JUST GO WITH IT - REIVIEW
அன்பர்களுக்கு வணக்கம், தீராத மின்வெட்டின் காரணமாக ஒரு படத்தை மூன்றாக பிரித்து மூன்று நாட்களில் பார்த்து முடிக்க வேண்டியாதாய் இருக்கிறது, நேற்று தீபாவளியினை முன்னிட்டு முழு நாளும் மின்சாரம் இருந்ததால் இந்த படத்தை பார்க்க முடிந்தது. படத்தின் பெயர் "JUST GO WITH IT" தமிழ்ல அது போக்குலய போலாம்னு கூட சொல்லலாம்.
நமக்கு எப்பவுமே பெருசா ட்விஸ்ட் இல்லைனாலும் பாஸிட்டிவ் க்ளைமாக்ஸ் இருக்க இந்த மாதிரி ரொமாண்டிக் காமெடி வகை படம் தான் ஆல் டைம் ஃபேவரட். சரி வாங்க படத்துக்கு போவோம்.
எல்லா நாட்டுலயும் எப்படி பொன்னுங்க ஒரே மாதிரி இருக்காங்களோ, அசிங்கமா இருந்தாலும் பராவாயில்லைனு ஒருத்தனை (ஹீரோ) கல்யாணம் பண்ணிகிட்டு அவனை அவன் குடும்பத்துலருந்து பிரிச்சு கூட்டி வந்து, அவன் டாக்டராகி சம்பாரிக்கற எல்லாத்தையும் ஆட்டய போட்டு பாய் ஃப்ரெண்ட்ஸ் கூட ஆட்டம் போட திட்டம் போடற ஒரு பொண்ணுகிட்ட இருந்து எஸ்கேப் ஆகி ஹீரோ பார்ல கல்யாண மோதிரத்தோட சரக்கடிக்கறப்ப, ஒரு பொண்ணுகிட்ட எதெச்சையா கல்யாணம் ஆனவன் மாதிரி சீன் போட செட் ஆகிருது, அதுலருந்து வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அந்த மோதிரத்தை வச்சுதான் ஒவ்வொரு பொன்னா கரெக்ட் பன்றார்.
இந்த மாதிரி மன்மத பசங்க எல்லாரும் சுமாரான பொன்னுங்ககிட்டதான் இதெல்லாம் பன்னுவாங்க, சூப்பரா ஒரு பொன்னு வந்தா "அம்மா சத்தியமா சரண்டர்" தான், அப்படி ஒரு அழகான பொன்னை பார்த்து காதல்ல விழுந்து எல்லாம் நல்லபடியா போகும் போது ஹீரோவோட டூப்ளிகெட் கல்யாண மோதிரத்தை பார்த்து சண்டை போட்டு அந்த அழகி கிளம்பிடறாங்க.
அடுத்த தடவை சமாதான படுத்த போறப்ப வரிசையா கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆக் போற மாதிரி பொய் சொல்லிட்டு வர ஹீரோவுக்கு தன்னோட முன்னாள் மனைவியா நடிக்க தன்னோட அசிஸ்டன்ட் அ ரெடி பன்றார். ஆனா அவங்க பார்க்க அவ்வளவு ஸ்பைசியா இல்லைனு சொந்த காச போட்டு புது ட்ரெஸ் எல்லாம் வாங்கி குடுத்து கூட்டி போய் மீட் பண்ணி வைக்க, எல்லாம் சரியா போகும் போது அவங்க 2 பேருக்கும் குழந்தை இருக்குங்கற மாதிரி சொல்ல வேண்டியதா போகுது.
அடுத்த மீட்டிங் குழந்தைங்களோட, ஒரு பொன்னும் பையனும், செம கேடிங்க, கிடைச்ச சந்தர்ப்பத்தை வச்சு அந்த பையன் ஹவாய் ட்ரிப்க்கு அடி போட்டு ஜெயிச்சுடறான், இப்ப எல்லாரும் ஹீரோ,வரோட லவ்வர், டூப்ளிகெட் மனைவி, அவ பசங்க, அவளோட டூப்ளிகெட் லவ்வர்னு ஒரு குருப் ஆ போறாங்க.
அதுக்கு அப்புறம் நடக்கறது முழுக்க முழுக்க கலாட்டாதான், அடுத்து நாம எதிர்பார்க்கறது தான், கொஞ்சம் கொஞ்சமா ஹீரோக்கு தன்னோட பொய் மனைவியோட காதல் வருது, அதை சொல்ற ஒவ்வொரு சீனையும் நல்லா காட்டிருப்பாங்க. அந்த நைட் சீன் கிஸ் பண்ண 2 பேரும் தனித்தனியா ஓடி வந்து பிரியற சீன் நல்லாருக்கும். முக்கியமா ஒரு போட்டில தேங்காய் அ 2 பேர் வயித்துக்கு நடுவுல வச்சுகிட்டு கைப்படாம வாய்கிட்ட கொண்டுவர போட்டில செம பெர்ஃபார்மன்ஸ்.
அழகான பொன்னுங்க, முழுக்க காமெடி, நல்ல காட்சியமைப்பு, நடுவுல சின்ன சின்ன காதல் காட்சிகள், பாசிட்டிவ் க்ளைமாக்ஸ் இதை விட விடுமுறை நாட்கள்ள பொழுதை போக்கறதுக்கு வேற என்ன படம் வேணும்? எனக்கு பிடிச்சுருக்கு, உங்களுக்கும் பிடிக்கும் பாருங்க.
படத்தோட ட்ரெய்லர்
இந்த பதிவு பிடிச்சுருந்தா ஓட்டளித்து, உங்கள் நண்பர்களுடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்தப் படத்தை ரெண்டு வருசத்துக்கு முன்னால பாத்த ஞாபகம்...
ReplyDeleteதலைவரே, படம் 2011 லதான் வந்தது,கணக்கு இடிக்குது.
Deleteஆனா இதே மாதிரி படம் 20 வருசமா வந்துகிட்டு தான் இருக்கு, அதுல ஏதாவது ஒன்னை பார்த்துருப்பிங்க விடுங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்லது... பார்த்துடுவோம்...
ReplyDeleteவிமர்சனத்திற்கு நன்றி...
tm2
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteநல்லதொரு பகிர்வு! நன்றி!
ReplyDeleteஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
ReplyDeleteமிக வேகமான திரட்டி
http://otti.makkalsanthai.com
பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,
Same taste.. Nice review.. N nice film too..adam sandler always rocks in this type films (eg: 50 first dates)
ReplyDelete