மாற்றான் படக்கதை இதுவாகவும் இருக்கலாம்-STUCK ON YOU-REVIEW

அன்பர்களுக்கு வணக்கம். மாற்றான் படம் வந்தது முதலே இனையங்களில் அது "STUCK ON YOU" படத்தின் தழுவல் என்று பரப்பப் பட்டு வருகிறது. மற்ற பதிவர்கள் எந்த திரப்படம் வந்தாலும் முதல் நாளே பார்த்து விமர்சனம் எழுதுகிறார்கள், அந்த வேகம் எனக்கு வராது, அதனால் தான் அதிகமாக மற்ற மொழிப் படங்களை விமர்சித்து வருகிறேன். 

அதில் ஒரு புது முயற்சியாகத்தான் இந்த படத்தின் விமர்சனம், அனைவரும் சொல்வது போல் இந்தக் கதை மாற்றான் படத்தின் கதையாகவும் இருக்கலாம். ஏதோ ஒரு வகையில் என்னை இந்த படம் பார்க்க வைத்த கே.வி. ஆனந்த் மற்றும் இனைய நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனேனில் அருமையான படம்.
 

படத்தின் துவக்கத்திலேயே கதையின் நாயகர்கள் இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என தெரிந்து விடுகிறது. இருவரும் ஒரு சிறிய ஊரில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார்கள். அவர்களது கடையில் ஒரு சிறப்பு, PIZZA போல் சொன்ன நேரத்தில் ஆர்டர் செய்ததை தராவிட்டால் இலவசமாக சாப்பிட்டுவிட்டு செல்லலாம்.


சிறு வயதில் இருந்து அந்த ஊரில் இருப்பதால் ஊர் முழுக்க நண்பர்கள். அண்ணன் தம்பி என்று பிரித்துக் கொள்வோம், அண்ணன் ஒரு சமையல்காரன், ஹாக்கிப் ப்ளேயர், இணையத்தில் ஒரு பென்னை காதலிப்பவன், வேறு பெண்களிடம் பேசச் சொன்னால் உளறுபவன். பதட்டமானால் மூச்சுக் கோளாறால் அவதிப்படுபவன்.


தம்பி நடிகனாக விரும்புபவன், இள ரத்தம், தினமும் ஒரு பெண், கோபப்படுவான், ஹாலிவுட் போக விரும்புகிறான். ஆனால் இருவரும் ஒட்டியே இருப்பதாலும் அண்ணனுக்கு விருப்பமில்லாததாலும் கிராமத்திலேயே இருக்கிறான். வருட வருடம் நாடகம் போடுவான்.


ஒரு கட்டத்தில் தம்பி அண்ணனை சம்மதிக்க வைத்து ஹாலிவுட்டுக்கு அழைத்து செல்கிறான். அங்கு ஒரு கவர்ச்சி பெண் அறிமுகமாகிறாள், யாரும் இரட்டையர்களான இவர்களுக்கு வாய்ப்பு தரவில்லை.


ஒரு சீரியலில் நடிப்பதில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு நடிகை இவர்களைத்தான் ஜோடியாகப் போட வேண்டும் என அடம் பிடிப்பதால் வாய்ப்பு கிடைக்கிறது, அதிர்ஷ்டவசமாக நல்ல பேரும் கிடைத்து பிரபலமாகிறார்கள்.

இன்னொரு பக்கம் இனைய காதலியை நேரில் சந்தித்து பழக வேண்டும், ஆனால் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் என்பதை சொல்லாமல் விட்டதற்காக அதை மறைக்க இவர்கள் படும்பாடு அனைவராலும் ரசிக்கக் கூடிய ஒன்று. ஒரு கட்டத்தில் தெரிய வர காதலி பிரிகிறாள்.

ஆப்ரேஷன் செய்து இருவரும் பிரியலாம் என்றால் தம்பி உயிருக்கு 50% வாய்ப்பு இருப்பதால் மறுத்து வந்த அண்ணனின் காதலுக்காக தம்பி சண்டை போட்டு சிகிச்சைக்கு ஒத்துகொள்ள வைக்கிறான். இருவரும் பிரிகிறார்கள்.

கிட்டதட்ட 25 வருடம் ஒன்றாக தோளோடு தோளாக நடந்தவர்கள் பிரிந்து நடக்கக் கூட முடியாமல் கீழே விழுகிறார்கள். கொஞ்ச நாளில் அண்ணன் ஊருக்கே செல்கிறான். தம்பி தொடர்ந்து நடிக்கிறான்.


நாட்கள் போகப்போக இருவருக்கும் வாழ்க்கையில் அனைத்து சந்தோசங்களை விட இருவரும் சேர்ந்து இருப்பதுதான் மகிழ்வான் விசயம் என்று புரிகிறது. சிகிச்சைக்கு பின்பும் இருவரும் ஒட்டியே வாழ ஆரம்பிக்கிறார்கள். தேவைப்படும் போது மட்டும் பிரிகிறார்கள்.

படம் அருமையான கதை, இதை அப்படியே எடுத்திருந்தால் மாற்றான் செம ஹிட் ஆகும் என அடித்து சொல்கிறேன்.ஏதோ ஒரு வகையில் என்னை இந்த படம் பார்க்க வைத்த கே.வி. ஆனந்த் மற்றும் இனைய நண்பர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனேனில் அருமையான படம்.

படத்தின் ட்ரெய்லர்



மறக்காமல் கமெண்ட்டும் தமிழ்10ல் ஓட்டும் போட்டுருங்கப்பா...

Comments

  1. அதற்குள் அட்வான்ஸ் விமர்சனமா !?!

    ReplyDelete
  2. சிறப்பான விமரிசனம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2