நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் - விமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாள் கழித்து உண்மையிலேயே வயிறு வலிக்க சிரித்து விட்டு வந்திருக்கிறேன், படத்தின் ஒளிப்பதிவாளரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தினை கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் இப்படத்தினை பற்றி பார்ப்போம்.
முதலில் நாயகன் விஜய் சேதுபதிக்கு எனது வாழ்த்துக்கள், புதுசா வர்ர எல்லாருக்கும் இப்படி வித்தியாசமான கதைகள் அமையாது, இவரோட தென்மேற்கு பருவகாற்று, பீஸா, இப்ப ந.கொ.ப.கா மூனுமே வெவ்வேற கதைக்களம், புதுமுக இயக்குனர்கள், ஆனா நெஞ்சை தொடற கதை.
கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் பீஸால பயமுறுத்தி இருந்தார். படத்தோட ட்ரெய்லர் அ பார்த்துட்டும் வெள்ளிக்கிழமை சகப்பதிவர்கள விமர்சனத்தை பார்த்துட்டும் நேத்து போய் தியேட்டர்ல படம் பார்த்தேன். செம, கலக்கிட்டாங்க.
மிடில் க்ளாஸ் ஹீரோ, 2 ஸ்கூல் ஃப்ரென்ட்ஸ், 1 ஆபிஸ் ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடி கிரிக்கெட் விளையாண்டு பால் அ மிஸ் பண்ணி கீழே விழுந்து மண்டைல அடிபட்டு சுமார் 1 வருசமா நடந்ததை முழுக்க மறக்கற ஹீரோவ ஆஸ்பிடல் கூட்டி போக ஆரம்பிக்கறப்ப படம் பயங்கர சூடு பிடிக்குது.
தூங்கி எழுந்தா எல்லாம் ஞாபகத்துக்கு வந்துரும்னு பார்த்தா வரலை, கஷ்டபட்டு 2 பேர் வீட்லயும் பேசி ஓகே பன்ன கல்யாணம் இந்த காரணத்தால நின்னுட கூடாதுனு நண்பர்கள் 3 பேரும் எப்படியாவது யாருக்கும் ஹீரோக்கு பழசு எதுவும் ஞாபகம் இல்லைங்கறது தெரியாம கல்யாணத்தை முடிக்க முடிவு பன்றாங்க.
படம் முழுக்க செம காமெடி, "என்னது சிவாஜி செத்துட்டரா?"ல ஆரம்பிச்சு அடுத்து ஹீரோ பேசற ஒவ்வொரு வசனத்துக்கும் தியேட்டர்ல சிரிப்பலைதான். ஹீரோவ தவிர மீதி எல்லாரும் புதுமுகம்தான். ஆனா நம்ப முடியாத அளவுக்கு எதார்த்தமான நடிப்பு.
"நான் சொன்னா கேப்பியா, மாட்டியா?"னு ஒரு வசத்தை வச்சே ஹீரோவ சமாளிக்கற சரஸ் ஆகட்டும்,
"அது என்னா நீ சொன்னா மட்டும் அவன் கேட்கறான்?"னு எப்ப பாரு பயந்துகிட்டே திருட்டு முழி முழிக்கற பச்சி(பச்சியப்பன்) ஆகட்டும்,
"அவனுக்குள்ள இருக்க அப்பரஷன், சப்பரஷன், டிப்பரஷன், பயம், கோபம், நல்லது, கெட்டது, அழுகை, ஆத்திரம் எல்லாம் வெளிய வந்துருச்சு"
"காதல்ங்கறது ஆழ்மனசுல அடிச்ச ஆணி மாதிரி, மரணபடுக்கையிலும் மறக்க முடியாது" நு எதுக்கு எடுத்தாலும் ராஸ்கல்னு திட்டி பச்சிய மாட்டி விடற பக்ஸ் (பகவதி) ஆகட்டும்
நம்ம கேங்ல இருக்க ஒவ்வொரு ஃப்ரெண்ட்ஸ்யும் ஞாபகபடுத்தறாங்க, படத்துல பாட்டு இல்லை, ஃபைட் இல்லை, ஆனா செம ஸ்பீட்.
அதுலயும் ரிஷப்ஷன்ல பொன்னு முகத்தை பார்த்தா பழசுலாம் ஞாபகம் வந்துரும்னு பார்க்க வைக்கறப்ப "ப்பா, யார்ரா இந்த பொன்னு, பேய் மாதிரி மேக் அப் போட்டுனு நிக்குது"னு ஹீரோ ரிப்பீட்டட் ஆ கேட்கறப்ப விடாம சிரிப்பு வந்துகிட்டே இருக்கு.
சொல்லனும்னா சொல்லிகிட்டே போகலாம், நிறைய இருக்கு, ஆனா நான் சொல்ல விரும்பறது ஒன்னே ஒன்னுதான், இந்த மாதிரி தட்டு தடுமாறி வாய்ப்பு கிடைச்சு நல்ல படம் குடுக்கறங்களை குறை கண்டுபிடிச்சு குட்டறத விட, நண்பர்கள்கிட்ட படத்தை பத்தி உண்மையான நல்ல கருத்தை சொல்லி தியேட்டர்ல போய் பார்க்க சொல்லனும், அப்பதான் தமிழ் சினிமா வளரும்.
இவங்க யாரையும் காபி அடிக்கலை, வாழ்க்கைல நடந்த ஒரு விஷயத்தை வச்சு இவ்வளவு அருமையா திரைக்கதை அமைச்சு நல்ல படம் குடுக்க முடியுதுனா தமிழ் சினிமால ஒரு நல்ல மாற்றம் வரப்போகுதுனு தெரியுது, மனசுக்கு சந்தோஷமா இருக்கு,
படத்தோட லேட்டஸ்ட் ட்ரெய்லர்
தயவு செஞ்சு தியேட்டர்ல போய் பாருங்க, நண்பர்கள்கிட்ட இந்த படத்தை பத்தி பகிர்ந்துக்கங்க.
நல்ல விமர்சனம்... கண்டிப்பாக தியேட்டரில் சென்று பார்க்கிறேன்... நன்றி...
ReplyDeleteநான் பார்க்க நினைக்கும் படங்களுள் ஒன்று! நல்ல விமர்சனம்! நன்றி!
ReplyDeleteசுருக்கமான நல்ல விமர்சனம்...
ReplyDeleteநன்றி...
tm2
மொக்கை படம்... நடுவுல ரொம்ப நேரம் தூங்கிட்டேன்...
ReplyDeleteமிகச் சிறந்த படம் , இதை இரசிக்கத் தெரியாதவன், இரசனையே இல்லாதவன் ..செம கலக்கல் படம் ..
ReplyDelete