வடகறி - திரை விமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், எனக்கு ரொம்ப புதுசா கதை இருக்கனும்னு அவசியம் இல்லை, நான் எங்கேயும் லாஜிக்லாம் பார்க்க மாட்டேன், பொழுது போக்குக்கு மட்டும்தான் படத்துக்கு போறேன்னு சொல்றவங்களுக்கான படம் தான் இந்த "வடகறி"
படத்தோட டைட்டில்லயே ஆப்பிள் சிம்பள் வரப்பவே புரிஞ்சுக்கனும், இந்த படத்துக்கும் ஆப்பிள் iphone க்கும் முக்கியமான சம்பந்தம் இருக்குனு, ஹீரோவ முதல்ல காட்டும் போதே போன்லருந்துதான் ஆரம்பிக்கறாங்க, அவர் வச்சுருக்க போன்ல பேசுனா வாக்கி டாக்கி மாதிரி சுத்தி இருக்க எல்லாருக்கும் கேட்கும், இதுல போன் பண்ணி ஜாக்கி வேலை பார்த்து கோர்த்து விடற நண்பன் வேற....
ஒவ்வொரு இடத்துலயும் அசிங்கப்பட்டு, புதுசா போன் வாங்கலாம்னு 2000 ரூபாய் எடுத்துட்டு கிளம்பறார், 500 ரூபாய் ட்ரீட்டுக்கு ஒதுக்கிட்டு 1500 ரூபாய்க்கு கொரியன் செட் வாங்கறார், இந்த சுச்சுவேஷனுக்குதான் நம்ம தலைவிய கொண்டு வந்து இறக்கியிருக்கான் நம்ம இயக்குனர்
ஆனா சைனா செட் வாங்கனதுக்கு சன்னி லியோன் கூட சாங்லாம் ரொம்ப ஓவர், அதுக்கப்புறம் தான் ஹீரோ உச்ச கட்ட அவமானத்தைலாம் வாழ்க்கைல அனுபவிக்கறார், குழந்தைய கூட அவர் போனை காட்டித்தான் மிரட்டி சாப்பிட வைக்கறாங்க...
இப்ப நம்ம ஹீரோவுக்கு டீக்கடைல ஒரு ஆப்பிள் ஐபோன் கிடைக்குது, லைஃப் ஸ்டைலே மாறுது, அது வரைக்கும் பார்க்காத ஃபிகர் கூட அவரை பார்க்குது, வந்து பேசுது, லவ் செட் ஆகுது.
கொஞ்ச நாள்ள நெஞ்சு குத்தி, ஹீரோ மனசு மாறி, போனை அதோட சொந்தக்காரன்கிட்டயே கொடுக்க போறார், போனோட ஓனர் அவர்தான்னு நினைச்சு ஒரு குரூப் அவரை கடத்திட்டு போகுது, அதுக்கு அப்புறம் தான் லைட்டா கதை சொல்றாங்க, ஆனா அது வரைக்கும் செம கலாட்டா, CREDITS GOES TO RJ BALAJI
இளைஞர்கள், குறிப்பா வேலைக்கு போற பசங்களை சுத்தி நடக்கற கதை, கதை பெருசா இல்லைன்னாலும் சுவாரசியமான விஷயங்கள் நிறைய இருக்கு, பாலாஜி கடத்திட்டி போனவங்க கூடவே ஃப்ரண்ட் ஆகி கேரம் விளையாடறது, ரத்தக்கறைய பார்த்துட்டு சுவாதி
"என்ன விப்ஸ்டிக் கறை?"ன்னு கேட்க ஜெய் காண்டாகி
"அடிச்சு வாயை கிழிச்சுட்டானுங்க, உனக்கு லிப்ஸ்டிக் மாதிரி தெரியுதா?"னு கேட்கறது
சுவாதிக்கும், அவ ஃப்ரெண்ட்டுக்கும் ஜெய்யை லவ் பண்றதுல சண்டை வரதை பார்த்துட்டு பாலாஜி
"டேய் தாத்தா, வயிறு எரியுதுடா"ன்னு சொல்றது
நிறைய சொல்லிட்டு போகலாம், எதையும் எதிர்பார்க்காம போனா செமயா என்ஜாய் பண்ணிட்டு வரலாம். சன்னி லியோன் வரப்ப தியேட்டர்ல செம சவுண்டு, பசங்க கூட்டமா போன கொண்டாடிட்டு வரலாம்.
படத்துல ஒரு சாங்ல மட்டும்தாங்க கிளாமர், அதை நம்பி போனிங்கன்னா ஏமாந்துருவிங்க, படத்துல காமெடிய எதிர்பார்த்து போனிங்கனா ஏமாற மாட்டிங்க, "என்னப்பா சும்மா லொட லொடன்னு பேசிட்டு இருக்காங்க"நு புலம்பறவங்களுக்கு கம்பெனி பொறுப்பாகுது.
படத்தோட ட்ரெய்லர்
Comments
Post a Comment