உளவுத்துறைக்கு தண்ணி காட்டும் உளவாளி-SPY GAME- திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான கலாச்சாரங்கள், ஆனால் எங்கெங்கிலும் இருக்கும் உணர்வுகள் ஒன்றுதான், எல்லா நாட்டிலும் தாய்பாசமும், நட்பும், காதலும், பிரிதலும், சேர்தலும், சிரிப்பும், அழுகையும் உண்டு, வெளிப்படுத்தும் முறை மட்டுமே மாறும், ஒரு விசயம் செய்தால் ஆபத்து வருமென்று தெரிந்தும் செய்வதைத்தான் ரிஸ்க் எடுப்பது என்று தூய தமிழில் கூறுவோம். நாம் பெரும்பாலும் எடுக்கும் ரிஸ்க்குகள் நமக்காகத்தான் இருக்கும், சில நேரங்களில் நாம் நேசிப்பவர்களுக்காக, நம் மனசாட்சிக்காக எடுப்போமோ? பார்ப்போம் இத்திரைப்படத்தில். "SPY GAME".


 நம்மில் அதிகம் பேர் பல்வேறு காரணங்களுக்காக ஒரு இடத்தில் இருந்து வேலையை விட்டு நின்று வேறு இடத்திற்கு போவோம், அப்படி கடைசி நாளாக நாம் ஒரு இடத்தில் வேலை பார்க்கும் போது நாம் எப்படி இருக்க ஆசைப் படுவோம்? ஆனால் படத்தில் அமெரிக்க உளவுத்துறை நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறப் போகும் ஒரு உயர்மட்ட அதிகாரியின் கடைசி வேலை நாளினை பற்றிய படம் தான் இது.


பட ஆரம்பத்தில் சீனாவின் ஒரு சிறையிலிருந்து ஒரு பெண்கைதியை தப்புவிக்க முயன்று ஒரு இளைஞன் மாட்டிக் கொள்கிறான், அவன் ஒரு அமெரிக்க உளவாளி. அவனை வேலைக்கு சேர்த்து பயற்சி அளித்தவர்தான் இன்று ஓய்வு பெற போகிறவர். ஒரு நாட்டின் உளவாளி வேறு நாட்டில் மாட்டிக் கொண்டால் அவன் உளவாளி என்று தாய் நாடு ஒத்துக்கொள்ளவும் செய்யாது, அவனை காப்பாற்றவும் முயலாது.

 


அதுவுமில்லாமல் இவன் சென்றதோ நாட்டு விவகாரமாக அல்ல, காதலியை காப்பாற்ற, இவனை காக்க உளவுத்துறை எந்த முயற்சியையும் எடுக்காது, ஆனால் அவனுக்கு பயிற்சி அளித்தவரால் சும்மா இருக்க முடியவில்லை, நாட்டுக்காக பல முறை உயிரை பண்யம் வைத்து வேலை செய்தவனை விட்டு செல்ல மனம் வரவில்லை. தன்னால் முடிந்த வரை பேசி அவனை காப்பாற்ற சொல்லி விட்டு வெளியே செல்லும் போதுதான் அவனுக்கு மரண தண்டனை விதிக்க பட்டது தெரிய வருகிறது. ஆட்டம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

இதுவரை உளவு நிறுவனத்துக்கு எதிராக எதுவும் செய்யாத மனிதர் கொஞ்சம் கொஞ்சமாக  தன் சக, உயர் அதிகாரிகளை வேவு பார்க்கிறார், சீனாவில் இருக்கும் நண்பர் மூலமாக ஏதாவது செய்ய இயலுமா என்று முயல்கிறார், இவரது முயற்சியை புரிந்து கொண்டவர்கள் இவரை கண்காணிக்கிறார்கள். அவர்களது கண்ணில் மாட்டாமல் ஒவ்வொரு காயாக நகர்த்துகிறார்.


அப்படியே அவ்வப்போது காட்டப்படும் ஃப்ளாஸ்பேக்கில் அந்த இளைஞனை சந்திப்பது, அவனுக்கு பயிற்சி அளிப்பது, கடினமான வேலைக்கு அவனை தேர்ந்தெடுப்பது என்று இருவருக்கும் உண்டான நெருக்கத்தினை விவரிக்கும் காட்சி அருமை. அதிலும் விறுவிறுப்பு.


எந்த இடத்திலும் வளரும் பூச்செடியினை போல உளவு பார்க்க சென்ற இடத்தில் காதல் வரும் காட்சி அருமை, எங்கிருப்பினும் மனித மனம் தேடுவது ஒரு துனையைத்தான். ஆனால் சேர வேண்டிய நேரத்தில் இருவரும் பிரியும் வலியினை நமக்கு இயல்பாய் உணர்த்திருக்கிறார்கள். இந்த இடத்தில் இருக்கும் எந்த காதலனுக்கும் செய்ய தோணிருப்பதைதான் இவனும் செய்வான், அவளை காப்பாற்ற முயல்வது.

உளவுத்துறையை ஏமாற்றி அவர்களுக்கு தெரியாமல் அவர்களது ராணுவத்தி வைத்தே நினைத்ததை சாதிக்கும் திறமை யாருக்கும் வராது, அதிலும் அந்த ஆப்ரேஷன் பேரை இளைஞன் கேட்கும் நேரத்தில் தலைவர் இங்கே கூலிங்கிளாஸ் போட்டு கொண்டே அலுவலகத்திலிருந்து வெளியேறும் சீன் செம மாஸ்.

எதிர்பார்க்காத இடத்தில் டர்னிங் பாய்ன்ட் வைத்தது, வெறும் மூளையை உபயோகித்தே நினைத்தை சாதிப்பது, எந்த இடத்திலும் நம்மை ஆசுவாச படுத்த விடாமல் திரைக்கதையினை மிக வேகமாக கொண்டு சென்றுள்ளனர். இப்படியும் ஒரு திரில்லிங் படம் எடுக்க முடியும் என்று நம்மை வியக்க வைத்துள்ளார்கள்.

படத்தின் ட்ரெய்லர்


இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் தமிழ்10 ல் கீழே ஓட்டு போடவும், அப்படியே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

Comments

  1. நல்ல விமர்சனம் நண்பரே...
    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. சிறப்பான் படம் அறிமுகம் செய்தமைக்கு நன்றி! அருமை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

கலாய்ச்சுட்டாராமாம்...

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்