ஒரு அழகான பெண், 4 காதலர்கள்- THERE'S SOMETHING ABOUT MARRY-விமர்சனம்

 அன்பர்களுக்கு இனிய வணக்கம். யார்யாருக்குலாம் ரொமெண்டிக் காமெடி படம் பிடிக்கும். அவங்கலாம் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் "THERE;S SOMETHING ABOUT MARRY". ரொமேண்டிக் காமெடினா பெருசா ஒன்னுமில்லைங்க, கதைக்களம் காதலை சுத்தி இருக்கும், திரைக்கதையில ஒவ்வொரு இடத்துலயும் காமெடிக்கெனே யோசிச்சு எழுதியிருப்பாங்க.
 

 
வழக்கம் போல சகப் பதிவரோட அறிமுகத்தாலத்தான் இந்த படம் பார்த்தேன், இந்த படத்தை தமிழ் ல "பவளக்கொடி"ங்கற பேர்ல எடுத்துருக்காங்கறதும் அவர் சொல்லித்தான் தெரியும். இவ்வளவு நல்ல படத்தை எப்படி அவ்வளவு கேவலமா எடுக்க முடிஞ்சதோ தெரியல. சரி கதைக்கு வருவோம்.

 

ஒரு பள்ளிப் பருவத்தை காட்றாங்க, அதுல ஹீரோ ஒரு சுமாரான பையன், அதிர்ஷ்ட வசமா அவனுக்கு ஒரு அழகான பொன்னு(ஹீரோயின்) ஃப்ரெண்ட் ஆகுது, அவ கூட டேட்டிங் போகலாம்னு அவளை கூட்டிப் போக அவ வீட்டுக்கு போனா அவ மெண்டல் பிரதர் நம்ம ஹீரோவ போட்டு பெண்ட் அ எடுக்கறான்.

அதை விட பெரிய கொடுமை பாத்ரூம் போய்கிட்டு இருந்த ஹீரோக்கு கெட்ட நேரமோ என்னமோ ஜிப்ல 'அது' மாட்டிக்குது, அதை வேற ஊரே வந்து பார்க்குது. இதுதான் ஃப்ளாஸ்பேக்.

 

13 வருசம் ஆகியும் ஹீரோவல அந்த பொன்னை மறக்க முடியலை, என்னாலயும்தாங்க, பொன்னு ரொம்ப அழகா இருக்கு. என்ன பன்றதுனு தெரியாம காதல் கிறக்கத்துல இருக்க ஹீரோக்கு வழக்கம் போல லவ்க்குனு ஐடியா குடுக்க இருக்க ஃப்ரெண்ட் ஒருத்தன் ஒரு டிடெக்டிவ் வச்சு ஹீரோயின் அ பத்தி தெரிஞ்சுக்கலாம்னு ஐடியா குடுக்கறான்.

நேரங்கெட்டு போச்சுனா பவளமாலையும் பாம்புகும்னு சொல்லுவாங்க(அப்படித்தானே சொல்லுவாங்க#டவுட்டு), வேவு பார்க்க போன டிடெக்டிவே ஹீரோயின டாவு அடிக்க ஆரம்பிச்சுருவான். என்ன பன்றது? காய்ச்ச மரம்னா கல்லடி படத்தான் செய்யும்.

டிடெக்டிவ் ஊருக்கு வந்து ஹீரோகிட்ட ஹீரோயினுக்க கல்யாணம் ஆகலை, ஆனா 3 குழந்தைங்க, குண்டாகி வீல் சேர்ல உட்கார்ந்துருக்கானு 4,5 பிட் சேர்த்து போட்டுருவான், அப்பவும் ஹீரோ கல்யாணம் பன்னிக்கறேன்னு சொல்லவும் அவ ஜப்பான் போயிட்டானு சொல்லிருவான். ஹீரோ அப்செட்.

டிடெக்டிவ் ஹீரொயின் இருக்க மியாமி வந்து அவளுக்கு பிடிச்ச மாதிரி ஆர்க்கிடெக்ட்னு பொய் சொல்லி கரெக்ட் பன்னிருவான். அதை கெடுக்க ஒரு ஹேன்டிகேப்ட் வந்து அவன் ஆர்க்கிடெக்ட் இல்லைனு சொல்லி கெடுத்துருவான், இருந்தாலும் சலிக்காம டிடெக்டிவ் பொய் சொல்லி திரும்ப ரீஜாய்ன் பன்ற டைம்ல ஹீரோக்கு டிடெக்டிவ் பன்ன மொள்ளமாரித்தனம்லாம் தெரிஞ்சு ஹீரோயின் அ தேடி வந்துருவான்.

 

அப்படி தேடி வரப்ப அவன் போலிஸ்ல மாட்டறது செம காமெடி. அப்புறம்தான் தெரியும் லைனா இந்த ஹீரோயினுக்கு எத்தனை பேர் அடிச்சுக்கறாங்கனு. படத்துல க்ளைமாக்ஸ்ல வர தாத்தாவையும் சேர்த்து 5 பேர். (லிஸ்ட் ல என்னை கூட சேர்த்துக்கலாம்).

படம் முழுக்க ஒரே காமெடிங்க, ஒரு பக்கம் அழகான ஹீரோயின், இன்னொரு பக்கம் கலாட்டாவான காமெடி, ஹாலிவுட்டா இருந்தாலும் கோலிவுட்டா இருந்தாலும் கான்செப்ட் ஒன்னுதான், பப்பி லவ்தான் உண்மையான லவ்னு.க்ளைமாக்ஸ் என்ன இப்படி முடிஞ்சுருச்சேனு யோசிக்கும் போது மாத்தி நமக்கு பிடிக்கற மாதிர் வச்சுருக்காங்க. கடுப்புல இருக்கவங்க ரிலாக்ஸ் பன்றதுக்கு கண்டிப்பா இந்த படம் உதவும்.

 

முக்கியமான விசயம், "நகரம்" படத்துல நாய்க்கு சரக்கு ஊத்திக் குடுத்து ஷாக் குடுக்கற சீன்லாம் இந்த படத்துல இருந்துதான் சுட்டுருக்காங்க.படத்தை தனியா பார்க்கறதை விட ஃப்ரெண்ட்ஸ் கூட பாருங்க, இன்னும் நல்லாருக்கும்.
படத்தோட ட்ரெய்லர்


மறக்காம கமெண்ட் போடுங்க, பகிர்ந்துக்கங்க.

Comments

  1. நல்லாவே விமர்சனம் பன்றீங்க! நன்றி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2