மாயமோகினி - திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், நீண்ட வருடங்களுக்கு பிறகு நேற்று ஒரு மலையாள படம் பார்த்தேன், உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை, தமிழ் நாட்டில் மலையாளப்படம் என்றால் ஷகிலாதான் என்பார்கள், நானும் மீசை முளைக்கும் வயதில் பார்த்தவன் தான், அதன் பின் அந்த மொழிப்படங்களை பார்க்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை, பழசி ராஜா பார்த்ததும் தமிழ் மொழியில் தான். நேற்று நான் பார்த்தது மலையாள அல்டிமேட் ஸ்டார் திலிப் நடித்த "மாய மோகினி"

 

படத்தின் கதை, அக்காவின் குழந்தையினை வளர்ப்பதற்காக திருமணம் செய்யாமல் இருப்பவர் பிரசன்னம்(ஜோதிடம்) பார்க்கும் பொழுது அந்த குழந்தைக்கு 30ம் வயதில் ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் வாழ்வின் அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்றும் அதுவரை எந்த தொழில் செய்தாலும் நஷ்டம் தான் என தெளிவாக சொல்கிறார்கள்.

"மஜா" படத்தில் அசினின் முறைமாமனாக வருபவர்தான் அந்த குழந்தை, வளர்ந்து தனது வக்கில் நண்பனுடன் நிறைய தொழில் செய்து நஷ்டமடைகிறார், வாழைத்தோட்டம் வைத்தால் புயல் வருகிறது என்று அந்த இடத்தில் wind mill  வைத்தால் துளி காற்று அடிப்பதில்லை.


ஷேர் மார்க்கெட்டில் பணம் போடலாம் என்று நண்பனின் அறிவுரைப்படி பெரிய தொழிலதிபரினை பார்க்கச் செல்ல அங்குள்ள அவரின் மகள் லட்சுமி ராயுடன் காதல் துவங்க, கடன் வாங்கி, ஒரு வீட்டு சொந்தக்காரரிடம் அட்வான்ஸ் பணத்தினை பத்திரமாக வைத்திருப்பதாக சொல்லி வாங்கி எல்லாப் பணத்தினையும் லட்சுமியின் தந்தையிடம் குடுத்து விட்டு, 3 மாதங்களுக்கு பிறகு லட்சுமியுடன் ஊரை விட்டு ஓடி வந்து விடுகிறார். போட்ட பணம் , அடுத்த நாள் சண்டை போட்டுக்கொண்டு லட்சுமியும் காணாமல் போக, சொந்தக்காரர்கள் புதிதாய் வந்த ஹிந்தி மனைவியை காண வருகிறார்கள்.


அவர்களுக்கு காட்ட ஒரு நடிகையினை ஏற்பாடு செய்கிறார்கள், அவள்  தான் மோகினி, அது யார்னா நம்ம ஹீரோ திலிப், உண்மையிலேயே நல்லா பன்னிருக்கார், அவரோட ஒவ்வொரு மூவ்மென்ட்டும் கதைல படிச்ச பல கில்மா ஆண்ட்டிங்களை ஞாபகப்படுத்துது. பார்க்கற ஒவ்வொரு ஆம்பளைகிட்டயும் உங்களைத்தான் காதலிக்கிறேன் என்னை கை விட்டற மாட்டிங்களேனு கேட்கறது செம.


அதுலயும் பக்கத்து வீட்டு போலிஸ் பார்த்து கண்ணடிக்கிறது, அவர் பொன்னு கூட அவர் முன்னாடியே ரொமான்ஸ் பன்றது, ஓட்கா குடிச்சுட்டு  வாந்தி எடுத்துட்டு கர்ப்பம்னு ஏமாத்தறது, எதார்த்தமா படிகட்டுல இருந்து விழறப்ப போலி ரத்தம் பேண்ட்ல கொட்டி அபார்சன் ஆயிடுச்சுனு லேடி டாக்டர்கிட்ட கூட்டி போற சீன், அங்க இருந்து தப்பிச்சதும் வர்ர பாட்டு. ஒரே கலாட்டாதான்.


ஹீரோ ஏன் பெண் வேஷம் போட்டுருக்கார்? எதுக்காக இந்த வீட்டுக்கு நடிக்க வர்ரார்? ஓடிப்போன லட்சுமி ராய்க்கு என்ன ஆச்சு? 3 கோடி பணம் என்ன ஆச்சுங்கறதுலாம் க்ளைமாக்ச்க்கு முன்னாடியே சொல்லிடறாங்க.

அந்த வக்கில் நண்பரா வர்ரவர் என்னாமா காமெடி பன்றார், இனிமேல் உன்னை பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டு நகரும் போது ஹீரோ திட்ட, திரும்ப முறைச்சுகிட்டே வந்து "என்னை ரயில்வே ஸ்டேஷன் ட்ராப் பன்னிடறியா?"னு கேட்கறது செம காமெடி.

சில பல அரைச்ச மாவு தென்பட்டாலும் சரியான கலாட்டா திரைக்கதைக்காகவே படம் ஓடிடும், அதிலயும் அந்த மோகினிக்காகவே 5 தடவை பார்க்கலாம், எல்லா ஆம்பளைகிட்டயும் ஓட்டி நின்னுதான் பேசறாங்க, என்னமோ போங்க, பார்க்க வேண்டிய படம், பாருங்க.

படத்தோட ட்ரெய்லர்



பதிவு பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.



Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2