இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

அன்பர்களுக்கு வணக்கம். என் நண்பன் ஒருவன் சரித்திர நாவல்கள் விரும்பி படிப்பான், அவனது தந்தையுடன் பேசுகையில் அவர் நமது முன்னோர்களையும், கடவுள் வழிபாட்டையும் மறுத்து பேசியது பற்றி குறிப்பிட்டான். அது சம்பந்தமாக அவனிடம் நான் பேசியதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.


 நான் மனிதன் எனக்கு எல்லாம் தெரியும், என்னால எல்லா உயிரினத்தையும் அடிமைபடுத்த முடியும், நான் சக்கரத்தை கண்டு பிடிச்சுட்டேன், நெருப்பை கண்டு பிடிச்சுட்டேன், கம்ப்யுட்டர் கண்டுபிடிச்சுட்டேன்னு வெட்டியா சத்தம் போட்டு பேசறவங்க கடவுளை புரிஞ்சுக்க மாட்டாங்க, எல்லாத்தையும் கண்டுபிடிச்ச மனுசனால 2 நாள் சாப்பிடாம தூங்காம இருக்க முடியுமா? இல்லை 2 நாளைக்கு சேர்த்து சாப்பிட்டு ஒட்டுக்கா தூங்கிட்டே இருக்க முடியுமா?


இன்னும் மனுசனால மனுசனையே ஜெயிக்க முடியலைய, பசிச்சா சாப்பிட்டுதான் ஆகனும், தூக்கம் வந்தா தூங்கிதான் ஆகனும், உன்னால ஒன்னும் கட்டுபடுத்த முடியாது, கடவுளை எதுக்கு வணங்கனும்? முதல்ல மனுசன் யாரை வணங்குவான், தன்னை விட வயசுல பெரியவங்களை, அதுக்கு என்ன அர்த்தம்? நான் உன்னை விட சின்னவன், உன் அளவுக்கு நான் இல்லைனு அர்த்தம். கடவுளை வணங்கறதும் அதான். உன்னை இன்னும் என்னால முழுசா புரிஞ்சுக்க முடியலை. அதுக்கு நான் இன்னும் பக்குவ படலை, என் மனசை நான் இன்னும் அடக்கலை, அதுக்கு வழி காட்டுனு கேட்கறதுதான். இன்னொன்னு என்னன்னா எல்லாரும் கடவுள்கிட்ட போய் எனக்கு இதை செஞ்சு குடு அதை செஞ்சு குடு உனக்கு நான் இதை செய்யறேன் அதை செய்யறேன்னு அரசியல்வாதிங்ககிட்ட டீல் பேசற மாதிரி பேசறாங்க.

அப்படி பன்னக்கூடாது, கடவுளே, எனக்கு இந்த மாதிரி ஒரு சூழ் நிலை வந்துருக்கு, எனக்கு என்ன பன்றதுனு தெரியலை, ஆனா எனக்கு என்ன செய்யனும்னு உனக்கு தெரியும், இதுல வெற்றிய குடுத்தாலும் தோல்விய குடுத்தாலும் முழு மனசோட ஏத்துக்கறேன்னு பரஸ்பரம் பேசனும்.
இதுதான் முழுசா கடவுள்கிட்ட சரனடையறது, சும்மா இதை எப்படியாவது எனக்கு செஞ்சு குடுனு கேட்கறது "மவுனம் பேசியதே" படத்துல சூர்யாவ பொன்னை தூக்க கூப்டுவாங்களே அது மாதிரிதான் முடியும்.

முதல்ல நமக்கு தெரியுமா எது நல்லது கெட்டதுனு? ஒரு கதை சொல்லுவாங்க. ஒரு ஊர்ல ஒருத்தனோட பையனுக்கு கால்ல அடிபட்டுருச்சாம், எல்லாரும் அவங்கப்பாகிட்ட கஸ்டகாலம்னு சொன்னாங்கலாம், அவர் இல்லை ஏதோ நல்லது இருக்கும்னு சொன்னாராம். கொஞ்ச நாள்ள போர் வந்து வீட்டுக்கு ஒருத்தரை கூட்டி போனாங்களாம், இவன் கால் உடைஞ்சுருந்ததால போகலை, எல்லாரும் நல்லதுக்குதான்னு சொல்லவும், இல்லை இதுலயும் ஏதாவது கெட்டது இருக்கும்னு சொன்னாராம். போர்ல ஜெயிச்சு போன பசங்க எல்லாரும் நகையும் பணமுமா வந்தாங்க, போருக்கு போகததால இவங்களுக்கு எதுவும் கிடைக்கலை, "அப்ப நீ சொன்ன மாதிரி கெட்டதுதான்னு" எல்லாரும் சொல்லவும் அவர் சிரிச்சுகிட்டே போனாராம். கொஞ்ச நாள்ள தோத்த நாட்டுக்காரன் திரும்ப படையெடுத்து வந்து ஒவ்வொரு வீடா நகைய கொள்ளையடிச்சுட்டு போகும்போது தடுத்தவங்களை பயங்கரமா தாக்கிட்டு போனானான். இந்த கால் உடைஞ்ச பையன் வீட்ல எதுவும் இல்லாததால தப்பிச்சுட்டாங்களாம்.

இந்த கதைலருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா நமக்கு நடந்துட்டுருக்கறது நல்லதா கெட்டதானு நமக்கு தெரியறதுக்கு முன்னாடியே அது நம்மளை விட்டுட்டு போயிரும், எதுவும் நிலைக்காது, எதையும் தக்க வச்சுக்க நாம போராட கூடாது. கடவுள்கிட்ட போனமா இது வரைக்கும் குடுத்ததுக்கு நன்றி, எப்ப எனக்கு உன்னை புரிய வைக்க போறனு கேட்டு வந்துரனும், கஸ்டமா? புலம்பாத, போ, எனக்கு வந்துருக்கறது கஸ்டமானு கேளு, ஆமான்னா சரி இதோட நான் வாழ பழகிக்கறேன்னு சொல்லிட்டு வா, சும்மா எனக்கு இந்த கஸ்டம் போகனும்னுலாம் அடம்பிடிக்க கூடாது. ரொம்ப குழப்பமா இருக்கா?

சில விசயங்கள் சொன்னா புரிஞ்சுக்க முடியாது, அனுபவிச்சாதான் புரியும், அதுக்கு ஒரே வழி, நான் ங்கற சிந்தனை போகனும், சுத்தி இருக்கவங்களை கவனிக்கனும், அவங்க வாழ்க்கைய எப்படி வாழறாங்கனு பார்க்கனும், ரொம்ப வேடிக்கையா இருக்கும், மரணத்தை  வெல்ல முடியாத மனிதன் நாத்திகம் பேசறதை விட வேடிக்கையான விசயம் வேற என்ன இருக்கு?

பக்குவத்தோட கடைசி நிலை என்ன தெரியுமா? ஒரு எறும்புக்கு உணவு கிடைக்கலைங்கறதையும் சொந்தத்துல நடக்கற இறப்பையும் ஒன்னா எடுத்துக்கற மனசு தான், எனக்கு இன்னும் வரலை, வந்துரும், அப்படி வந்தது வெளிய தெரிஞ்சா ஒன்னு நம்மளை பைத்தியம்பாங்க, இல்லை சாமியாரிக்கிடுவாங்க.

ஒவ்வொரு உயிரும் எதுக்கு படைக்க படுது? என்ன பெருசா வாழ்ந்துருது? ஏன் பாதிலயே செத்துருது? இந்த கேள்விக்கு விடை தெரிஞ்சவன் கடவுள் ஆயிருவான் இல்லை ஆக்கிருவாங்க.

நம்ம முன்னோர்களை முட்டள்கள்னு சொல்றவங்ககிட்ட  நான் கேட்கனும்னு நினைக்கறது ஒன்னுதான், மன்னர்கள் செஞ்சது எதையும் ஒத்துக்க முடியாதுனா மறுபடியும் வாழ்க்கைய கற்கால மனிதனா ஆரம்பிக்க சொல்லிரு. அவங்க கண்டு பிடிச்ச கடைபிடிச்ச பல விசயங்களை நாம செஞ்சுட்டும் அனுபவிச்சுட்டும் இருக்கோம்.

 நான் சொல்றது சரின்னு பட்டா உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க...

Comments

  1. 100 % unmai...

    ReplyDelete
  2. மிகச்சிறப்பான கருத்துக்கள்! பகிர்வு அருமை! வாழ்த்துக்கள்!
    இன்று என் தளத்தில் எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! http://thalirssb.blogspot.in

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...