- மழைச்சாரல்: ஹாலிவுட் மங்காத்தா- THE ITALIAN JOB/ திரை விமர்சனம்-review
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Sunday, 3 June 2012

ஹாலிவுட் மங்காத்தா- THE ITALIAN JOB/ திரை விமர்சனம்-review

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், நிறைய பேர் இந்த படத்தை பார்க்காமையோ கேள்வி படாமயோ இருக்க மாட்டிங்க, எனக்கு ஒரு நண்பன் இருக்கான் கன்னன்னு, அவந்தான் எங்க க்ருப்லயே முதல்ல நெட் கனேக்ஷன் வாங்கி ஹாலிவுட் படமா இறக்கி குடுத்து எங்களை பார்க்க வைப்பான், நான் அவன்கிட்டருந்து 200GP க்கு படம் வாங்கி வந்து வச்சுருக்கேன், அதுல இன்னும் பாதி கூட பார்த்து முடிக்கலைங்கறது வேற விசயம்,இன்னைக்கு ஏதாவது ஒரு படம் அதுலருந்து பார்க்கலாம் நு தேடும் போது இந்த "ITALIAN JOB" படம் மாட்டுனுச்சு. 
இந்த பேரை எங்கயோ கேள்வி பட்டுருக்கமேனு யோசிச்சதுல டக்னு வந்தது. சூர்யாவோட அயன் படத்துல ஒரு சீன் ல பேங்க் அ கொள்ளையடிக்கற மாதிரி வந்துருக்க ஹாலிவுட் படப் பேரை லைனா சொல்லும் போது சூர்யா இந்த படத்தோட பேரையும் சொல்லுவார். சரி நாம் படத்தை அலசுவோம்.

படம் ஆரம்பிக்கும் போதே ஒரு கேங் பாரிஸ்ல தங்க கட்டிங்களை கொள்ளையடிக்க திட்டம் போடராங்க, அந்த கேங்க்ல ஒரு வயசானவர்,ஹீரோ (திட்டம் போடறவர்),வெடி வைக்கறதுல கில்லாடியான ஒரு சைட் காது கேட்காத ஒருத்தன், எல்லா வண்டியையும் வேகமா ஓட்டற நம்ம ட்ராம்ஸ்போர்ட்டர் பட ஹீரோ, இன்னோருத்தன்(வில்லன்). 
எல்லாருமா சேர்ந்து செமயா ப்ளான் பன்னி கொள்ளையடிச்சுட்டு தப்பிக்கறப்ப வில்லன் அவன் தனியா ப்ளான் பன்னி கன்பாய்ன்ட் ல எல்லா தங்கத்தையும் எடுத்துட்டு போயிடறான்,போறப்ப அந்த பெருசயும்  போட்டு தள்ளிட்டு போயிடறான்.
ஒரு வருசம் கழிச்சு அந்த பெருசோட பொன்னு (ஹீரோயின்) போலிஸ்க்காக லாக்கர் அ திறக்கற வேலைய பன்னுது. வில்லனை கண்டுபிடிச்ச ஹீரோ கேங்க் லாக்கர் அ திறக்கற பெருசு செத்துட்டதால அவரோட பொன்னுகிட்ட சென்டிமென்ட் ஆ பேசி பழி வாங்கலாம் நு கூட்டி போறாங்க. 

ஹீரோயினும் வழக்கம் போல வில்லன் வீட்டுக்கு போய் அவனை கரெக்ட் பன்னி டின்னருக்கு கூட்டி போகுது, ஆனா வில்லன் உஷாரா ஹீரோயின் விடற ரிப்பிட்டிங் டயலாக் அ வச்சு அவ பெருசோட பொன்னுன்னு கண்டுபிடிச்சுடறான். 
இப்ப வில்லனுக்கு ஒரு கேங் தங்கத்தை திருட வரது தெரிஞ்சுருச்சு. அதை பாதுகாப்பா கொண்டு போகனும்னு பெரிசா ப்ளான் பன்னி ஹெலிகாப்டர்,3 ட்ரக்,3 பைக் நு என்னனென்னமோ செய்யறான்.இதெல்லாம் தாண்டி எப்படி கொள்ளையடிக்கறாங்கங்கறத படத்தை பாருங்க, 
இதுலருந்து நிறைய சீன் நம்ம ஊர் படத்துக்கு சுட்டுருக்காங்கனு யாரும் சொல்லாமயே தெரியுது.விறுவிறுப்பான படம் , ஆக்சன் படங்களை விரும்பி பார்க்கறவங்களுக்கு ஏத்த படம்.
விமர்சனம் பிடிச்சுருந்தா மத்தவங்ககிட்டயும் பகிர்ந்துக்குங்க. திரும்ப திரும்ப சொல்றேன். வந்ததும் வந்தீங்க கமென்ட் அ போட்டு போங்க.

6 comments:

 1. இரண்டு மூன்று தமிழ்ப்படங்கள்ள இந்தப் படத்துல வர்ற சீன்ஸ் பார்த்த ஞாபகம். இப்போ நினைவுக்கு வரமாட்டேங்குது. அனேகமாக பார்த்திருப்பீங்க. The Bank Job, Oceans 11,12,13 இந்தப்படங்களும் இதே போல விறுவிறுப்பானவை தான்.

  விமர்சனம் நல்லாயிருக்கு.

  ReplyDelete
 2. Word verificationஐ எடுத்துவிடுங்க. Facebook popup timeஐயும் குறைங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. Word verificationஐ எடுத்துவிடுங்க. அப்படீனா?

   Delete
 3. சொல்லிட்டிங்கல்ல? தோ உடனே டவுன்லோட் பன்னி பார்த்துட்டு விமர்சனத்தை போட்ருவோம். THANKS FOR THE COMMENT

  ReplyDelete
 4. I have seen a Hindi movie yesterday named PLAYERS, i was shocked it is ditto or THE ITALIAN JOB.

  ReplyDelete
  Replies
  1. nowadays bollywood theft stories from kollywood also. 4 example pokkiri,siruththai,sivi, kaavalan many films

   Delete