சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன்பு திமுகவினருக்குள் அடிதடி

திமுக இன்று (30.05.2012) அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்காக முன்னாள் அமைச்சரும், சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் சேலம் அண்ணாசிலையில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை திறந்த வேனில் வந்தார்.

அவருடன் டி.எம்.செல்வகணபதி எம்பி, வீரபாண்டி ராஜா உள்ளிட்டோர் வந்தனர். தபால் நிலையம் எதிரில் திமுக தொழிற்சங்க உறுப்பினர்கள் (முன்னாள் எம்எல்ஏவும், மாநில இளைஞரணி துணை அமைப்பாளருமான ராஜேந்திரன் ஆதரவாளர்கள்). நின்றிருந்தனர்.

அவர்களை பார்த்த வீரபாண்டி ஆறுமுகம், நீங்கள் பேரணியில் கலந்துகொள்ளுங்கள் என்றார். ஆனால் அவர்கள் அடிப்படியே நின்றனர். அப்போது வீரபாண்டி ஆறுமுகம் சொல்றத கேளுங்கப்பா என்றார்.

இதையடுத்து இருதரப்புக்கும் மோதல் உருவானது. அப்போது ராஜேந்திரன் ஆதரவாளர்கள் முன்னாள் துணை மேயர் ஜி.கே.சுபாஷ், கிச்சுப்பாளையம் வழக்கறிஞர் குணா உட்பட்டோர் மேலும் குவிந்தனர். அதற்குள் காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கடந்த வாரத்தில் வீரபாண்டி ஆறுமுகம், ராஜேந்திரனுக்கு எதிரான அறிக்கையும், அதற்கு பதிலடியாக ராஜேந்திரன் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக அறிக்கையும் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் எதிரொலியாகத்தான் இன்று இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது என்று சேலம் திமுகவினரே குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்த படங்களை காண இங்கே க்ளிக் செய்யவும்.

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2