முதுகுவலி ஏன் வருகிறது? எப்படி போக்குவது !!!
அன்பர்களுக்கு வணக்கம். சமிபத்தில் மக்களை அவதிபடுத்துவதில் முதுகுவலி முக்கியமான ஒன்று. முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர் களையும் இப்போது பாடாய்படுத்திக்கொண்டிருக்க ிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது? முதுகில் வலி உருவாக என்ன காரணம்? வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி? என்பதை விளக்கும் கேள்வி- பதில் பகுதி இது! * தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன? “முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும். முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதி...