அன்பர்களுக்கு வணக்கம், என்னோட முதல் புலம்பலை படிக்காதவங்க தயவு செஞ்சு படிச்சுருங்க. இல்லைனா ஒரு கன்டினுயுட்டி மிஸ் ஆகும். இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 1 படிச்சுட்டிங்கனா நான் எதை பத்தி பேசறேங்கறது உங்களுக்கு நல்லா புரியும். என்னோட புலம்பல் ஒட்டு மொத்த பெண்கள் சமுதாயத்தை குறிப்பிடறதா தப்பா நினைக்க வேண்டாம். என் வாழ்க்கைல தினசரி எதிர்படற, பார்க்கும் போதுலாம் ஒரு 2 செகன்ட் கண்ணை மூடி "முடியலைடா சாமி"னு சொல்ல வைக்கற சில அல்டாப் ஆண்ட்டி & ஃபிகர்களை மட்டும்தான் நான் திட்டி தீர்க்கனும்னு நினைக்கறேன். உங்ககிட்ட ஒரு விசயம் சொல்றங்க, நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க, எப்பவாவது ஏன்னே தெரியாமா ரொம்ப சலிப்பா, அலுப்பா எந்த வேலையும் செய்யறதுக்கு மனசே வராம இருக்கும் போது ரொம்ப நாளா உங்களை வெறுப்பேத்தறவங்களை, யார்கிட்டயாவது திட்டி புலம்பி பாருங்க அப்படி ஒரு எனர்ஜி வரும், உற்சாகம் பிறக்கும், நான் சொல்லும் போது பைத்தியகாரத்தனமா இருக்கும், ட்ரை பன்னிங்கனா கண்டிப்பா என்னை குருவா ஏத்துகிட்டு ஆசிரமம் ஆரம்பிக்கலாமானு கேட்பிங்க. சரி, நாம புலம்பல...
Comments
Post a Comment