பிரம்மச்சாரிகளுக்கான படம்-The 40 year old virgin- REVIEW

அன்பர்களுக்கு வணக்கம்.  என்னை பொறுத்த வரை உலக சினிமாக்களில் கொஞ்சமாவது மனதை வலிக்க செய்யும் காட்சிகள் வரும், அதை தாங்கும் தைரியம் எனக்கு எப்போதாவதுதான் வருகிறது, மீதி நேரங்களில் என் ஓட்டு ரொமேண்டிக்/காமெடி படங்களுக்குதான். அந்த வகையில் இன்று நாம் காணப் போகும் படம் "THE 40 YEAR OLD VIRGIN".

 

உங்கள் வாழ்க்கையில் 30ஐ கடந்த பிரம்மச்சாரிகளை பார்த்ததுண்டா? நம் கலாச்சாரத்தை பொறுத்தவரை ஆண்களுக்கு திருமணம் தள்ளிப் போக 2 காரணங்கள் தான். ஒன்று வயதுக்கு வந்த தங்கைகள், இன்னொன்று செவ்வாய் தோஷம். பணம் இல்லாவிடினும் ஆண்களுக்கு எளிதில் திருமணம் ஆகிவிடும். பெண்களுக்குதான் சிரமம்.

இந்த திரைப்படத்தின் நாயகனுக்கு 40 வயதாகிறது,பிரம்மச்சாரி, எலக்ட்ரானிக் ஷோரூமில் வேலை செய்கிறார். கன்னிக் கழியாதவர். அதற்கான காரணம் பெரிதாய் குறிப்பிட படவில்லை, வாலிப காலங்களில் தட்டிப் போக அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். யாருடனும் அதிகம் பேசி பழகாததால் அனைவரும் இவரை சைக்கோ என்று நினைக்கிறார்கள்.

 

ஒரு நாள் எதெச்சையாக சக ஊழியர்கள் சூதாட்டத்திற்கு ஆள் பத்தவில்லையென்று அழைக்க இவர் போக, அவரவர்களது செக்ஸ் அனுபவங்களை பற்றி பகிரும் போது ஹீரோ பொய் சொல்ல முயற்சி செய்து மாட்டிக் கொள்கிறார். அவர் கன்னிப் பையன் என்பது தெரிய வரவும் கலாட்டா ஆரம்பிக்கிறது.

 

ஒவ்வொருவரும் ஏன் ஏன் என்று கேட்டு துளைத்து விட்டு எப்படியாவது அவருக்கு ஒரு பெண்ணை செட் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். அதற்கு பின் நடப்பது சுவாரசியமான கலாட்டா.

 

நண்பர்களுக்காக வேண்டா வெறுப்பாக களத்தில் இறங்கும் நம் ஹீரோவிற்கு பல மோசமான அனுபவங்கள் ஏற்பட்டாலும் அவர் வேலை பார்க்கும் கடைக்கு எதிரில் கடை வைத்திருக்கும் ஒரு பெண்ணை பிடிக்கிறது, பழக துவங்குகிறார்.
நெருக்கம் அதிகமாகி வீட்டில், தனிமையில் தாம்பத்யத்திற்கு முயல்கையில் கதவை திறந்து கொண்டு ஹீரோயினின் மகள் நுழைகிறாள். எப்படி டர்னிங் பாய்ண்ட்?

 

இதுல பெரிய காமெடி என்னன்னா அந்த பொன்னு கூட வர பையன் ஹீரோ போட தெரியாம வேஸ்ட் பன்னிருக்க காண்டம் அ பார்த்து உபயோகிச்சதுனு நினைச்சுகிட்டு "DUDE, TEACH ME"னு சொல்றதுதான். 

ஒரு 40 வயசு கன்னிப்பையனுக்கு பேத்தி எடுத்த பாட்டி கன்டிஷன் லாம் போடுது, அதெல்லாம் தாண்டி எப்படி 2 பேரும் கல்யாணம் பன்றாருங்கறதுதான் க்ளைமாக்ஸ். 

உண்மையிலேயே சொல்றேன். பிரம்மச்சாரிகள் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம். அவங்க படற கஷ்டத்தை டீசன்ட்டா சொல்லிருக்காங்க. நிறைய காமெடி இருக்கு. எனக்கு தெரிஞ்சு ஹாலிவுட்ல ஹீரோவ இத்தனை வயசுல VIRGIN ஆ காட்டிருக்கறது இதான் முதல் தடவைனு நினைக்கறேன்.

படத்தோட ட்ரெய்லர்

மறக்காம நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.

Comments

  1. அளவான விமர்சனம். நம்மள மாதிரி கதையை சொல்லி பதிவை ஓட்டாமல் விமர்சனம் பண்ணியிருப்பது நன்றாக இருக்கிறது.

    போன மாத இறுதியில் டவுன்லோட் செய்து வைத்த படம். இன்னும் பார்க்க கிடைக்கவில்லை. எனக்கும் ரொமாண்டிக் காமெடி வகைப் படங்கள் மிகவும் பிடிக்கும். இன்னும் நல்ல படங்களாக அறிமுகப்படுத்துங்கள்.

    Steve Carrol இன் Date Night, Crazy Stupid Love போன்ற சில படங்கள் பார்க்க நல்லாயிருக்கும். நேரம் இருந்தால் பாருங்கள்.

    ReplyDelete
  2. உங்களுடைய வசனங்கள் படம்பார்த்தமாதிரியான அநுபவத்தை தருகிறது. மழைச்சாரல்க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

கலாய்ச்சுட்டாராமாம்...

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்