வெள்ளையர்களின் வித்தியாசமான இந்திய பயணம்-THE DARJEELING LIMITED-REVIEW
அன்பர்களுக்கு வணக்கம், வெறுமனே காதல் படங்கள் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் அதுவும் சலித்து விடும் என்பதால் இடையில் சகப் பதிவர்கள் அறிமுகப் படுத்தும் வேறுபடங்களையும் பார்க்கலாம் என்று பார்த்த படம் தான் "THE DARJEELING LIMITED".
கதைக்களம் இந்தியா, எனக்கு தெரிந்து முழுப் படத்தையும் இந்திய கதைக்களத்தில் எடுத்த ஹாலிவுட் படம் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். நம்ம ஊர் ஸ்டைலில் கதை துவங்குகிறது, அதாங்க ஓடற ட்ரெய்ன் அ கடைசி நிமிசத்துல ஹீரோ ஓடிப் போய் பிடிக்கிறது. கொஞ்ச நேரம் கதை நகர ஆரம்பிச்சதும் தான் 3 வெள்ளைக்கார சகோதரர்கள் இந்தியாவுல புனிதப் பயனம்ங்கற பேர்ல யாரோ ஒருத்தங்களை தேடி வந்துருக்காங்கனு தெரியுது.
3 பேருக்குள்ளவும் செம ஈகோ, அதுலயும் ஒருத்தர் இல்லாதப்ப "அவன்கிட்ட சொல்லிடாத"னு ஒவ்வொருத்தரும் ரகசியத்தை பகிர்ந்துக்கறதும் அடுத்தவங்களை பத்தி குறை சொல்லிக்கறதும் எனக்கு யதார்த்தமா படுது. எப்படி சொல்றனா எங்க வீட்லயும் நாங்க அண்ணன் தம்பி 3 பேர்.
ஓடற ட்ரெய்ன்ல கடைசி தம்பி தம்மடிக்கறத வச்சு ஒரு இந்தியன் பொன்னை கரெக்ட் பன்றது எல்லாரும்(நான்) ரொம்ப எதிர்பார்த்ததுதான், எனக்கு வெள்ளைக்காரங்ககிட்ட பிடிக்காத விசயத்துல முக்கியமான ஒன்னு ஏன் பாத்ரூம்லயே எப்ப பார்த்தாலும் செக்ஸ் வச்சுக்கறாங்க? சரி அவங்க டேஸ்ட் அ நாம குறை சொல்ல கூடாது.
அப்பா இறந்துட்ட கொஞ்ச நாள்ள அம்மாவும் NUN ஆ இருக்கற இடத்தை தெரிஞ்சுகிட்டு அவங்களை பார்க்க போய்கிட்டு இருக்காங்க, அடிக்கடி சண்டை போட்டுக்கறாங்க, சும்மா இல்லாம ஒரு ஸ்டேசன்ல விஷ பாம்ப விலைக்கு வாங்கி பொட்டில வைக்க அது தப்பிச்சு வெளிய வர, அதை பிடிக்கற TTR இவங்க தொல்லை தாங்க முடியாம 3 பேரையும் அடுத்த ஸ்டேஷன்ல இறக்கி விடறார்.
இனிமேல் 3 பேரும் ஒன்னா பயனிக்க முடியாதுனு முடிவு பன்ன சமயத்துல கால்வாய் அ கடக்க முயற்சி பன்னி தண்ணீர்ல விழுற சின்ன பசங்களை காப்பாத்த ஒன்னு சேர்ராங்க. ஆனா அதுல ஒரு பையன் பாறைல அடிபட்டு செத்துடறான். உடனே நம்ம அழ வைக்க முயற்சி பன்னாம இயல்பா காட்சிகள் நகருது.
ஒரு வழியா அலைஞ்சு அவங்க அம்மாவ பார்க்கறதும், விடிஞ்சதும் அவங்க அம்மா சொல்லாம கிளம்பறதும் இப்ப 3 பேருக்குள்ளயும் நிறைய மாற்றங்கள் வரதையும் இயல்பா காட்டிருக்காங்க.
படத்துல சொல்ல வர விசயம் காலமும் பயனமும் ஒவ்வொரு மனுசனோட மனசையும் குணத்தையும் மாத்திடும்ங்கறத எவ்வளவு முடியுமோ அவ்வளவு நகைச்சுவையா சொல்லிருக்காங்க. ஸ்லோவா இருந்தாலும் படம் போரடிக்காது. தனியா இருக்கும் போது பாருங்க.
படத்தோட ட்ரெய்லர்
மறக்காம கமெண்ட்ஸ், அப்படியே தமிழ்10 ல ஓட்டும் போட்டுருங்க.
நானும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் இந்தப் படத்தைப் பார்த்தேன். ரொம்ப சுவாரஸ்யமா காமெடியோட கொண்டு போய் இருப்பாங்க. அதிலும் அந்த இந்தியன் மியுசிக் படத்துல நல்லா சூட் ஆகும்.
ReplyDeleteநல்ல விமர்சனம். :)
நன்றி, எனக்கு பிடிச்சதும் பேக்ரவுன்ட்ல வர புல்லாங்குழல் இசைதான்
Delete