- மழைச்சாரல்: முகப்புத்தகம்/FACEBOOK-குறும்படம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Monday, 4 June 2012

முகப்புத்தகம்/FACEBOOK-குறும்படம்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நான் ரசிச்ச குறும்படம் பத்தி எழுதி ரொம்ப நாள் ஆச்சு. நான் வாரத்துக்கு 4 குறும்படமாவது பார்த்துடறேன். என்னை இது மாதிரி பார்க்க தூண்டுன கலைஙர் டீவி ல வர "நாளைய இயக்குனர்கள்" நிகழ்ச்சிக்கு நன்றிய சொல்லிகிட்டு உள்ள போவோம்.

முகப்பத்தகம்/FACEBOOK-இதுதான் படத்தோட பேர். இது என்னை பெருசா ஈர்க்கலை, ஏனா இந்த மாதிரி பார்க்காம லவ் பன்றது பத்தி நிறைய குறும்படம் வந்துருச்சு. 
என்னை கவனிக்க வச்ச 2 விசயம். ஒன்னு இதுல நடிச்சுருக்க ஹீரோ வேற யாருமில்லை. நம்ம ஆல் ரவுண்டர் சிவகார்த்திகேயன் தான், ரெண்டாவது இதுல நடிச்சுருக்க இன்னோரு பிரபலம் என்னோட ஃபேவரட் எழுத்தாளர் பாலகுமாரனோட பையன் சூர்யா பாலகுமாரன், இவர் எப்ப பெரிய திரைல படம் பன்ன போறார்னு நான் காத்துட்டுருக்கேன், இந்த குறும்படத்துலயும் நடிப்பு இல்லாம டைரக்ஸனலயும் கொஞ்சம் இறங்குனதா கேள்வி பட்டேன்.
படத்தோட கதைக்களம் ஃபேஸ்புக் தான், அதாவது பார்க்காம காதலிக்கறது, அதை எப்படி சில மோசமானவங்க அவங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கறாங்கனும் உண்மையான காதலும் வந்து போய்கிட்டுருக்குங்கறதயும் அழகா ரொம்ப நகைச்சுவையா கலாட்டாவா சொல்லிருப்பாங்க.
அதுலயும் அந்த 4 நண்பர்களோட அறிமுகமும் அவங்களை பத்தி சொல்றதுக்காக வச்சுருக்க பாட்டுல அவங்க அடிக்கற கூத்தும். கண்டிப்பா எல்லாரையும் ரசிக்க வைக்கும்.

படத்தை பார்க்கனுமா?

வந்ததும் வந்தீங்க, கமெண்ட் போட்டு மத்தவங்ககிட்டயும் பகிர்ந்துக்கங்க.

No comments:

Post a Comment