மாதொருபாகன்,ஆலவாயன் & அர்த்தநாரி – பெருமாள் முருகன்
நடந்த கலவரங்களில் தமிழ்நாடு முழுக்க இவரை
அறியும். கூகுளில் எழுத்தாளர் என அடித்தால் இவர் பெயர் உடன் வரும்
அளவுக்கு கொஞ்ச நாள் தலைப்பு செய்தியாக இருந்தார். நடந்த பிரச்சனைகளை
பற்றியோ, எது சரி, தவறு என்பது பற்றியோ பேச போவதில்லை. இப்பதிவின் நோக்கம்
“மாதொருபாகன்- ஆலவாயன் – அர்த்தநாரி” புத்தகங்களை பற்றியது. பலர்
இப்புத்தகத்தை அறிமுகப்படுத்தி இருந்த போதும் பெருமாள் முருகனை நோக்கி பல
சங்கங்கள் கல்லெறிய துவங்கிய போதுதான் மாதொருபாகனை வாங்க நெர்ந்தது.
வாங்கும் பொழுது அதன் தொடர்ச்சியாக இரண்டு புத்தகங்களின் வெளியீடும்
நடந்தது, எனவே அந்த புத்தகங்களையும் வாங்கினேன்.
நீங்கள் வக்கிரம் என நினைத்தால்
வக்கிரமாகவும் எதார்த்தமாக நினைத்தால் எதார்த்தமாகவும் தெரியும் பல
விஷயங்களை எழுத்தாளர் தைரியமாய் எழுதி இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த
பாத்திரம் என்றால் காளியின் சித்தப்பா நல்லுப்பிள்ளை தான். ஊரே குடுமி
வைத்திருக்கும் பொழுது கிராப் வெட்டிக் கொள்வதில் துவங்கி, சொத்துக்களை
பிடுங்கி கொள்ள பார்க்கும் தம்பிகளை பஞ்சாயத்தில் சமாளிப்பதிலும், அதே
சொத்துக்காக கடைசி தம்பி தனது மனைவியை கூட்டிக் கொடுக்க முயலுகையில்
எடுக்கும் முடிவிலும், குழம்பி போய் இருக்கும் காளியை தெளிவாக்கும்
நல்லுப்பிள்ளை சித்தப்பா பாத்திரத்துக்காகவே மூன்று நூல்களையும் இன்னொரு
முறை படிக்கலாம்.
தமிழ் வாசிப்பை நேசிக்கும், தமிழ்
மக்களின் வாழ்க்கை முறையை அறிய முற்படும் ஒவ்வொரு வாசகனும் கட்டாயம்
வாசிக்க வேண்டிய புத்தகங்கள் இம்மூன்றும்.
மாதொருபாகன்
திருமணமாகி 8 வருடங்களுக்கு மேலாகியும்
குழந்தை இல்லாமல் வாடும் காளி-பொன்னா தம்பதியினரை பற்றியதுதான் இந்நாவல்,
அவர்களின் வாட்டத்தையும் விவசாய வாழ்க்கையையும், சுற்றத்தின் தூற்றலையும்,
சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தையும் தெளிவாய் விவரிக்கும் இந்த நாவல்
எந்த இடத்திலும் சலிப்பை தராத எழுத்துநடை. போகிறபோக்கில் வந்து போகும்
ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மை ஈர்க்கும். குழந்தை இல்லாததை தம்பதியினரே
பெரிதாய் எண்ணாத போதும் சுற்றியுள்ள சுமூகம் எங்ஙனம் அதை சுட்டிக்காட்டும்
என விவரித்திருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் எதார்த்தம். காளி-பொன்னா
தம்பதியினரின் குடும்பத்தினர் கோவில் திருவிழாவின் 13ம் நாள் இரவு பொன்னாவை
அனுப்பலாம் என முடிவு செய்து காளியிடம் வினவ காளி அதற்கு ஒப்பவில்லை. 13ம்
திருவிழா நாள் அன்று குழந்தை இல்லாத பெண்களும், குழந்தை இருந்தும் ஆண்
குழந்தைக்காக ஏங்கும் பெண்களும் மலையை சுற்றி வரும் ஆண்களில் தங்களுக்கு
பிடித்தவர்களுடன் கூடி குழந்தை வரம் வாங்குவார்கள்.
அந்த வரம் தரும் ஆண்கள் மலை மேல்
இருக்கும் ஈசனின் வடிவமாகவே கருதப்படுவார்கள். பிறக்கும் குழந்தையினை சாமி
பிள்ளை என்றே அழைப்பார்கள். ஊரில் ஏதேனும் முடிவெடுக்க குடவோலை
குலுக்கையில் சீட்டெடுக்க முதல் உரிமை இத்தகைய சாமிபிள்ளையினையே போய்
சேரும். எங்கள் ஊர் பகுதியிலும் இத்தகைய நம்பிக்கை உண்டு. மேட்டூர் அருகே
உள்ள பாலமலை மேலுள்ள மாதேஸ்வரனை வணங்கி, கோவிலருகே உள்ள புல்லில் ஒரு
கையால் முடிச்சிட வேண்டும். இப்படி செய்தால் திருமணம் தள்ளி போகாமல் உடனே
நடைபெறும். திருமணம் முடிந்த பின் துணையுடன் வந்து அங்கிருக்கும்
புல்லிலுள்ள முடிச்சினை அவிழ்த்திட வேண்டும். நான் முடி போட்டு திருமணமும்
செய்து விட்டென். போய் அவிழ்க்க வேண்டும்.
சரி கதைக்கு வருவோம். தன்னைத் தவிற
யாருடனும் தன் மனைவி இணைய கூடாது. கடவுள் வந்து தருவதாய் இருந்தால் என்
உடலில் இறங்கி தரட்டும் என் காளி பிடிவாதம் பிடிக்க, பொன்னாளும் கணவன்
சொல்லை தட்டாமல் இருக்க, வேறு வழியில்லாத வீட்டினர் காளி சம்மதித்து
விட்டான் என பொய் சொல்லி காளிக்கு தெரியாமல் பொன்னாவினை திருவிழாவிற்கு
அழைத்து செல்கின்றனர். ஆனால் மேலும் படிக்க
Comments
Post a Comment