- மழைச்சாரல்: கடந்த வார கலாட்டா-கல்யாணமும் கெடாவெட்டும்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Sunday, 1 July 2012

கடந்த வார கலாட்டா-கல்யாணமும் கெடாவெட்டும்

அன்பர்களுக்கு வணக்கம், அரசியலுக்கு வந்துட்டா கறை வேட்டி கட்டித்தான் ஆகனும், ஆசிரமம் ஆரம்பிச்சா என்னைக்காவது ஒரு நாள் மாட்டித்தான் ஆகனும். அது மாதிரி பதிவு எழுத ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எத்தனை நாள் விமர்சனம் எழுதி ஏமாத்திட்டு இருக்க முடியும்? ஜாக்கி அண்ணன் அளவுக்கு இல்லைனாலும் ஏதோ நம்மாள முடிஞ்ச அளவுக்கு நம்ம வாழ்க்கைல நடக்கறதை அப்பப்ப அப்டேட் பன்னனும்ல. இதோ நானும் ஆரம்பிச்சுட்டேன்.

கடந்த வாரத்துல பெருசா நான் எதுவும் சாதிக்கலை. காலேஜ்க்கு போய்ட்டு வந்து செய்ய வேண்டிய வேலை நிறைய இருந்தும் எதையும் உருப்படியா செய்யலை. நினைவுல இருக்க மாதிரி ந்டந்ததுனா 2 விசேசத்துக்கு போனதுதான். ஒன்னு நண்பனோட தங்கச்சி கல்யாணம். இன்னொன்னு கூட வேலைப் பார்க்கற நண்பர் வீட்டுல நடந்த கெடா விருந்து. அதை பத்தி பார்ப்போம்.

என்னதான் காலேஜ் லைஃப்ல ஹாஸ்டல்ல கட்டிப்பிடிச்சு தூங்கி இருந்தாலும் ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் அ அடிச்சுக்க முடியாதுங்க. இதை பல பேர் ஒத்துப்பிங்கனு நம்பறேன். என் கூட ஸ்கூல்ல படிச்ச செந்தில் அவன் தங்கச்சி கல்யாணத்துக்கு எங்க வீட்டுக்கு வந்து எங்க அப்பா,அம்மாக்கு தனியாவும் எனக்கு தனியாவும் நான் இல்லாதப்ப பத்திரிக்கை வச்சுட்டு போனான். இருந்தாலும் நிச்சயம் பன்னும் போதே என்கிட்ட சொல்லலைங்கற கடுப்புல போகக் கூடாதுனு இருந்தேன். ஆனா அம்மா திட்டி போக சொன்னாங்க.
 
நமக்கு எங்கயும் தனியா போனா பிடிக்காதே, ஒவ்வொருத்தனுக்கா கால் பன்னி விசாரிச்சு 5 பேர் கார் எடுத்துகிட்டு போனோம். அந்த 5 பேர் ல 2 பேருக்கு கல்யாணம் ஆயிடுச்சு. கல்யாணம் கிராண்டா நடத்திருந்தாங்க. இருந்தாலும் தனிப்பட்ட முறைல எல்லாரையும் நல்லா கவனிச்சுகிட்டாங்க. 


கல்யாணத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம் பந்தில கம்மங்கூல் வச்சதுதான். பல பேர் அதை பாயாசம்னு குடிச்சு ஏமாந்தாங்க.அதுவும்  பதமா செஞ்சுருந்தாங்க. உடம்பு சூட்டை அப்படியே தணிச்சுருச்சு.

 

அடுத்து மண்டபத்துல குடுத்த பஞ்சு மிட்டாயும், குல்பி ஐசும் தான் ஹைலைட். ஸ்கூல் ஃபிரென்ட்ஸ் கூட பஞ்சு மிட்டயும் குல்பி ஐசும் திரும்பவும் சாப்பிடற வாய்ப்பு எல்லாருக்கும் கிடைச்சுறாது. இதெல்லாம் முடிச்சுட்டு நாங்க அடுத்த 2 மணி நேரம் எங்க போனோம்னு யார் கேட்டாலும் சொல்ல கூடாதுனு கூட வந்த 2 குடும்பஸ்தனுங்க என்கிட்ட சத்தியம் வாங்கிட்டாங்க. அதனால சொல்ல மாட்டேங்கோவ்.

 

அடுத்து நேத்து போன கெடா விருந்து.  காலேஜ்ல சின்னவங்க பெரியவங்கனு பார்க்காம எல்லாரையும் மாமானு பாசமா கூப்புடற ஜெயக்குமார் வீட்டு கெடா வெட்டு 2 நாள் விருந்து, என்னைக்கும் போலாம்னு குழம்பி எலெக்ஷன் வச்சு மெஜாரிட்டி சனிக்கிழமை போலாம்னு சொன்னதால எல்லாரும் பைக்ல கிளம்பனோம். எப்படியும் 20 பேர் போயிருப்போம். அவங்கப்பா ஊர் பஞ்சாயத்து தலைவரா இருந்ததால அந்த கிராமத்துல வழி கேட்டு போறது கஷ்டமா இல்லை.

 

கூட வேலை பார்க்கறவங்கனா "சார், சார்"னு பேசி போரடிச்சு போன எங்களுக்கு எல்லாரும் ஒட்டுக்கா இந்த விசேசத்துக்கு போய் சிரிச்சு பேசி அக்கம் பக்கத்துல இருக்க பொன்னுங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம சைட் அடிச்சுகிட்டு மனசை ரிலாக்ஸ் பண்ணிட்டு வந்தது நல்லாயிருந்தது. ரொம்ப நாள் கழிச்சு வயிறு முழுக்க சாப்பிட்டு வெத்தை பாக்கு போட்டு வந்தோம்.


இனி அப்பப்ப எல்லாருமா சேர்ந்து அங்கங்க போகனுங்க, மனசு லேசாகுறதை உணர முடியுது.

மறக்காம கமெண்ட் அ போட்டுறங்க.

No comments:

Post a Comment