ஆந்திரா மசாலா-POOLA RANGADU- TAMIL REVIEW
அன்பர்களுக்கு வணக்கம், எப்பொழுதும் உலக சினிமாக்களை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் நம்ம ஊர் சினிமாக்களை யார் பார்ப்பது என்ற கவலையில் அவ்வப்போது சமயம் கிடைத்தால் தமிழ் படம் பார்ப்பேன். அதிகம் பார்ப்பது தெலுங்கு படங்கள் தான்,
என்னதான் ஆந்திராவில் ஹீரோயிசம் அதிகம் என்றாலும் அவர்களின் முன்னேற்றம் நம்மை விட அதிகம். உதாரணத்திற்கு அருந்ததி, மஹதீரா, நான் ஈ, பிருந்தாவனம் சொல்லிக் கொண்டே போகலாம். சரி நாம் படத்திற்கு போவோம்.
படத்தின் பெயர் பூலா ரங்கடு. கதையின் நாயகன் சுனில் ரெட்டி. தெலுங்குலகில் பெயர் சொல்லுமளவுக்கான நகைச்சுவை நடிகர். இவரை ஹீரோவாக்கிய பெருமை நமது நான் ஈ புகழ் இயக்குனர் ராஜ் மௌலியை சாரும். சுனிலை ஹீரோவாக்கி இவர் எடுத்த 'மர்யாத ரமண்ணா' படம் சூப்பர் டூப்பர் ஹிட். எப்படி நம்ம ஊரில் இம்சை அரசன் ஹிட் ஆனதும் இ.லோக அழகப்பன் வந்ததோ அதே போல் வந்த படம் தான் இந்த பூலா ரங்குடு.
கதைப்படி ஹீரோ ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரை ஏமாற்றி ஒரு 30 ஏக்கர் நிலத்தை இவர் தலையில் ஒரு கும்பல் கட்டி விடுகிறது. அந்த நிலத்தை விற்றால்தான் அவரது பல குடும்ப பிரச்சனைகள் தீரும். ஆனால் விற்க விடாமல் 2 கும்பல் தடுக்கிறது.
ஏன் என்றால் அந்த 2 வில்லன்களுடைய நிலத்திற்கு நடுவில்தான் 30 ஏக்கர் இருக்கிறது, அது யாருக்கு என்ற போட்டியில் விற்க விடுவதில்லை, இத்தனைக்கும் அந்த 2 வில்லன்களும் மாமன் மச்சான்களே.
எப்படியாவது இருவரையும் சமாளித்து நிலப்பிரச்சனையை தீர்ப்போம் என்று வரும் சுனில் தன் பால்ய நண்பனுடன் ஒரு வில்லனிடம் அடியாளாய் சேர்கிறார். ஆந்திராவில் வில்லன்கள் என்றால் முட்டாளாய்த்தான் இருக்க வேண்டும் என்பது எழுதப் படாத விதி.
சுனிலை யார் என்று தெரியாமல் அடியாளாய் சேர்த்துக் கொண்டதோடு இல்லாமல் அவர் எதெச்சையாய் செய்யும் விஷயங்கள் அவருக்கும் வில்லனுக்குமான நெருக்கத்தை அதிகரிக்க அண்ணன், தம்பி அளவுக்கு நெருங்குகிறார்கள்.
ஒரு பக்கம் இப்படி என்றால் இன்னொரு வில்லனின் மகள்(ஹீரோயின்) சுனிலை காதலிக்கிறாள். அந்த ஹீரோயினை திருமணம் செய்ய வேண்டுமென்பது இன்னொரு வில்லனின் ஆசை. ஹீரோக்கும் வில்லனுக்கும் மோத காரணம் கிடைத்து விட்டது.
படத்தோட ஹைலைட் க்ளைமேக்ஸ்ல சுனில் காட்டற 6 பேக் தான், நிஜமா நான் எதிர்பார்க்கலை. படம் ஆரம்பத்துலருந்து காமெடி, சென்டிமென்ட்டா போய்ட்டுருக்கு. ஆனா நல்ல திரைக்கதை. காமெடி பிடிக்கறவங்க பாருங்க. விரசமில்லாத நகைச்சுவை அதிகம்.
படத்தோட ட்ரெய்லர்.
மறக்காம கருத்துக்களும் தமிழ்10ல் ஓட்டும் போட்டுருங்க.
படத்துடன் நல்ல விமர்சனம்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... (த.ப. 1)