ஆடி 1 - கொண்டாட்டம்/தேங்காய் சுட்டிங்களா?

அன்பர்களுக்கு வணக்கம், ஆடி மாசம் இன்னைக்கு ஆரம்பிச்சுருச்சு, இனி எல்லா ஊர்லயும் மாரியம்மன் பண்டிகை நடத்துவாங்க, கூழ் ஊத்துவாங்க, ஆடி 18 வந்தால் காவிரி ஆறு போற பக்கமெல்லாம் அமர்க்கலமா இருக்கும். 

எல்லாத்துக்கும் மேல ஆடி மாசம் எல்லா துணிக்கடைலயும் தள்ளுபடிய நடிகைகளை வச்சு ஊர் முழுக்க சொல்லுவாங்க, எல்லாத்துக்கும் தயாராகுங்க.  உங்க ஊர்ப்பக்கம் ஆடி 1 அ கொண்டாடுவிங்களா?

எங்க மாவட்டம்ல தேங்காய் சுடற பண்டிகைனு கொண்டாடுவோம், ஆடி மாசம் முழுக்க அம்மனுக்கு பண்டிகை, ஆடி முதல் நாள் வினாயகருக்கு தேங்காய் சுடற பண்டிகை, 


என்னன்னா தேங்காய் வாங்கி உரிச்சு தரைல தேய்ச்சு மொழுமொழுன்னு ஆக்கி ஓட்டை போட்டு உள்ளே வெல்லம், அவுல், கடலை,கடுகுனு என்னென்னமோ ஒரு லிஸ்ட் வச்சு போட்டு குச்சி சொருகி அடைச்சுருவோம்.


அதுக்கு அப்புறம் டெக்கரேஷன், மஞ்சள், குங்குமம் , கரின்னு விதவிதமா கலர் பூசுவோம், எதுக்குனா ஒரு தெருவுல இருக்க எல்லாரும் ஒன்னா ஒரே நேரத்துலதான் தேங்காய் சுடுவோம். அப்ப யாரோட தேங்காய் அழகா இருக்குனு சீன் போடத்தான்.


நான் பெரியவனாயிட்டேன், தேங்காய் சுடறதுலாம் சின்ன பசங்க வேலைனு சொல்லி தப்பிக்க பார்த்தேன், எங்க அண்ணன் பொன்னு இப்பதான் LKG படிக்கறா, அவ சார்பா சுட வச்சுட்டாங்க, எங்க அண்ணண் சும்மா இருந்துருப்பாரேனு நினைக்காதிங்க, அவர் 6 மாச பையனுக்கு தேங்காய் சுட்டுக் குடுத்தார்.

சின்னதோ பெரியதோ வீட்ல அப்பப்ப விசேசம் நடக்கனுங்க, பெரியவங்க சும்மா எல்லாத்தையும் செய்யலை, குடும்பம் ஒன்னு சேர்ந்து ஒரு விசயத்தை செய்யும் போது கிடைக்கற சந்தோஷமே தனி.

Comments

  1. மலரும் நினைவுகள்...நானும் சுட்டு இருக்கேன்

    ReplyDelete
  2. ஆடி முதல் நாள் வினாயகருக்கு தேங்காய் சுடற பண்டிகை,

    அற்புதமான பகிர்வுகள்..

    வலச்ச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. வலைச்சர அறிமுகத்தில் இங்கு வந்தேன். வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

கலாய்ச்சுட்டாராமாம்...

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்