நான் ஈ- திரை விமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், உங்களைப் போலவே ராஜ்மவுலிக்காகவே ஈ படத்தை முதல் நாளே பார்த்து விட வேண்டுமென்று இருந்தேன், நேற்றுதான் பார்க்க முடிந்தது. படம் பற்றி விமர்சனம் எனது பார்வையில் இதோ.
இந்த ஹீரோதான் தமிழில் வந்த "வெப்பம்" படத்தில் நடித்தவர் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த படம் சுத்தமாய் ஓடவில்லை என்றாலும் அப்படத்தில் வரும் "மழை வரும் அறிகுறி" பாடல் அனைத்து காதலர்களுக்கும் பிடித்த பாடல்.
நான் ஈ, கதையை ட்ரெய்லர் பார்த்த யார் வேண்டுமானாலும் கூறி விடுவார்கள். ஹீரோயினுக்காக வில்லனால் கொல்லபட்ட ஹீரோ, ஈயாக மறு ஜென்மம் எடுத்து வில்லனை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் கதை.
படத்தில் எழுத்து போடும் போதே கதை சொல்ல சொல்லி அப்பாவை தூங்கவிடாமல் செய்யும் குழந்தைக்காக அப்பா சொல்லும் ஃபேண்டசி கதைதான் இப்படம் என்பது போல் காட்டி, ஒட்டு மொத்த லாஜிக் கேள்விகளிலிருந்து இயக்குனர் தப்பி விட்டார்.
கதை எல்லோருக்கும் தெரிந்த விசயம் என்றாலும், திரைக்கதை யாராலும் யூகிக்க முடியாதது, ஹீரோ 2 வருசமாக ஹீரோயின் பின்னாடி சுற்றுவதையும் ஹீரோயினுக்கும் ஹீரோ மேல் ஒரு "அது" வந்து விட்டதையும் வசனங்களிலேயே இயக்குனர் நமக்கு உணர்த்தி விடுகிறார். அதே போல் வில்லனின் குணங்களையும் சொல்லி விடுகிறார்.
அனைவரும் எதிர்பார்ப்பது போல் ஹீரோவுக்கு ஃபைட் சீன்லாம் குடுக்காமல் சீக்கிரமாக கொன்று விடுகிறார். ஈயாக பிறக்கும் ஹீரோ முட்டையில் இருந்து வெளிவரும் போது தியேட்டரில் அவ்வளவு கரகோஷம்.
ஒரு ஈயால் பழி வாங்க முடியுமா? சரியா ப்ளான் பன்னா முடியும்னுதான் படம் பார்த்ததுக்கு அப்புறம் நான் சொல்றது. ஏன்னா முதல்ல கோபத்துல வில்லன் பக்கத்துல போய் அடிபட்டு கீழே விழுறது, HIT அடிச்சு சாகக்கிடக்கறதுனு ஈயா இருந்தா வர மைனசையும் சொல்லிருக்கார்.
படத்தோட ஹைலைட் சீன் ஈ வில்லனை தூங்கவிடாம செய்யறதுதான், அப்புறம் ட்ராபிக் கான்ஸ்டபுள் அ வச்சு ட்ராபிக் அ ஜாம் பன்னி விடறது, காரையே ஆக்சிடென்ட் பன்ன வைக்கறது, இன்டர்வெல் சீன்ல வில்லனுக்கு கன்னாடில "I WILL KILL YOU"னு எழுதி மிரட்டறதுனு மாஸ் காட்டிருக்காங்க.
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச சமந்தா, "என்ன பொன்னுடா?" என் மொத்த சப்போர்ட்டும் சமந்தாவுக்குதான், ஹீரோவ லவ் பன்றதை மறைச்சுகிட்டு அவர் அடிக்கற கமெண்ட்டுக்கு அவருக்கு தெரியாம ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க, அதை பார்க்கும் போது எனக்கு அர்ஜென்ட் ஆ யாரையாவது லவ் பன்ன தோணும்.
அப்புறம் வில்லன் சுதிப் ஆ வரவர், நம்ம கன்னடத்துல வந்த சிங்கம் படத்துல போலிஸ் ஆ நடிச்சவர், டென்ஷன் ஆகி ட்ராபிக் ல பக்கத்து கார்காரனை அப்பும் போதும், ஈயால கடுப்பாகி நிர்வானமா வெளிய வந்து மத்தவங்க முன்னாடி ஈ ஓட்டும் போதும், "ANIMALS REVENGE எடுக்குமா?"னு சந்தேகமா கேட்கும் போதும் கலக்கறார்.
சந்தானம் 2 சீன்க்கு மட்டும் வந்து போறார், ஆனா செம, ஹீரோயின் ஈய பார்த்து பேசறத அவரை பார்த்து சொல்றதா நினைக்கறது கலக்கல், அதுவும் "நீ மனுசனா மாறனும்"னு ஹீரோயின் சொன்னதும் ஒரு ரியாக்சன் குடுப்பார் பாருங்க, அப்புறம் ஏன் இவ்வளவு ஃபேன்ஸ் இருக்க மாட்டாங்க.
ஏற்கனவே விமர்சனம் எழுதுன எல்லாரும் சொன்னதுதான், வழக்கம் போல ராஜ் மவுலி அவர் முத்திரைய பதிச்சுருக்கார், ஒரே மாதிரி படம் எடுக்கற சங்கர் இவர்கிட்ட இருந்து இன்னும் நிறைய கத்துக்கனும். இவர் எப்படி கதைக்களத்தை செலக்ட் பன்றாருனு சத்தியமா தெரியலை.
படத்தோட ட்ரெய்லர்
அப்படியே எனக்கு பிடிச்ச அந்த பாட்டு.
மறக்காம கமெண்ட் அ போட்டுட்டு தமிழ்10ல ஒரு ஓட்டும்.
அருமையான படத்திற்கு அழகான விமரிசனம்!
ReplyDelete