- மழைச்சாரல்: கலக்கல் ACTION/COMEDY படம் பார்க்கனுமா?- KNIGHT AND DAY- திரை விமர்சனம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Monday, 9 July 2012

கலக்கல் ACTION/COMEDY படம் பார்க்கனுமா?- KNIGHT AND DAY- திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், தொடர்ந்து ரொமெண்டிக் காமெடி படங்கள் மட்டும்தான் பார்க்கிறோம். சுத்தமா ஆக்சன் பக்கம் போறது இல்லைனு ஒரு படம் பார்த்தேன், என் நேரம் அதுவும் ரொமெண்டிக் காமெடிதான், கொஞ்சம் ஆக்சன் கலந்துருக்காங்க.படத்தோட பேர் "KNIGHT AND DAY".
 


படத்துல நடிச்சவங்களாம் பெரிய ஸ்டாருங்கதான், ஹீரோ நம்ம மிஷின் இம்பாசிபுள் டாம் க்ருஸ் தான், ஹீரோயின் பேர் மனசுல நிக்க மாட்டேங்குது. ஆனா நான் அதிக படத்துல பார்த்துருக்கேன், சார்லஸ் ஏஞ்சல்ஸ் படத்துல கூட நடிச்சுருக்கு. சரி கதைக்கு வருவோம், கதைனு பெருசா எதுவும் இல்லை.

 படத்தோட ஆரம்பத்துல ஏர்போர்ட், ரகசியமா சுத்திமுத்தியும் பார்த்துட்டு ஏதோ திருட்டுத்தனம் பன்ற ஹீரோ, அவர்கிட்ட எதெச்சையா மோதி டச்சிங் டச்சிங்னு ஆரம்பிச்சு கடலை போடற ஹீரோயின், டிக்கெட் கிடைக்காம கழட்டிவிடப் படற ஹீரோயின் திரும்ப வேணும்னே ஃப்ளைட்டுக்குள்ள கொண்டு வரப் படறாங்க. அப்புறம் கடலை ஆரம்பிக்குது.

 

ஹீரோயின் ரெஸ்ட் ரூம் போற கேப்ல ஃபைட், விமானத்துல இருக்க எல்லாரையும் ஹீரோ கொன்னுடறார் பைலைட் உட்பட, அதை ஹீரொயின்கிட்ட எப்படி சொல்றதுனு கைல ஜீஸ் வச்சுகிட்டு வெய்ட் பன்றது, எதுவும் பேசாம ஹீரோயின் வந்து நச்சுன்னு கிஸ் அடிக்கறது செம சீன்.

அடுத்து ஹீரோயின் அ அவங்க வீட்ல கொண்டு போய் விட்டு யாராவது வந்து கேட்டா என்னை பத்தி சொல்லாத, அடிச்சு கூட கேட்பாங்க அப்பவும் சொல்லாதனு சொல்றார் வடிவேல் மாதிரி, என்ன காமெடினா ஹீரோயினுக்கு உண்மையிலேயே ஹீரோ யார்னு தெரியாது.

அடுத்து 2 ஆக்சன் சீனுக்கு அப்புறம் தனியா ஒரு தீவுல இருக்கும் போது ஹீரோ தான் ஒரு சீக்ரெட் ஏஜென்ட்ன்னும், ஒரு ஊருக்கே கரெண்ட் தர அளவுக்கு கெபாசிட்டி இருக்க சின்ன சைஸ் பேட்டரிக்காகத்தான் இவ்வளவு போராட்டமும்னு சொல்றார்.

 

அடுத்து கதைல நிறைய ஆக்சன், லவ் சீன் மாறி மாறி வந்துகிட்டு இருக்கு. ஒரு கட்டத்துல ஹீரோ செத்துட்டதா எல்லாரும் நினைக்கற அளவுக்கு ஒரு என்கவுன்டர் நடக்குது, அடுத்து ஹீரோவ தேடி ஹீரோயின் அலைஞ்சு அந்த பேட்டரி வில்லன் கைக்கு போய், நிறைய ஆக்சன் நடக்குது.

படம் முழுக்க எல்லா இடத்துலயும் காமெடி வச்சது பெரிய ப்ளஸ், லவ் சீனுக்குனு நீளமா வசனம் வைக்காதத பாராட்டியே ஆகனும், ஹீரோயின் தசாவதாராம் அசின் மாதிரி ஹீரோ சொல்றதை கேட்கறதே இல்லை. அது இஷ்டத்துக்கு பன்னுது. வயசானாலும் ஹீரோ ஹீரோயினுக்கு கெமிஷ்ட்ரி நல்லாதான் வேலை செய்யுது.

 

படம் நல்லாதான் எடுத்துருக்காங்க, ஏன் பெருசா ஹிட் ஆகலைனு தெரியலை. உங்களுக்கு ஏதாவது குறை தெரிஞ்சா பின்னூட்டத்துல தெரிவியுங்க.

படத்தோட ட்ரெய்லர்

மறக்காம கீழ தமிழ்10 ல ஓட்டு போட்டுருங்க.

1 comment:

  1. படம் எங்க ஓடுது? விமரிசனம் நல்லா பண்றீங்க!

    ReplyDelete