண்டு இருந்தான் என்று கேள்வி வரும், நானே சொல்கிறேன். ஒரு பையன் அருகில் நின்று பேசிக்கொண்டு இருந்தான். அது தவறு இல்லை. ஆனால் அவன் கையில் இருந்தது எனக்கு பிடிக்காத, நான் மிகவும் வெறுக்கிற விசயம், சிகரெட். எனக்கு அந்த வார்த்தையே பிடிக்காது. என் சித்தப்பா ஒருவர் இருக்கிறார், ரொம்ப நல்லவர், ஆனால் இந்த பாழாய் போன புகைப் பிடிக்கும் பழக்கம் இருப்பதால் நான் அவரிடம் சுத்தமாக பேசுவதில்லை. ஏன் ஏன்றால் ஏன் அவ்வளவுதான் பேசுவேன். அக்கா கூட சொல்லி பார்த்துவிட்டாள், என்னால் அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை. சில நேரங்களில் நான் குடிப் பழக்கத்தை கூட மன்னித்து விடுகிறேன். ஆனால் இந்த புகை, இந்த வாசனை எனக்கு வாந்தியே வந்து விடும். எ...

தனித்திரு- 2

Image
 முந்தைய பாகங்கள் #1 / #2 / #3 / #4 / #5 -------------------------------------------------------------------------------------------------------------- அடுத்த நாள் நான் கல்லூரிக்குள் நுழைந்ததுமே, நேற்று என்னை கேலி செய்தவர்கள் என்னை சூழ்ந்து கொண்டு மன்னிப்பு கேட்டுவிட்டு பேச துவங்கினர். அவர்களிடம் நானும் மன்னித்தது போலவே பேசினேன். மனதுக்குள் அக்கா கூறியது போல் இவர்களிடம் இருந்து சிறிது விலகி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வகுப்பறையில் அமர்ந்தேன். நான் முதல் வரிசையில் தான் எப்போதும் அமர்வேன். அதே வரிசையின் கடைசியாக, கதவிற்கு பக்கமாகத்தான் திரு அமர்ந்திருப்பான். ஒருமுறை அவனை திரும்பி பார்த்துவிட்டு தலையை திருப்பி கொண்டேன். எனக்கு நேற்று இருந்த சந்தேகம் இன்று இல்லை. காரணம் என்னை கேலி செய்த என் நண்பன் திருவிடம் பேசி நான் பார்த்தது இல்லை. அந்த சந்தேகம் கோபத்தில் எனக்கு உதித்த கற்பனை என புரிந்துக் கொண்டேன். மனதுக்குள் திருவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு பாடத்தை கவனிக்க ஆரம்பித்தேன். மதிய உணவு இடைவேளையில் வழக்கம் போல் நண்பர்களுடன் அமர்ந்து சாப...

NINJA ASSASSIN - திரை விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், என்னதான் ஆங்கில படங்களை உலகத்தரமான படங்கள் என நாம் ஏற்று கொண்டாலும் ஆக்சன் என்றால் நம் மனதில் முதலில் தோன்றுவது புருஸ்லீயும் ஜாக்கியும் தான், ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை குங்ஃபூ படங்களை ரசிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது NINJAS என்றால் யார் என்பது, ஜப்பானில் 13 ம் நூற்றாண்டுகளில் பிரபுக்களின் ஆட்சி நடந்த பொழுது அவர்களை எதிர்த்து புரட்சி செய்பவர்களையும், துரோகம் செய்பவர்களையும் இரகசியமாய் கொலை செய்ய பயன்படுத்த பட்ட அமைப்பு. இந்த அமைப்பில் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பல்வேறு வழிகளில் (அனாதைகள், கடத்தப்பட்டோர்) கொண்டு வரப்பட்டு தொடர்ந்தாற் போல் 8 வருடத்திற்கு மேல் அனைத்து விதமான தற்காப்பு கலைகளும் கற்று தரப்பட்டு, இருளில் பதுங்கி இரக்கமின்றி கொலை செய்ய பழக்கப்படுத்த படும். இவர்களை கதைக்களமாக கொண்டு வந்துள்ள படம் தான் NINJA ASSASSIN. படம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு கூட்டத்தை கண்களுக்கே தென்படாமல் வித்தியாசமான ஆயுதங்களை பயன்படுத்தி கண்டதுண்டமாக வெட்டி எறிவதில் பரபரப்பு ஆரம்பிக்கிறது, ஒரு அழகான பெண் ...

தனித்திரு- 1

Image
நான் இதுப்போல் கோபப்பட்டதாக எனக்கு நினைவு இல்லை. இன்று போல் அவமானப்பட்டதாகவும் ஞாபகம் இல்லை. வழக்கமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வருவதைப் போல் வரவும் விருப்பமில்லை. மிக வேகமாக அடியேடுத்து வைத்து வீடு நோக்கி வந்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் பாரமாக தெரியும் என் புத்தகப்பையும் இன்று இருப்பதை காட்டிக் கொள்ளாமல் என் தோளில் தொங்கிக் கொண்டு இருந்தது. சரியாக கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் போன மாதத்துடன் முடிந்து விட்டது. இந்த ஒரு வருடத்தில் எத்தனையோ நண்பர்களை, நண்பர்கள் வட்டத்துக்குள் வாராவிட்டாலும் தெரிந்தவர்களாக இருப்பவர்கள் என பலரைப் பார்த்து இருக்கிறேன், பழகியிருக்கிறேன். ஆனால் யாரும் இவனைப் போல் என்னிடம் பேசியது இல்லை. இத்தனைக்கும் வகுப்பிற்கு வரும் அனைத்து ஆசிரியயைகளுக்கும் நான் என்றால் தனி இஷ்டம். அவனை சும்மா விடக் கூடாது. எதாவது செய்ய வேண்டும். நான் யார் என்று காட்ட வேண்டும். அட, அதற்குள் வீடு வந்து விட்டது. நான் என் காலணிகளை கழட்டி வீசியெறிந்ததிலும் என் கோபம் வெளிப்பட்டது. வீட்டினுள் நுழைந்ததும் சோபாவில் என் புத்தகப் பையினை தூக்கி எறிந்தேன். அதற்கு பக்கத்தில் நானும் ...

சாரல் காலம் 15

Image
சாரல் காலம் - முந்தின பாகங்கள் #0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 / #10 / #11 / #12 / #13 / #14 / !5 ----------------------------------------------------------------------------------------------------------------- ஹரியை போல் , தீபாவை போல் நடக்கும் திருமணம் தமக்கும் தங்களுடைய காதலருக்கும் நடப்பதை போல் உணரும் ஒரு தலை காதலர்கள் ஒவ்வொரு திருமணத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அனைவருடைய கைகளுக்கும் அட்சதை வந்து சேர்ந்தது. கெட்டி மேளம் சொல்லி தாலி கட்டும் போது அவசரமாக அட்சதையை போட்டுவிட்டு மாதேசும் சூர்யாவும் சத்தமாக விசிலடித்து விட்டு கன்னனை பார்த்தவாறு அமைதியானார்கள். திருமணத்திற்கு வந்தவர்கள், மணமக்கள் அனைவருமே திரும்பி பார்த்தனர். பாலா "கன்னா, எல்லாரும் பார்க்கறாங்க, இன்னொரு தடவை விசிலடிடா?" கன்னன் "டேய் நான் எங்கடா அடிச்சேன்" ஹரி "பையன் ஆசைபட்டு கேட்கறான் பாரு, அடிடா" கன்னன் "சத்தியமா எனக்கு விசிலடிக்கவே தெரியாதுடா" மாதேஸ் சத்தமாக "யாரும் நம்பாதிங்க, கன்னன் தான் விசிலட...

சூது கவ்வும் - நினைச்சு நினைச்சு சிரிக்கலாம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், நானும் ரொம்ப நாளா யோசிச்சுருக்கேன், ஒரு மாஸ் படத்துல ஏன் காமெடி இருக்கறதுல்லை? காமெடி படத்துல மாஸ் காட்ட முடியுமானு? தமிழ் ல இதுக்கு முன்னாடி இப்படி பட்ட படம் தமிழ் சினிமால வந்ததே இல்லைனு சொல்ல மாட்டேன், முயற்சி பண்ணிருக்காங்க, தமிழ் ல வந்த BLOCK COMEDY படங்கள் ல இதுதான் சூப்பர்.   மன நலம் பாதிக்கப்பட்டவங்களை கதாநாயகனா காட்டி பல படம் வந்துருக்கு, எல்லாருக்கும் டக்குன்னு நினைவுக்கு வர்ர படம் "குணா" தான். ஆனா ஒரு மாதிரி பரிதாபம் கலந்து காட்டிருப்பாங்க. ஆனா முழுக்க முழுக்க சிரிக்க வைக்கற மனவியாதியோட வர்ரார் நம்ம ஹீரோ விஜய் சேதுபதி. அவரோட வியாதி அவர் கண்ணுக்கு மட்டும் தெரியற அவர் கனவு கன்னி "ஷாலு".   தினமும் பேப்பர்ல வர்ர கடத்தல் சம்பந்தமான செய்திகளை கட் பண்ணி வச்சு அதை ஆழமா படிச்சு 5 ரூல் போட்டுகிட்டு கடத்தல் தொழில் பண்ற தாஸ் கூட டாஸ்மாக் சண்டைல வந்து ஒண்ணு சேர்ராங்க 3 பேர், அவங்களுக்கு ஒரு கதை இருக்கு, ஒருத்தன் பொன்னுகிட்ட லவ்  டார்ச்சர் அனுபவிச்சு வேலைய விட்டவன், இன்னொருத்தன் அலாரம் வச்சு சரக்கடிக்கறவன், இன்னொருத்தன் நயன்தாராக...