போதையில் கல்யாணம்/கலாட்டா- WHAT HAPPENED IN VEGAS- திரை விமர்சனம்


 அன்பு வாசகர்களே, நீண்ட இடைவெளிக்கு பின் வழக்கம் போல் ஒரு ஹாலிவுட் திரைப்பட விமர்சனத்தில் உங்களை சந்திக்கிறேன், ஏற்கனவே முந்தைய பதிவில் சொன்னது போல் விக்கிபீடியாவில் ரொமாண்டிக் காமெடி சீரியசில் பார்த்த ஒரு படத்தை பற்றித்தான் இன்றைய விமர்சனம், ஏறக்குறைய பலர் பார்த்திருக்க கூடிய படம் தான், "WHAT HAPPENED IN VEGAS" .



75% நகைச்சுவையும் 50% சதவீதம் காதலையும் 75% கலாட்டாவையும் கலந்து எடுத்திறுக்கிறார்கள், அதற்கு ஏற்ற கதைக்கரு, காதலனால் அவனது பிறந்த  நாளன்று இன்ப அதிர்ச்சி குடுக்க காத்திருக்கும் நண்பர்கள் மத்தியில் கழட்டி விடப்பட்ட கதா நாயகி, தனது தந்தையால் வேலையை விட்டு துரத்தப்பட்ட கதா நாயகன், இருவரும் தத்தம் சோகங்களை மறக்க வேகாஸ் நகருக்கு நெருக்கமான நண்பர்களுடன் சொல்ல ரூம் நம்பர் குழப்பத்தில் அறிமுகமாகிறார்கள்.

வழக்கம் போல இராத்திரியான பார்ட்டி வைக்கற ஊருக்கு போய்ட்டு கோவிலுக்கா போகப் போறாங்க, க்ளப் தான் சரக்குதான், எல்லாத்தையும் மறந்து விடிய விடிய சரக்கடிக்கறாங்க, இப்பதாந் நம்ம ஊர் 'மங்காத்தா' த்ரிஷாவே சரக்கடிச்சுட்டு டூயட் பாட்றாங்களே, ஹாலிவுட்ல கேட்கவா வேணும், விடிஞ்சாதான் பெரிய அதிர்ச்சி, நைட் மப்புலையே 2 பேருக்கும் கல்யானம் ஆயிருக்கு.


சரி, ஏதோ நடந்தது நடந்து போச்சு நடந்தத கெட்ட கனவா நினைச்சு மறந்துருவோம்னு முடிவு பன்னி 2 பேரும் முடிவு பன்னி பிரியும் போது ஹீரோயின் குடுக்கற காயின் அ வச்சு ஹீரோ ஜாக்பாட் விளையாடும்போது 3000000 டாலர் பரிசு விழுந்துருது,  என் காயின்லதான் விழுந்ததுனு ஹீரோயின் சொல்ல, விளையான்டது நாந்தான்னு ஹீரோ மல்லுகட்ட, நான் உன் பொன்டாட்டி, உன் சொத்துல எனக்கு பங்கு இருக்குனு ஹீரோயின் ரூல்ஸ் பேச டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போனா, ஒரு நாள் கூட ஆகாம டைவர்ஸ் ஆனு ஜட்ஜ் காண்டாகி, 6 மாசம் சேர்ந்து வாழ்ந்துட்டு வாங்க, அது வரைக்கும் அந்த பரிசுதொகைய freeze பன்னி வைக்கறேன்னு ஜட்ஜ்மென்ட் குடுத்துட்றார்.

அதுக்கு அப்புறம் 2 பேரும் சேர்ந்து வாழனும்னு ஒரே வீட்ல தங்கி ஏகப்பட்ட அலப்பறைய குடுக்கறாங்க,அதெல்லாம் செம காமெடி, அப்புறம் ஒருத்தரைொருத்தர் மாட்டிவிட முயற்சி பன்னி முடியாம கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிக்கறாங்க. ஹீரோ குடும்பத்துல ஹீரோயின் ஒட்ட ஆரம்பிக்கறாங்க.

அப்புறம் ஹீரோயினோட ஆபிஸ் பார்ட்டிக்கு போய் அவளை மாட்டிவிட ஹீரோ வல்கர் ஆ பேச அதுவே அவங்க பாஸ்க்கு பிடிச்சு போய் ப்ரோமோஸன் வரைக்கும் போகுது.

கொஞ்சம் கொஞ்சமா நம்ம மானாட மயிலாடல சொல்ற மாதிரி 2 பேருக்கும் கெமிஸ்ட்ரி வொர்கவுட் ஆக ஆரம்பிக்குது, 
ஹாலிவுட்ல எனக்கு ஒரு பெரிய சந்தேகம் என்னன்னா எப்படித்தான் ஒரு அழகான பொண்ணு கூட தனியா தங்கும் போது கன்ட்ரோல்லா இருக்கானுங்களோ? நம்மாள முடியாதுப்பா.

அப்புறம் எதிபாராத விதமா 2 பேருக்குள்ளயும் பிரிவு வருது, அந்த பிரிவுதான் 2 பேரும் ஒருத்தருக்கொருத்தர் எவ்வளவு காதலிக்கறாங்கனு புரியவச்சு சேர்த்து வைக்குது,

படத்துல எல்லாருக்கும் பிடிச்ச சீன் ஹீரோவும் ஹீரோயினும் மப்புல பன்னிக்கற கல்யானம், அவ்வளவு கலாட்டாவா இருக்கும், சைட்ல இவங்க 2 பேர் ஃப்ரென்ட்ஸும் ஏதோ............................. பன்னிட்டு இருப்பாங்க.
 

 படம் முழுக்க ஒரே கலாட்டாவா இருக்கும், கண்டிப்பா அனுபவிச்சு பார்க்கலாம்.

படத்தோட ட்ரெய்லர்


உங்கள் மதிப்பு மிக்க கருத்துக்களை தெரிவிக்கவும்.மறக்காம பகிர்ந்துக்கங்க.


 அன்புடன் கதிரவன்...

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2