திருடன் போலிஸ் ஆ நடிச்சா? -BLUE STREAK -திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், நம்ம ஊர் சினிமால எவ்வளவோ அதிசியங்களை பார்த்துருக்கோம். ரவுடி போலிஸ் ஆவார்(அஞ்சாதே), ட்ரக் அடிக்ட் மிலிட்டரி ஆபிசர் ஆவார் (வாரணம் ஆயிரம்). கேங்ஸ்டர் கடைசில நான் ஐபிஎஸ் ஆபிசர் நு சொல்லுவார்( போக்கிரி). இவங்களாம் போலிஸ் ஆகறதை சாதாரணமா சொல்லிருப்பாங்க. ஆனா திருடன் போலிஸ் ஆகாம கொஞ்ச நாளைக்கு போலிஸ் ஆ நடிக்க வேண்டி இருந்தா? (அதான் ரஜினிக்காந்த் "அன்புக்கு நான் அடிமை" படத்துல பன்னிட்டாரேனு நீங்க கேட்கறது புரியுது).

இன்னைக்கு நாம பார்க்கப் போற படம் BLUE STREAK. படத்தோட ஹீரோ நம்ம பேட் பாய்ஸ் படத்துல வருவாரே மார்ட்டின் அவர்தான். கதைப்படி அவர் ஒரு திருடன், இவருக்கு இந்த ரோல்தான் நல்லா சூட் ஆகுது.




 படத்தோட ஆரம்பத்துல ஒரு இடத்துல விலை மதிக்க முடியாத வைரத்த 3 பேர் சேர்ந்து திருடறாங்க, திருடனதும் அதுல ஒருத்தன் மத்தவங்களை கொன்னுட்டு தனியா அதை அடிக்க பார்க்குறான், ஆனா சன்டை முடியறதுக்குள்ள போலிஸ் வந்துருது. நம்ம ஹீரோவும் அப்ப கட்டிட்டு இருக்க ஒரு புது பில்டிங்கோட ஏர் கன்டிஷனர் பைப் ல அந்த வைரத்தை டேப் போட்டு ஒட்டி வச்சுட்டு போலிஸ்ல சரண்டர் ஆகிடறான்.


கொஞ்சம் வருசம் கழிச்சு ஜெயில்ல இருந்து வர ஹீரோ அந்த பில்டிங்க தேடிப் போய் பார்த்தா அது ஒரு போலிஸ் ஸ்டேசன். எப்படி இருக்கும்?, ஆனா அதை அப்படியே விட்டுட்டும் போக முடியாது, வைரம் கிடைச்சா லைஃப் செட்டெல்ட்.
யோசிக்கறார், நம்ம ஊரா இருந்தா உள்ள போக கறை வேட்டி கட்டலாம், அங்க வேற வழி இல்லை போலிஸ் ஆ தான் போகனும்னு திட்டம் போடறார்.

டூப்ளிகெட் ஐடி கார்ட், ட்ரான்ஸ்பர் ஆர்டர்னு ரெடி பன்னிகிட்டு ஒரு இன்ஸ்பெக்டர் ஆ அங்க போறார். ஆனா அவ்வளவு சுலபத்துல அந்த வைரத்தை எடுக்க முடியலை, போலிஸ் ஆயாச்சு, திருடனை பிடிக்கனுமே, போற இடத்துலலாம் திருட்டு மூளைய வச்சு எல்லாத்தையும் கண்டு பிடிக்கறார்.


தன்னோட திருட்டு ஃப்ரெண்ட் அ பார்க்கறப்ப அவன்கிட்ட நைஸ் ஆ பேசி, அடிச்சு பிடிக்கற மாதிரி நாடகம் ஆடறது செம. அந்த சீன் அ ரசிக்காம யாராலயும் இருக்க முடியாது. வைரத்தை எடுத்தா நேரங்கெட்டு போய் அது கஞ்சா ட்ரக்குக்கு உள்ள மாட்டிக்குது.


இப்ப வேற வழி இல்லை, அந்த கஞ்சா கேஸை யும் டீல் பன்னனும், பன்றார். இதுக்கு நடுவுல வைரத்துக்காக பழைய வில்லனும் வந்துடறான், அவனையும் சமாளிச்சு கஞ்சா க்ரூப்பையும் சமாளிச்சு, போலிஸ் டிபார்ட்மென்ட்டுக்குள்ள சண்டைய மூட்டி விட்டு எப்படி வைரத்தோட தப்பிக்கறாருங்கறதுதான் படத்தோட க்ளைமாக்ஸ்.


இந்த படத்துக்கு இந்த ஹீரோவ விட்டா வேற யாரும் செட் ஆகமாட்டாங்க. மனுசன் பின்னி பெடலெடுக்கறார். என்க்யுரி பன்றனு அக்யுஸ்ட் அ போட்டு பேயடி அடிக்கும் போது "நான் போலிஸ் இல்லை பொறுக்கி"னு பஞ்ச் பஞ்சா விட்டு பட்டைய கிளப்பறார். 

படம் செம ஆக்சன் காமெடி படம், படத்துல ஒவ்வொரு இடத்துலயும் வைரத்தை எடுக்க விடாம பிரச்சனை வரப்ப போலிஸ் ஆ நடிக்கற திருட்டு ஹீரோவோட ரியாக்சன் செம. எங்க போனாலும் போலிஸ் ரூல்ஸ் அ மதிக்காம, பன்னிட்டு அதுக்கு ஒரு விளக்கம் குடுக்கறது கெத்.

கண்டிப்பா படம் எல்லாருக்கும் பிடிக்கும், சிரிச்சுகிட்டே இருக்கலாம். படத்தோட ட்ரெய்லர்.


மறக்காம கமெண்ட் அ போட்டுட்டு தமிழ்10ல ஒரு ஓட்டு போட்டுருங்க.

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2