"ராமசாமி- 50% நக்கல்+50%லொல்லு"- குறும்படம்

அன்பு நண்பர்களுக்கு என் மகிழ்ச்சியான வணக்கங்கள், என் மகிழ்ச்சிக்கு காரணம் என்னன்னு கேட்டிங்கனா அது நீங்க தாங்க, ஆமாங்க எப்பவுமே என் ப்ளாக் ல 100-120 தான் அதிக பட்ச விசிட்டர் வந்துருக்கறது, ஏப்ரல் முதல் நாள் அனுஷ்காக்கு ஆக்சிடென்ட்னு ஒரு பிட் அ போட்டேன் பார்த்தீங்களா அன்னைக்குதான் கூட்டம் 150 அ தாண்டுனுச்சு. இன்னைக்கு என்னடான்னா நான் எந்த பதிவும் போடாமயே சாயந்தரத்துக்குள்ள 160 க்கு மேல லிஸ்ட் எகுறுது. ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.

சரி வந்தது வந்துட்டோம், ஒரு விமர்சனத்தையும் போட்டுருவோம். இப்ப நாம பார்க்க போறது நாம் ஏற்கனவே பார்த்த "ஊருக்கு 4 பேர்" குறும்படத்தோட டீம் தயாரிச்ச "ராமசாமி"ங்கற குறும்படத்தை பத்திதான்.

படம் ஆரம்பிக்கும் போது எழுத்து போடறப்ப புகை பேக்ரவுண்ட்ல "சரஸ்வதி சபதம்" பட டைட்டில் மியுஸிக் போடுவாங்க பாருங்க, அங்கயே அவங்க நக்கல் ஆரம்பிக்குது. ஹீரோ அறிமுக படுத்திட்டு பார்க்கறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை குடுப்பாங்க, அது என்னன்னா "இவனுக்கு எப்படி வாழ்க்கைல ஒரு லட்சியம் கிடையாதோ அதே மாதிரி இந்த படத்துல கதையும் கிடையாதுங்க, இஷ்டமில்லைனா பார்க்காதிங்க"னு. அப்புறம் எப்படிடா படம் எடுத்திங்கங்கற கேள்விலயே படத்தை பார்த்தேன்.


 ஒன்னுமில்லிங்க, படிச்சுட்டு வேலைக்கு போகாம வீட்டுல இருக்க ஹீரோ, சிவாஜிகனேசன் காலத்துல இருந்து இதுதான் ஹீரோவோட வேலைங்கறது நமக்கு தெரியும். அவன் வீட்ல பன்ற அலும்பல்களை வரிசையா ரசிக்கற மாதிரி காட்டுவாங்க. அவனை பத்தி நல்லா தெரிஞ்ச அவங்கப்பா ஹீரோக்கு தெரியாமயே ஒரு கம்பெனிக்கு அப்ளை பன்னி அடுத்த நாள் போய் அட்டென்ட் பன்ன சொல்லுவார்.

அடுத்த நாள் கட்டாயம் ஃப்ரென்ட்ஸ் கூட படத்துக்கு வரென்னு ஹீரோ வாக்கு குடுத்துருப்பார். சரி இன்டர்வியு சும்மா பேருக்கு அட்டென்ட் பன்னிட்டு வரலாம்னு போன உள்ளே போற ஒவ்வொருத்தனும் முகத்தை தொங்க போட்டுகிட்டே வந்துருவாங்க. "இவங்களுக்கே கிடைக்காத வேலை நமக்கெங்க கெடைக்க போகுது?" நு உள்ளே ஹீரோ போகும் போது எழுத்து போடுவாங்க, படம் அவ்ளோதான்னு நினைச்சுராதீங்க, இதுக்கப்புறம்தான் படம் ஆரம்பிக்குது.



இன்டர்வியுல ஹீரோ அடிக்கற ஒவ்வொரு டைமிங் கவுண்டருக்கும் நான் அடிமைங்க, அவ்வளவு நக்கலா இருக்கும், உங்களால சிரிக்காம இருக்க முடியாது. க்ளைமாக்ஸ் ல ஒரு பிரபலம் வருவார், அவர் யாருங்கறது சஸ்பென்ஸ். எவ்வளவு டென்ஷன்ல இருந்தாலும் அதெல்லாம் மறந்து கட்டாயம் சிரிப்பிங்க.
படத்தை பார்க்கனுமா?


வழக்கமான டயலாக் தான், வந்ததும் வந்தீங்க, அப்படியே கமெண்ட் போட்டுட்டு மத்தவங்க கூட பகிர்ந்துக்குங்க.

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2