மனம் கொத்தி பறவை- விமர்சங்களுக்கு விமர்சனம் என் பார்வையில்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். மற்ற பதிவர்களை போல் வாரவாரம் வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் படங்களை உடனுக்குடன் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைப்பதில்லை. சமிபத்தில் திரைக்கு வந்த 'மனம் கொத்திப் பறவை' திரைப்படத்தினை நேற்றுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தினை பற்றிய என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலில் இப்படத்தினை பார்க்க விரும்பியவர்களில் பாதிப் பேர் சிவாவின் விசிறிகளாகத்தான் இருப்பார்கள். நானும் அவர்களில் அடக்கம். படத்தில் கதை ஒன்றும் பெரிதாக இல்லை. வெவ்வேறு சமுகத்தை சேர்ந்த இரு குடும்ப்ங்கள் எதிரெதிரில் இருந்தாலும் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள். அதில் கன்னனாக வரும் சிவகார்த்திக்கேயன் எதிர்வீட்டு ரேவதியை ரொம்ப நாளாக காதலித்து வருகிறார்.காதலிக்கும் அனைவரும் செய்யும் தவறைத்தான் அவரும் செய்கிறார். காதலை காதலியிடம் சொல்லாமல் தன் நண்பர்களுடன் பகிர்தல். 
அப்புறமென்ன வழக்கம் போல் வீட்டில் ஒரு முரட்டு மாப்பிள்ளைக்கு ஹீரோயினை நிச்சயம் செய்ய, சராசரி தமிழனாக குடித்து விட்டு புலம்புகிறார். பின்னே 20 பேரை அடிக்க அவர் என்ன தனுஸ் போல ஆக்ஸன் ஹீரோவா? எப்படியாவது நணபனின் காதலை சேர்த்து வைப்பதற்கென்றே பிறப்பெடுத்த ஹீரோவின் நண்பர்கள் ஹீரோயினை கல்யாணத்திற்கு முதல் நாள் மயக்கப்படுத்தி போதையில் மயக்கத்தில் இருக்கும் ஹீரோவுடன் ஊரை விட்டு ரொம்ப தூரம் கடத்தி வந்து விடுகிறார்கள். அப்புறம் தான் தெரியுது இது ஒன் சைட் லவ்னு.
அப்புறம் என்ன? வழக்கம் போல 4 கார் 40 அடியாள்னு ஒரு க்ரூப் தேடி வந்து இவங்களை பிடிச்சுட்டு போய் பிரிச்சுருது. எப்படி இவங்க ஒன்னு சேர்ராங்கனு படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க.எனக்கு ஒரே ஒரு வருத்தம் 2 வருசம் கழிச்சு சிவா ஊருக்கு வரதை பத்தி அவங்க கொஞ்சம் தெளிவா சொல்லிருக்கலாம். மத்தபடி எனக்கு எந்த இடத்துலயும் மொக்கையா தெரில. பாட்டு வைச்ச இடம் சரியில்லைனு சொல்லலாம். அதுவும் ஹிட் ஆகி இருந்தா அதை யாரும் கண்டுக்க மாட்டாங்க.
சரி கதை முடிஞ்சது. நான் பொதுவா மக்களை பார்த்து கேட்கறேன். தமிழ் நாட்டுல உண்மையான காதல் அ பார்க்க முடியறது இல்லை, அதுக்கு சினிமாதான் காரணம்னு சொல்றிங்களே, இந்த மாதிரி ஜனரஞ்சகமான படம் வந்து இப்ப இருக்க தலைமுறையை சேர்ந்தவங்க பார்த்தாதானே அவங்களுக்கு காதல்ங்கறது உடம்பை தாண்டி வேற விசயம் போலங்கறதுலாம் புரியும். அதை விட்டுட்டு ஆயிரம் நொட்டை சொல்றாங்க.

 
ஹீரோ ஹீரோயின் கால்ல விழுந்தது தப்பாம், ஒரு பிரபலமான பதிவர் சொல்றார். அவரை பார்த்து கேட்கறேன் "நீங்க எந்த பொன்னு பின்னாடியும் வருசக்கணக்குல சுத்துனது இல்லை போல, அவங்க குடும்பத்துல இருக்கு 4 வயசு பொன்னு கால்லயும் விழ நம்ம பசங்க தயாரா இருக்காங்க பாஸ், லவ்வுக்குனு நாக்கை அறுக்கறது , கொலை பன்றதுலாம் தப்பில்லையாம், கால்ல விழறது தப்பாம்"
ஆக மொத்தம் நான் தமிழ் ரசிகர்களுக்கு சொல்லிக்க விரும்பறது இதுதான், சைக்கோ படம் எடுக்கறேன்னு கொல்றவங்க, வேற மொழில வந்த படத்தை வெட்கமே இல்லாம திருடறவங்க, பஞ்ச் டையலாக் பேசி சாகடிக்கறவங்க மத்தியில அமைதியா போய்கிட்டு நடுவுல கிச்சுகிச்சு மூட்டிகிட்டு இந்த படமும் நல்லாதான் இருக்கு.
அப்புறம் இன்னோன்னு படம் 1990 ல வந்துருக்க வேண்டிய படம் நு கொஞ்சம் பேர் சொல்றாங்க. அவங்களாம் எல்லா ஊர் காதலும் சிட்டில நடக்கற மாதிரி ரூம் போடற காதல்னு நினைச்சுட்டு இருக்காங்க, சாரி பாஸ், இன்னும் மனசை மட்டும் பார்த்து காதலிக்கற இளிச்ச வாய கூட்டமும் இருக்கு. நான் தினமும் பார்த்துட்டுதான் இருக்கேன்.
இந்த மாதிரி க்ளாமர் இல்லாம வர காதல் திரைப்படடங்கள் ஓடுனாதான் கல்யானத்துக்கு முன்னாடி அபார்ஷன் நடக்கறது குறையும்.

வந்தது வந்தீங்க , அப்படியே கமென்ட் அ போட்டு பகிர்ந்துக்கங்க.

Comments

  1. Yes, its a Gud film...
    I Like Very Much

    ReplyDelete
  2. இந்த மாதிரி க்ளாமர் இல்லாம வர காதல் திரைப்படடங்கள் ஓடுனாதான் கல்யானத்துக்கு முன்னாடி அபார்ஷன் நடக்கறது குறையும்.

    unmai

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...