BRINGING DOWN THE HOUSE - MOVIE REVIEW
அன்பர்களுக்கு வணக்கம், நாமளும் விதவிதமான அனுபவங்களை வாழ்க்கைல சந்திச்சுருப்போம், விதவிதமான சினிமாக்களையும் பார்த்துருப்போம், இது எனக்கு கொஞ்சம் புதுசு, நமக்கு எப்பவும் ரொமென்டிக் காமெடி படங்கள் தான் அதிகம் பிடிக்கும், விக்கிப்பீடியால தேடி அந்த வகைனு நினைச்சு எடுத்து பார்த்தேன்.
நாம எதிர்பார்க்கற ரொமெண்டிக் இதுல இல்லை, காமெடி ஏகத்துக்கும் இருக்கு, என்ன இருந்தாலும் இந்த படத்தை ரசிக்காம இருக்க முடியலை. சரி நாம படத்துக்கு போவோம். BRINGING DOWN THE HOUSE.
படத்தோட கதை எதுக்குங்க? கான்செப்ட் அ தெரிஞ்சுக்கங்க, ஹாலிவுட்லதான் எந்த ரூல்ஸும் இல்லையே, ஹீரோ 60 வயசு தாத்தாவா கூட இருக்கலாம், இந்த படத்தோட ஹீரோக்கு வயசு 45க்கு மேல, ஒரு ப்ரைவேட் கம்பெனி அட்டார்னி (அதாங்க வக்கில்). இவர் சும்மா இல்லாம சேட்டிங் பன்னி ஒரு பொன்னை கரெக்ட் பன்னிடறார். போட்டோல பார்த்தா பொன்னு பிகரா இருக்கவும் டேட் ஃபிக்ஸ் பன்னிடறார்.
அவர் மனைவி, குழந்தைங்களாம் பிரிஞ்சு இருக்காங்க, குறிப்பிட்ட நாள்ள ஃபிகருக்கு காத்திருக்கும் போது கருப்பா குண்டா ஒரு பொன்னு (நீக்ரோ) உள்ள வந்து நாந்தான் உன் கேர்ள் ஃப்ரென்ட்னு சொல்லுது. சேட்டிங்க் ல அனுப்புன போட்டோல மூலைல அது இருக்கு, கைதியா ( ஆமாங்க அக்கா அக்யுஸ்ட்)
ஹீரோ எவ்வளவு காண்டாகிருப்பார்?, வெளியே அனுப்புனா கத்தி கூச்சல் போடுது. அந்த பொன்னோட கோரிக்கை ஒன்னுதான், பேங்க் ல கொள்ளை அடிச்ச கேஸ்ல அதோட பேரை யாரோ தேவை இல்லாம சிக்க வச்சுருக்காங்க, கேஸ் அ ரீ ஓப்பன் பன்னனும்னு சொல்லுது.
ஹீரோ ஒத்துக்காம முரண்டு பிடிக்கவும் பல வகைல டார்ச்சர் பன்னி ஒத்துக்க வைக்குது, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஹீரோவோட பசங்களுக்கு நிறைய உதவி செஞ்சு ஹீரோ கூட டின்னர் போய் பார்ட்டில ஆட வச்சு நல்ல பேர் வாங்குது.
இன்னொரு பக்கம் ஹீரோவோட வைஃப், கொஞ்சம் கொஞ்சமா இதெல்லாம் கேள்விபட்டும் பார்த்தும் காண்டாகுது, அவங்களோட ஃப்ரெண்ட் ஒருத்தி ஹீரோயின்கிட்ட அடி வாங்கற சீன் செமையா இருக்கும்.
கடைசிலதான் ஹீரோயின் ஜெயில்ல இருந்து தப்பிச்சு வந்துருக்கறது தெரியுது, எப்படி ஹீரோ அந்த கேஸ்ல இருந்து ஹீரோயின் அ காமெடியா காப்பத்தறார்னு படத்துல தெரிஞ்சுக்கங்க, கடைசில ஹீரொயினுக்கு ஜோடியாக போறவர் அமெரிக்கன் பை படத்துல ஹீரோக்கு அப்பாவா வரவர்தான்.
படம் ஆரம்பத்துல இருந்து செம காமெடியா ஸ்பீடா போகுது, கதை ரொம்ப ஜன்ரஞ்சகமான கதை, படத்தை தமிழ்ல எடுத்தா நான் ஐஸ்வர்யாவ(கோ பட தீவிரவாதி) பரிந்துரைக்கறென். படத்துல வர ஹிப்ஹாப் மியுசிக்கும் டேன்சும் செம.
படத்தோட ட்ரெய்லர்.
மறக்காம கமெண்ட்டும் தமிழ்10ல ஓட்டும் போட்டுருங்க.
நல்லதொரு விமர்சனம்...
ReplyDeleteஉங்கள் தளத்திற்கு முதல் வருகை...
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
இந்தப் படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் ஸ்டீவ் மார்ட்டினின் பிங்க் பேன்தர், ஹௌஸ் சிட்டர், Planes Trains and Automobiles எல்லாம் நல்ல காமெடிப் படங்கள்.
ReplyDeleteநல்ல விமர்சனம். நன்றி. :)