THE GOOD,THE BAD, THE WEIRD- ACTION/COMEDY- REVIEW

அன்பர்களுக்கு வணக்கம். "இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்" பட ட்ரெய்லரில் ஒரு வசனம் வரும். "ஒரு நல்லவன் ஒரு கெட்டவன் ஒரு வினொதமானவன்"னு, அந்த கான்செப்ட் அ இந்த படத்துலருந்துதான் திருடிருக்காங்க, காதல் இல்லாம ஆக்சன்/காமெடி டைப் ல படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு, எப்படியும் எல்லா வகையான காம்பினேசன்லயும் படங்களோட வரிசை நம்ம கருந்தேள் கிட்ட இருக்கும்னு தெரியும், தேடி பார்த்தேன். இந்த படம் (THE GOOD,THE BAD, THE WEIRD)சிக்குனுச்சு.

எனக்கே முதல்ல கொரியன் படம்னதும் கருக்குனுதான் இருந்தது, நாம ஹாலிவுட் படம் (சப்டைட்டிலோட)பார்த்தா புரியும். சைனீஷ் படம்னா குங்ஃபுக்காக பார்க்கலாம், கொரியன் படத்துல என்ன இருக்க போகுதுனு புரியலை. இருந்தாலும் நாம எப்ப உலக சினிமா ரசிகன் ஆகறதுனு பார்த்தேன்.

படத்தோட கதைக்களம்னு பார்த்திங்கனா 100 வருசத்துக்கு முன்னாடி அடிமைப்பட்டு கிடக்கற மஞ்சூரியாங்கற வறண்ட நாடுதான், அடிமை நாடுனா புரட்சி படைனு ஒன்னு இருக்கும், நோட் பன்னிக்குங்க. இப்ப ஒவ்வொரு கேரக்டரா பார்ப்போம்.
ஹீரோ- வழக்கம் போல அநியாயத்தை தட்டி கேட்கறவர், தப்பு பன்ற குற்றாவாளிகளை பிடிச்சு குடுத்து அரசாங்கம் குடுக்கற பணத்துல வாழ்க்கைய ஓட்டறவர்.
வில்லன்- இவரும் வழக்கம் போல அடியாட்களை வச்சுகிட்டு கொள்ளை அடிச்சுகிட்டு கொலை பன்னிகிட்டும் திரியவர் தான்.
இவங்க 2 பேரும் ஒரு புதையல் மேப் ட்ரெய்ன்ல வரதை தெரிஞ்சுகிட்டு அதை எடுக்க திட்டம் போட்டு ட்ரெய்ன் அ நெருங்கும் போது, சமோசா விக்கறவன் மாதிரி உள்ள நுழைஞ்சு பணத்தை திருட வந்த ஒரு திருடன் மேப்ப அடிச்சுட்டு போயிடறான்.

ஃபேஸ்புக் இல்லாமையே அப்ப இந்த புதையல் மேப் விசயம் எல்லாருக்கும் பரவுது, அரசாங்கம், ராணுவம், லோக்கல் கொள்ளையடிக்கற க்ரூப், வில்லன், ஹீரோனு ஏகப்பட்ட பேர் அந்த மேப்புக்காக திருடன தேடுறாங்க.

திருடன் வில்லன்கிட்ட மாட்டாம ஹீரோகிட்ட மாட்டறான், அவன்கிட்டருந்து தப்பிக்க ட்ரை பன்றது நல்லா காமெடியா இருக்கும். அடுத்து, திருடற பொருளலாம் விக்கற சந்தைல நடக்கற ஒரு துப்பாக்கி சண்டைய அருமையா எடுத்துருப்பாங்க.

திருடன் தனியா தப்பிச்சு அந்த புதையல நெருங்குறப்ப அவன் நண்பனால டூப்ள்கெட் மேப் அ வாங்கி ஏமாந்த கொள்ளையடிக்கற குரூப்பும், அடுத்து வில்லன் குரூப்பும், அப்புறம் ஜப்பான் நாட்டு ராணுவமும், வழக்கம் போல கடைசியா ஹீரோவும் வருவாங்க.

ஆளாளுக்கு அடிச்சுகிட்டும் சுட்டுகிட்டும் இருக்கும் போது திருடன் முன்னாடி புதையல் இருக்க இடத்துக்கு போயிடுவான். பின்னாடியே ஹீரோ, அடுத்து வில்லன்னு 3 பேர் மட்டும் தனியா மோதிக்கறது தான் க்ளைமாக்ஸ்.
க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முன்னாடிதான் அந்த திருடனை பத்தி ஒரு உண்மைய சொல்லுவாங்க, அது வரைக்கும் நாம அவனை காமெடி பீஸ்னுதான் நினைச்சுட்டுருப்போம்.

திருடனோட ஓப்பனிங் சீன்லருந்து க்ளைமாக்ஸ் வரைக்கும் நீங்க சிரிச்சுகிட்டேதான் படம் பார்க்க முடியும்.படம் பக்கா ஸ்டைலிஸ் ஆ இருக்கு, ஹீரோயின், காதல்னு எந்த தலையீடும் இல்லை. இந்த மாதிரி படம் தமிழ் ல வந்தா கண்டிப்பா கதைய கெடுத்துருவாங்க.

படத்தோட ட்ரெய்லர்



மறக்காம கமெண்ட் போட்டுட்டு போங்க. அப்படியே முடிஞ்சா தமிழ்10ல ஒரு ஓட்டும்.

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2