கொசுவை விரட்டும் பாசி
அன்பர்களுக்கு வணக்கம், ஒட்டு மொத்த மனித இனத்திற்கே இப்போது பெரும் சவாலாய் இருப்பது கொசு தான்,
ரொம்ப பாதிக்கப்பட்டுதான் ராஜமௌலி "நான் ஈ" படம் எடுத்துருப்பார்னு நினைக்கறேன். அப்படிப்பட்ட கொசுவ ஒழிக்க விதவிதமான ஐடியா எல்லாரும் குடுக்கறாங்க.
நாமளும் ALL OUT, GOOD NIGHT னு என்னென்னமோ பயன்படுத்தி பார்த்துட்டோம், நம்ம ரத்தத்தை குடிச்சுட்டு கோசு போய் ரெஸ்ட் எடுக்கறதே அந்த காயில் மேலதான். அதுலயும் இப்ப அடிக்கடி மின்தடை ஏற்படறதால கொசுவர்த்திதான் கொளுத்திட்டு இருக்கோம், முகப்புத்தகத்துல மேய்ஞ்சுட்டு இருந்தப்ப கீழ இருக்கற விஷயத்தை படிச்சேன், சரி பகிர்ந்துகிட்டா மக்களுக்கு உபயோகமா இருக்குமேனு பகிர்ந்துக்கறேன்.
கொசுவை விரட்டும் பாசி...
ஒரேக் கல்லில் எக்கசக்க மாங்காய்..!
கொசுக் கடியில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான அளவுக்கு செலவு செய்கிறோம்.
அசோலா என்ற பாசியை வளர்த்தால், அந்த வீட்டுப் பக்கம் கொசுக்கள் எட்டிப்பார்க்கா து. இந்த பாசியை வடை, போண்டா, பஜ்ஜி... என்று பலகாரம் செய்தும் சாப்பிடலாம். அற்புதமான ருசியில் இருக்கும். புரதச் சத்துக் கொண்ட இந்த பாசியை ஆடு, மாடு, கோழிகளுக்கும் கொடுக்கலாம். விவசாயிகள் இதை நெல் வயலில் வளர்க்கலாம். இந்த பாசி காற்றில் உள்ள தழைச்சத்துக்களை இழுத்து, பயிருக்கு கொடுக்கும். அதனால், ஆயிரக்கணக்கில் செலவுசெய்து இரசாயன உரம் போட தேவையில்லை. அசோலாவை வளர்ப்பதால், வயலில் களைகளும் வளராது. நீர் ஆவியாவதும் தடுக்கப்படுகிறது.
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவை தொடர்பு கொள்ளுங்கள்.
இதோ அவர்கள் தொலைபேசி எண்:04652 246296
நன்றி: பழனியப்பன் அருனாச்சலம்
மிகவும் பயன்படும் தகவல்...
ReplyDeleteதொலைபேசி எண்ணை குறித்துக் கொண்டேன்...
நன்றி...
ரைட்டு!
ReplyDeleteபதிவு நன்று.
ReplyDeleteதமிழ்மணப் பட்டையை சரி செய்து விட்டேன். இனி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.இதோ எனது ஓட்டை பதிவு செய்கிறேன்.முதல் ஒட்டு உங்களுடையது. இரண்டாவது என்னுடையது. வாழ்த்துக்கள்.
இதைப் படித்து விட்டீர்களா!
செப்டம்பர் 23 ஓர் அதிசய நாள்!
need asola vethai -7639216162
ReplyDelete