FATSO-பாலிவுட் அதிசியப் பிறவி/ திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம். வழக்கமா நம்ம சினிமாலா பார்த்திங்கனா ஒரு புது டிரன்ட்ல படம் எடுத்து படம் ஹிட் ஆயிடுச்சுனா எல்லாரும் அதே டிரண்ட் ல படம் எடுப்பாங்க, உதாரணத்துக்கு ரவுடியுசம் ஹிட் ஆச்சுனா எல்லாரும் ஹீரோவ ரவுடியா காட்டி படம் எடுக்கறது, அப்புறம் கிராமத்து சப்ஜெக்ட்னா எல்லாரும் அதையே ஃபாலோ பன்றது. இது தமிழ்ல மட்டுமில்லை, எல்லா மொழி சினிமாவுக்கும் பொருந்தும், அதே மாதிரி பார்த்திங்கனா தமிழ்ல அதிசியப் பிறவினு ஒரு படம் ரஜினிகாந்த் நடிச்சு வந்து ஹிட் ஆச்சு, அதுல ஆயுள் முடியறதுக்கு முன்னாடியே ரஜினிய யமலோகம் கூட்டி போறதால குழப்பம் வந்து வேற ரஜினி உடம்புக்கு மாத்துவாங்க.

இந்த கதைய வச்சு அப்பவே எல்லா மொழிலயும் ரீமேக் பன்னாங்க. தெலுங்குல சிரஞ்சீவி பன்னார். ஆனா அந்த யமலோக கான்செப்ட் அ வச்சு இன்னமும் படம் வந்துகிட்டுதான் இருக்கு.ஒவ்வொரு படமா பார்ப்போம், இன்னைக்கு நாம பார்க்கப் போறது கலர்ஃபுல் லவ் இருக்க "FATSO" படத்த பத்தி.

 

ஒரு யங்க்ஸ்டர் க்ருப். 5 பேர், அதுல 2 ஜோடி லவ்வர்ஸ், எப்ப பார்த்தாலும் லவ் பன்றதையே பொழப்பா வச்சுகிட்டு இருக்காங்க, எப்படி அவங்க வீட்ல கேட்காம இருக்காங்கனு தெரியல. 5 வதா இருக்கவந்தான் FATSO, அதாவது குண்டா எப்ப பார்த்தாலும் எதையாவது சாப்பிட்டுகிட்டு பொன்னுங்க மேல ஆர்வம் இல்லாம இருக்கவன். 

இவங்க லவ் பன்றதையும் ஊர் சுத்தறதையும் பார்ட்டிக்கு போறதையுமே காட்டறாங்க, அதுவும் கலர்ஃபுல்லா நல்லாதான் இருக்கு.

 

ஒரு நாள் 3 பசங்களும் சேர்ந்து கார்ல போகும் போது ஆக்சிடென்ட் ஆயிடுது. ஹீரோ செத்துடறான். எல்லாரும் அழறாங்க(வழக்கம் போல). ஏதோ கார்ப்பரேசன்ல அப்புருவல் வாங்க கூட்டம் வரிசையா நிக்கற மாதிரி ஒரு இடத்துக்கு செத்து போன ஹீரோவ ப்யுன் ட்ரெஸ் போட்டுருக்க ஒருத்தர் கூட்டிப் போறார். அதான் யமலோகமாம். அச்சு அசல் கவர்ன்மென்ட் ஆபிஸ் மாதிரியே இருக்கு, எல்லாத்துக்கும் தனித் தனி வரிசை.

 

அப்புறம் செத்தவங்க டீடெய்ல்ஸ் எடுத்து பார்க்கும் போதுதான் ஹீரோ சாக வேண்டியதில்லை, அந்த குண்டுபையந்தான் சாக வேண்டியதுனு தெரியுது. " நடந்த தப்புக்கு மன்னிப்பு கேட்டுக்கறோம், அதை சரி பன்ற வரைக்கும் வெயிட் பன்னுங்க"னு 3 மாசம் காக்க வச்சுடறாங்க, இடையில ப்யுன கரெக்ட் பன்னி பூமிக்கு போய் பார்த்த ஹீரோவோட ஃப்ரெண்டே ஹீரோயின கரெக்ட் பன்ன பார்க்கறான். அதுவும் இப்ப இருக்க லவ்வர் அ கழட்டி விட்டுட்டு.

 

இப்ப ஹீரோக்கு இருக்க ஒரே ஆப்ஷன் அந்த குண்டு பையன் உடம்புக்குள்ள வாழ்றதுதான். ஒத்துகிட்டு நுழைஞ்சுடறான். அவன் தான் செத்துப் போன ஹீரோனு சொன்னா யாரும் நம்ப போறது இல்லை. கண்ணு முன்னாடியே ஃப்ரெண்ட் அவன் லவ்வர் அ கரெக்ட் பன்ன பார்க்கறான். இதெல்லாம் முறியடிச்சு எப்படிிந்த குண்டு உடம்ப வச்சுகிட்டு ஹீரோ ஹீரோயினை கரெக்ட் பன்றார்னு படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க. படம் 1.30 மணி நேரம்தான்.


படத்தை ரொம்ப இழுக்கலை. ஹீரோயின் என் கண்ணுக்கு ரொம்ப அழகா தெரியறாங்க. குண்டு உடம்புக்குள்ள இருந்துகிட்டு ஹீரோ படற பாடு நம்மளை தானா சிரிக்க வைக்குது. திரும்பவும் சொல்றேன் ஹீரோயின் எனக்கு ரொம்ப அழகு. பாருங்க.

படத்தோட ட்ரெய்லர்.


 வந்ததும் வந்திங்க, மறக்காம கமெண்ட் அ போட்டு போங்க.

Comments

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...