வயது 14- சொல்வது 'அவர் இல்லைனா நான் செத்துடுவேன்'- யாரோட தப்பு இது? சொல்வதெல்லாம் உண்மை

அன்பர்களுக்கு வணக்கம், எனது முந்தைய பதிவில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலமாக கொலை செய்தவர் போலிஸில் மாட்டியதை பற்றி எழுதி இருந்தேன். அந்த எபிசோடுக்கு பின் என்னை மீண்டும் பார்க்க வைத்த எபிசோட் உண்மையில் நெஞ்சை கனக்க வைத்தது. அதை பற்றி இங்கு காண்போம்.
வழமை போல் சக பதிவரின் அறிமுகம் மூலமாகத்தான் இந்த எபிசோட் பற்றியும் தெரிந்து கொண்டேன். ஆரம்பிக்கும் பொழுதே அதிர்ச்சியை தந்த விசயம் காதலர்கள் என்று சொல்லிக் கொண்டு ஒரு 21 வயது பையனுடன் 14 வயது சின்ன பென்னை காட்டியதுதான். அதிலும் பேச ஆரம்பித்த உடனேயே அந்த சிறு பெண் எடுத்ததும் 'இவர் இல்லைனா நான் செத்துடுவேன்'னு சொல்லி அழும் பொழுது 'என்ன கொடுமைடா இது?' என்று பார்ப்பவர்களே தலையில் அடித்துக் கொள்வார்கள்.

இந்த வாரம் நிர்மலா மேடம் கொஞ்சம் சரியான கேள்விகளை கேட்டார் என்பதை மனமாற ஒத்துக் கொள்வேன். அவை

"எதுக்காக இந்த வயசுல காதலிச்ச?"

"உங்க அப்பா அம்மா காட்டாத எந்த பாசத்தை இந்த பையன் உனக்கு காட்டிட்டான்?"

"செத்துடுவேன்னு உங்க சுய நலத்துக்காக நீங்க  மிரட்டறதுல எத்தனை பசங்க பாதிக்க படறாங்க தெரியுமா?"

"உண்மையான் காதலுக்கு கஷ்டத்தை தாங்கற சக்தி இருக்கும், இப்படி சொல்லாம ஊரை விட்டு ஓடி வர வைக்காது"
 அதுக்கப்புறம் பெண்ணை பெத்தவங்க வந்ததும், அழுததும், அம்மா பொன்னோட கால்ல விழுந்து வீட்டுக்கு கூப்பிட்டதும், அப்பா தாலியை கழட்ட சொல்லி அடிச்சதும் நெஞ்சை கனக்க வைத்த விசயங்கள்.

காதல்ங்கற பேர்ல பெண்களும் ஆண்களும் நாசமாய் போகட்டும். இது போல குழந்தைகள் ஏன் தாலி கட்டிக் கொள்ள வேண்டும்? இத்தனைக்கும் முதல் மதிப்பெண் பெறும் பெண்கள்தான் இவ்வாறு எளிதில் காதல் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

இது 4 சுவற்றுக்குள் தீர்க்கப் பட வேண்டிய விசயம் தான். ஆனால் இது போன்ற விசயங்கள் வெளிச்சத்திற்கு வந்தால் தான் தங்களது பெண்கள் நன்கு படிக்கிறார்கள், எளிதில் யாரையும் காதலித்து விட மாட்டார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் இனி எச்சரிக்கையாக இருப்பார்கள் என்பது என் கருத்து.

உங்களது கருத்துக்களை மறக்காமல் இட்டு செல்லவும், இப்பதிவு பிடித்திருப்பின் உங்கள் நாண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2