நாம போற பஸ் ஆக்சிடென்ட் ஆனா எவ்ளோ நல்லாருக்கும்?- (சோனா) காலேஜ் டைரி-2

அன்பர்களுக்கு வணக்கம்.என்னுடைய கல்லூரி அனுபவங்களை எழுத துவங்கிய பின் பெரிய எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தேன், இன்னும் வரவில்லை. சரி நாம கதைக்கு போவோம். முதல் பாகத்தை படிக்காதவங்க படிச்சுட்டு வந்துருங்க.

சோனா கல்லூரிக்கு வந்த கெட்ட காலம்- காலேஜ் டைரி பாகம் 1

படிச்சுட்டிங்களா? இப்ப உங்களுக்கு புரிஞ்சுருக்குமே? நான் எவ்வளவு ஆசையா இந்த காலேஜ்ல சேர்ந்துருப்பேன்னு, நானும் அதெல்லாம் கற்பனை பன்னிகிட்டே முதல் நாள் காலேஜ் வந்தேன். ஸ்கூல்ல தான் நல்ல பையன்னு அடங்கி இருந்துட்டோம், இது சேலம், நம்ம ஊர், கொஞ்சம் ஆடித்தான் பார்ப்போமேனு முடிவு பன்னேன்.

10 நிமிசம் முன்னாடி வந்தும் வேனும்னே க்ளாஸ்க்கு போகாம காரிடர்ல நின்னுட்டு இருந்தேன், என்னை மாதிரியே ஒருத்தன் கைல ஒரு நோட் வச்சுகிட்டு நின்னுகிட்டு இருந்தான். பெல் அடிச்சு ஸ்டாஃப் உள்ள போனதுக்கு அப்புறம்தான் நான் உள்ள போனேன். போய் கடைசி பெஞ்ச் அ தேடி உட்கார்ந்தேன், எனக்கு அப்புறம் லேட்டா அவன் வந்து என் பக்கத்துல வந்து உட்கார்ந்தான்.

நின்னுகிட்டுருந்த வாத்தியார் சும்மா இல்லாம ஒவ்வொருத்தரா வந்து ஸ்டேஜ்ல அவங்கவங்கல பத்தி இங்கிலிஸ்லி இன்ட்ரோ கொடுத்துக்க சொன்னார். நானும் என்ன பேசனும்னு மனசுக்குள்ள 10 தடவ சொல்லி பார்த்துகிட்டு போய் அரைகுறை இங்கிலிஸ்ல பேசிட்டு வந்தேன். கடைசியா அவன் போனான்.அவன் பேசுனது இதுதான்.

"நிவாஸ்.......... சரஸ்வதி ஸ்கூல்.சிவில் டிபார்ட்மென்ட்"

இங்கிலிஸ் ல பேசுனானா, தமிழ்ல பேசுனானானு என்னால சொல்ல முடியலை. பேசிட்டு வந்து உட்கார்ந்த்வன் பெஞ்ச் அ ஓங்கி குத்தி
"எனக்கு இந்த காலேஜ் அ பிடிக்கவேயில்லை, நான் TC  வாங்கப் போறேன்"னு சொன்னான். "ஆஹா தெரியாம இந்த கிறுக்கன் பக்கத்துல உட்கார்ந்துட்டமே"னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன்.

மதியம் சாப்பிட வெளியே ஹோட்டலுக்கு போலாம்னு கிளம்பனப்ப கூப்டாமையே கூட வந்தான். போற வழில அந்த போய்கிட்டுருந்த பொன்னுங்களை பார்த்து "ஏய் வெள்ளை சுடிதார்"னு கூப்பிட்டு குனிஞ்சுகிட்டான், நான் நிமிர்ந்து யாரை கூப்பிடறான்னு பார்த்து மாட்டிகிட்டேன். முறைச்சுகிட்டே போனாளுக, அன்னைக்கு ஆரம்பிச்சது கடைசி வருசம் முடிக்கற வரைக்கும் எல்லா பொன்னுங்களையும் என்னை முறைக்க வைக்கற மாதிரி செய்யறதுதான் அவன் வேலை.

அவருக்கு அப்ப காதல் தோல்வி ஆன புதுசு, நிறைய சோகப் பாட்டு கேட்பான். அவன் கூட பஸ்ல போகும் போது அமைதியா வருவான், "என்னடா யோசிக்கற?"னு கேட்டா "நாம போற பஸ் ஆக்சிடென்ட் ஆனா எவ்வளவு நல்லாருக்கும்?"னு சொல்லுவான்.

"ஏன்டா?"னு அதிர்ச்சியா கேட்டா "எனக்கு வாழவே பிடிக்கலை"னு சொல்லுவான். நான் நினைச்சுப்பேன் "ஏன்டா உனக்கு வாழ பிடிக்கலைனா எங்களையும் ஏன்டா சேர்த்து சாக சொல்ற?"னு, அப்ப நேர்ல கேட்கலை, ஏன்னா அவனே சோகத்துல இருந்தான், ஆனா நிறைய தடவை அவன் சந்தோசமா இருக்கும் போது அந்த கேள்விய கேட்டுருக்கேன்.

அவன் போட்டோ இதுதான் என்கிட்ட இருக்கு

வந்த புதுசுல ஹாஸ்டல்ல தினமும் ராத்திரியில திடிர்னு 12 மணிக்கு  ஆட்டோகிராஃப் படத்துலருந்து 'நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்' பாட்டு போட்டுட்டு பயமுறுத்துன நிவாஷ் தான் என் கல்லூரி வாழ்க்கையோட முதல் நண்பன்.

அவன் மூலமா எனக்கு 50 க்கும் மேல ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க, ஆனா அதுல எனக்கு ரொம்ப முக்கியமான நண்பன் ஒருத்தன் இருக்கான். என் புத்தி அப்படியே அவனுக்கு இருக்கும். நிவாஷ் எனக்கு எவ்வளவோ செஞ்சு இருந்தாலும் அவன் எனக்கு செஞ்ச பெரிய நல்ல விசயம் ஒரு நல்ல நண்பனை என் வாழ்க்கைல கொண்டு வந்ததுதான், அந்த நண்பன் யாருன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
பிடிக்கலைனாலும் பரவாயில்லை கமெண்ட் போடுங்க.

Comments

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

கலாய்ச்சுட்டாராமாம்...

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்