ஊருக்கு 4 பேர்- AWARD WINNING SHORT FILM/குறும்படம்

 அன்பு நண்பர்களுக்கு வணக்கம். பொதுவா பார்த்தீங்கனா சினிமால எடுத்துக்கற கருத்தையே திரும்ப எடுத்து குறும்படத்துல பன்னும் போது அது பெருசா ஜெயிக்கறதில்லை. அந்த நேரத்துல சமுகத்துல எந்த பிரச்சனை பெருசா பேசப் படுதோ அதை ஜனங்க ரசிக்கற விதத்துல பன்னா தானா ஜெயிச்சுருது, ரசிக்கற மாதிரி எடுக்கறது வேற ஒன்னுமில்லைங்க காமெடியா எடுக்கறதுதான் சொல்றேன், ஏன்னா பல பேர் குறும்படம்னா தெறிச்சு ஓடுறதுக்கு காரணம் அதுல காட்டற தேவையில்லாத அதிக பட்சமான சோகம் தான்.சரி நம்ம படத்தை பார்ப்போம்.
"ஊருக்கு 4 பேர்"- படம் ஆரம்பிக்கும் போது சத்தியமா நான் எதிர்பார்க்கலீங்க, இந்த டீம் எடுத்துருக்க கான்செப்ட் 'எம்பளம்' பத்தி இருக்கும்னு, ஏன்னா அத வச்சு எப்படி எடுக்க முடியும்னு யாருமே யோசிக்கலை போல, 

இந்த எம்பளம்னா என்னன்னு சொல்லவே இல்லை பாருங்க, அதாவது ஒரு குறிப்பிட்ட தொகைய பணமா கட்டி ஒருத்தருக்கு கீழே நாம் சேரும் போது நாம கட்டுன பணத்துக்கு 50%க்கான ஏதாவது ஒரு பொருளை குடுத்துருவாங்க, அப்ப மீதி பணத்தை எப்படி திருப்பி எடுக்கறதுனா நாம அலைஞ்சு திரிஞ்சி நமக்கு கீழே ஆள் சேர்த்தனும், அவங்க கட்டுற பணத்துல நமக்கு கமிஸன் கிடைக்கும், அவங்களுக்கு கீழே ஆள் சேர சேர நமக்கு கமிஸன் கிடைச்சுகிட்டே இருக்கும். இந்த மாதிரி உழைக்காம சம்பாதிக்க ஆசைப்பட்டுதான் எல்லாரும் இதுல போய் மாட்டுறது.
படம் ஆரம்பத்துல பெங்களூர்ல சாப்ட்வேர் கம்பெனில மாசம் 30000க்கு மேல சம்பாதிச்சுட்டு குடியும் கும்மாளமுமா இருக்க 4 பேரை காட்டறாங்க, ஒவ்வொருத்தரை பத்தியும் தனித்தனியா சொல்றாங்க,அதுல ஒருத்தனை அவன் கூட வேலை பார்க்கற ஒருத்தர் ரெகமண்ட் பன்னி இந்த எம்பளம் சம்பந்தபட்ட நிகழ்ச்சிக்கு அனுப்பறார். 

அங்கே போய் அங்கே ஒருத்தன் கோட் போட்டுகிட்டு பேசுற பேச்சுல மயங்கி 30000 பணத்தை கட்டி டீம்ல சேர்ந்துடறான், அதுக்கு அப்புறம் அவனுக்கு கீழே ஆள் சேர்த்த விசாரிக்கும் போதுதான் அவன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அதுல சேர்ந்துருக்கறது தெரியுது.

யார இதுல சேர்த்து விடறதுனு தெரியாம அவங்க எப்பவுமே 'மாக்கான்'னு கூப்புட்ற அவங்க ஊர்லருந்து வேலை தேடி வந்து தங்கி இருந்த ஒருத்தனை சிக்க வைக்கலாம்னு ப்ரோக்ராம்ல போய் உட்கார வைக்கறாங்க,அவன் ஏமாந்தானானு படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க. ஆனா செம நக்கல் நையான்டிங்க, மிஸ் பன்னிடாதிங்க.

அப்புறம் யாருங்க அந்த மாக்கானை நடிச்சவரு? கலக்கிருக்கார் போங்க, இந்த டீம் எடுத்த இன்னோரு குறும்படம் "ராமசாமி". இதை பத்தி அடுத்த பதிவு கண்டிப்ப போடுவேன்.
படத்தை பார்க்கனுமா?

வந்துட்டீங்க, படிச்சுட்டீங்க, அப்படியே கமெண்ட் அ போட்டு SHARE பண்ணிட்டு போங்க.

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2