கலாய்ச்சுட்டாராமாம்...

ஒரு பெரிய மனிதர் அல்லது மற்றவர்கள் அனைவரும் பாராட்டுகிற ஒருவரை சடாரென கவிழ்த்து விடுவது பற்றி பேசி கொண்டிருக்கையில் எனக்கு 3 காட்சிகள் நினைவுக்கு வந்தது...

முதல் காட்சி நம் கவுண்டர் நடித்த தங்கம் படத்தில் இருந்து, அந்த படத்தில் அவர் ஒரு வேட்டைக்காரனாக பேட்டி அளிக்கும் பொழுது சொல்லுவார்... தான் வேட்டைக்கு செல்லும் பொழுது திடிரென சிங்கம் தன்னை தாக்க வந்ததாகவும் அவர் உடனே இடைமறித்து "இவ்ளோ பெரிய காட்டுக்கு ராஜாவா இருக்கையே, ஒரு ஜட்டி கூட போடாம சுத்தறயே, உனக்கு வெட்கமா இல்லை?" என்றதும் சிங்கம் அவமானத்தில் திரும்பி சென்று ஒரு மரத்தில் ஒளிந்து கொண்டதாக சொல்வார். இந்த காட்சியை முதலில் பார்க்கையில் பெரிதாய் ஈர்க்கவில்லை, ஆனால் நண்பன் ஒருவன் அடிக்கடி யாரையாவது கிண்டலடிக்க இதை பயன்படுத்தும் தொனியை ரசிக்க துவங்கினேன்...  



இரண்டாவது ராமாயணத்தில் வரும் காட்சி, சீதை மிக அழகி, உலக அழகி, அவளை போல் வேறொரு பெண் எங்கும் கிடைக்க மாட்டால் என்ற பின்னர்தான் மாற்றான் மனைவி என தெரிந்தும் ராவணன் அவளை சிறைப்பிடித்தான் என்ற பேச்சு உலமெல்லாம் பரவ, சீதையை சிறை மீட்டு கிஷ்கிந்தைக்கு அழைத்து வந்த பின் அவளை வேடிக்கை பார்க்க அனைத்து பெண் வானரங்களும் குவிந்தன, அதில் ஒரு பெண் வானரம் சொன்னதாம் "என்னங்கடி, சீதையை உலக அழகின்னு சொன்னிங்க, இந்த பொண்ணுக்கு எங்கடி வாலையே காணோம்?".   


மூன்றாவது காட்சியாக என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது கருந்தேள் ராஜேஸ் எழுதிய கதையில் வரும் காட்சி...

மார்லன் ப்ராண்டோ ஹாலிவுட்டின் நடிப்பு மன்னன். அவர் பையன் ஆடம் சாண்ட்லர். ஆடம் சாண்ட்லரும் ஜிம் கேரியும் small brother படத்தில் நடித்து ஜிகிரி தோஸ்த் ஆகிவிட்டனர். ஒருமுறை சாண்ட்லர் ஜிம் கேரியை வீட்டுக்கு அழைத்தார். ஆனால் ஜிம் கேரியோ, 'அந்த ஓல்டு பார்ட்டி ப்ராண்டோ வீட்ல இருக்கும்பா.. அது ஒரு மொக்க கேசு. நான் வரல' என்று சொல்லிவிட்டார். ஆனாலும் சாண்ட்லரின் வற்புறுத்தலின் பேரில் வேறு வழியே இல்லாமல் வீடு செல்லவேண்டிய கட்டாயம். பின் வாசல் வழியே ப்ராண்டோவின் மொக்கைக்குப் பயந்து செல்கிறார். அன்று பின் வாசலில் ப்ராண்டோவே நின்றுகொண்டிருக்கிறார். 



இதோ அவர்களுக்குள் நடந்த டயலாக்.

நீருதான் ஜிம் கேரியோ.. கவுண்ட்டர் கொடுப்பியளோ..

அதெல்லாம் இல்லைங்க.. சும்மா ஓட்டுறானுங்க..

ஏம்ப்பு.. நானும் நாடக நடிகந்தேன்.. எனக்கு கவுண்ட்டர் கொடு பார்க்கலாம்..

அட என்னங்க.. நீங்க நடிப்புக் கடவுள். உங்களுக்கெல்லாம் எப்புடிங்..

ஒருவாறு மழுப்பிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார் ஜிம் கேரி.

சிலகாலம் கழித்து கடவுளின் மகன் என்ற காவியம் ரிலீஸ். இதில் ப்ராண்டோ அல் பசீனோவின் அப்பா. பட ப்ரிவ்யூ. அனைவரும் வந்து ப்ராண்டோவின் காலில் விழுந்து, செம்ம நடிப்பு சார் என்று சொல்கின்றனர். அப்போது பலத்த சிரிப்பு சத்தம் தியேட்டரில் கேட்கிறது. ப்ராண்டோ டென்ஷன் ஆகிறார். சிரித்தது நம் ஜிம் கேரிதான்.

அவரைக் கூப்பிடுகிறார் ப்ராண்டோ. ஜிம் கேரி சிரித்தபடியே வருகிறார்.

ஏம்ப்பு.. எங்க நடிப்பெல்லாம் சிரிக்கிற மாதிரி இருக்கோ..

இல்லைங்க. நீங்க நடிப்புக் கடவுள்றானுங்க. நடிப்புக்கு உங்களை மாதிரி யாரும் இல்லைன்றானுங்க. ஆனா, படத்துல ஒரு குட்டிப்பொண்ணு உங்க குஞ்சை மிதிச்சி பொட்டுனு செத்துட்டீங்களே..

சொல்லிவிட்டு விழுந்து புரண்டு சிரிக்கிறார் ஜிம் கேரி. இதுவரை யாருமே ப்ராண்டோவின் முகத்துக்கு நேராகவே அவரை இப்படிக் கலாய்த்ததில்லை. ப்ராண்டோவின் முகம் இறுகுகிறது. 
 

ஏலே. வண்டிய எட்றா..என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார் ப்ராண்டோ. செல்கையில் ஜிம் கேரியின் சிரிப்பு சத்தம் இன்னும் எதிரொலிக்கிறது.

இதுதான் ஜிம் கேரி. கவுண்ட்டர் மன்னர்.

இதை ஜிம் கேரியின் நண்பர் சொல்லி உட்லண்ட்ட்ஸில் செந்தேளும் அவனது நண்பர்களும் கேட்டுக் கண்டபடி சிரித்தனர்.     

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2