"மச்சான் அது உன்னோட 15வது தங்கச்சிடா"- காலேஜ் டைரி-3
அன்பர்களுக்கு வணக்கம். என்னடா தலைப்பு இப்படி இருக்குனு நினைக்கறிங்களா? என்ன பன்றது? அவன் என் பக்கத்துல இருக்கும் போது நான் அதிகமா கேட்ட வசனம் இதுதான், நான் என்ன சொல்றன்னு புரியலைன்னா இதுக்கு முந்தின பார்ட் அ படிச்சுருங்க.
நாம போற பஸ் ஆக்சிடென்ட் ஆனா எவ்ளோ நல்லாருக்கும்?- காலேஜ் டைரி-2
படிச்சுட்டிங்கனா நான் யாரை பத்தி சொல்றனு தெரிஞ்சுருக்கும், எப்படி கூடவே இருந்து ஒருத்தன் எல்லா பொன்னுங்களையும் விரட்டி விட்டு கெடுத்தானோ, அதே மாதிரி இன்னொருத்தனும் இருக்கான், இவன் ஸ்டைல் வேற,
இந்த பதிவுல நான் உங்களுக்கு அறிமுக படுத்தப் போற மெக்கானிக்கல்ல படிச்ச என் உயிர் நண்பனின் பெயர் மாதேஸ்(பெயர் மாற்றப் பட்டுள்ளது).
எனக்கு ஏதாவது ஒரு பொன்னை பிடிக்கும், நான் போய் பேச கூட முயற்சி பன்ன மாட்டேன், சும்மா பார்ப்பேன், உடனே "மச்சான் அது உன்னோட 15வது தங்கச்சிடா"னு சொல்லுவான்.
இதுக்கு முன்ன பார்த்த 14க்கும் அதையேதான் சொன்னான், சரி எப்படியும் பார்க்கற பொன்னுங்ககிட்டலாம் போய் பேசற தைரியம் எனக்கு கிடையாது, சும்மா பார்க்கறதுக்கு எதுக்கு சண்டை போடனும்னு எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா அவன்கிட்ட அடிக்கடி கேட்க நினைக்கறது ஒன்னுதான், மச்சான்னு சொல்லி என்னை எல்லா பொன்னுங்களுக்கும் அண்ணனாக்காம சகலைனு கூப்பூட்றானு,
ஆனா கேட்க மாட்டேன், ஏன்னா அப்புறம் எல்லாத்துக்கும் பங்குக்கு வந்துருவான்னு பயம். முதல்ல அவனை பத்தி சொல்லிடறன், அவன் என் பிராஞ்ச் இல்லை, மெக்கானிக்கல். என்னோட ஃப்ரெண்ட் பாலா (நிவாஷ்- இனி இப்படித்தான் சொல்லுவேன்) மூலமா அறிமுக மானவன்.
முதல் சந்திப்பிலேயே உரிமையா திட்டிகிட்டே கைக்குடுத்தான், அப்புறம் எங்க 2 பேருக்கும் ஒரே ஹீரோவ(சிம்பு) பிடிக்கும், அதுவும் நாங்க 1 வருசம் படிக்கும் போது சிம்புவோட எந்த படமும் ஓடுனது இல்லை, ஆனா தைரியமா வெளிய சொல்லிப்போம், அப்பப்ப விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுப்போம்.
அடுத்தடுத்த செமஸ்டர்ல டிபார்ட்மென்ட் போனாலும் எங்களுக்குள்ள நெருக்கம் அதிகமாச்சே தவிர குறையலை, எங்கூட சிவில் ல உட்கார்ந்து பேசிட்டு இருந்து ஸ்டாஃப் வந்ததுக்கு அப்புறம் வெளிய போகாம அப்படியே சிவில் ஸ்டூடன்ட் ஆலாம் உட்கார்ந்து ஏமாத்திருக்கான்.
எல்லாத்தை விட பெரிய விசயம், எங்க பேட்ச் லயே முதல் வருசத்துலயே ஒரு பொன்னுகிட்ட ப்ரோபோஸ் பன்னது இவர்தான், அதுவும் 25 நாளா பின்னாடியே சொல்லனும் சொல்லனும்னு போய் லவ் பன்றன்னு சொன்னது, அவன் சொல்வானா மாட்டானானு நாங்க ஒரு 100 பேர் காத்துகிட்டு இருந்தோம், சோனா ல 2004 சேர்ந்து படிச்ச எல்லா பசங்களுக்கும் இது தெரியும்.
எங்க பேட்ச்லயே அதிக பர்சென்டேஜ் வாங்கி பாஸ் பன்ன மவராசன் இவர்தான். க்ளாஸ் கட் அடிக்ககூடாதுனு சொன்னதுக்காக எல்லா கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்யும் கழட்டிவிட்டவர் இவர்தான்.
சிவிலுக்கும் மெக்குக்கும் ஏதாவது ஸ்போர்ட்ஸ் நடக்கும் போது 2 பக்கமும் நின்னுகிட்டு திட்டி சண்டை இழுத்து அடிச்சுக்க வச்சுட்டு நாங்க 2 பேரும் நைஸ் ஆ எஸ்கேப் ஆகிடுவோம். நிறைய சண்டை போட்டுருக்கோம், ஆனா யார்கிட்டயும் விட்டு குடுத்தது இல்லை.
சேலம்க்கு புதுசா வந்து சேர்ந்த எங்களை கட் அடிச்சு சுத்த எல்லா இடத்துக்கும் கூட்டி போவான், பிரச்சனையே இல்லைனாலும் வாய் அ குடுத்து வம்பு இழுத்து சண்டைய மூட்டிவிட்டு அப்புறம் தீர்த்து வைப்பான்.
இவன் பேர் பாலா, மெக்கானிக்கல், நல்லா நினைவுல வச்சுக்கங்க, ஏன்னா இவன் பன்ன நிறைய அலும்பல்களைத்தான் அதிகம் சொல்லப் போறேன். அடுத்த பதிவுகளில்.
சோனா 2004-08 ல படிச்ச பலருக்கு இந்த தொடர் நம்ம கல்லூரி வாழ்க்கைய நினைவு படுத்த ஆரம்பிச்சுருக்குங்கறது எனக்கு ரொம்ப நாள் கழிச்சு வர போன், மெசேஜ்லயே தெரியுது, அடுத்த பதிவு எதை பத்தி எழுதனும்ங்கறதை அவங்கதான் சொல்றாங்க.
Super machi!!! Expecting more from you
ReplyDeleteபாராட்டுகின்றேன்....
ReplyDeleteஉன்னுடைய பதிவுகளுக்காக...
பதிவுலகில் இன்னும் சிறந்த பதிவுகளை இட எனது
வாழ்த்துக்கள்.
ஒரு சின்ன வேண்டுகோள்...
நடுவில் இருக்கும் ஒருசில ஆங்கில வார்த்தைகளை
தமிழில் தட்டச்சு செய்து அடைப்புக்குள் ஆங்கிலத்தை கொடு. உம் மாணவன் (student).
(எனக்கு தோன்றியது. தவறாக எண்ண வேண்டாம்)