- மழைச்சாரல்: இதுவும் காதல் படம்தான் -THE UGLY TRUTH- விமர்சனம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Saturday, 7 July 2012

இதுவும் காதல் படம்தான் -THE UGLY TRUTH- விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், திரைப்படத்தில் வரும் சிறு சிறு டெக்னிக்கல் விசயங்களை கூட எடுத்த சொல்ல சீனியர் பதிவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், நம்மள மாதிரி ஜீனியர்ஸ்க்கு என்ன வருமோ அதை மட்டும் செய்வோம், அதாங்க ரொமெண்டி காமெடி படங்களை பார்த்து அதுல நல்ல படங்களை மத்தவங்களுக்கு அறிமுகப் படுத்தறது. அந்த வகைல இன்னைக்கு பார்க்க போற படம் "THE UGLY TRUTH".


 படம் ஒரு பக்கா லவ் ஸ்டோரி, லவ்னா ஹீரோ மண்டி போட்டு ப்ரோபோஸ் பன்றது, நல்லதா ஒதுக்கப்புறமா உட்கார்ந்து லவ் பன்றதுனு நினைக்க வேண்டாம், எப்பவுமே ஹாலிவுட்டுக்கும் நம்ம ஊர் சினிமாக்கும் இருக்க பெரிய வித்தியாசம் ஒன்னுதான்.

நம்ம ஊர் படங்கள்ள ஹீரோ ஹீரோயின காதலிக்கறதா சொல்லுவாங்களே தவிர எப்படி அந்த காதல் வந்ததுனு சொல்ல மாட்டாங்க, படத்தோட ஆரம்பத்துல காதல் வந்துரும், கடைசில கல்யாணம் பன்னிப்பாங்க, ஹாலிவுட்ல 2 பேருக்குள்ள லவ் வரதையே படம் முழுக்க இயல்பா காட்டுவாங்க, க்ளைமாக்ஸ் ப்ரோபொஸ் பன்ற சீனா இருக்கும், சரி நாம் கதைக்கு வருவோம்.

ஹீரோயின் ஒரு டீவீ சேனல்ல வேலை பார்க்கறாங்க, அவங்களுக்கு வரப் போற மாப்பிள்ளை எப்படி இருக்கனும்னு பெரிய லிஸ்ட் வச்சுருக்காங்க, எவனும் அந்த மாதிரி சிக்க மாட்டேங்கிறான். ஒரு நாள் வீட்ல டீவீ ல லைவ் ப்ரோக்ராம் பன்ற ஒருத்தனுக்கு(ஹீரோ) கால் பன்னி தன்னோட கன்டிஷன்ஸ் பத்தி பேசும் போது அவன் ஓப்பனா உனக்கு யாரும் சிக்க மாட்டாங்கனு அசிங்க படுத்திடறான்.


அடுத்த நாள் கம்பெனிக்கு போனா பெரிய அதிர்ச்சி ஹீரோயினுக்கு, நைட் லைவ் ஆ பேசுனவனை அவங்க சேனல் ல "UGLY TRUTH"ங்கற ப்ரோக்ராம் ஆரம்பிச்சு ஹீரோயின் கூடவே வேலை பார்க்க சொல்லுது நிர்வாகம். 2 பேருக்கும் சுத்தமா ஒத்துப் போறதில்லை. ஆனா ஹீரோ பன்ற ப்ரோக்ராம் செமையா ஹிட் ஆகறதால வேற வழியில்லாம நிர்வாகத்துக்காக ஹீரோ கூட சேர்ந்து பிடிக்கலைனாலும் வேலை பார்க்குறா.


இப்ப ஹீரோயினுக்கு பிடிச்ச மாதிரி அவங்க கன்டிஷனுக்கு ஒத்து வர மாதிரி ஒரு டாக்டர் பக்கத்து வீட்டுக்கு குடி வர்ரார், ஹீரோயினுக்கு ரொம்ப பிடிச்சுருக்கு, ஆனா எப்படி இம்ப்ரெஸ் பன்றதுனு தெரியலை. இப்ப ஹீரோ ஒரு டீல் சொல்றார், அந்த டாக்டரை கரெக்ட் பன்றதுக்கு ஹீரோ ஐடியா குடுத்து செட் ஆச்சுனா ஹீரோவோட கன்செப்ட் அ ஒத்துகிட்டு ஹீரோயின் ப்ரோக்ராமுக்கு முழு ஒத்துழைப்பு குடுக்கனும்ங்கறதுதான் டீல்.


எல்லாம் நல்ல படியா போகுது, கொஞ்சம் கொஞ்சமா டாக்டர் மனசுல ஹீரோயின் வந்துடராங்க, அதே நேரத்துல ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் பத்திக்க ஆரம்பிக்குது. ஈகோ காரணமா 2 பேரும் பிரிய வேண்டி இருக்கு. எப்படி ஒன்னு சேர்ராங்கங்கறதுதான் க்ளைமாக்ஸ். எனக்கு க்ளைமாக்ஸ் எடுத்த விதம் ரொம்ப பிடிச்சுருக்கு.


படத்துல கேப் விடாம சிரிக்க வைக்க நிறைய சீன் இருக்கு, இப்ப சொல்லிட்டா பார்க்கறப்ப இன்ட்ரெஸ்ட் இருக்காது, அதே நேரத்துல பார்க்கறவங்களுக்கு கண்டிப்பா காதல் உண்ர்வும் வந்துட்டு போகும். அப்படி வரலைனா 2 நாள் லீவ் போட்டு ரெஸ்ட் எடுங்க, பயங்கர டென்ஷன்ல இருப்பிங்க போல.

படத்தோட ட்ரெய்லர்வந்ததும் வந்தீங்க மறக்காம கமெண்ட் அ போட்டு, நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.

4 comments:

 1. நல்லா இருக்கு! நம்மாளுங்க சந்தடி சாக்குல உருவிடப்போறானுங்கப்பு!

  ReplyDelete
 2. anna, one more movie "friends with benefits" .....

  ReplyDelete
  Replies
  1. டவுன்லோட் பன்னி வச்சுருக்கேன், பார்க்கனும்

   Delete
 3. எக்கச்சக்கமான படம் பார்க்க இருக்கு. இதையும் சேர்த்து வைக்கிறேன். :)

  ReplyDelete